மவுண்ட் றூயிட் தமிழ்க்கல்வி நிலையம் தனது 2022
ம் ஆண்டிற்கான கல்விச் செயற்பாடுகளுக்காக
எதிர்வரும் 05/02/2022 சனிக்கிழமை முதல் திறக்கப்படுகின்றது. இந்த ஆண்டும் மழலையர் முதல்
வளர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் வழமைபோல தொடர்ந்தும் மாலை 2 மணிமுதல் 4.30
மணிவரை நடைபெற உள்ளது எனவும், புதிதாகச் சேர்ந்துகொள்ள விரும்பும் மாணவர்களும்
தங்களுக்கான வகுப்பு அனுமதியினை 05/02/2022
முதல் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
மவுண்ட் றூயிட் தமிழ்க்கல்வி நிலையத்தின் 2022 ம் ஆண்டிற்கான தமிழ் கல்விச் செயற்பாடுகள்
அன்னை அபிராமியால் ஆட்கொள்ளப்பட்ட அருளாளர் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பொருளான அந்தப் பெருஞ்
சக்தியினை அகத்தில் இருத்திய பல அடியார்கள் இந்த அவனியிலே வந்து பிறந்திருக்கிறார்கள். அவர்களின் பேச்சினையும், போக்கினை யும், ப
“எதுவரினும் தினமுன்னைப் பார்க்க வருவேன்! எனையணைத்து ஒருமுத்தம் தந்தாற் போதும்!”
பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்.
நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டல்லவா? சென்ற வாரம்
இடம்பெற்ற “குலவிளக்குப் பிள்ளைகளே!’ சற்றுக் கேட்பீர்!” என்ற தலைப்பொடு
எழுந்த கவிதை ‘வயதில் மூத்த பெற்றோரைத் தங்களின் காரியம் முடிந்தவுடன் -
பணமிருந்தும் - தங்களொடு வைத்துப் பார்க்கும் வசதிகள் இருந்தும் - பெற்றோர்களின்; உணர்வுகளுக்கு
முக்கியம் கொடுக்காது — மூத்தோர் இல்லங்களிலே சேர்த்து விடுவதைதயும் அங்கு அவர்கள் பிள்ளைகளினதும்
பேரப்பிள்ளைகளினதும் அன்பிற்காக ஏங்குவதையும் சித்தரித்தது.’
இன்றைய கவிதை இறுதிவரை உண்மையான அன்பொடு
செயற்படும் அன்புப் பிள்ளைகளின் செந்தண்மையைச் சித்தரிக்கிறது. படித்தாற்
புரியும். பண்புநிறை சோதரி ஒருவரின் மனதிலே எழுந்த யதார்த்தமான கருத்துகள் கவிதை
உருவம் பெறுகின்றன!
முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா (Tamil Edition) Free Kindle Edition மின்னூல் வெளியீடு
இலங்கை மூத்த எழுத்தாளரும் மல்லிகை இதழின் ஆசிரியருமான டொமினிக்ஜீவா இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய லெ. முருகபூபதி, எழுதியிருக்கும் வாழும் வரலாறு மல்லிகை ஜீவா நூல் தற்போது மின்னூலாக வெளியாகியுள்ளது.
மல்லிகை
ஜீவாவின் வாழ்வையும் பணிகளையும் பதிவுசெய்யும் வகையில் நீண்ட முன்னுரையுடன் வெளிவந்துள்ள
இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் அக்கினிக்குஞ்சு,
தமிழ் முரசு ஆகிய இணைய இதழ்களில் வெளியானது.
இலங்கை யாழ்ப்பாணத்தில் சாதாரண மத்திய
தரக் குடும்பத்தில் பிறந்து, உயர்கல்வியை பெறுவதற்குரிய வாய்ப்பு வசதிகளை இழந்து, அறிஞர்களினதும் முற்போக்கு எழுத்தாளர்களினதும் நூல்களை
வாசித்துப்பெற்ற அனுபவங்களினாலேயே மேதையாக
வலம்வந்து, ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்திருக்கும் மல்லிகை ஜீவா,
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் தமது 93 வயதில் மறைந்தார்.
டொமினிக் ஜீவா, மல்லிகை கலை, இலக்கிய மாத இதழை 1966 ஆம்
ஆண்டுமுதல், 2012 ஆம் ஆண்டு வரையில் வெளியிட்டார். இதுவரையில் நானூறுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளியாகியிருக்கின்றன.
இவ்விதழ்களை நூலகம் ஆவணகத்தில்
பார்க்கமுடியும்.
