08/02/2022 இன்று துர்க்கை அம்மன் மாசி மக மகோற்சவம் பக்த்தர்கழுடன் கொடியேற்ற வைபவம் NSW corona panadamic health orders உடன் சிறப்பாக நடைபெற்றது. இன்று தொடக்கம் 12 தினங்களுக்கு , தொடர்ந்து விசேட பூசை, திருவிழா, தேர், மாசி மக தீர்த்த திருவிழா, பூங்காவனம் என அம்மன் கோவில் திருவிழாக்கோலமாக காட்சி அளிக்கும்
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
சிட்னி துர்க்கை அம்மன் மாசி மக மகோற்சவம் கொடியேற்ற வைபவம் 08/02/2022
08/02/2022 இன்று துர்க்கை அம்மன் மாசி மக மகோற்சவம் பக்த்தர்கழுடன் கொடியேற்ற வைபவம் NSW corona panadamic health orders உடன் சிறப்பாக நடைபெற்றது. இன்று தொடக்கம் 12 தினங்களுக்கு , தொடர்ந்து விசேட பூசை, திருவிழா, தேர், மாசி மக தீர்த்த திருவிழா, பூங்காவனம் என அம்மன் கோவில் திருவிழாக்கோலமாக காட்சி அளிக்கும்
இசைக் குயில் லதா மங்கேஷ்கர் அவர்கள் காலமாகிவிட்டார் - செ பாஸ்கரன்
.
லதா மங்கேஷ்கர் அவர்கள் காலமாகிவிட்டார் என்ற செய்தி மனதை ஆழமாக பாதித்திருக்கிறது. அற்புதமான குரல் வளம் நிறைந்த ஒரு பாடகி கொரோனா நோய் தாக்கத்தினால் இன்று அவரது 92வது வயதில் 06.02.2022 உயிரிழந்திருக்கிறார். லதா மங்கேஷ்கர் அவர்கள் 28 செப்டம்பர் 1929ஆம் ஆண்டு பிறந்தவர், ஒரு புகழ் பெற்ற பாடகியாக , மாநிலங்களவை உறுப்பினராகவும் இந்தியாவின் இசைக்குயில் என்றும் பல பரிமாணங்களை பெற்றவர்.இந்திய நாட்டின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற ஒருவர். 60 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பாடியவர். இவருடைய பாடல்களைக் கேட்கும்போது காற்றில் மிதந்து செல்வது போல் இருக்கும். நாங்கள் இளைஞர்களாக இருந்த காலத்திலே பல இந்தி பாடல்கள் அறிமுகமானதே லதா மங்கேஷ்கர் உடைய அந்த அற்புதமான மயக்கும் குரல் என்றால் அது மிகையாகாது. அபிமான் என்ற திரைப்படத்தில் பாடிய "பியா பீனா பியா பீனா" என்ற ஒரு பாடல் ஆண், பெண், இளைஞர்கள் , யுவதிகள் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோர் மனதையும் கட்டிப்போட்ட ஒரு பாடல். அந்த பாடலை கேட்ட எத்தனையோ பேர் அந்த பாடலை கேட்ட பின் லதா மங்கேஷ்கர் உடைய பாடல்கள் எல்லாம் தேடித்தேடி அலைந்த காலங்கள் எங்கள் நாட்டிலே இருந்தது.
அவர் முதன்முதலாக பாடியது ஒரு மராட்டிய பாடல் ,அதன்பின்பு ஹிந்தி தமிழ் என்று எல்லா மொழிகளிலுமே பாடி இருக்கின்றார். பாரத ரத்னா விருது 2007 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்ட்து . குறிப்பிட்ட சிலருக்கு கிடைத்த இந்த விருது இவருக்கு கிடைத்தது. அதைவிட பத்மபூஷன், பத்மவிபூஷன் இப்படி பல பட்டங்கள். இவருடைய பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டது, 1974-ஆம் ஆண்டு உலக அளவிலேயே அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இவர் இடம் பிடித்துக்கொண்டார்.
