திரு.ஆறுமுகம் பத்மநாதன்
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
மரண அறிவித்தல்
வரட்சிதான் விரிந்து நிற்கும் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் -03 “ காலமும் கணங்களும் “ நெடுங்கதையின் இரண்டாம் அத்தியாயம் தண்ணீரில் ருசி பேதம் – மாந்தரில் இனபேதம் ! முருகபூபதி
விசாலமான வெளிமண்டபத்துக்கு வந்த பின்னர், சந்திரனிடம் கட்டுப்பட்டு
நின்ற சுவாசம் பெருமூச்சுடன் எழுந்து பறந்தது.
பாலேந்திராவுக்கு ‘ கோல்
‘ கொடுப்பதாயின் சில்லறை வேண்டும். சில்லறை நாணயங்களுக்கு ட்ரவலர்ஸ் செக்கை
மாற்றவேண்டும். எங்கே இந்த பேங்க்…?
கண்ணில் அது சிக்கவில்லை.
சுற்றும் முற்றும் பார்த்து
அந்தரப்படும் அவன் கோலத்தைக் கண்டு ஒரு பெண் அருகே வந்தாள். அவளது சீருடை – அவள் அந்த
மண்டபத்தில் ஏதோ ஒரு வேலையில் அமர்ந்திருப்பதாக இனம் காட்டுகிறது.
“ஏதும் உதவி வேண்டுமா..? “ அவளது ஆங்கில உச்சரிப்பை சிரமப்பட்டுத்தான் புரிந்துகொண்டான்
சந்திரன்.
“ தாங்ஸ்…. பேங்க்….. ? “ என்று மட்டும்தான் கேட்டான்.
“அந்தப்பக்கம் திரும்புங்கள்… பேங்க்… அங்கேதான் இருக்கிறது
. இவற்றையேன் இப்படி தூக்கி சுமக்கிறீர்கள். அந்த ‘ட்ரொலி ‘ யை எடுங்கள். “ – அவள் ஆலோசனையை உதிர்த்துவிட்டு, “ ஹாய்… “ என்று எவனையோ பார்த்து கையசைத்துக்கொண்டு போய்விட்டாள். அவளுடன் இன்னும் சிறிது நேரம் பேச சந்தர்ப்பம் கிட்டவில்லையே என்ற தவிப்பு சந்திரனுக்கு.
முன்பின் தெரியாத அழகிய
பெண் தானாக வலியவந்து கதைத்து, உதவ முன்வரும்போது ஏற்படும் சிலிர்ப்பு… அனுபவித்துப்பார்க்கும்
போது தனிச்சுகம்தான்.
அவள் சுட்டிக்காட்டிய
‘ ட்ரொலி ‘ யை எடுக்கும்போது, இவ்வளவு
நேரமும் இந்தச் சுமைகளை அநாவசியமாக சுமந்துகொண்டிருந்தேனே… இன்னும் நான் வழமைக்குத்
திரும்பவில்லையா..? தன்னையே கேட்டுக்கொண்டான் சந்திரன்.
பேங்கில் பாஸ்போர்ட்டைக்காட்டி ட்ரவலர்ஸ் செக்கில்
பத்து அமெரிக்கன் டொலர்களை அவுஸ்திரேலிய நாணயத்துக்கு மாற்றி, ஒரு டொலருக்கு சில்லறையும் எடுத்துக்கொண்டு, ரெலிபோன்
பூத்துக்குள் நுழைந்து நாணயங்களை போட்டு, பாலேந்திரா வீட்டின் இலக்கத்தை சுழற்றியபோது,
“ ஹலோ…. “ தான் ஹலோ….சொல்லுமுன்னமே மறுமுனையில் கேட்ட பெண்குரலை
இனம்காணமுடியாமல், “சந்திரன்…ஹியர்… பேர்த் ஏயார்போட்டிலிருந்து பேசுகிறேன்.