அவுஸ்திரேலியாவில் தற்போது
வதியும் முருகபூபதி, மேற்கிலங்கையில் நீர்கொழும்பைச்
சேர்ந்தவர். மல்லிகை இதழில் தனது முதலாவது
சிறுகதையை 1972 இல் ( கனவுகள் ஆயிரம் ) எழுதி ஈழத்து இலக்கிய உலகில்
பிரவேசித்தார்.
அன்றுமுதல் ஜீவாவின் நெருக்கமான
நண்பராக விளங்கிய முருகபூபதி, ஏற்கனவே 2001 ஆம் ஆண்டு மல்லிகை ஜீவா
நினைவுகள் என்ற நூலையும் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மல்லிகை ஜீவா கொழும்பில் மறைந்ததையடுத்து, அவரது வாழ்வில்
நடந்த பல முக்கியமான சம்பவங்களை தொகுத்து எழுதிய தொடர் தற்போது நூலுருப்பெற்றுள்ளது.
மல்லிகை ஜீவா மறைந்து ஓராண்டு
நிறைவடைந்திருக்கும் இவ்வேளையில் குறிப்பிட்ட தொடர் வாழும் வரலாறு மல்லிகை
ஜீவா என்ற பெயரில் மின்னூலாக வெளிவந்துள்ளது.
இந்நூலில் மல்லிகை ஜீவா சம்பந்தப்பட்ட பல படங்களும் இடம்பெற்றுள்ளன.
என் பிரிய எழுத்தாளர் செங்கை ஆழியான் - கானா பிரபா
என் வாசிப்பு உலகில் தாயாக விளங்கிய பெருமதிப்புக்குரிய
செங்கை ஆழியான் அவர்களது பிறந்த தினம் (ஜனவரி 25,1941) இன்றாகும்.
சர்வதேச சமூகம் சர்வரோக நிவாரணியா…? அவதானி
இலங்கை, இந்து சமுத்திரத்தின் நடுவே துலங்கும் அழகிய முத்து. இந்த முத்தை சிறைப்பிடிக்க முதலில் போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும், இவர்களுக்குப்பின்னர் பிரித்தானியரும் வந்து, அதனை சுரண்டக் கூடியளவுக்கு சுரண்டிவிட்டுச்சென்றுவிட்டாலும், இந்த முத்து இன்றளவும் சர்வதேசத்தின் அழகிய காட்சிப் பொருளாகத்தான் இருக்கிறது.
சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த கட்சி அரசியல் ஆட்சியாளர்களும் தமது
பங்கிற்கு சுரண்டத்தான் செய்தனர். முடியாதவிடத்து வெளிநாட்டு கடன்களைப்பெற்று, சுரண்டிய
இடங்களில் ஒத்தடம் கொடுத்தனர்.
இலங்கையில் வாழ்ந்த மூவின மக்களையும் சமமாக நடத்தாமல் பெரும்பான்மை இனத்தவர் பேசும் மொழிக்கும் அவர்கள் பின்பற்றிய மதத்திற்கும் முக்கியத்துவம் வழங்கும் வகையில் , ஏனைய இரண்டு சிறுபான்மை இனத்தையும் ( இரண்டும் தமிழ் பேசும் இனங்கள் ) இரண்டாம் பட்சமாக்கும் அரசியலமைப்புகளை காலத்துக் காலம் உருவாக்கியதனால், தேசிய இனப்பிரச்சினை உக்கிரமடைந்து அது இன விடுதலைப் போராட்டமாகவும் வெடித்தது.
மாநிலம் வரலாறாய் ஆக்கியே மதிக்கும் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
பாசம் - ஸ்வீட் சிக்ஸ்டி 1 - ச சுந்தரதாஸ்
.
1960 ஆண்டுகளின் ஆரம்பத்தில் தமிழ் திரையுலககின் உச்ச நடிகராக மாறி விட்ட மக்கள் திலகம் எம் ஜீ ஆர் சரித்திர கதைகளைக் கொண்ட படங்களில் நடிப்பதில் தனக்கிருந்த ஆர்வத்தை சற்று தளர்த்திக் கொண்டு சமூகக் கதைகளிலும் நடிக்க முன்வந்திருந்தார்ஆனால் சமூகக் கதைகளை தேர்ந்தெடுப்பதில் அவருக்கு ஒரு குழப்பம் இருந்தே வந்தது.பெரும்பாலும் தயாரிப்பாளர்,டைரக்டர் தெரிவு செய்யும் படங்களிலேயே நடித்து வந்தார். இவற்றில் பல படங்கள் தோல்வியே கண்டன.இந்த வரிசையில் எம் ஜீ ஆர் ரசிகர்களினால் நிராகரிக்கப் படங்களில் ஒன்றாக அமைந்த படம் தான் பாசம்.
