சிட்னி துர்க்கை அம்மன் அனுக்கிரகத்துடன் வரலட்சுமி பூஜை 05.08.2022 அன்று வெகுவிமரிசையாக இடம்பெற்றது
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
நல்லைநகர் கொடிகாண நற்கருணை நல்கிடுவாய் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 25 அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியத்தில் எனது வகிபாகம் ! வடக்கிலிருந்தவர்களின் வெளியேற்றமும் இடப்பெயர்வும் !! முருகபூபதி
சென்னைக்கு புறப்படுவதற்கு முதல் நாள் ( 1990 இல் ) இரவு ஏழு மணியளவில் சகோதரி அருண். விஜயராணி தனது கணவர் அருணகிரியுடன் எனது குடியிருப்புக்கு வந்தார்.
அவரது கையில்
ஒரு கோவை.
“ பூபதி அண்ணா…. இதில் எனது சில சிறுகதைகள் இருக்கின்றன.
சென்னையில் உங்கள் நண்பர் தமிழ்ப்புத்தகாலயம் அகிலன் கண்ணனிடம் இதனை சேர்ப்பித்து அச்சிட்டு
தருவதற்கு ஏற்பாடு செய்து தரமுடியுமா..? “
எனக்கேட்டார்.
எனது சமாந்தரங்கள் தொகுதியையும் தமிழ்ப்புத்தகாலயம்தான்
வெளியிட்டது. அதன் வெளியீட்டு அரங்கு மெல்பனில் 25-06-1989 இல் நடந்தபோது அருண். விஜயராணியும் உரையாற்றியிருந்ததுடன், அந்த நிகழ்வு பற்றிய செய்திக் கட்டுரையையும் வீரகேசரி வாரவெளியீட்டில் எழுதியிருந்தார்.
தன்னிடமிருக்கும்
ஏற்கனவே வெளியான சிறுகதைகளையும் புத்தகமாக்கவேண்டும் என்ற விருப்பத்தையும் பலதடவைகள்
அவர் என்னிடம் சொல்லியிருந்தார்.
அக்காலப்பகுதியில்
நாம் அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியத்தை தொடக்கியிருந்தோம். அருண். விஜயராணி அந்த அமைப்பின்
கலாசார செயலாளராக இயங்கினார். ஒன்றியத்தின்
ஏடாக அவுஸ்திரேலிய முரசு மாத இதழையும் ஆரம்பித்திருந்தோம்.
அதற்கும்
அவர்தான் ஆசிரியர். சட்டத்தரணி ரவீந்திரன்
அண்ணரின் அலுவலகத்தில் பணியாற்றிய எனது நண்பர் இலேடியஸ் பெர்ணான்டோ அவ்விதழை கணினியில்
தட்டச்சு செய்து வடிவமைத்து தந்துகொண்டிருந்தார்.
ஒரு தடவை
யாழ். பாஸ்கரின் அக்கினிக்குஞ்சு இதழையும் அவரே வடிவமைத்தார்.
சென்னையில் ஓவியர் மணியம்செல்வன் இல்லத்திற்குச் சென்று அவுஸ்திரேலியா முரசு அட்டைக்குரிய நிரந்தர ஓவியத்தையும் வரைந்து தருமாறு கேட்டேன்.
படித்தோம் சொல்கின்றோம் தமிழகத்தை சாராதவரின் நாவலில் தமிழகச் சூழல் ! கதை சொல்லி நடேசனின் மற்றும் ஒரு நாவல் பண்ணையில் ஒரு மிருகம் !! முருகபூபதி
அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும் பத்தி எழுத்தாளருமான விலங்கு மருத்துவர் நடேசன், இதுவரையில் சிறுகதை, நாவல், பயண இலக்கியம், மற்றும் தனது தொழில்சார் அனுபவக் கதைகள் என பல நூல்களை வரவாக்கியிருப்பவர்.