இந்த அற்புதமான பாடகியினுடைய இறப்பு உண்மையிலேயே தாங்க முடியாத ஒரு ஒன்றாகத்தான் இருக்கின்றது. சிறந்த பாடகர்கள் சிறந்த நடிகர்கள் என்று தொடர்ந்து இந்த கொரோனா பலரை காவு கொண்டு செல்கின்றது. அந்த வகையிலே இந்த தங்கக் குரல் லதா மங்கேஷ்கர் அதற்குள் அடங்கி விட்டார். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
தமிழுக்கு வந்த பாடகி லதா மங்கேஷ்கர்
பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் வானரதம் என்ற மொழி மாற்றுப் படத்தில் இருந்து எண்பதுகளில் இசைஞானி இளையராஜாவிடம் பாடிய தமிழ் மற்றும் தெலுங்குப் பாடல்களின் நினைவு மீட்டல்.
2021ம் ஆண்டு உயர் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்தவர்களில் சிலருடனான கலந்துரையாடல்
.தமிழ் முழக்கம் வானொலி , தமிழ்முரசுஅவுஸ்திரேலியா ஆக்கியவற்ரிற்காக எடுக்கப் பட்டது .
மவுண்ட் றூயிட் கல்வி நிலையத்தின் மாதிரிப் பொங்கல் பரமபுத்திரன்
மவுண்ட் றூயிட் கல்விநிலையம் 2022 ம் ஆண்டிற்கான தமிழ்மொழிக் கல்வி
கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளுக்காக மாதிரிப்பொங்கல் நிகழ்வுடன் பள்ளியைத் தொடக்கியிருந்தனர்.
தைத்திங்கள் முதல் நாளில் அதிகாலையில் கொண்டாடப்படும் திருநாள் பொங்கல் எனினும்
மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வான பொங்கலை கொண்டாடி
மகிழவேண்டும் என்கின்ற நோக்கத்துடன் மாதிரிப்பொங்கல் நிகழ்வினை ஒவ்வோர் ஆண்டும்
நிகழ்த்துகின்றனர். இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்,
நிர்வாக உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் விருப்புடன் கலந்துகொள்ள
மாதிரிப்பொங்கல் சிறப்புற நடைபெற்றது. பள்ளியின் கலைக்குழு உறுப்பினர்கள்
பொங்கலுக்கான சகல ஒழுங்குகளையும் மேற்கொண்டிருந்தனர்.
ஆண்டவனை அகங்கொண்டால் அல்லலின்றி வாழ்ந்திடலாம் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
எழுத்தும் வாழ்க்கையும் – ( இரண்டாம் பாகம் ) அங்கம் -01 கடல்சூழ்ந்த கண்டத்தில் முதலில் சந்தித்தவர்கள் ! புளுக்கொடியலை ஒடித்து முகர்ந்து பார்த்த அதிகாரிகள் !! முருகபூபதி
எனது எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் முதல் பாகத்தில்
வெளியான 75 அங்கங்களையும் தொடர்ச்சியாகப் படித்து, தமது கருத்துக்களை எழுதிய வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி.
இன்று பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி வரும் வரையில், இந்த இரண்டாம் பாகத்தை எழுதுவதற்காக சில வாரங்கள்
காத்திருந்தேன்.
அதற்கு ஒரு காரணமும் இருந்தது. 35 வருடங்களுக்கு முன்னர்,
அதாவது 1987 ஆம் ஆண்டு, இதே பெப்ரவரி 07 ஆம் திகதி இரவுதான், மேற்கு
அவுஸ்திரேலியாவின் தலைநகரம் பேர்த்தில் வந்து
இறங்கினேன்.
அன்றைய நாளிலிருந்து எழுதப்படவிருக்கும் இந்த இரண்டாம்
பாகத்தின் முதல் அங்கத்திற்கு வாசகர்களாகிய உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.
முதல் பாகத்தில் வெளியான 75 அங்கங்களிலும், எனது எழுத்துலகப்பிரவேசம்,
பத்திரிகைப் பணி, சந்தித்த மனிதர்கள், இணைந்திருந்த
வெகுஜன மற்றும் அரசியல் இயக்கங்கள், சந்தித்த
நெருக்கடிகள், பயணித்த நாடுகள், பார்த்த இடங்கள்
பற்றியெல்லாம் முடிந்தவரையில் விரிவாக எழுதியிருந்தேன்.