பிரபல தயாரிப்பாளராகவும்,இயக்குனராகவு
தாய்க்கும் ,மகனுக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை கருவாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப் பட்டிருந்தது.தாய் சென்டிமென்டில் மிகுந்த நம்பிக்கை கொண்ட எம் ஜி ஆர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டார்.ஆனால் படத்தின் முடிவை ராமண்ணா சொன்னவுடன் அதிர்ந்து விட்டார் எம் ஜி ஆர்.படத்தின் முடிவை மாற்றும் படி ராமண்ணாவிடம் கேட்டுக் கொண்ட போதும் அவர் மறுத்து விட்டார்.இறுதியில் வேறு வழியின்றி ராமண்ணாவின் முடிவுக்கே படத்தின் முடிவை விட்டுவிட்டார்.அதுவே படத்தின் வெற்றிக்கும் முடிவு கட்டியது.
கற்பகதருவைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை இருபத்தேழு ]
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
நாளும் பனம்பழத்தை நல்லமுதா யுண்ணுங்கா
எங்கள் கற்பகதருவாம் பனையின் பழத்தின் அருமை
பெருமையை பதார்த்தகுண சிந்தாமணி எப்படிக் காட்டுகிறது பாருங்கள். பனம்பழம் எங்களின் வாழ்வில் முக்கிய மான உணவாகவே இருந்து வந்திருக்கிறது.அது மட்டுமல்ல அது பல நோய்களையே தீர்க்கும் மருந்தாகவும் விளங்கியும் வந்திருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டிய தேயாகும்,பனம்பழம் பற்றிய விழிப்புணர்வு மீண்டும் இப்போது எழத் தொடங்கி இருக் கிறது. தமிழகத்திலும், இலங்கையிலும் பனம்பழம் தொடர்பாக பல உணவுப் பதார்த் தங்களை ஆக்கி யாவருக்கும் கொடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகி ன்றமையைக் கருத்திருத்தல் முக்கியமாகும்.
`மூத்த அகதி’ நாவல் குறித்தான சில கருத்துகள் கே.எஸ்.சுதாகர்
ஈழத்தின் நயினா தீவைப் பிறப்பிடமாகவும், தற்போது தமிழகத்தில் வாழ்ந்து வருபவருமான வாசு முருகவேல் எழுதிய நாவல் `மூத்த
அகதி’. `எழுத்து’ பிரசுரமாக வந்திருக்கும் இந்த நாவல் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மற்றும் தமிழரசி அறக்கட்டளை நடத்திய நாவல் போட்டியில் (2021) இரண்டாவது பரிசு பெற்றது.
இந்தக்கதை சொல்லப்படும் முறைமை தமிழ் எழுத்துப்பரப்பிற்கு சற்றே வித்தியாசமானது.
தமிழ்ச் சினிமாவில் பல படங்கள் கதாநாயகன் அல்லது நாயகியைச் சுற்றி வருபவை. சில படங்களில்
பல நாயகன்கள், நாயகிகள் இருப்பார்கள். பாலைவனச்சோலை, வானமே எல்லை, சுப்பிரமணியபுரம்
போன்ற படங்கள். இந்த நாவலும் பலரைப் பின்னிப் பிணைந்து, சம்பவக் கோர்வைகள் சேர்ந்து
ஒரு முழுநாவலாகப் பரிணமித்திருக்கின்றது. நாவலை வாசித்த போது சினிமா ஏன் குறுக்கே வந்து
விழுந்தது என்றால், சினிமாவைப் போலவே கடைசியில் சிவசிதம்பரம் என்றொரு பாத்திரம் வருகின்றது.
இடையே ஒருதடவை வந்திருந்தாலும், கதையுடன் பெரிதும் ஒட்டாமல் வந்து கொலையுடன் முடிவடைகின்றது.
அப்பொழுது நாவலில் ஒருபோதுமே பெய்திராத அடைமழை ஒன்று பொழிந்து தள்ளுகின்றது.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் ஒரு அரசியல் கட்சிக்கூட்டத்தோடு ஆரம்பிக்கும் நாவல் இன்னொரு அரசியல் கூட்டத்தோடு முடிகின்றது. இன்னொரு விதமாகச் சொன்னால் ஒரு கலியாணவீட்டுடன் ஆரம்பித்து ஒரு இயற்கை மரணம், ஒரு கொலையுடன் முடிவடைகின்றது.