பாலேந்திரா இருக்கிறாரா? “ – சந்திரன் கேட்டான்.
“ யெஸ்…. இது பாலேந்திரா வீடுதான். அவர் இப்போது
இங்கே இல்லை. என்ன விஷயம்… என்று சொன்னால், அவருக்கு தகவல் அனுப்ப முடியும். “ சந்திரன் ஒருகணம் தயங்கினான்.
“ நான் இப்போதுதான் வந்து இறங்கியிருக்கிறேன். மிஸ்டர் சாமிநாதன், பாலேந்திராவின் ரெலிபோன் நம்பரைத்தந்தார்.
எனக்கு உதவமுடியுமா…? “
“ ம்… உதவி… உதவி… என்றால்… என்ன மாதிரியான உதவி…?
“
மூன்று தடவைகள் பெண் குரலில்
ஒலித்த உதவி என்ற சொல் சந்திரனை கொஞ்சம் வாட்டியது.
“ பேர்த்தில் எனக்குத்
தெரிந்த எவரும் இல்லை. மிஸ்டர் பாலேந்திராவையும் நான் நேரில் பார்த்தது இல்லை. சாமிநாதன்தான் அவரது இலக்கத்தை தந்தவர்… “ இழுத்து
நிறுத்தினான் சந்திரன்.
“மிஸ்டர்
சாமிநாதன்… ம்… ஓல்ரைட்… ஏயார்போர்ட்டுக்கு வெளியே வந்து நில்லும். வந்து கூட்டிப்போகிறேன் “
“ தாங்ஸ்… பாலேந்திரா வருவாரா…? “
“ வரமாட்டார். நான்தான் வரவேண்டும் “
தரையில் இறங்கும் விமானங்கள் - கானா பிரபா
இன்று விடிகாலையில் இருந்து மூன்று மணி நேரம் தவப்படுக்கையில் இருந்தது போலொரு உணர்வோடு கட்டுண்டு கிடந்தேன் “தரையில் இறங்கும் விமானங்கள்” புதினத்தில் மூழ்கியபோது.
எந்தவிதமான மனநிலையோடு தங்களைச் சந்தோஷப்படுத்திக் கொள்கிறார்கள், வாழ்வியல் நெறிமுறைகளோடு வாழத் தலைப்படுகிறார்கள் என்ற ஞானத்தின் திறவுக்கோலாகப் படைக்கப்பட்ட அற்புதமான நாவலிது.
உற்சவ காலம் தொடங்குகிறது ! அன்று யாத்திரை ! ! – இன்று மெய்நிகர் ! ! ! அவதானி
நல்லூர் கந்தசுவாமி கோயில், மடுத்திருத்தலம், முதலானவற்றில் வருடாந்த உற்சவம் தொடங்கும்போது, அதற்கான தயாரிப்பு வேலைகளை பக்தர்களும் அடியாளர்களும் ஆரம்பித்துவிடுவார்கள்.
அதுபோன்று கச்சதீவு உற்சவம், ஹஜ்பெருநாள் வரும் காலங்களில் கச்சதீவு செல்வதற்கும் மக்காவுக்கு பயணிப்பதற்கும் யாத்திரீகர்கள் தயாராகிவிடுவார்கள்.
காலம் காலமாக இது நடந்தேறிவருகிறது.
இலங்கையில் பல வருடங்களாக நீடித்திருந்த உள்நாட்டுப்போர் 2009
ஆம் ஆண்டு மே மாதம் நடுப்பகுதியில் முடிவுக்கு வந்ததையடுத்து, கடந்த பன்னிரண்டு வருடங்களாக மற்றும் ஒரு உற்சவத்திற்கு இலங்கை அரசும், அதனை ராஜபக்ஷ காலத்தை மாத்திரம் தவிர்த்து, எதிர்த்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், கஜேந்திரகுமாரின் தமிழ்த்தேசிய முன்னணியினரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு முறையிடுவதற்காக யாத்திரையை ஆரம்பித்துவிடுவார்கள்.
இந்த யாத்திரை காலம் பெரும்பாலும்
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தில் வரும்.
ஐக்கிய நாடுகளின் மனித
உரிமைப்பேரவையின் கூட்டத்தொடர் வருடாந்தம் பெப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில்
நடைபெற்று வருகிறது.
இதற்குச்செல்வதற்கு அரச
தரப்பும், எதிரணித்தரப்பும் கடந்த தயாராகிவிடும்.
எனினும் கடந்த 2020 ஆம்
ஆண்டு முதல் கொவிட் பெருந்தொற்று பரவியதையடுத்து மெய்நிகர் ஊடாக அனைத்து தரப்புகளும்
பேசத்தொடங்கியிருக்கின்றன.
விமான யாத்திரைக்கு பயணச்செலவு.
மெய்நிகர் சந்திப்புக்கு செலவே இல்லை.
அவ்வளவுதான் வித்தியாசம்
!
இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பிலான அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஒவ்வொரு வருடமும் வெளியிடுவார்.
நூல் அறிமுகம் : மின்னூலில் வலம் வரும் “ வாழும் வரலாறு மல்லிகை ஜீவா “ தேவா ஹெரால்ட் - ஜெர்மனி
கம்பீரநடை, நேர்கொண்ட பார்வை, சொல்லாற்றல், தனது கொள்கைப் பிடிப்பில் அவதானம், போராட்ட குணம், இவை போன்றவைகளே நான் முதன்முதலில் டொமினிக் ஜீவா அவர்களை சந்தித்தபோது அவரைப்பற்றி புரிந்துகொண்ட விடயங்கள்.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா,
அறிமுகப்படுத்திய எழுத்தாளர்தான் முருகபூபதி.
அதன் அறிமுக அரங்கு நடந்தபோது, அதில் உரையாற்றுவதற்கு வாய்ப்பளித்த எழுத்தாளர் முருகபூபதி, ஜீவா மறைந்து ஓராண்டு நிறைவடைந்திருக்கும் இக்காலப்பகுதியில் வாழும் வரலாறு மல்லிகை ஜீவா என்ற மின்நூலை வெளியிட்டுள்ளார்.
வாசகர்கள் இதனை கிண்டிலில் தரவிறக்கம் செய்து படிக்கலாம்.
மல்லிகை ஜீவாவுடன் நெருக்கமாக உறவாடியிருக்கும் முருகபூபதி,
அவர் பற்றிய ருசிகர சம்பவங்களை இந்நூலில் பதிவிட்டுள்ளார்.
ஜீவாவை முதலில் சந்தித்தபோது, அவரது
உயர்ந்த தோற்றமும் எனக்குள்ளே உயர்ந்து நின்றது.
அவருடைய தொனியே - குரலே நிகழ்வரங்கு முழுவதும் வியாபித்திருந்தது.
இந்துமதத்தின் கேடான சாதிக்கொடுமைபற்றியும், தான் எங்கு போனாலும், சாதியை முன்னிறுத்தி தன்னை இழிவுபடுத்தியது பற்றியும், மேடைகளில், கூட்டங்களில் அவர் உரையாற்றும்போது அது நம் மனதை உலுக்கியெடுக்கும்.
தன் வாழ்நாள் முழுக்க அவருக்கு நேர்ந்த கொடுமைகள் வார்த்தைகளுக்குள் அடங்கிவிடா. மனத்துயரங்கள் அழியாதவை. ஜீவாவின் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை அவரின் வாழ்நாள் சம்பவங்களிலிருந்து அவர் விபரிக்கையில் அது சாதியத்தின் திமிரை நேரடியாக கண்முன் நிறுத்தியது.