நினைவாற்றல்தான் மனிதர்களின்
சிறந்த மனசாட்சி. அதுவே நீதிபதி. எனினும் நினைவில் வைத்திருக்கத் தகாத பல சம்பவங்களும்
மனிதர்களும் கூட நினைவில் வந்துகொண்டேயிருக்கும் கொடுமையை அனுபவிப்பவர்களும் மனிதர்கள்தான்.
அதனால், நினைவாற்றல் கூட சோதனைக்கும் வேதனைக்குமுரியதுதான்.
1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி, முற்பகல் 10 மணியளவில் தாய்லாந்து , பேங்கொக் விமான நிலையத்திலிருந்து அந்த தாய் ஏயார்வேய்ஸ் விமானம் என்னையும் இதர பயணிகளையும் சுமந்துகொண்டு, மேற்கு அவுஸ்திரேலியாவை நோக்கி பறந்துகொண்டிருந்தபோது, விடைகொடுத்துவிட்ட தாயகத்தில் எனது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் நினைவில் மீண்டும் மீண்டும் சஞ்சரித்தனர்.
கொவிட் தொற்றுக்குள்ளான லதா மங்கேஷ்கர் 92ஆவது வயதில் காலமானார்
Sunday, February 6, 2022 - 10:36am
- இந்தியாவில் 2 நாட்கள் துக்கதினம் பிரகடனம்
பிரபல் பின்னணி திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் கடந்த ஜனவரி 08ஆம் திகதி முதல் மும்பையில் உள்ள பிரிட்ஜ் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர், இன்று காலை 8.12 மணியளவில் காலமானார்.
கடந்த சில தினங்களாக லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக் கிடமாகவே இருந்து வந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொடர்ந்து 20 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல்நலம் தேறியது. இதனால் கடந்த வாரம் வெண்டிலேட்டர் சிகிச்சை நிறுத்தப்பட்டது.
ஆனால், நேற்று (05) சனிக்கிழமை அவரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளது என ப்ரீச் கேண்டி மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டிருந்ததுடன், அவர் மீண்டும் ICU பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்" என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இன்று காலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவரது உயிரைக் காப்பாற்ற வைத்தியர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பிரதித் சம்தானி, " லதா அவர்கள் கோவிட் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 28 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல் உறுப்புகள் பலவும் செயலிழந்ததால் இன்று காலை 8.12 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது", என்று தெரிவித்துள்ளார்.
பண்டிட் பீம்சென் ஜோஷி 100 - கானா பிரபா
நிச்சயத் தாம்பூலம் - ஸ்வீட் சிக்ஸ்டி 2 - ச சுந்தரதாஸ்
.
கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு விஸ்வநாதன் ,ராமமூர்த்தி வழங்கிய இசை சௌந்தராஜன் ,சுசிலா,ஈஸ்வரி குரலில் ரசிகர்களை அப்படியே கட்டிப் போட்டது எனலாம்.படத்தின் கதாநாயகன் சிவாஜிக்கு நான்கு வாழ்க்கை நிலைகளில் பாடல்களை கவிஞர் இயற்றி இருந்தார்.ஆரம்பத்தில் கவலை இல்லாத ஜாலி வாழ்க்கை வாழும் இளைஞன் பாடுவதாக ‘ ஆண்டவன் படைத்தான் என்கிட்டே கொடுத்தான் அனுபவி ராஜன்னு அனுப்பி வச்சான் ” என்றும்,திருமணமானவுடன் முதலிரவில் ‘ பாவாடைதாவணியில் பார்த்த உருவமா “ என்று மனைவியை வர்ணிப்பதாகட்டும், குடும்ப பிரச்சனையால் குடிகாரனாகி ‘ இதுவேர் உலகம் தனி உலகம்” என்று கிளப்பில் பாடுவதாகட்டும்,பின்னர் எல்லாம் இழந்து ‘ படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்தானே என்று பாடுவதாகட்டும் கண்ணதாசனின் வரிகள் ஒரே படத்தில் பல்வேறுபட்ட மனித வாழ்வை சித்தரித்துக் காட்டியிருந்தது.
ஒரு சிறைக்கைதியின் வாழ்வியல் அனுபவங்கள் சாந்தாராம் ! வி. எஸ். கணநாதன்
SHANTARAM என்ற தலைப்பில் 2003 -ஆம் ஆண்டு 936 பக்கங்கள் கொண்ட ஒரு பெரும் ஆங்கில நாவல் வெளிவந்தது. அதன் தலைப்புக் கீழே இருந்த குறிப்பிட்ட இரண்டு வரிகள் என் கவனத்தை ஈர்த்தன.
He was Australia's most wanted man.
Now he has written Australia's most wanted
novel.
ஆஸ்திரேலியா
மெல்போர்ன் நகர் வாசி க்ரெகரி டேவிட்
ராபர்ட் என்பவரைப் பற்றிய கதை இது. தன் பயங்கர வாழ்க்கையை,
அதனால் தான் அனுபவித்த தாங்கொணா துன்பங்களை, ஒளிவுமறைவின்றி சுய சரிதை வடிவில் இவர் எழுதியுள்ளார். ஆஸ்திரேலியாவில் கதை ஆரம்பிக்கிறது. அவர் செய்த மாபெரும் குற்றங்களுக்காக ஆஸ்திரேலியா
மெல்போர்ன் கடுங்காவல் சிறையில் 1978- ஆம் ஆண்டு, அவருக்கு 19 வருட
சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறைக்காவலர்கள் கையிலிருக்கும் பொல்லுகளை, எந்நேரமும் தம்
இஷ்டப்படி கைதிகளை அடித்து வதைக்கத் தயங்கார்கள். அடி வாங்கிய கைதி, திரும்பி அவர்களை தற்செயலாய் முறைத்துப் பார்த்தானெனில், அவனை இரக்கமின்றி மேலும் மேலும் சித்திரவதை செய்வார்கள். அவனைச் சாடிவிடுவார்கள். இதுமட்டுமல்லாமல், நன்நடத்தைக்காக விடுவித்த கைதிகள் சிலரை, அதே சிறைச்சாலை வேலைகளில் அமர்த்தி, கைதிகளின் அடாவடித்தனத்தையும், அவர்களிடையே நடக்கும் சண்டைகளையும் அடக்க, இந்தக் கும்பலைப் பயன்படுத்தினர்.
இந்தக்
கும்பல்,
தாம் சிறையில் பட்ட துன்பங்களை, தங்கள் முன்னைய ஆதங்கத்தை, பின்னர் வந்த
கைதிகள் மீது கரப்பான் பூச்சியை நசுக்குகிற மாதிரி பரிதாபமின்றி கொட்டித்தீர்ப்பார்கள்.
நிஜத்தில் அங்கிருக்கும் கரப்பான் பூச்சிகளுக்கும் மூட்டைப் பூச்சிகளுக்கும் ஒரே
கொண்டாட்டம். அவற்றுக்கும் குறைவில்லை. காயம் அடைந்த கைதிகள் இரத்தக் கறையுடன் உணர்வற்று அரை உயிருடன்
தூங்கும் வரை காத்திருந்து, அந்தப் பூச்சிகள் தங்கள் தாகத்தையும் பசியையும்
தங்கு தடையின்றி உறிஞ்சி அனுபவித்தன.
சில கைதிகளுக்கு சிறைச்சாலையிலே அப்படி வாழ்வதை விட, செத்துத் தொலையலாம் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் க்ரெகரிக்கோ தான் எப்படி சிறையிலிருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணமே தோன்றும்.
நீதியற்ற ஊரில் நாதியற்றவள் பிள்ளை பெற்றால் என்ன நடக்கும் !? அவதானி
“ இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
அண்மையில் யாழ்ப்பாணம் வருகை
தந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்ரி அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய உரைகளை கேட்டதையடுத்து
மேற்குறித்த பாடல்தான் நினைவுக்கு வந்தது.
அவர் சொன்னார்: “ வடக்கில் உள்ள சில அரசியல்வாதிகள், இங்குள்ள இளைஞர்,
யுவதிகளை தவறாக வழிநடத்துகிறார்கள். கிடைக்காது
எனத் தெரிந்துகொண்டும், அதனைப்பெற முயற்சிக்கின்றோம் எனச் சொல்லிக்கொண்டு இங்குள்ள
மக்களை ஏமாற்றுகிறார்கள். “
அவர் சுட்டிக்காட்டியிருப்பது, வடபகுதியிலிருந்து
நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருக்கும் உறுப்பினர்களைத்தான் என்பது தெளிவானது.
அவ்வாறாயின், இன்றைய அரசு குறிப்பிட்ட இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகளை
தீர்த்து வைத்துள்ளதா..? போர்க்காலத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த
சில வருடங்களாக அறப்போராட்டம் நடத்திவருகிறார்களே..!? அவர்களுக்கு என்ன நீதி கிடைத்திருக்கிறது?
இவர்கள் நீதிஅமைச்சர் குறிப்பிடும்
தமிழ் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் செல்லவில்லையே !
காணாமல் போனவர்கள் பற்றி
நீதி கேட்டு அறப்போராட்டம் ஒருபுறம் நடக்கின்றது. அத்துடன் அரசியல் கைதிகளை விடுதலை
செய்யவேண்டும் என்ற குரலும் பல காலமாக ஒலிக்கிறது. இந்த இரண்டு விவகாரங்களுமே நீதியமைச்சரின் கவனத்திற்குட்பட்ட
விடயங்கள்.
எனினும், யாழ். சிறையிலிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் போதை
வஸ்துக்கு அடிமையானவர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கவேண்டும் என்று
பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை வேறு திசைக்கு திருப்புகிறார் நீதியமைச்சர்.
தென்னிலங்கை சிறைகளிலும் ஏனைய பிரதேசங்களிலும் போதை
வஸ்துக்கு அடிமையானவர்கள் இல்லையா..?
வடக்கிற்கு எவ்வாறு போதை
வஸ்து வந்துகொண்டிருக்கிறது…? கடல் மார்க்கமாக வருமாயின், கடலில் கண்காணிப்பில் ஈடுபடும்
– ரோந்து செல்லும் கடற்படையினர் என்ன செய்கிறார்கள்..?
தென்னிலங்கையிலிருந்து தரைமார்க்கமாக போதை வஸ்து வடக்கிற்கு வருமாயின் வீதிகளில் கடமையிலிருக்கும் காவல்துறை என்ன செய்கிறது..?
கற்பதருவினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை இருபத்து ஒன்பது ]
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
பனை விதைகளை எடுத்து நோக்கினால் அவை
தொண்ணூறு விகிதத் துக்குக்கு மேல் முளைக்கும் நிலை யிலேதான் இருக்கின்றன என்று அறந் திட முடிகிறது.பாத்தியிலே அடுக்கப்பட்ட பனங்கொட்டைகள் நிலத் தில் விடுகின்ற வேரானது நாங்கள் சுவைத்து உன்னும் கிழங்காகவே வருகிறது என்பதுதான் மிகவும் முக் கிய நிலையாகும்.பாத்தியில் அடுக்கப்பட்ட பின்னர் கிழங்கு பிடுங்கும் நிலை மூன்று மாதங்களின் பின் னரே வாய்க்கிறது.
நிலத்திலிருந்து பனக்கிழங்கினைப் பிடுங்கி வெளியே எடுக்கும் பொழுது பேரானந்த மாகவே இருக்கும். தோலுடன் கிழங்கு வந்து எம்மைப் பார்ர்த் தபடி நிற்கும்.கிழங்கினைப் பாதுகாக்கும் கவசத்தைப்போலவே மேல்த் தோலிருக்கும். அந்தத் தோலினைத் தோகை என்று பெயரிட்டு அழைப்பார் கள்.வெளித்தோலான தோகையினை உரித்தபின் கிழங்கினைப் பார்க்கை யில் பரவசமே ஏற்படும். அதன் திரட்சியும், நிறமும் மனத்தை நிறைத்தே விடும்.