எழுபது வருட கலைப் பயணத்துக்காக சௌகாருக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருது
Thursday, January 27, 2022 - 6:00am
நடிகையாக வரும் போதே மூன்று மாத கைகுழந்தையுடன் நடிக்க வந்தவர், திரையுலகில் தைரியமான யதார்த்த நடிகை என பெயரெடுத்த சௌகார் ஜானகி. தற்போது 92 வயதாகும் சௌகார் ஜானகிக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. திரையுலகில் 70 ஆண்டுகாலம் நடித்து வரும் நடிகை என்னும் பெருமையுடன் கடந்த மாதம் தனது 92 வது வயதில் அடியெடுத்து வைத்தார் சௌகார் ஜானகி.
சிறந்த நூல்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபா பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள் ! மறைந்த ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் நினைவாக வழங்கப்படுகிறது !!
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை
எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன.
கடந்த இருபது வருடங்களுக்கும்
மேலாக அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ்
இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், கடந்த
2019 – 2020 ஆம் ஆண்டுகளில் இலங்கையில்
வெளியான நூல்களில் சிறந்தவற்றை தேர்வுசெய்து, அவற்றை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கத்
தீர்மானித்திருந்தது.
இந்தத் தீர்மானத்திற்கு அமைவாக குறிப்பிட்ட இரண்டு ஆண்டு
காலப்பகுதியில் இலங்கையில் வெளியான சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை , மொழிபெயர்ப்பு முதலான ஐந்து துறைகளில் வெளியான நூல்கள், அவற்றை எழுதிய எழுத்தாளர்களிடமிருந்து கோரப்பட்டிருந்தன.
அதன்பிரகாரம் கிடைக்கப்பெற்ற
நூல்களை தேர்ந்த இலக்கிய வாசகர்கள் படித்து,
பரிந்துரை செய்தவற்றிலிருந்து இறுதிக்கட்டத் தேர்வில் சிறந்த நூலாக தெரிவானவற்றுக்கு
பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மொழிபெயர்ப்புத் துறையில் ஒரே ஒரு நூலே போட்டிக்கு வந்தமையால், இனிவரும் ஆண்டுகளில் நடத்தவிருக்கும் போட்டியில் அதனை பரிசீலிப்பது என முடிவாகியிருக்கிறது.
இலங்கைச் செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாட சந்தர்ப்பம்
இந்தியாவின் 73ஆவது குடியரசு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு
தீவிரவாத, மதக்கருத்துக்களை ஒழிப்பதற்கான விதிமுறைகள்
யாழில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த படகு சேவை
தயா மாஸ்டருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
ஜனவரி 28 முதல் மட்டக்களப்பு - கொழும்பு 'புலதுசி' கடுகதி ரயில் சேவை
2021 இன் சிறந்த இளம் எம்.பியாக சாணக்கியன் தெரிவு
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாட சந்தர்ப்பம்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி அமைச்சருடன் சந்தித்து தமது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட சந்தர்ப்பம் ஏற்படுத்தி தரப்படும் என நீதி சேவை ஆணைக்குழுவின் சிரேஸ்ட உதவி செயலாளர் ரோகினி ஹெட்டிஹே தெரிவித்துள்ளார்.
நீதிச் சேவை ஆணைக்குழுவின் வடமாகாணத்திற்கான நடமாடும் சேவையின் முதல் நாள் சேவை வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (26) நடைபெற்றது.
இதன்போதுகாணாமல் ஆக்கப்பட்டேரின் உறவுகள் மாவட்ட செயலகம் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவையில் ஈடுபட்ட நீதி அமைச்சின் கீழான உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
உலகச் செய்திகள்
ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா
வட கொரியா மேலும் இரு ஏவுகணை வீச்சு
சிரிய சிறையை கைப்பற்றிய 250 ஐ.எஸ் குழுவினர் சரண்
புடின் மீது தடை அமெரிக்கா கடும் எச்சரிக்கை
புர்கினா பாசோ ஜனாதிபதி இராணுவத்தினரால் சிறை
திருட்டால் முறிந்த உறவை மீட்டது சவூதி - தாய்லாந்து
ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா
உக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு தொடுக்கக் கூடும் என்ற எச்சரிக்கைக்கு மத்தியில் உக்ரைனை நேட்டோவில் இணைப்பதை தடை செய்வது குறித்த ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. உக்ரைன் பதற்றத்தை தணிப்பதற்கான ரஷ்யாவின் கோரிக்கைக்கு அமெரிக்கா இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளின்கன் உத்தியோகபூர்வமாக பதிலளித்துள்ளார்.