அவருடைய இலட்சிய வேட்கை, மல்லிகை இதழாக இலங்கையின் இன பன்மைத்துவத்தை முன்னிறுத்த செயலாற்றியது. மல்லிகையில் 1970 காலப்பகுதியில் ஜெயகாந்தன் பற்றி , ஜீவா எழுதிய தொடர் விமர்சனம் பற்றி நேர்மறையான – எதிர் மறையான வாசகர் கருத்துக்களும் மல்லிகையில் பிரசுரிக்கப்பட்டன. நானும் ஜீவாவின் தொடர் பதிவுக்கு மல்லிகையில் எதிர்வினையாற்றியிருந்தேன்.
நனவிடை தோய்தல்: பக்கத்து வீட்டு தாத்தா கனகா கணேஷ் – சிட்னி
சிறு வயது பள்ளி நாட்களை இப்போது நினைத்தாலும் கடுப்பாகத்தான் இருக்கும். பள்ளியில் ஆசிரியைகள் தொல்லைகள் போதாதென்று வீட்டிலும் எப்போ பார்த்தாலும் படி படி என்று உயிரை வாங்குவார்கள். இது தவிர எல்லா ஆசிரியைகளும் நாங்கள் இருந்த வீட்டை சுற்றிலும் தான். வகுப்பில் என்ன செய்தாலும் உடனுக்குடன் அம்மாவிடம் ஒப்புவித்து விடுவார்கள். பிறகு என்ன, தினமும் ஆயுத பூஜை தான். படிப்பு ,தேர்வு, வீட்டுப்பாடங்கள், டியூசன்ஸ் என்று வாழ்க்கையே வெறுத்து போன காலகட்டங்கள் அவை.
அது மட்டுமின்றி வகுப்பில் பாடம் நடத்துகையில் அவ்வப்போது
எழுப்பி கேள்விகள் வேறு கேட்பார்கள். அப்படி கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு தவறாக பதில் சொல்லி விட்டாலோ அல்லது தெரியாமல் விழித்தாலோ தண்டனை என்ற பேரில் ஒவ்வொரு சரியான விடையையும் குறைந்தது பத்து முறைகளாவது எழுதிக் கொண்டு போக வேண்டும். தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட அடிக்கடி நினைத்திருக்கிறேன். ஆனால், அப்படி ஏதேனும் செய்து ஒரு வேளை இறந்து விட்டால், மறுபடியும் பிறந்து மறுபடியும் பாலர் வகுப்பிலிருந்து படிக்க வேண்டுமே என நினைத்து அந்த யோசனையையும் கைவிட்டிருக்கிறேன்.
அப்போதெல்லாம் எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த தாத்தா மேல் தான் கண் எல்லாம். சுமார் ஆறடி உயரத்தில் இந்தியன் பட தாத்தா சாயலில் சற்று பருமனாக கம்பீரமாக இருப்பார். அவரைப் பார்க்கையில் ரொம்ப பொறாமையாக இருக்கும். நானே அந்த தாத்தாவாக மாறி விடக் கூடாதா என்று எத்தனையோ முறை ஏங்கியிருக்கிறேன். கடவுளிடம் கூட என்னை அந்த தாத்தாவாக மாற்றும்படி கடுமையாக வேண்டிக் கொண்டும் இருந்திருக்கிறேன்.
