மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
எல்லோரும் இறையெண்ணி இதையோதி இருந்திடுவோம் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
"வாகீச கலாநிதி" பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் மறைவு
ஈழத்தின் தலைசிறந்த தமிழ்ப் புலமையும், ஆன்மிக வளமும்
கொண்ட "வாகீச கலாநிதி" பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் கவலையும் கொள்கின்றேன்.
எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 72 “ உனக்கு என்ன பிஸினஸ் தெரியும்..? “ பலரும் கேட்ட பொதுவான கேள்வியின் உறை பொருளும் மறை பொருளும் ! முருகபூபதி
பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு நெருங்கிய சொந்தமாக இருப்பது வறுமை. சமகாலத்தில் நினைவு நூற்றாண்டுக்குரியவராக கொண்டாடப்படும் மகாகவி பாரதியார் அதற்கு சிறந்த முன்னுதாரணம்.
வீரகேசரியில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது,
நீர்கொழும்பில் வாடகை வீடு. இரண்டு குழந்தைகள். தினமும் கொழும்பு சென்று திரும்புவதற்கு
பஸ்கட்டண செலவு. இத்தனை செலவுகளையும் சமாளிப்பதற்கு வீரகேசரி – மித்திரனில் 20 ரூபாவுக்கும் 15 ரூபாவுக்கும் கட்டுரைகளும் தொடர் கதைகளையும் எழுதிக்கொண்டிருந்தேன்.
1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வடமராட்சி தாக்குதல் சம்பவங்கள்
தொடர்பாக ஆதாரம் சொல்லும் செய்திகளை சேகரித்து வருவதற்காக நிருவாகம் என்னை அங்கே அனுப்பியபோது, எவரது வீடுகளிலும் தங்காமல், யாழ். சுபாஸ் விடுதியில் தங்குமாறும், அதற்கான பணமும் தரப்படும் என்றுதான் முகாமையாளர் எஸ். பாலச்சந்திரன் சொன்னார்.
அவ்வாறு சொல்லி 500 ரூபா பணமும் தந்துதான் என்னை அனுப்பினார். அன்றாடம் உப்புக்கும் புளிக்கும் மரக்கறிக்கும் குழந்தைகளின் பால் மாவுக்கும் அல்லாடிக்கொண்டிருக்கும்
நடுத்தர குடும்பத் தலைவன் எதற்காக தங்குவதற்கு
சுபாஸ் விடுதிக்குச்சென்று செலவிடவேண்டும்…?
அந்தப்பணத்தில் சரி பாதியை
வீட்டில் மனைவியிடம் செலவுக்கு கொடுத்துவிட்டு, இரவு பஸ்ஸில் யாழ். நோக்கிப் பயணித்த பொறுப்புள்ள
குடும்பத்தலைவன் நான்.
கையில் அணிவதற்கும் கைக்கடிகாரம் இல்லை. வேலைக்குச்செல்லும்போது அணிவதற்கும் ஒழுங்கான சப்பாத்து இல்லை. சில நாட்கள் குளியலறைக்கு பயன்படுத்தும் இரப்பர் பாட்டா பாதணிகளுடன் சென்றிருக்கின்றேன். ஒரு மழை நாளில் புறக்கோட்டை பஸ் நிலையத்தில் திடீரென தேங்கிய மழைவெள்ளம் ஒரு பாதணியையும் அழைத்துச் சென்றுவிட்டது.
அஞ்சலிக்குறிப்பு : ஆசானின் ஆளுமைப் பண்புகளை ஆவணமாக்கிய ஆசான் கனகசபாபதி நாகேஸ்வரன் முருகபூபதி
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இறுதி வரையில் நம்மத்தியிலிருந்து யாராவது ஒரு ஆளுமை நிரந்தரமாக விடைபெற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.
கடந்த ஜனவரியில் மல்லிகை ஜீவா விடைபெற்றார். டிசம்பரில்
கனகசபாபதி நாகேஸ்வரனும் விடைபெற்றுவிட்டார். இதற்கிடையில் எழுத்தாளர் கே. எஸ் ஆனந்தனும்
சென்றுவிட்டார்.
மரணம் இயற்கையானது. அதனால்தான்
இயற்கை எய்தினார் என்கின்றோம். எமது தாயகத்தில் எவரேனும் எனக்கு நன்கு தெரிந்தவர்கள்
மறைந்தவுடன், தொலைவிலிருந்து அந்த மரணச்செய்தியை கேட்கும்போது, ஏனோ சற்று கலங்கிவிடுகின்றேன்.
இந்த ஆண்டும் அந்தக்கலக்கம்
அடிக்கடி வந்தமைக்கு முக்கிய காரணம் அவர்களின்
வயதுதான். என்னை விட வயதில் குறைந்த ஒருவர் விடைபெறும்போது, மரணபயமும் வந்து சூழ்ந்துவிடுகிறது.
சில நாட்களுக்கு முன்னர்
நான் வதியும் மெல்பனில் ஒரு தமிழ் அன்பர்,
என்னிலும் வயதில் குறைந்தவர் வாகனவிபத்தில் மறைந்தார். அந்தத் துயரத்தை கடப்பதற்கிடையில் நண்பர் க. நாகேஸ்வரனின் மரணச்செய்தி வந்து சேர்ந்தது.
தாமதிக்காமல், அவரது பூர்வீக ஊரைச்சேர்ந்த நண்பர் பூபாலசிங்கம்
புத்தக நிலைய அதிபர் ஶ்ரீதரசிங்கை தொடர்புகொண்டு விசாரித்தேன். சிறிது காலம் நாகேஸ்வரன் சுகவீனமுற்றிருந்தார் என்ற மேலதிக செய்தியும் கிடைத்தது.
இந்த அஞ்சலிக்குறிப்புகளுக்கு “ ஆசானின் ஆளுமைப்பண்புகளை ஆவணமாக்கிய ஆசான்
கனகசபாபதி நாகேஸ்வரன் “ என்று தலைப்பிட்டமைக்கு, அவரது சிறந்த நூல் ஒன்று எனது
மேசையிலிருப்பதுதான் காரணம். சில வருடங்களுக்கு முன்னர், நாகேஸ்வரன் எழுதிய அறிவொளி
மாவை த. சண்முகசுந்தரம் ( தசம் ) – சிந்தனைகளும் எழுத்துப்பணிகளும் – என்ற நூலை ( 395 பக்கங்கள் கொண்டது ) தசம் அவர்களின் புதல்வி என்னிடம் சேர்ப்பித்திருந்தார்.
தசம் என்று பலராலும் அழைக்கப்பட்ட எழுத்தாளர் த. சண்முகசுந்தரம் அவர்கள், யாழ். மகாஜனா கல்லூரியில் அதிபராக பணியாற்றிய காலப்பகுதியில்,
பின்னாளில் கலை, இலக்கிய , ஊடகத்துறையில் பிரகாசித்த பலருக்கு ஆசானாக விளங்கியவர்.
நான் அறிந்தமட்டில், எழுத்தாளர்கள்
சோமகாந்தன், ஆ. சிவநேசச் செல்வன், கோகிலா மகேந்திரன், நாகேஸ்வரன்
ஆகியோர் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள்.
க. நாகேஸ்வரன், தனது ஆசான்
பற்றி எழுதிய நூலின் அணிந்துரையில் இவ்வாறு ஒரு
பந்தியை பதிவுசெய்துள்ளார்.
“ மலையைக் காண்பதற்குத் தூரம் வேண்டும். சம்பவங்களை மதிப்பிடுவதற்குக் காலம் வேண்டும் “ என்று எமக்கு உபதேசம் செய்யும் ‘அறிவொளி ‘தசம் ‘அவர்களை நாம் நினைக்கும்போதெல்லாம், ஒரு விரிவான – விசாலமான – உண்மையான – நன்மையான – திடமான – நம்பிக்கை தரும் கோட்பாட்டை இரை மீட்கின்றோம் என்ற திருப்தி எமக்கு ஏற்பட்டதை இன்றும் மீள நினைக்கின்றோம். “
பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - அன்னைவேளாங்கண்ணி - ச. சுந்தரதாஸ் - பகுதி 24
தமிழ்த் திரை உலகில் பிரபல நடன ஆசிரியராகத் திகழ்ந்தவர் கே தங்கப்பன்.புதுமை இயக்குனர் ஸ்ரீதர் கலரில் இயக்கி இளைய நடிகர்கள் நடித்து வெற்றி பெற்ற காதலிக்க நேரமில்லை படத்திற்கு இவர் அமைத்த நடன அசைவுகள் இளம் ரசிகர்களை சுண்டி இழுத்தன.அப்படத்தைத் தொடர்ந்து பிசி டான்ஸ் மாஸ்டரானார் தங்கப்பன்.கிறிஸ்துவரான இவர் நாகப்பட்டணத்தில் அமைந்துள்ள அன்னைவேளாங்கண்ணி மாதா மீது கொண்ட பக்தியால் 1971ம் ஆண்டு அன்னையின் அற்புதங்களை விளக்கும் வகையில் அன்னைவேளாங்கண்ணி எனும் படத்தை தயாரித்து இயக்கினார் .அத்துடன் படத்திற்கான கதை,நடனம் இரண்டையும் உருவாக்கியிருந்தார்.
அன்று திரை உலகில் பிரபலமாக இருந்த ஜெமினி கணேசன் , ஜெயலலிதா, சிவகுமார் , பத்மினி , சுந்தரராஜன்,மனோரமா , எஸ் வீ சுப்பையா,நாகேஷ்,சச்சு ,முத்துராமன்,கே ஆர் விஜயா ,ராமாபிரபா ,மாஸ்டர் சேகர் ,தேங்காய் சீனிவாசன் ,தேவிகா ,ஸ்ரீகாந்த் ,ஸ்ரீவித்யா என்று ஏராளமான நடிகர்கள் படத்தில் நடித்தார்கள்.இவர்களுள் பலர் இலவசமாகவோ அல்லது சொற்ப ஊதியத்திலோ இதில் நடித்திருந்தார்கள்.
வண்ணப் படமாக உருவான அன்னைவேளாங்கண்ணி , அன்னையின் மகிமையை விளக்கும் மூன்று கதைகளை கொண்டு தயாரானது.கால் ஊனமுற்ற சிறுவனுக்கு நடக்கும் சக்தியை அன்னையருளிய காட்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.இதில் சிறுவனாக மாஸ்டர் சேகர் அருமையாக நடித்திருந்தார்.நடக்க இயலாமல் அவர் தரையில் ஊர்ந்து ஊர்ந்து நடப்பது ரசிகர்களை வாட்டியது ,அவரின் தாயாக பத்மினி நடித்தார்.
போர் தின்ற எழுத்தாளர் நெல்லை க.பேரன் 75 நினைவுகளில்
ஈழத்தில் ஒரு எழுத்தாளர் குடும்பமே ஒன்றாகப் படுகொலை
செய்யப்பட்டது என்ற அழியா வடு கொண்டது எழுத்தாளர் நெல்லை க.பேரனின் வாழ்க்கையில் தான்.
கடனில் மூழ்கும் தேசம் ! மீண்டும் 1970 யுகத்திற்கு தேசம் செல்லுமா…? அவதானி
கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் – என்ற வரிகளை கம்பராமாயணத்தில் பார்க்கலாம். மாற்றான் மனைவியை கடத்திவந்து, இறுதியில் போர்க்களம் புகுந்து, “ இன்று போய் நாளை வா….. “ என எள்ளிநகையாடப்பட்டு, இறுதியில் நாட்டையும் இழக்கும் சூழ்நிலை வந்தபோதுதான் இலங்கேஸ்வரனின் மன நிலையை கம்பர் அவ்வாறு வர்ணித்தார்.
அந்த இலங்கேஸ்வரன் ஆண்ட
தேசம்தான் தற்போது கடனில் மூழ்கிக்கொண்டிருக்கிறது.
வெளிநாடுகளிடம் நிதியுதவி
கோரி செல்லவேண்டிய இக்காலத்தில், இன்றுபோய் நாளை வா..? என்று நிதியமைச்சரை திருப்பி
அனுப்பும் சூழ்நிலை வந்துள்ளது.
பெருந்தொற்றினால், பெரிய
வல்லரசுகளும் பொருளாதார ரீதியில் நலிவுற்றிருக்கும் காலப்பகுதியில் இலங்கைபோன்ற மூன்றாம்
உலக, வளர்முக நாட்டின் கதி எவ்வாறிருக்கும் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே.
கடந்த 2020 தொடக்கத்தில் கொரோனோ பெருந்தொற்று வந்தவுடன், நாடு முடக்கப்பட்டு வர்த்தகமும் மக்களின் அன்றாட வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை இருபத்தொன்று ]
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
இலங்கையில் பனைவளம் சிறப்பாகவே இருக்கிறது.
இலங்கையில் இருக் கும் பனையைவிட இந்தியா வில் காணப்படும் பனையின் பெருக்கம் மிகவும் அதிகம் என்றுதான் சொல்லலாம். இலட் சக்கண க்கில் இலங்கையில் பனை இருக்க , இந்தியாவிலோ கோடிக்கணக் கில் இருக்கிறது பனை என்பது மிகவும் முக்கியமாகும்.இந்தியா எங் கணும் இருகின்ற பனைகளை ஒன்பது கோடி என்று கணக்கிட்டிருக் கிறார் கள். அப்படி இருக்கும் பனைகளில் ஐந்து கோடிப் பனைமர ங்கள் தமிழ் நாட்டிலே இருக்கின்றன என்பது மிகவும் முக்கிய மான செய்தியாகும்.
வட தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ண கிரி, மாவடங்களிலும் - தென் தமிழ் நாட்டில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தேனீ, மற்றும் திண்டுக்கல் மாவட்ட ங் களிலும் பனைமரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இலங்கைச் செய்திகள்
2022 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் ஆண்டாக பிரகடனம்
வலி.வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்
தமிழ் அரசியல் கைதி ஒருவருக்கு விடுதலை
சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்; பக்தர்களுக்கு தடுப்பூசி அட்டை அவசியம்
வடக்கில் மீண்டும் ஆயுதக் கிளர்ச்சி!
நல்லூர் ஆலயத்தில் சீனத்தூதுவர் வழிபாடு
யாழ். பல்கலைக்கு அருகில் வாள் வெட்டு
2022 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் ஆண்டாக பிரகடனம்
பிரதமர் மஹிந்த அங்கீகாரம்
சைவத் தமிழ் உலகுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் (17) அலரி மாளிகையில் நடைபெற்றது.
உலகச் செய்திகள்
அமெரிக்கா சூறாவளி: உயிரிழப்பு உயர்வு; அவசர நிலை அறிவிப்பு
பிரிட்டனில் கொரோனா தொற்று சாதனை அளவுக்கு அதிகரிப்பு
முன்னர் காணாத வேகத்தில் பரவிவரும் ‘ஒமிக்ரோன்’திரிபு
ஆப்கானிய தாக்குதல்: அமெரிக்க படையினருக்கு தண்டனையில்லை
சூரியனின் அருகில் சென்ற விண்கலம்
இரு கொரியாக்களின் போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்புதல்
அமெரிக்கா சூறாவளி: உயிரிழப்பு உயர்வு; அவசர நிலை அறிவிப்பு
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு
அவுஸ்திரேலியாவில் கடந்த பல வருடங்களாக கலை, இலக்கியப் பணிகளையும் எழுத்தாளர் விழாக்களையும் முன்னெடுத்துவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிருவாகிகள் தெரிவும் கடந்த 12 ஆம் திகதி மெய்நிகரில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர்
மருத்துவர் ( திருமதி ) வஜ்னா இரஃபீக் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், செயலாளர் கலாநிதி
ஶ்ரீ கௌரி சங்கர் ஆண்டறிக்கையையும் துணை நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதி நிதியறிக்கையையும்
சமர்ப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து நடப்பாண்டுக்கான புதிய நிருவாகிகள் தெரிவு
நடைபெற்றது. திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தி, பதவிகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பெயர்களை வாசித்தார்.
அதன்பிரகாரம் பின்வருவோர் ஏகமனதாக தெரிவாகினர்:
காப்பாளர் : ( கவிஞர்
) திரு. இ. அம்பிகைபாகர்.
தலைவர் : திருமதி சகுந்தலா கணநாதன்.
துணைத்தலைவர்கள்
: மருத்துவர் ( திருமதி ) வஜ்னா ரஃபீக் , திரு. அருண். குமாரசாமி.
செயலாளர் : டொக்டர் நொயல் நடேசன்.
துணைச்செயலாளர் :
திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம்.
நிதிச்செயலாளர்
:
திரு. இப்ரகீம் இரஃபீக்.
துணை நிதிச்செயலாளர்
: திரு. லெ.
முருகபூபதி.
இதழ் ஆசிரியர் திரு. பிரம்மேந்திரன் தாமேதரம்பிள்ளை.
செயற்குழு உறுப்பினர்களாக,
திருவாளர்கள் சங்கர சுப்பிரமணியன்,
பார்த்தீபன் இளங்கோவன், ‘பாடும் மீன்
‘ சு. ஶ்ரீகந்தராஜா, தெய்வீகன், கலாநிதி
ஶ்ரீ கௌரிசங்கர் திருமதிகள்
சிவமலர் சபேசன், ஆழியாள் மதுபாஷினி ஆகியோர் தெரிவாகினர்.
உறுப்பினர் திரு. நடேசன் சுந்தரேசன் சமர்ப்பித்த தீர்மானங்கள் பரிசீலனை செய்யப்பட்டன.