பனங்கிழங்கினைக் பச்சையாகவே இரண்டாகக் கிழித்து வெய்யிலில் காய விட்டு , பின்னர் அதனை மாவாக்கி பலவிதமாகச் சாப்பிடுகிறோம்.இது ஒரு முறையாகும். பானைகளில் நீரில் வைத்து அவித்தும் சாப்பிடுவதும் ஒரு முறையாகும். அவித்த கிழங்கினை வெய்யிலில் காயவைத்து பின் எடுத்துச் சாப்பிடு வதும் ஒரு முறையாகவே இருக்கிறது.மூன்று நிலைகளில் பனங்கிழங்கினை சாப்பிடுவதற்கு பழக்கப் படுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் இங்கு முக்கிய கருத்தெனலாம்.
பச்சைப் பனங்கிழங்கினை வெய்யிலில் காயவைத்து எடுத்த பின்னர் அத னை மாவாக்கி எடுக்கும் பொழுது , அந்த மாவினையே ஒடியல் மா என்கி றோம். இந்த மாத்தான் பல உணவுப் பதார்த்தங்களைச் செய்வதற்கு மூல மாக வந்தமைகிறது என்பது முக்கியமாகும்.
அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியத்தின் ‘முத்தமிழ் மாலை 22’
இலங்கைச் செய்திகள்
யாழ். பலாலி விமான நிலையம் விரைவில் திறப்பு
குருந்தூர் மலையில் தொல்லியல் சட்டத்திற்கு கொடுக்கப்படாத அதிகாரத்தை செயற்படுத்துகின்றார்கள்
புலிச் சந்தேகநபர்களை விடுதலை செய்ய வேண்டும்
அம்பிகா சற்குணநாதனது கருத்துகளை வெளிநாட்டு அமைச்சு மறுப்பு
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து வடக்கில் தொடரும் போராட்டங்கள்
கதிரவெளி விக்னேஸ்வரா தேசிய பாடசாலை தொழிநுட்ப பீடத்திற்கு வியாழேந்திரன் அடிக்கல்
யாழ். பலாலி விமான நிலையம் விரைவில் திறப்பு
உலகச் செய்திகள்
வடகொரியா 2017 இன் பின் மிகப்பெரிய ஏவுகணை வீச்சு
உக்ரைன் பதற்றம்: போலி தகவல்களை சித்தரிப்பதாக ரஷ்யா மீது குற்றச்சாட்டு
பாகிஸ்தான் மீதான தடையை நீக்க ஐரோப்பா மறுப்பு
சூக்கி மீது புதிய குற்றச்சாட்டு
பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகத்தின் நான்கு ஊழியர்கள் இராஜினாமா
பல நாள் மீட்புப் பணிகளின் பின் மீட்கப்பட்ட 5 வயது மொராக்கோ சிறுவன் மரணம்
வடகொரியா 2017 இன் பின் மிகப்பெரிய ஏவுகணை வீச்சு
வட கொரியா 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனது மிகப்பெரிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
ஒரு இடைநிலை ஆயுதம் என நம்பப்படும் இந்த ஏவுகணை நேற்று ஜப்பான் கடலில் விழுவதற்கு முன்னர் 2,000 கிலோமீற்றர் பாய்ந்துள்ளது.
வட கொரியா இந்த மாதத்தில் நடத்தியுள்ள ஏழாவது ஏவுகணை சோதனையாக இது உள்ளது. இதற்கு ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளன.
உலக சமாதானத்திற்காகவும் நல்லிணக்கத்துக்காகவும் செய்யும் தியானம்
உலக சமாதானத்திற்காகவும் நல்லிணக்
7/02/2022:
சிறப்பு பேச்சாளர்:
திரு ப. பஞ்சாட்சரம் தலைவர் - தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் (நிசவே ) பதிவு
கர்மவினையும் தியானமும் (பகுதி 3)
உலக சமாதானத்திற்காகவும் நல்லி
1. சிட்னி தியான வகுப்பு - 30 நிமிடங்களுக்கு தியான வகுப்பு
சிட்னி நேரப்படி காலை 8.30 மணிக்குத் தொடங்குகிறது,
ஜூம் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது; .
https://us02web.zoom.us/j/
கூட்ட அடையள எண்: 816 7104 9231
கடவுக் குறியீடு: 5151