வன்னி ஹோப் (நம்பிக்கை)- இலங்கை ஜனவரி 2022
பெண்களுக்கான சுயதொழில் வாய்பிற்கான வன்னி ஹோப் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட தையல் இயந்திரங்கள்
குழந்தைகள் மற்றும் குடும்பத்தைக் கவனித்து கொள்ளும் பொறுப்பினால் வேலைக்குச் செல்ல முடியாத பெண்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
மேலும் அவர்கள் தங்களது திறன்களைப் பயன் பெறும் வகையில் பயன்படுத்திக் கொள்வதற்கும் இலகுவான வாய்ப்பாகவும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதால் பல நன்மைகளைத் தருகிறது. இந்நிலையில் மலையக பெண்களின் அத்தியாவசிய தேவை கருதி இவ்வாறானதொரு சுயதொழில் வாய்ப்பிற்கான அடித்தளத்தை அமைத்து தந்த வன்னி ஹோப் ( VANNI HOPE) நிறுவனத்தின் CHANDRAN & SRIYANI NALLIAH (USA) அவர்களுக்கு பெண்கள் சார்பாக இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கற்பகதருவினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை முப்பத்து ஒன்று ]
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
பனங்கொட்டையினைப் பாத்தியில் அடுக்கி அதனை ஒழுங்காக
மூடிய பின்னர் அது மண்ணின்கீழ் கிழங்கினை விடத்தொடங்குகிறது என்பதற்கு அறிகுறியாக பனங்கொட்டையைன் மேற்பகுயியில் மேலெ ழுந்து பச்சையாக இலை வரும். அப்படி வந்துவிட்டதென்றால் கிழங்கு வர ஆரம்பிக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ளுவோம். பாத்தியிலே அடுக்கப்பட்ட பனங்கொட்டைகளுள் சில கிழங்கினைத் தராமல் மேலே இலையினைக் காட்டிவிட்டு நின்று விடும் . அப்படி அமைகின்ற பனங்கொட்டைகளும் பயனளி க்காமல் போய்விடுவதும் இல்லை என்பதுதான் முக்கிய நிலையாகும். கிழங்கினைத் தரா விட்டாலும் அந்தப் பனங்கொட்டைகளுக்கு ஒரு குற்ற உணர்வு இருக்கத்தானே செய்யும். அதனால் எப்படியும் தன் னால் ஏதாவது செய்து உதவிட வேண்டும் என்னும் நல்லெண்ணத்தால் " பூரான் " என்னும் சுவையான ஒன்றை கிழங்குக்கு ஈடாக பனங்கொட்டை தந்து தன்னையும் ஓரங்கட்ட விடாமல் செய்து நிற்கிறது என்பதை கருத்திருத்தல் வேண்டும்.
கிழங்கினைத் தராமல் இருக்கின்ற பனங்கொட்டைகளை
இரண்டாகப் பிளந்தால் அங்கே கட்டிப் பொன் போல் ஒன்று எம்மைப் பார்த்து மலர்ந்து நிற்கும்.திரட்சியாய் அமைந்திருக்கும் அதனையே நாங்கள் பூரான் என்று மகிழ்வுடன் வாயூறப் பார்த்து நிற்போம். கடினமான பனங் கொட்டைக்குள் மென்மையான அதுவும் இனிப்புச் சுவையான பூரான் அமைந்திருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா ! கடினமான உள்ளத்திலும் கனிவு இருப்பதைக் காண்கிறோம் அல்லவா ? அதுபோலத்தான் கடினமாய் இருக்கும் பனங்கொட் டைக்குள்ளும் கனிவாய் , சுவையாய் , பூரான் என்னும் ஆச்சரியம் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா ! பூரான் சுவையினைத் தருவதுமட்டு மல்ல அது சத்துக்கள் கொண்ட ஒப்பற்ற இயற்கை உணவாகவும் விளங்குகிறது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.பூரானில் 17.2 விகித மாச்சத்து 11 விகித உயிச்சத்து சி , ஒரளவு புரதம் ,கொழுப்பு , சர்க்கரைச் சத்து, அஸ்கார்பிக் அமிலம், , கல்சியம், மக்னீசியம், பொஸ்பரசு ஆகியன இருக்கிறதாம். அது மட்டுமன்றி ஒட்சியேற்றியாகவும் தொழிற்பட்டு - புற்றுநோய், இதயநோய் ஏற்படுவதனைத் தடுக்கும் வல்லமையான அன்டி ஒக்சிடென்ட் மற்றும் பினோலினையும் கொண்டிருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியது முக்கியமாகும்.
இலங்கைச் செய்திகள்
பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை; உயிரிழந்த உறவினரை தனிப்பட்ட ரீதியில் நினைவுகூர அனுமதி
இலங்கை வருகிறார் அமெரிக்க உயரதிகாரி
ரயில் பயணச்சீட்டுக்கள் ஒன்லைனில் விநியோகம்
மைத்திரிபால சிறிசேன 20 இல் யாழ். விஜயம்
70 வயதில் முதுகலை பட்டம் பெற்ற முதியவர்
பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை; உயிரிழந்த உறவினரை தனிப்பட்ட ரீதியில் நினைவுகூர அனுமதி
- கையளிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு இடைக்கால அறிக்கையில் பரிந்துரை
- ஜூன் மாதத்துக்குள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம்
பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை என்றும் யுத்தத்தின் போது உறவினரொருவர் உயிரிழந்திருப்பாராயின், தனிப்பட்ட ரீதியில் அவரை நினைவுகூர அனுமதி வழங்குமாறும், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என்பது குறித்து விசாரிப்பதற்காக ஜனாதிபியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
உலகச் செய்திகள்
உக்ரைனில் இருந்து பிரஜைகளை வெளியேற பல நாடுகள் உத்தரவு
பாகிஸ்தான் சிறுபான்மையினரை காக்க ஐ.நாவுக்குக் கடிதம்
மத நிந்தனை குற்றச்சாட்டில் பாகிஸ்தான் ஆசிரியருக்கு ஆயுள் சிறை
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா நியாயம் தேடுவதாக அமெ. குற்றச்சாட்டு
'ரஷ்ய படைகள் பின்வாங்கவில்லை' அமெரிக்கா அறிவிப்பு
சகோதரியைக் கொன்றவரை விடுவித்தது பாகிஸ்தான் நீதிமன்றம்
டிரம்பின் புதிய சமூக ஊடகம்: 500 பேர் பயன்படுத்தி சோதிப்பு
உக்ரைனில் இருந்து பிரஜைகளை வெளியேற பல நாடுகள் உத்தரவு
சிவ மஹோத்ஸவம் திருவிழா. 21/02/2022 - 02/03/2022
1 Temple Road, Helensburgh, Sydney, NSW – 2508, Australia
சிவ மஹோத்ஸவம் என்பது ஸ்ரீ சந்திரமெளலிஸ்வரர் மற்றும் தெய்வீக அன்னை ஸ்ரீ திரிபுராசுந்தரி யிடம் ஆசி பெற ஒரு மங்களகரமான விழா.
2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி, கொடி ஏற்றுதல் விழாவுடன் தொடங்கி மார்ச் 2 ஆம் தேதி முடிவடைகிறது.
மீனாட்சி திருக்கல்யாணம் பிப்ரவரி 27 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
மெல்பனில் Dare to Differ நூல் வெளியீட்டு அரங்கு
அவுஸ்திரேலியாவில் மூன்று
தசாப்த காலங்களுக்கும் மேலாக வதியும் சமூகப்பணியாளரும், தமிழ் அமைப்புகளில் அங்கம் வகித்திருப்பவருமான சபாரத்தினம் சுந்தரமூர்த்தி அவர்கள் எழுதியிருக்கும்
Dare to Differ நூலின் வெளியீட்டு அரங்கு இம்மாதம் 26 ஆம் திகதி ( 26-02-2022 ) சனிக்கிழமை
மாலை 3-00 மணிக்கு மெல்பனில் Glen Waverley Community Centre மண்டபத்தில் ( 692-724 , Waverley Road, Glen Waverley 3150 ) நடைபெறும்.
இலக்கியவெளி சஞ்சிகை நடத்தும் "கவிதை உரையாடல் - 2"
நாள்: ஞாயிற்றுக்கிழமை 06-03-2022
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 8.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30
வழி: ZOOM, Facebook
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/
Facebook live:
https://www.facebook.com/
மேலதிக விபரங்களுக்கு: - 001416-822-6316
கவிதை நூல்களைப் பேசுவோம்: