அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
வினை நீக்கி உமை என்றும் வாழ்த்தி நிற்பார்! -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-
'விண்ணுலக ஆன்மாவே கண்ணீரால் கரைகின்றோம்!' -
கண்ணீரால் சேர்ந்து கடலாக மாறிடுமாம்
மண்ணிலே செய்திட்ட மாண்பு.
நற்பிள்ளை நானிலத்தில் நன்றெனவே தாம்வளர்த்துக்
கற்பித்தார் காலமுங் கண்டாரே-தற்பெருமை
இல்லாத பாலாண்ணா ஈசனிடம் சென்றாரோ
நில்லா நினைவில் நிலைத்து.
புன்சிரிப்பால் கவர்ந்த சீலர்
பூவுலகில் வாழ்ந்த தெய்வம்
அன்பினையே தந்த தேகம்
அடைந்தாராம் தெய்வத் தாளோ?
நன்னெறியால் நின்றார் நாளும்
நயம்படவே பேசும் அன்பர்
இன்புறவோ இறைதாள் சென்றார்
இதயத்தால் கலங்கு கின்றோம்
பண்பான மனைவி ஹேமா
பாரினிலே பாசங் கொண்டு
கண்போலே குழந்தை மூன்று
கல்வியினால் கரையைக் காட்டி
மண்போற்ற வாழ்ந்த வள்ளல்
மறைந்தாரோ பாலா மாமா
விண்ணோரின் இடத்தைச் சேர்ந்தார்
விதியாலே விரைந்தார் தானோ
வாழும்போது வாழ்த்துவோம் – கொண்டாடுவோம் “ நம்மவர் பேசுகிறார் “ அரங்கில்….. கிழக்கிலங்கையின் ஆத்மாவை இலக்கியத்தில் பிரதிபலித்த எஸ். எல். எம். ஹனீஃபா ! முருகபூபதி
ஆளுமைகள் மறைந்தபின்னர், அவர்கள் குறித்து நாம் பேசுவதும் எழுதுவதும் எம்மை நாமே திருப்திப்படுத்திக்கொள்ளும் மரபாகவே தொடர்வது பற்றி பலரும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளனர்.
மறைந்தவர்களுக்கு, நாம் என்ன பேசினோம், எவ்வாறு எழுதினோம் என்பது தெரியாது ! அவர்கள் பூதவுடலாக அடக்கமாவார்கள், அல்லது தகனமாவார்கள். காணாமலும் போயிருப்பார்கள்.
கலை, இலக்கியம், சமூகம், கல்வி, அரசியல், ஆன்மீகம் தன்னார்வத்தொண்டு முதலான துறைகளில் ஈடுபட்டு தமது வாழ்நாளை அவற்றுக்காகவே அர்ப்பணித்தவர்கள் உயிருடன் இருக்கும்போது எம்மவர்கள் பேசுவதும் எழுதுவதும் குறைவு.
இங்கு குறிப்பிடப்படும் துறை சார்ந்து இயங்கியவர்கள் அனைவருக்கும் ஆளுமைகள் என்ற மகுடத்தை நம்மால் சூட்டமுடியாது. அதனால்தான் “ அர்ப்பணிப்பு “ என்ற சொல்லையும் இணைத்து, அவ்வாறு அர்ப்பணிப்போடு வாழ்ந்தவர்கள் எனச்சொல்லி “ ஆளுமை “ அந்தஸ்தை வழங்குகின்றோம்.
எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 45 சென்னையில், தரையில் அமர்ந்து தரணி பற்றிப் பேசிய ஆளுமைகளின் இலக்கிய சந்திப்பு ! நீங்கள் கேட்டவை : - கதைத் தொகுப்பின் கதையாக வருகிறது ! ! முருகபூபதி
தமிழ்நாடு என்ற பெயரை சூட்டிய அறிஞர் அண்ணாத்துரை,
இனி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றார்.
பின்னாளில் அவரது அரசியல் வாரிசு கலைஞர் கருணாநிதி அனைத்து பல்லவன் பஸ்களிலும் திருக்குறளை பதிவுசெய்தார்.
அதற்கெல்லாம் முன்னார் கல்லக்குடி என்ற இடத்தின் பெயரை டல்மியாபுரம் என மாற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கலைஞர் ரயில் மறியல் போராட்டம்கூட நடத்தினார்.
அவர் ஓடாமல் தரித்து நின்ற ரயில் முன்னால்தான் அமர்ந்தார் என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார் கவியரசு கண்ணதாசன். இந்த அரிய தகவல் கவியரசரின் வனவாசம் சுயசரிதை நூலிலும் பதிவாகியிருக்கிறது.
இது பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் முதல்வர் ஜெயலலிதாவும் தமிழக
சட்டசபையில் கிண்டலாக நினைவுபடுத்தியதையடுத்து, குறிப்பிட்ட வனவாசம் பிரதிகளை மேலும் அச்சிட வேண்டிய தேவை கண்ணதாசன் பதிப்பகத்திற்கு உருவாகியது.
