மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
ஓடிவரும் ஆறும்
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
இவரை குழந்தைப் பருவம் முதலே நன்கு அறிவேன். அத்துடன் இவரின்
குடும்பமும் எமது குடும்பமும் நெருங்கிய உறவினர்கள் போன்று பழகியவர்கள். இவரது இரண்டு அக்காமாரும் எனது அக்கா, தங்கையுடன்
படித்தவர்கள். இவரது அண்ணன் நவரத்தினராஜா எனது நல்ல நண்பர்.
அந்தப்பயணத்தில் இராணுவ சோதனைச்சாவடியில் ஆளுக்கு ஆள் துணையாக
இருப்போம் என்ற தைரியமும் பிறந்தது.
1983 திருநெல்வேலி தாக்குதல் சம்பவத்திற்குப்பின்னர் இலங்கை இராணுவம் மிகவும் உஷார் நிலையிலிருந்தது.
.
டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டி இப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது தங்கப்பதக்கங்கள், வெள்ளிப் பதக்கங்கள், வெண்கல பதக்கங்கள் என்று பதக்கங்களை உலகநாடுகள் பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதுபற்றி 24 மணிநேரமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது இதையெல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் தான் இருப்பீர்கள். இந்த போட்டியில் என்னை கவர்ந்தது இரண்டு விடயங்கள்.
ஒன்று பெண்களுக்கான ஸ்ட்ரீட் ஸ்கேட்டிங் போர்ட் ( Street Skateboarding) இதிலே தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார் 13 வயதான ஜப்பானிய பெண் மோம்ஜி நிஷியா (Momiji Nishiya). இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட பெண்களுக்கான ஸ்கேட்டிங் போர்ட் போட்டியில் இவர் முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்றிருக்கின்றார். முதன்முதலாக இந்த ஒலிம்பிக் போட்டியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த விளையாட்டு. ஆண்களுக்கான விளையாட்டு நீண்ட காலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் பெண்களுக்கான இந்த விளையாட்டு இந்த வருடமே ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.அதில் பங்குபற்றிய வயதிலேயே குறைந்த பெண்ணாக 13 வயது கொண்ட இந்த பெண் தங்கப்பதக்கம் பெற்றிருப்பது உலகத்துக்கே ஒரு மிகப்பெரிய சாதனையாக காணப்படுகிறது.
.
2016 ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 110,917 பேர் இலங்கையில் பிறந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கும் அதே வேளை 5213 (4.7%) இலங்கை தமிழர்கள் மட்டும் தான் அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார்கள் என்பதும் பதிவாயிருக்கிறது. இது யார் விட்ட தவறு என்று பார்ப்போமானால் எமது பூர்வீகம் "தமிழ்" என்று மட்டும் எழுதியவர்களும், அதற்கான வழியை காட்டிவயர்களும் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்.
தினமும் கோதுமைப்புட்டும்
தேங்காய்ச் சம்பலும் சாப்பிட்டவளுக்கு கொழும்பில்
வீட்டு வேலைக்குச்சென்றால் தினமும் இறைச்சியும், மீனும், முட்டையும் உணவாகக் கிடைக்கும்
என்ற ஆசை வார்த்தைகள் தரப்பட்டு அழைத்துச்செல்லப்படுகிறாள் அந்த வள்ளி.
ஆனால், அவள் கிராமத்தில்
கண்ட காட்சிகளை, ஓடி ஆடி விளையாடிய சகோதர சகோதரிகள், அயல்வீட்டுச்சிறுவர், சிறுமியர்
இன்றி தனித்துவிடப்பட்டு, பொன்கூண்டுக்குள் சிறைப்பட்ட பறவையாகிறாள்.
சத்தான உணவுக்கு ஆசைப்பட்டு, தமக்கும் எஞ்சியிருக்கும் ஆறு
ஒருநாள் மகளைப்பார்க்க அவன் கொழும்பிலிருக்கும் வனப்பு மிக்க அந்த வீட்டுக்கு
வந்து மெய்சிலிர்த்துப்போகிறான். குடிசையில்
வாழ்ந்த தனது மகளுக்கு இங்கே வசிக்க மாளிகையே கிடைத்திருக்கிறதே என்று அகமும் முகமும்
மலர, அவளது ஊதியத்தை மாத்திரம் எஜமான் – எஜமானியிடம் பெற்றுக்கொண்டு திரும்பிச் செல்லத்தயராகும்போது, வள்ளி தானும் உடன் வரப்போவதாக உரத்துக்குரல் எழுப்புகிறாள்.
இக்கதை ஐம்பது ஆண்டுகளுக்கு
முன்னர் வெறும் சோற்றுக்கே வந்தது என்ற
தலைப்பில் வத்தளையிலிருந்து வெளிவந்த அஞ்சலி என்ற மாத இதழில் வெளிவந்தது.
அதாவது 1971 ஆம் ஆண்டு வெளிவந்தது.
“வெளியீட்டுவிழா செலவுகளைக் குறைச்சுக் கொள்ளவேணும். சிக்கனம் முக்கியம்” வளர்மதி பிடிவாதமாக நின்றுகொண்டார்.
ஏதோ இங்கிலிசில் அடிக்க தமிழில் வருமாமே! ஒற்றை விரலால் கீ போர்டை நொருக்கித் தள்ளி கொம்பியூட்டர் திரையில் அழைப்பிதழை அடித்துவிட்டார். அழைப்பிதழ் பகட்டாக இருக்க – புத்தகம், தொட்டெழுதும் பேனா, இறகு என்னும் ஓவியப்பின்னணி கொண்ட `பக்கிறவுண்ட்’ ஒன்றைத் தேடி எடுத்துக் கொண்டார். வந்ததே வினை. அழைப்பிதழை `பக்கிறவுண்டிற்குள்’ கொண்டு செல்லும்போது எழுத்துக்கள் அங்கும் இங்கும் ஓடின. ஒருவிதமாக ஒரு வசனத்தைச் சரிக்கட்டிக் கொண்டு வந்துவிட்டு, மறு வசனத்தைப் பார்த்தால் அது குதித்துக் கூத்தாடி இருக்கும். அவர் அடித்த சொற்களில் சிலவற்றைக் காணவும் இல்லை. போராடிக் களைத்து, அப்படியே போட்டுவிட்டு உறக்கத்திற்குப் போய்விட்டார்.
உறக்கம் வரவில்லை. மூன்று தடவைகள் விழித்து எழுந்து கொம்பியூட்டருக்கு முன்னால் போய் இருந்தார். தமிழில் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருப்பதைப் புரிந்துகொண்டு, அழைப்பிதழில் சொற் சிலம்பாட்டம் விளையாடினார். `மாலை என்பதைப் `பிற்பகல்’ என்று மாற்றினார். பின்னர் `பிற்பகல்’ என்பதை `பி.ப’ என மாற்றினார். இப்படிச் சதுரங்கம் விளையாடி, விடிய ஐந்து மணிக்குள் எல்லாவற்றையும் சரிப்படுத்திவிட்டு உறக்கத்திற்குப் போனார்.
கேள்வி: உங்கள் வீட்டில் நீங்கள் ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழி பேசுகிறீர்களா?
பதில்: தமிழ் Tamil
கேள்வி: உங்களுடைய பூர்வீகம் என்ன?
பதில்: இலங்கை தமிழ் Sri Lankan Tamil
நல்ல
மழை பெய்து கொண்டிருந்த ஒரு இரவில் யாங்கின் கடைக்கு போவதற்காக காரை நிறுத்திவிட்டு இடத்தைக் கண்டுபிடிக்க அங்குமிங்கும்
அலைந்து வெள்ளத்தில் காலை வைத்து சப்பாத்தையும்
காலுறையையும் நனைத்து விட்டிருந்தேன். கடைசியில் அவன் கடைக்கு முன்னால் வந்த போது வெளியே
நின்று புகைத்துக் கொண்டிருந்தவன் என்னை கையசைத்துக் கூப்பிட்டான். கடைக்குள்ளே அவனைப்
பின் தொடர்ந்து போனதும் அவனோடு ஒட்டிக் கொண்டிருந்த சிகரெட் புகை மணமும் உள்ளே வந்தது.
நிலத்தளத்துக்கு பதிக்கும் பொருத்து மரப்பலகை
வகையறாக்கள் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் சாம்பிள்கள் சுவரில்
சார்த்தி வைக்கப்பட்டிருந்தன. மிகச்சிறிய அந்த இடத்தில் கால் வைக்க இடமில்லாமல் பலகைப்
பெட்டிகள் அடுக்கப்பட்டு நடுவில் மேசையொன்றும் கதிரையும் இருந்தன.
எனக்குப் பிடித்த கெம்பஸ் பலகையை தெரிவு செய்து
நிலத்தின் அளவையும் யாங்கிடம் சொன்னேன். ஏற்கனவே வீட்டின் அறையிலுள்ள பலகையின் நிறத்திலேயே
எனது வரவேற்பறைக்கும் வேண்டும் என்று மீண்டும் நினைவு படுத்தினேன். மரத்தின் பலவிதமான
பட்டைகளின் நிறத்தில் பொருத்தப்படுவதால் கெம்பஸ் பலகைள் ஒரு கவர்ச்சியைக் கொடுக்கும்.
"ஒன்றும் பிழை போகாது நண்பனே" என்றான்.
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ....... அவுஸ்திரேலியா
மனிதவாழ்வுக்கும் மரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
இந்திலையில் கற்பகதரு என்று போற்றப்படும் பனையையும் , அதன் வரலாற்றையும், அதன் பயன்பாட்டையும், அதன் முக்கிய த்துவத்தையும் அறிந்து கொள்ளுவது பொருத்தமாய் இருக்கும் என்று கருதுகிறேன்.
பனை என்பது உலகில் பல இடங்களையும் தொட்டே வருகிறது எனலாம். உலக அளவில் நோக்குகையில் பனையின் தொகை யானது ஏறத்தாள நூற்று ஐம்பது மில்லியன்கள் வரை இருக்கலாம் என்று புள்ளிபிபரங்கள் மூலம் அறியக்கிடக்கின்றது.
கற்பகதருவான பனையின் தொடக்கம் எப்போது எனும் வினா வுக்கு - சரியான விடையினை பனைபற்றி ஆராய்ந்த தாவரவிய லாளர்களே கூறமுடியாத நிலையில் மிகவும் தொன்மை மிக்கதாய் விளங்குகிறது என்பது முக்கிய கருத்தெனலாம்.ஆபிரிக்காவில்த்தா
இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மடகஸ்கார், கம்பூச்சியா, தாய் லாந்து, மியன்மார், என்று பல இடங்களில் பனை காணப்படுகிறது. இலங்கையில் குறிப்பாக வடமாகாணத்தில் பெருமளவு பனைகள் இருக்கின்றன. கிழக்கு மாகாணத்திலும் கணிசமாக பனை காணப் படுகிறது. கிழக்கில் பனை இருந்தாலும் பனையின் எழுச்சி என்பது இலங்கையில் வடபகுதியிலேயே இருக்கிறது என்றே கொள்ளலாம். ஏனென்றால் அங்கு காணப்படும் வரட்சிதான் முக்கிய காரணமாய் அமைகிறது என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.
இலங்கை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் இறந்த சிறுமி: தோண்டி எடுக்கப்பட்ட உடல்
புத்தளத்திலிருந்து வருகை தந்த மீனவரால் முல்லைத்தீவில் உருவெடுக்கும் பேராபத்து!
இலங்கையின் மீதான இந்திய - சீன கரிசனை
பணிப்பெண்களும் மனிதப் பிறவிகளென்ற மனிதநேயம், கருணை மேலோங்கட்டும்!
உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது - சோபித தேரர்
இலங்கை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் இறந்த சிறுமி: தோண்டி எடுக்கப்பட்ட உடல்
இலங்கை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றி வந்த நிலையில், தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் இன்று (30) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
கொழும்பு - புதுகடை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 26ம் தேதி வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய இந்த சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
தடுப்பூசி போட்டால் $100 ஊக்கத் தொகை: ஜோ பைடன்
சீனா vs அமெரிக்கா: அணு ஆயுத திறனை மேம்படுத்த சீனா அமைக்கும் ரகசிய தளங்கள் - புதிய அறிக்கை
ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று புதிய உச்சம்
2 ஆண்டுகளின் பின் பேச்சுவார்த்தைக்கு வட, தென் கொரிய தலைவர்கள் இணக்கம்
ஈராக்கில் அமெ. துருப்புகளின் போர் ஆண்டு இறுதியில் முடிவு
தடுப்பு மருந்து பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு பிரிட்டன் அனுமதி
தடுப்பூசி போட்டால் $100 ஊக்கத் தொகை: ஜோ பைடன்
அமெரிக்காவில் கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்திருக்கும் நிலையில் தடுப்பூசி போட்டால் 100 டாலர் ஊக்கத் தொகை வழங்க மாநிலங்களுக்கு ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.
தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய விதிமுறைகளையும் அவர் அறிவித்திருக்கிறார். இதன்படி அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அமெரிக்காவில் இதுவரை பாதிக்கும் குறைவான மக்களே தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதாக அரசு தரவுகள் கூறுகின்றன.
அவர்களது கேள்வியில்,
அந்தப்படம் பற்றிய எனது அபிப்பிராயத்தை எதிர்பார்க்கும்
தொனியே இழையோடியிருந்தது.
மேதகு திரைப்படத்தை நானும் பார்த்தேன். அதுபற்றி சிலரிடம்
அத்துடன் அந்தத் திரைப்படம்
தொடர்பான பல விமர்சனங்களையும் படித்தேன்.
நாம் தமிழர் கட்சியின்
ஒருங்கிணைப்பாளர் சீமான், “ ஏன் இந்தப்படம்
பற்றி ஒரு கருத்தும் சொல்லவில்லை? ஏன் சொல்லாமலிருக்கிறார்?
அவர் சொல்லவேண்டும் ! “ என்று பலவாறான கருத்தாக்கங்கள்
கூட வெளிவந்தன.
தமிழ்மக்கள் இன்றுபடும்
அவலங்கள் – சீரழிவுகளுக்கு மத்தியில், நாம்
தமிழர் சீமான் படத்தைப்பற்றி “ சொன்னதும்
– சொல்லாததும்தானா “ முக்கியம் என்றும் சட்டென்று தோன்றியது.
எவ்வளவோ பட்டுத் தெளிந்தும்,
நாங்கள் தொடர்ந்தும் இப்படித்தான் சிந்திக்கப்போகிறோமா? என்றும் எண்ணினேன்.
வரலாறுகள் பதியப்படல்
வேண்டும். அனைத்துக் கோணங்களிலிருந்தும் அவை நிச்சயமாக பதியப்படல் வேண்டும். அந்த வரலாற்றுப்பதிவுகளில்
இருந்து நாம் எமக்குத் தேவைப்பட்ட பயனுள்ள விடயங்களை தெரிந்துகொள்ளவும் அந்தப்பதிவுகள்
உதவியாக வேண்டும்.
ஒரு சினிமாப்படத்தின்
நெறியாள்கை, உத்திகள் படப்பிடிப்பின் தரம் பற்றியெல்லாம் விமர்சனம் செய்வதற்கு ஏற்ற
தகுதியோ அறிவோ என்னிடம் இல்லை என்று சொல்லிக்கொண்டே, மேதகுவின் கருத்தாக்கத்தை கவனித்தேன்.
படத்தில் வந்த சம்பவங்கள், யாழ். மேயர் அல்ஃபிரட் துரையப்பாவின் கொலையின் பின்னணி எனக்குத் தெரிந்ததுதான். அதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் , மற்றும் பிரபாகரன் உட்பட அனைவருமே எனக்கு நன்கு பரிச்சியமானவர்கள். உறவாடியவர்கள்.