நடேசன் அவுஸ்திரேலியாவுக்கு
புலம்பெயர்ந்த பின்னரே இலக்கியப் பிரதிகள் எழுதத் தொடங்கியவர். அதாவது 1990 ஆம் ஆண்டுக்குப்பின்னரே இந்தத்துறையில் தீவிரமாக இயங்கினார். கடந்துவிட்ட மூன்று தசாப்த
காலத்துள் ஈழத்து மற்றும் தமிழக இலக்கிய சூழலிலும் புகலிடத்திலும் நன்கு அறியப்பட்டவரானவர்.
அதற்கு அவரது நூல்கள் இலங்கையிலும் தமிழகத்திலும்
அச்சிடப்பட்டமை மாத்திரம் காரணமல்ல, அவரது வலைப்பூவினை தொடர்ந்து வாசிப்பவர்களும் காரணம்தான்.
நடேசனின் தேர்ந்தெடுக்கப்பட்ட
சில சிறுகதைகளும் மலேசியன் எயர் லைன் 370 என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இந்த
நூலும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரது அசோகனின்
வைத்தியசாலை என்ற மற்றும் ஒரு நாவலும்
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மாற்றம் ஏற்படுத்தும் மாமருந்து !
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
மாற்றம் என்பது மனிதவாழ்வில்
இன்றியமையாதது.மாற்றம் இல்லாவிடில் அதில் அர்த்தமும் இருக்காது. அந்த மாற்றமும் - தேவையான மாற்றமாகவே இருக்கவேண்டும்.சிலவேளை - ஏன் இப்படியான மாற்றம் வந்ததோ என எண்ணத் தோன்றும்.இதனால் - மாற்றம் என்பது வந்தால் , யாவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கவேண்டும்.அப்படிவரும் மாற்றம்தான் நல்ல மாற்றம்.அந்த மாற்றம் ஒரு சமுதாயமே பயன் பெறும ளவுக்கு இருக்குமானால் அதுவே சிறந்த மாற்றம் எனக் கருதப்படும்.அப்படியான மாற்றங்கள் பற்றி நாம் அறிவது அவசியம் அல்லவா ? அப்படியான மாற்றங்கள் எந்த வகை யில் நிகழ்ந்து கொண்டுருக்கின்றன என்பதையும் அனைவரும் மனத்தினுள் பதிக்க வேண்டும் என்பதே மாற்றம் பற்றிச் சிந்திப்பதற்கு வழிவகுத்திருக்கிறது எனலாம்.
என்ன முதலாளி சௌக்கியமா! - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்
சிவாஜி கணேசனின் 150வது படமான சவாலே சமாளி படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் மல்லியம் ராஜகோபால்.இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் கதை வசனம் எழுதி,டைரக்ட் செய்த படம்தான் என்ன முதலாளி சௌக்கியமா!1972ல் கலரில் இப் படம் உருவானது.
அண்ணா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் டி கே சங்கர் இந்தப் படத்தைத் தயாரித்தார்.ஏற்கனவே 1967ம் ஆண்டு ராமண்ணா இயக்கத்தில் இவர் பவானி என்ற படத்தை தயாரித்திருந்தார்.இந்தப் படத்திற்கு கதை,வசனம் எழுதியவர் கே எஸ் கோபாலகிருஷ்ணன்.திரையுலகில் கோபாலகிருஷ்ணனுக்கும்,ராஜகோபாலு
பிரச்னையை கருவாகக் கொண்டு அமைத்த படமாகும்.சவாலே சமாளி கிராமத்தில் இருக்கும் ஆண்டான்,அடிமை பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டது.எ மு சௌக்கியமா முதலாளி,தொழிலாளி பிரச்சனையை மூலமாகக் கொண்டிருந்தது.ஆனால் எ மு சௌக்கியமா படத்தின் மூலக் கதையை ராஜகோபால் எழுதவில்லை.கவிஞர் கண்ணதாசன் அதனை எழுதி இருந்தார்!
