சினிமா உலகின் சிகரமாக முத்திரை குத்திய விக்ரம்

 Thursday, June 23, 2022 - 2:20pm

தமிழ் சினிமா உலகில் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தை பற்றிய பேச்சுத்தான் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக அடிபடுகின்றது. காரணம் இப்படம் ஈட்டியுள்ள அபார வெற்றி ஆகும். தமிழ் சினிமாவில் வெற்றி முத்திரை பதித்து விட்டது விக்ரம்.வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த ரஜனியின் மார்க்ெகட்டையும் வெற்றி கொண்டு விட்டது விக்ரம்.  

இப்படத்தின் மூலம் உலக நாயகன் என்பதை நிரூபித்து விட்டார் கமல். அவரது திறமைதான் இதற்குக் காரணம். 

முக்கியமாக கதை தரமாக இருந்தாலேயே ரசிகர்கள் படத்திற்கு பேராதரவு கொடுக்கிறார்கள். படம் வெளியாகி 3வாரங்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது, வசூலில் மட்டும் எந்தக் குறையுமே இல்லை. ரூ. 350கோடியை(இந்திய நாணயப் பெறுமதி) தாண்டி விக்ரம் படம் உலகம் முழுவதும் வசூல்- குவித்துக் கொண்டிருக்கின்றது. படத்தின் கதை, நீண்ட இடைவேளைக்குப் பிறகு கமல்ஹாசன் படம், விஜய் சேதுபதி, -ஃபகத் பாசில் போன்ற நடிகர்கள் படத்தில் இருப்பது என நிறைய விசேட அம்சங்கள் உள்ளதுவும் காரணங்களாகும். 

தமிழகம், கேரளா, ஆந்திரா, வட மாநிலம் என எல்லா இடங்களிலும் படத்திற்கு அமோக வரவேற்பு தான். 3வாரங்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 365கோடி வரை வசூலித்துள்ளது.  

இந்த வாரத்திலும் படத்தின் வசூல் அதிகமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் அடுத்தது வாரத்தில் இருந்து குறைய வாய்ப்பு இருக்கிறது. காரணம் சில நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸிற்கு தயாராகி இருக்கின்றன. புதிதாகத் தயாரான சில படங்கள் விக்ரம் படத்தின் வசூலைப் பார்த்து தாமதமாகவே வெளியிடப்படுகின்றன.      நன்றி தினகரன் 

No comments: