.
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
ஈழா 75 இணைய அரங்கு 01.10.2021
“ஈழத்து இசைவாரிதி” வர்ணராமேஸ்வரன் என்ற "ஈழமண் தந்த குயில்" பறந்தது - கானா பிரபா
இதே நாளில் எம் ஈகைச் சுடர் தியாகி திலீபன் அண்ணாவின் நினைவிரங்கலைச் செய்யும் போது இப்படியொரு அதிர்ச்சியான செய்தி வந்திருக்கிறது.வர்ணராமேஸ்வரன்என்ற "ஈழமண் தந்த குயில்" பறந்தது
அஞ்சலிக்குறிப்பு: பாரதி சொற்பயிற்சி மன்றம் நடத்தியவர் பாரதி நினைவு நூற்றாண்டில் மறைவு ! கொழும்பு சிலம்புச்செல்வர் ம. பொ. சி. மன்றத்தின் நிறுவனர் த. மணி விடைபெற்றார். முருகபூபதி
ஏற்கனவே “ சமகாலம் அஞ்சலிக்குறிப்புகள் எழுதும் காலம் “ என்று ஒரு பதிவில் எழுதியிருந்தேன். இந்தக்கொரோனோ காலத்தில் இந்தத் துயர்பகிரும் காலமும் இணைந்துவருகிறது.
கொழும்பில் ஆறு தசாப்தங்களுக்கு
முன்பே பாரதி சொற்பயிற்சி மன்றம், மற்றும் இலங்கை ம. பொ. சி. மன்றம் முதலானவற்றை உருவாக்கி
தமிழ்ப்பணியாற்றிவந்த தமிழ் மொழி, கலை இலக்கிய உணர்வாளர் , சொற்பொழிவாளர் த. மணி அவர்கள் அண்மையில்
மறைந்துவிட்டார் என்ற செய்தி என்னை வந்தடைந்தபோது, அவர் பற்றிய பல பசுமையான நினைவுகள் மனதில் சஞ்சரிக்கத்
தொடங்கின.
அவரை நான் முதல் முதலில் சந்திக்கும்போது எனக்கு வயது
பதினைந்து. அப்போது எனது மாமா முறையானவரும் நீர்கொழும்பில் சாந்தி அச்சகம் நடத்தியவருமான அ. மயில்வாகனன் அவர்கள் அண்ணி என்ற கலை, இலக்கிய மாத இதழை வெளியிட்டார்.
இதன் முதல் இதழின் வெளியீட்டு
விழா எங்கள் ஊர் இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் மட்டக்களப்பு நாடாளுமன்ற பிரதிநிதி
சொல்லின் செல்வர் செல்லையா இராசதுரை அவர்களின் தலைமையில் நடந்தது.
இவ்விழாவில்தான் மணி
அவர்களும் உரையாற்றியதை முதல் முதலில் கேட்டேன். மண்டபம் நிறைந்த அந்தச்சபையில், அவர் அறிமுகப்படுத்தப்பட்டபோது,
அவர் கொழும்பில் பாரதி சொற்பயிற்சி மன்றம், சிலம்புச்செல்வர் ம.பொ. சி. மன்றம் ஆகியனவற்றின்
ஸ்தாபகர் என சொல்லப்பட்டது.
அன்று வெளியிடப்பட்ட
அண்ணி முதல் இதழிலும் அவர் ம.பொ.சி. யைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
அதன் ஆசிரியர் மயில்வாகனன்
மாமா, எங்கள் ஊரில் திராவிடக்கழகத்தின் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பிவந்தவர்.
அண்ணி இதழையும் தமிழ்
நாட்டில் கலைஞர் மு. கருணாநிதி ஆசிரியராக இருந்து வெளியிட்ட மாத இதழ் முத்தாரம் போன்று
நடத்தினார்.
அதன் ஆசிரியர் குழுவில் எங்கள் ஊரைச்சேர்ந்த நீர்கொழும்பூர் முத்துலிங்கம், மு. பஷீர், ஓட்டுமடத்தான் என்ற புனைபெயரில் எழுதிய நாகராஜன் ஆகியோர் அங்கம் வகித்தனர்.
வாழ்ந்திடும் நாளில் வாழ்த்தியே மகிழ்வோம் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 60 இரவல் புடவையில் கொய்யகம் வைத்தல் ! வெற்றிகரமான தொழில் அதிபர் ஞானமும் மிட்சூய் சீமெந்து ஆலையும் ! ! முருகபூபதி
வீரகேசரி ஆசிரிய பீடத்தில் இணைந்ததும், இரண்டாம் பக்கத்திற்கு கட்டுரைகள் எழுதினேன். அப்போது அந்தப்பக்கத்தை கவனித்தவர் Feature editor திருமதி பற்றீஷிய ஆரோக்கியநாதர்.
இவர்தான் பதார்த்த
குணா என்ற புனைபெயரில் வாரவெளியீட்டில் சமையல் குறிப்புகள் எழுதிவந்தவர்.
அவ்வப்போது எனது மேசையருகில்
வந்து, இரண்டாம் பக்கத்திற்கு ஆக்கம் கேட்பார். இவர் என்னிடம் மட்டுமல்ல, அங்கு துணை
ஆசிரியர்களாக பணியாற்றிய சுபாஷ் சந்திரபோஸ், அன்னலட்சுமி இராஜதுரை ஆகியோரிடமும் கேட்பார்.
நண்பர் வீரகத்தி தனபாலசிங்கம் என்னையடுத்து ஆசிரிய பீடத்திற்கு வந்த பின்னர், அவரும் குறிப்பிட்ட இரண்டாம் பக்கத்தில் அரசியல் பத்தி எழுத்துக்களை எழுதிவந்தார். பின்னாளில் அவர்
சிறந்த அரசியல் ஆய்வாளராகவே மிளிர்ந்தார்.
1983 இல் யாழ்ப்பாணம்
திருநெல்வேலியில் விடுதலைப்புலிகளின் கண்ணி வெடித்தாக்குதலில் இராணுவத்தினர் கொல்லப்பட்டதையடுத்து,
இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம் மட்டுமல்ல,
இலங்கை மீது கண்வைத்திருந்த சர்வதேச நாடுகளின்
பூகோள அரசியலும் எந்தத் திசையில் செல்லப்போகிறது ? என்ற யோசனையும் ஆசிரிய பீடத்திலிருந்து குறிப்பிட்ட
இரண்டாம் பக்கத்திற்கு கட்டுரைகள் எழுதிக்கொடுக்கும் வேளையில் வந்தது.
மித்திரனில் மர்மத்தொடர்
கதைகளை புனைபெயரிலும் வீரகேசரி வார வெளியீட்டில் ரஸஞானி என்ற பெயரில் இலக்கியப்பலகணி
என்ற பத்தியும், பிரதம ஆசிரியர் ஆ. சிவநேசச்செல்வன்
கேட்டவாறு அவர் எனக்குச் சூட்டிய ரிஷ்ய சிருங்கர் என்ற புனைபெயரில் கலை, சினிமா, நாடகம் சார்ந்த விமர்சனக் கட்டுரைகளையும் எழுதினேன்.
ஆனால், வீரகேசரி இரண்டாம்
பக்கத்தில் லெ. முருகபூபதி என்ற பெயரிலேயே எழுதிவந்தேன்.
இந்தப்பெயரில் அங்கு ஒரு புளக்கும் தயாராகியிருந்தது. அது பக்க வடிவமைப்பாளரின் கவனத்தில் இருந்தது. வாரம் ஒரு தடவை அரைப்பக்கம் வரக்கூடியதாக எழுதுவேன்.
அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் வழங்கும் விவாதப் பயிற்சிப் பட்டறை
-தகவல் பகிர்வு-



பாரதி தரிசனம் – அங்கம் 03 மகாகவிக்கு எழுதிய பகிரங்க மடலுக்கு ஒரு எதிர்வினை ! மெல்பன் வாசகி சகுந்தலா கணநாதன் கனவில் வந்த பாரதி ! முருகபூபதி
மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு இம்மாதம் (செப்டெம்பர்) தொடங்கியதும், அவருக்கு நான் எழுதிய பகிரங்க மடல் அக்கினிக்குஞ்சு உட்பட வேறும் சில ஊடகங்களில் வெளிவந்தது.
பாரதியாருடன் நீண்ட காலமாக
நான் வாழ்ந்துகொண்டிருப்பதனால், தினம் தினம் அவர் மனக்கண்ணில் தோன்றி வியப்பளித்துக்கொண்டே இருக்கிறார்.
முப்பத்தி ஒன்பது வயதிற்குள்
அவர் புரிந்த சாதனை அளப்பரியது. அது அவரால்
எவ்வாறு சாத்தியமானது ? என்ற கேள்வியை தொடர்ச்சியாக
பாரதி பக்தர்களிடத்திலும் பாரதி இயல் ஆய்வாளர்களிடத்திலும் கேட்டுவருகின்றேன்.
ஒவ்வொருவரும் பல்வேறு
விதமான கருத்துக்களை சொல்லிவருகின்றனர்.
இந்தப்பின்னணிகளுடன்
இந்த நினைவு நூற்றாண்டில் பாரதிக்கு ஒரு பகிரங்க மடலை எழுதினேன்.
பாரதி ஏன் சிங்களத்தீவுனுக்கோர்
பாலம் அமைப்போம் என்று எழுதினார்..? என்று இன்றும் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் அவரை
விமர்சித்துவருகின்றனர்.
பொறுத்துப்பொறுத்துப்பார்த்துவிட்டு, கடந்த 23 ஆம் திகதி வியாழக்கிழமை தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மதுரையிலிருந்து இயங்கும் உலகத்தமிழ்ச்சங்கத்தின் (ஐந்துநாள் தொடர் கருத்தரங்கில் ) எனது இலங்கையில் பாரதி தலைப்பிலான உரை வந்தபோது விளக்கமளிக்க நேர்ந்தது.
இந்நிலையில் மெல்பன்
வாசகியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்தும் இலக்கியப்பிரதிகள் எழுதிவருபவருமான
திருமதி சகுந்தலா கணநாதன் அவர்கள் எனக்கு அனுப்பிய
எதிர்வினை மிகவும் சுவாரசியமாக அமைந்திருந்தது.
மெல்பன் கேசி தமிழ் மன்றத்தின்
மூத்த பிரஜைகள் அமைப்பின் சார்பாக அதன் தலைவர் திரு. நவரத்தினம் வைத்திலிங்கம் அய்யா
அவர்களின் ஏற்பாட்டில் சில மாதங்களுக்கு முன்னர்
மெல்பனில் அந்த அமைப்பின் ஒன்று கூடலின்போது,
எனது இனிய நண்பர் திரு. சங்கர சுப்பிரமணியன்
அவர்கள், நான் எழுதி 2019 இல் இலங்கையில் வெளியான எனது இலங்கையில் பாரதி ஆய்வு நூலை அறிமுகப்படுத்தி
உரையாற்றினார்.
அந்த நிகழ்வில் குறிப்பிட்ட
நூலைப்பெற்றுக்கொண்டு படித்த இலக்கிய சகோதரி
திருமதி சகுந்தலாவும் , அவரது கணவர் திரு. கணநாதனும் இலங்கையில் பாரதியின் தாக்கம் குறித்த எனது தீவிர
தேடலை சிலாகித்தார்கள்.
சில நாட்களுக்கு முன்னர்
நாம் வாழும் மெல்பனிலும் சிறிய நில நடுக்கம்
வந்தது. எனது நூலக அறையிலிருந்து எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 2010 ஆம் ஆண்டு வெளியிட்ட பூமராங் சிறப்பு மலர் புத்தக அடுக்கிலிருந்து நடுங்கிக்கொண்டு
தரையில் விழுந்தது.
நானும் நில நடுக்கத்தால் சற்று தள்ளாடிவிட்டேன்.
சுண்டங்காய் மான்மியம் - சம்பவம் (9) கே.எஸ்.சுதாகர்
ஊரில் சரிவான பள்ளமான காணிகளுக்கு கிராக்கி அதிகமில்லை. இங்கே அவற்றுக்குத்தான் மவுசு அதிகம். வியூ பார்க்கலாமாம். மஞ்சு அப்படிப்பட்டதொரு காணியை வாங்கி அழகானதொரு வீடு கட்டினாள். முன்புறத்தை சமதரையாக்கி பூக்கண்டுகள் வைத்தாள். பின்புறம் தாயார் தேவாவின் இராச்சியம். ஜன்னலிற்குள்ளால் எட்டிப் பறிக்கக்கூடியமாதிரி கறிவேப்பிலைக்கண்டுகளும், சரிவுகளில் சுண்டங்காய் முதற்கொண்டு பூசணிக்காய் வரை பயிரிட்டிருந்தார் அவர்.
சனிக்கிழமை அதிகாலை. முன்புறத்தில் சாடிகளுக்குள் கள்ளி மரங்களை நட்டு, அதற்குள் பவளக்கற்களைப் போட்டபடி நின்றிருந்தாள் மஞ்சு.
எதிர்வீட்டில் வாட்டசாட்டமான இளைஞன் ஒருவன், தன்னுடைய ரெஸ்லா காரைத் துடைத்துக் கொண்டிருந்தான்.
வீட்டிற்கு வரும் உறவினர் நண்பர்களுக்கு, எல்லா மரக்கறிகளைப் பற்றியும் விலாவாரியாக வகுப்பு எடுக்கும் தேவா, சுண்டங்காய் பற்றி மூச்சு விடமாட்டார். ஏனென்றால் சுண்டங்காய் உடலிலுள்ள கிருகிகளைக் கொல்லுமாம்; கொழுப்பைக் கரைக்குமாம்; ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துமாம்; நீரிழிவுநோயிற்கும் நல்லதாம். ஆராவது சுண்டங்காயோ அல்லது மரமோ கேட்டால், வாயைச் சுழித்துக்கொண்டு கையை விரிப்பார். எல்லாச் சுண்டங்காய்களையும் தானே சாப்பிட்டு, இந்த உலகில் நீடூழிகாலம் தானே வாழவேண்டும் என்பது அவர் பெருவிருப்பு.
பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் ! அவதானி
“ பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் ! “
இது இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்னர் மறைந்தாலும் இறவாப்புகழுடன் வாழும் மகாகவி பாரதி, தான் எழுதிய பாஞ்சாலி சபதம் காவியத்தில், அவளது துகிலுறியும் படலம் வரும்போது எழுதப்பட்ட அர்த்தமுள்ள வரிகள்.
இன்றும் இந்த வரிகள்
பொருந்தத்தக்கதாக பேய் அரசுகள் இயங்குகின்றன.
அதிகாரத்திலிருப்பவர்கள்
சொற்படிதான் சட்ட அறிஞர்களும் நீதித்துறையும் நடக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு
இலங்கை தள்ளப்பட்டுவிட்டது.
மரண தண்டனைக் கைதிகளுக்கு
பொது மன்னிப்பு.
நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்தவரை மீட்டு, பொது மன்னிப்பு
வழங்கி , சிறை மீண்ட செம்மலாக குறிப்பிட்ட நபர் வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமனமாகியுள்ளார்.
தென்மராட்சியில் சில மனித
உயிர்களை கொன்றழித்து மலசலகூடக்குழியில் போட்டு மூடி வெளியுலகத்தின் கண்களை மறைத்த இராணுவ அதிகாரியை சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தியபோதும்,
மரண தண்டனைதான் விதிக்கப்பட்டது. குறிப்பிட்ட
நபரும் சமகால குடும்ப ஆட்சியில் பொது மன்னிப்பில் வெளியே வந்துவிட்டார்.
அவருக்கும் நிறுத்திவைக்கப்பட்ட
அரசகொடுப்பனவுகள் அனைத்தும் கிடைத்திருக்கும் !.
அதே சமயம் பல அப்பாவித்தமிழ்
– சிங்கள – முஸ்லிம் அரசியல் கைதிகள் இன்னமும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் சிறைச்சாலைகள்
மறு சீரமைப்புக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் ஒருவர் மதுபோதையில் தனது சகாக்களையும்
அழைத்துக்கொண்டு இரண்டு சிறைச்சாலைகளுக்குள் அத்துமீறி பிரவேசித்து தனது கைத்துப்பாக்கியை
காண்பித்து தமிழ் கைதிகளை முழந்தாளிட வைத்து வெருட்டியிருக்கிறார்.
சிறைக்காவலர்கள் தடுத்தமையால்,
அங்கு துப்பாக்கிப்பிரயோகம் நடக்கவில்லை. அவ்வாறு நடந்திருந்தாலும், இலங்கை அதிபர்
அந்த குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியிருப்பார்.
ஏற்கனவே இரண்டு முக்கிய நபர்கள் கொலைக்குற்றத்தின் பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்து, சமகால அதிபரினால் பொது மன்னிப்பின் கீழ் வெளியே வந்து அனைத்து செளகரியங்களையும் அனுபவித்துவருகின்றனர்.
கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை ஒன்பது ]
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
காகிதங்கள் பயன்பாட்டுக்கு வராது இருந்த காலத்திலும் -
பலவகையில் நூல்கள் வெளிவந்திருக்கின்றன. என்ன ஆச்சரியமாய் இருக்கிறதா ! ஆச்சரியப்படவே தேவை இல்லை ! வெளிவந்த பல்துறை சார்ந்த நூல்களுமே கற்பகதருவாம் பனையின் ஓலையில் எழுதப்பட்டே வந்தி ருக்கின்றன என்பது தான் முக்கியமாகும். எங்களின் எழுத்தறிவினைச் சுமந்த பனை ஓலைச் சுவடிகள் அறிவின் சின்னம் என்பதில் பெருமை அல்லவா ! ஏடு என்றாலே பனைதான் எல்லோர் கண்முன்னே வந்து நிற்கும்.ஏடு என்ற சொல்லின் வேரே பனை ஓலை அல்லவா !
பனை ஓலை அரசாங்கத்தின் எழுதுகின்ற பொருளாகப்
பயன்பாட்டில் இருந்திருக்கிறது. காகிதம் பயன்பாட்டுக்கு வரமுன்னர் எழுதுவதற்கு எங்களுக்குக் கைகொடுத்த தெய்வமாய் பனையும் அதன் கொடையான ஓலைகளுமே விளங்கின என்பதை கருத்திருத்தல் மிகவும் அவசியமாகும்,
பனை ஓலைச் சுவடிகள் பலவற்றை எங்களின் முன்னோர்கள் பலர் தேடிக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இன்றும் ஓலைச்
சுவடிகளைத் தேடும் பணியில் பலர் ஆர்வத்துடன் ஈடுபட்டும் வருகிறார்கள்.பனை ஓலைச் சுவ டிகளைத் தேடி உ.வே.சா என்னும் எங்கள் தமிழ்த் தாத்தா நெடும்பயணம் மேற் கொண்டார் என்பதை யாவரும் அறிவோம். அவரின் வழியில் இன்று பலரும் பயணப்பட்டு பல பனை ஓலை ஏட்டுச் சுவடிகளைப் பல இடங் களிலும் கண்டு தேடிப் பெற்றிருக்கிறார்கள் . ஓலைச் சுவடிகளை வீட்டின் கூரையில் வைத்திருந்திருந்திருக்கிறார்
இலங்கைச் செய்திகள்
கஜேந்திரன் MP கைது கூட்டமைப்பு கண்டனம்
வன்முறைகள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதில் எனது அரசு உறுதி
கொழும்பில் பதிவு செய்யப்படாத சொத்து தொடர்பில் மாநகர ஆணையாளரின் அறிவித்தல்
டயகம சிறுமியின் மரணம்: விசாரணைகளில் முன்னேற்றம்
பெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் திலீபனுக்கு அஞ்சலி
செங்கம்பள வரவேற்புடன் சென்ற லொஹான்- ஊடகவியலாளர்களின் கேள்வியால் தலைதெறிக்க ஓட்டம்!
கஜேந்திரன் MP கைது கூட்டமைப்பு கண்டனம்
நனவிடை தோய்தல் : அழிந்த கோலங்கள் கிறிஸ்டி நல்லரெத்தினம் - மெல்பன்
பாண்டிருப்பு ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயில் அருகில்தான் எங்கள் வீடு. வைகாசியில்தான் கோயில் திருவிழா. இங்கு தீ மிதிப்பு அதி விஷேசம். இலங்கையிலேயே மிக நீளமான தீ மிதிப்பு திடல் இதுதானாம்!
தண்டனை (கன்பரா யோகன்)
நீண்ட கார் வரிசையில் மூன்று மணி நேரமாகக் காத்திருந்து அலுத்துப் போய் மூன்று நாலு வாட்ஸ் அப் சாட் குழுக்களின் குறுஞ்செய்திகளை போய் பார்த்து விட்டு நேரத்தை போக்க என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான் கதிர்.
பிறகு
பேஸ் புக்கில் போய் வித்தியாசம் கண்டுபிடி
என்று போட்டிருந்த நூறு நாய்குட்டிப் படங்களில் வாலில்லாத ஒன்றைக் கண்டு பிடித்து
விட்டான்., பிள்ளைகளின் திருமணத்தில் வேட்டி
சால்வையோடு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த இரண்டொரு நண்பர்களின் வீடியோக்களுக்கு வாழ்த்து
செய்தி அனுப்பியாயிற்று. தமிழில் வாழ்த்துக்கள்
என்று எழுதினால் இலக்கணப் பிழை என்று யாரோ சொல்லிவிட்டதால் (அதுவும் பேஸ் புக்கில்தான்)
ஒவ்வொரு முறையும் வாழ்த்துகள் என்று திருத்தி அனுப்ப வேண்டியிருந்தது.
இனி
நேரத்தைப் போக்க வழியில்லை.
உலகச் செய்திகள்
ஆக்கஸ்: சர்ச்சைக்கு தீர்வுகாண அமெரிக்கா - பிரான்ஸ் முயற்சி
ஆக்கஸ் ஒப்பந்தத்திற்கு வடகொரியா எச்சரிக்கை
இஸ்ரேல் ஏவுகணை பாதுகாப்புக்கு அமெரிக்கா ஒரு பில். டொலர் நிதி
கொரிய போரை தீர்ப்பதற்கு வட கொரியா நிபந்தனைகள்
ஹைட்டி குடியேறிகளை திருப்பி அனுப்பிய அமெரிக்கா
ஆக்கஸ்: சர்ச்சைக்கு தீர்வுகாண அமெரிக்கா - பிரான்ஸ் முயற்சி
'ஆறாம் நிலம்' திரைக்காவியம் கொண்டாடப்பட வேண்டியது - சீமான் வாழ்த்துச் செய்தி
25/09/2021 ஈழ நிலத்தின் வலியை மொழியெடுத்து திரையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் “ஆறாம் நிலம்” திரைக்காவியம் பெரும் வெற்றியடைய வேண்டுமென வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ்ச்சொந்தங்கள் இத்திரைப்படத்தைக் கொண்டாட வேண்டுமென தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'ஐ.பி.சி. தமிழ் தயாரிப்பில், தம்பி ஆனந்த ரமணனின் நேர்த்தியான இயக்கத்தில் வெளி வந்துள்ள ‘ஆறாம் நிலம்’ திரைப்படத்தைப் பார்த்தேன்.
ஈழ மண்ணில் சிங்கள இனவெறி அரசால் நிகழ்த்தப்பட்ட பாரிய இனப்படுகொலைக்குப் பிறகு, ஆறாத ரணமாய் தமிழர்களின் வாழ்வில் தொக்கி நிற்கும் கொடும் வலிகளையும், ஈழச்சொந்தங்களின் கடினமான வாழ்க்கைப்போராட்டங்களையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி காட்சிப்படுத்தியிருக்கிறார் தம்பி ஆனந்த ரமணன்.
தமிழீழ விடுதலைப்புலிகள் நாடுகேட்டுப் போராடினார்கள் என்பதே மேலோட்டமான பார்வை. அவர்கள் நாடுகேட்டுப் போராடவில்லை, தாங்கள் அடைந்து நிர்வகித்து வந்த தமிழீழ சோசலிச நாட்டுக்கு சர்வதேச அங்கீகாரத்தைக் கேட்டுத்தான் போராடினார்கள் என்பதே பேருண்மையாகும். அந்நாட்டுக்கான எல்லையைக் காக்கவே புலிகள் களத்தில் நின்றார்கள்.
இவ்வாறு தன்னில் தாங்கி நிற்கும் தன்னிறைவான ஒரு நாட்டைக் கட்டியெழுப்பி உலகத்தின் சொர்க்கத்தை தமிழீழ மண்ணில் படைத்திருந்தார் தலைவர் பிரபாகரன் அவர்கள். அத்தகைய உன்னதத் திருநாடு அரச பயங்கரவாதத்தின் மூலம் அழித்தொழிக்கப்பட்டு, தமிழர்கள் தாய் நிலத்திலேயே அடிமையாக வாழ்கிற இழிநிலை உலகில் எந்த இனத்திற்கும் நடந்திரக்கூடாப் பெருங்கொடுமையாகும்.
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பேரவலத்தையும், தமிழர்களுக்கு விளைந்திட்டப் பெருந்துயரத்தையும் இத்திரைப்படத்தின் வாயிலாக உலகுக்குச் சொல்லியிருக்கிறார் தம்பி ஆனந்த ரமணன்.
மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் தமிழ் மெய்நிகர் அரங்கு 02 ஒக்டோபர் 2021 – சனிக்கிழமை
இலங்கை – இந்தியா மாலை 4-30 மணி
கனடா காலை 7-00 மணி
ஐரோப்பா மதியம் 1-00 மணி
அவுஸ்திரேலியா இரவு 9-00
மணி
எழுத்தாளர், ஊடகவியலாளர், இந்திய
சாகித்திய அகடமி
உறுப்பினர் திரு. மாலன்
“ இந்திய மொழிகளில் தமிழ் இலக்கியம் “
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
திரு. மடுள்கிரியே விஜேரட்ண
“ இலங்கையில் தமிழ் – சிங்களம் மொழிப்பரிவர்த்தனை “
தொகுப்புரை
திரு. லெ. முருகபூபதி - திரு. நொயல் நடேசன்
https://us02web.zoom.us/j/88225358534?pwd=KzFqaisvMWFtakM5RWxERUhyU0tYUT09
Passcode: 068150