ஏன் பெண்ணென்று... குறுநாவல் (3/6) கே.எஸ்.சுதாகர்
அதிகாரம் 3
கணபதிப்பிள்ளையும் நேசமும் தமது இரண்டு பிள்ளைகளான விமலாவையும் பத்மினியையும் நன்றாகவே வளர்த்திருந்தார்கள். ஒழுக்கமாகவும், கல்வியில் குறை விளங்காமலும், சங்கீதம் வீணை போன்ற இதர துறைகளில் விற்பன்னர்களாகவும் ஆக்கியிருந்தார்கள். பாடசாலை சென்று திரும்பும்போதெல்லாம் குனிந்த தலை நிமிர மாட்டார்கள். எதிரே யார் வந்தாலும் அவர்களுக்குத் தெரிவதில்லை. வளர்ந்த பின்னர் கூட அவர்களின் நட்பு ஒரு வட்டத்திற்குள்தான் இருந்தது. அப்படி வளர்ந்திருந்த பத்மினிக்கு சந்திரமோகனின் கேள்வி ஆச்சரியத்தைத் தந்தது. கோபம் கொள்ள வைத்தது.
பத்மினி படுக்கையில் இருந்து சீறி எழுந்தாள்.
பாம்பானாள். ஆடிப் படமெடுத்து எல்லாவற்றையும் தட்டி விழுத்தி நொருக்கினாள். மூச்சு,
கொத்தப்போகும் நாகம் போல் சீறிப் பாய்ந்தது. தலையணையால் ஆத்திரம் தீரும் வரைக்கும்
சந்திரமோகனை விளாசினாள். தீனமான குரலில் கத்திக் கொண்டே அறையை விட்டு
வெளியேறினாள்.
மாப்பிள்ளை இதை எதிர்பார்த்திருக்கவில்லை. பத்மினி எழுந்து போனபின், அடிமேல் அடி வைத்து நடந்து, கதவைச் சாத்திவிட்டு அடங்கி ஒடுங்கி நின்றார். உடல் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. இதை அவன் மாத்திரமல்ல, வீட்டில் இருந்த எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
தூய தமிழ்மொழியின் தொன்மைச் சிறப்பையெலாம் தேயமெங்கும் திருத்தொண்டாய்ப் பரப்பிய தனிநாயக அடிகளார் அவர்களை நினைவு கூர்வோம்!
'சிவஞானச் சுடர்' பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்
மாணிக்கத் தீபமான இலங்கை நகரின்
வடபகுதி
தனிற்பிறந்து கற்று யர்ந்து
காணிக்கையாய்த் தமிழன்னை களிகொளத் தன்னைக்
கடமையுணர் வொடுவாழ்ந்த
அடிக ளார்புகழ்
ஏணிக்கும் அளவேது? இயம்பப் போமோ?
ஏசுபதம் போற்றியே
தமிழைத் தனித்துவப்
பாணியிலே பரப்பிநின்ற பெற்றி என்னே!
பண்பாளன் தனிநாயக
அடிகள் போற்றி!
அன்பதனால் உயிர்க்கின்ற
அறத்தின் தோற்றம்!
தெருளெல்லாம் புலர்கின்ற கர்த்தரின் பேரொளி!
தெளிவெல்லாம் மலர்கின்ற சாந்த
முகம்!
வருந்துவர்க்கு உதவிசெயும் வள்ளல் உள்ளம்!
வண்டமிழை உலகரங்கிற் பரப்பும்
ஓர்மம்!
பெருந்தவத்தோன் தனில்இவைகள் பொதுளிப் பில்கும்
பேராசான்
தனிநாயகம் அடிகள் அன்றோ?
நிறைவான அமைதியான வாழ்க்கையை வாழ நான் என்ன செய்ய வேண்டும்? - சிட்னி துர்க்கை அம்மன் கோவில் குருக்கள் தனாசிவம்
ஒரு வியாபாரி கடல் கடந்து வியாபாரம் செய்ய போகிறார் ,அந்த கடல் வழி பயணத்தின் பொது அவர் ஒரு சிறிய தீவை காண தன் மாலுமிகளை அந்த தீவிற்கு செல்ல சொல்கிறார் .
பேசாப்பொருளை பேசத்துணிந்த President Supper Star திரைப்படம் அவதானி
இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் புகலிட நாடுகளிலும் வீடுகள் தோறும் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை சலிப்பின்றி பார்த்துவரும் எம்மவர்களுக்கு, சமூகப்பிரக்ஞையுடனும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் வெளிவந்து, சிங்கள மக்கள் மத்தியில் பரவலாகச் சென்ற ஒரு திரைப்படம் பற்றிய அவதானக்குறிப்புகளையே இங்கு பதிவு செய்கின்றோம்.
சினிமா ஊடகம் மிகவும் வலிமையானது. சினிமாவைப் பார்த்து
சீரழிந்தவர்களும் இருக்கிறார்கள். சீர்திருந்தியவர்களும் இருக்கிறார்கள்.
ஜெயகாந்தன் கூட சினிமாவுக்குப்போன
சித்தாளு என்ற குறுநாவலை எழுதியிருந்தார். உண்மைச் சம்பவங்களை பின்னணியாகக்கொண்டும் பல மொழிகளில்
திரைப்படங்கள் வெளியாகிக்கொண்டுதானிருக்கின்றன.
இலங்கையில் சமகாலத்தில்
தோன்றியிருக்கும் அரசியல் நெருக்கடியின் பின்னணியிலும் சிக்கலுக்கு மேல் சிக்கலை தந்துகொண்டிருக்கும்
நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஆட்சிமுறைபற்றியும், லஞ்சம், ஊழல், துஷ்பிரயோகம், அதனூடாக ஏற்படும் சமூகச்சீரழிவுகளையும்
அங்கதச்சுவையுடன் பேசும் திரைப்படம்தான் President Supper Star.
இதனை திரைக்கதை வசனம் எழுதி இயக்கித் தயாரித்துள்ளார் சிங்கள திரைப்பட இயக்குநர்
உதயகாந்த வர்ணசூரிய.
இலங்கையின் சமகால அரசியலை
துணிந்து பேசியிருக்கும் இத்திரைப்படத்தில், ஏற்கனவே சிங்கள திரைப்படங்களில் தோன்றியிருக்கும்
பிரபல சிங்கள நடிகர், நடிகையர்களுடன் ஏராளமான பொதுமக்களும் இடம்பெற்றுள்ளனர்.
அண்மைக்காலத்தில் காலிமுகத்திடல்
ஆர்ப்பாட்ட போராட்டத்தில் சிங்கள நாடக – திரைப்படக் கலைஞர்களும் பங்கேற்றிருந்ததை நாம்
மறந்துவிடமுடியாது.
ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின்
தலைவர், தமது ஊழியர்களை அழைத்து மக்களை பெரிதும் கவரக்கூடிய ஒரு தொலைக்காட்சித் தொடரை தயாரிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.
ஒவ்வொருவரும் ஆளுக்கொரு யோசனையை தருகிறார்கள். இறுதியில் மக்கள் அன்றாடம் பேசிக்கொண்டிருக்கும் அரசியலையே அவர் கையில் எடுக்கிறார்.
இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியாவை வேதனைப்படுத்தும் சீன உளவுக்கப்பல் விவகாரம்!
'அயல்நாட்டுக்கே முதலிடம்' என்ற உறுதியான கொள்கையின் கீழ் இலங்கைக்கு இந்தியா வழங்கி வருகின்ற உதவிகள், ஆதரவுகள் ஏராளம்.இந்நிலையில் சீனக்கப்பலின் இலங்கை வருகையானது இந்தியாவுக்கு மகிழ்ச்சி தரப் போவதில்லை!
அம்பாந்தோட்டை துறைமுகமானது வர்த்தக நடவடிக்கைகளுக்கு மட்டுமே சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்படுமென்று இந்தியாவுடன் அவ்வேளையில் இலங்கை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உடன்பட்டது. ஆனால் அந்த உடன்படிக்ைக மீறப்படும் வகையில் இப்போது சீனாவின் உளவுக் கப்பல் ஒன்று அதே துறைமுகத்திற்கு வர இருக்கின்றது.
அதற்கு முன்பதாக இலங்கையின் சமீப கால நெருக்கடி குறித்தும், இலங்கைக்கு இந்தியா வழங்கி வருகின்ற உதவிகள் மற்றும் ஆதரவுகள் குறித்தும் இவ்விடத்தில் குறிப்பிடுவது முக்கியம். இலங்கைக்கு இந்தியா பல பில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை நட்பு ரீதியாக வழங்கியுள்ளது. பெருந்தொகைக் கடன்தொகையையும் வழங்கியுள்ளது.
இலங்கைச் செய்திகள்
இலங்கையர் 46 பேர் கப்பலில் நாடு கடத்தல்
காலிமுகத்திடலில் கரையொதுங்கிய சடலங்கள் தொடர்பில் உரிய விசாரணை அவசியம்
போராட்ட இளைஞர்களுடன் இணைந்து பணியாற்ற தயார்
கௌரவ தீர்வு கோரி நூறுநாள் செயலமர்வு
இலங்கையிலுள்ள WFP, UNICEF, UNFPA ஆகியவற்றுக்கு ரூ. 490 மில்லியன் நிதி வழங்கியுள்ள நோர்வே
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கணிசமாக குறைவு
இலங்கையர் 46 பேர் கப்பலில் நாடு கடத்தல்
உலகச் செய்திகள்
அமெரிக்க ஆளில்லா வான் தாக்குதல்: அல் கொய்தா தலைவர் சவாஹிரி படுகொலை
அமெரிக்க சபாநாயகர் பெலோசியின் தாய்வான் விஜயத்தால் பரபரப்பு
அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை கைவிட்டது சீனா: போர் ஒத்திகைகள் தொடர்ந்தும் உக்கிரம்
தாய்வானை சூழ சீனாவின் போர் ஒத்திகைகள் தீவிரம்
ஈரானில் வெள்ள அனர்த்தம்: 80 பேர் பலி: பலர் மாயம்
தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடைமழை; வெள்ளத்தினால் மக்களுக்கு அதிக பாதிப்புகள்
அமெரிக்க ஆளில்லா வான் தாக்குதல்: அல் கொய்தா தலைவர் சவாஹிரி படுகொலை
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் அல் கொய்தா தலைவர் ஐமன் அல் சவாஹிரி படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
ஆப்கான் தலைநகர் காபுலில் கடந்த ஞாயிறன்று அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றிலேயே அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
திராய்க்கேணியில் 54 பேர் படுகொலையுண்ட 32ஆம் வருட நினைவுதினம் இன்று அனுஷ்டிப்பு
Saturday, August 6, 2022 - 6:00am
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தமிழ்க் கிராமம் திராய்க்கேணி கிராமமாகும். அங்கு 286 குடும்பங்கள் சீரும் சிறப்புமாக நிம்மதியாக வாழ்ந்து வந்தன.
ஆனால் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆறாம் திகதி அந்த நிம்மதிக்கும், வாழ்க்கைக்கும் வேட்டு வைக்கப்பட்டது. அங்கு வந்தவர்கள் கிராம மக்களை ஆலயத்திற்கு வரவழைத்து ஏதுமறியாத 54 பேரை மிகவும் குரூரமாக ஈவிரக்கமின்றி கத்தியாலும், கோடரியாலும் வெட்டி கொலை செய்தார்கள்.
அமலா பாலின் 'கடாவர் '
Sunday, July 31, 2022 - 4:42pm
அமலா பால் நடித்த 'கடாவர்' திரைப்படம் டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் ஓகஸ்ட் 12ஆம் திகதி வெளியாக உள்ளது.
மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கடாவர்'. இதில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, ஷான் லோகேஷ் பட தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார்.
கொலை வழக்கு ஒன்றினை போலீஸ் உயரதிகாரி விஷால், தனது தலைமையில் குழுவைக் கொண்டு விசாரிக்கிறார்.. இதில் தடயவியல் துறை நிபுணராக பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடிக்கிறார். மர்மமான முறையில் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
இதற்கான விசாரணையை மேலும் விரைவுபடுத்தி, வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கும் தருணத்தில், தடயவியல் துறை நிபுணரான பத்ரா கொலைக்கான பின்னணியையும், கொலைகாரனையும் எப்படி கண்டறிகிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. நன்றி தினகரன்