இவ்வாறு எதற்கும் தமிழை முன்னிலைப்படுத்திய தி. மு. கழகம் தமிழக மக்களிடமிருந்தும் ஊடகங்களிடமிருந்தும் சரியான நல்ல தமிழை எதிர்பார்க்க முடியாது போய்விட்டது. சமகால தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் – தொகுப்பாளினிகளுக்கு இது சமர்ப்பணம்.
இலங்கையில் சிங்கள மக்கள் பெரும்பான்மையினத்தவர்களாக இருந்தபோதிலும், நல்ல தமிழ் பேசப்பட்டது. எழுதப்பட்டது.
தமிழகத்தில் டாக்டர் பட்டம் பற்றி பேசப்பட்டபோது, இலங்கையில் கலாநிதி பட்டம் என்று சொல்லப்பட்டது.
தமிழகத்தில் தர்ணா – ஹர்த்தால் எனச்சொல்லப்பட்டபோது, இலங்கையில் சத்தியாக்கிரகம் என்று பேசப்பட்டது.
இந்தப்போராட்டங்களில் தரையில் அமர்ந்துதான் மக்கள் குரல் எழுப்புவார்கள். மௌனப்போராட்டம் என்றால் வாயில் கறுப்புத்துணி அணிந்து தரையில் அமர்ந்து அமைதி காப்பார்கள்.
சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி அவதானி
மரத்தால் விழுந்தவரை மாடு ஏறி மிதித்ததாக எமது முன்னோர்கள், ஒரு மூதுரை சொல்லியிருக்கிறார்கள்.
எமது இலங்கையின் சமகால நிலவரங்களை பார்க்கும்போது, சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்றுதான் பாடத்தோன்றுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக உடனிருந்து கொல்லும் கொரோனோ வைரஸ் தொற்று அறிமுகமாகியிருந்தாலும், இலங்கை அரசு, அதனைகட்டுப்படுத்திவிட்டதாக பெருமை பேசிக்கொண்டிருந்தது.
அந்தவேளையில் நேர்ந்த பொருளாதார வீழ்ச்சியை ஈடுசெய்வதற்காக உக்ரேய்ன் நாட்டிலிருந்து உல்லாசப்பிரயாணிகளை அழைப்பதற்கு அரசு அனுமதியளித்தது.
அவ்வாறு வந்தவர்களும் காவிகளாக வந்து சென்றது பற்றியும்
வடக்கிற்கு வந்த ஒரு மதபோதகராலும் அந்த வைரஸ் தொற்று பரப்பப்பட்டிருக்கலாம் என்பது பற்றியும் ஊடகங்கள் பேசிக்கொண்டிருந்தன.
மீண்டும் இரண்டாவது அலை இந்த ஆண்டு முதல் வீரியம் கொண்டு பரவத்தொடங்கியதும், இதுவரையில் ஆயிரத்து ஐநூறு பேருக்கு மேல் அதனால் பலியாகியுள்ளனர்.
தொடக்கத்தில் இத்தொற்றினால் இறப்பவர்களை அடக்கம் செய்வதில் பெரும் சிக்கல்கள் இருந்தன. அந்தச்சிக்கல்களும் அரசியலாகப் பார்க்கப்பட்டன.
பின்னர் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம்களதும் எதிரணியினரதும் தொடர் அழுத்தங்களினால், அரசு கீழிறங்கி வந்தது.
தற்போது தொடர்ச்சியாக பயணத்தடை நீடிக்கப்பட்டுவருகிறது.
இவ்வளவு சிக்கல்களுக்கும் மத்தியில் எங்கிருந்தோ வந்த ஒரு கப்பல் தீப்பற்றியதால், அதிலிருந்து நச்சுத்தன்மை வெளியேறி, கடல் வாழ் உயிரினங்கள் அநியாயமாக பலியாகத் தொடங்கிவிட்டன.
கடலிலே சுதந்திரமாக நீந்தி வாழ்ந்துகொண்டிருந்த அவை, உயிரற்ற சடலமாக மிதந்து வந்து கரைஒதுங்குகின்றன.
குழந்தைகளை உயரத்தில் வைத்துப் பார்க்கும் நிலை வந்தால் அதுவே அகிலத்துக்கு ஆனந்தமான நாளாகும் !
இல்லறத்தின் பேரின்பம் குழந்தைச் செல்வங்களே. குழந்தை
இல்லா வீட்டில் குதூகலம் என்பது காணாமல் போய்விடும்.ஆணும் பெண்ணும் இணையும் வாழ்க்கையில் ஆனந்தப் பரிசாக வந்தமை வது குழந்தைகளே. குழந்தை பிறப்பதே வாழ்க்கையில் பெருவர மாகும். அந்தக் குழந்தைகளை எப்படிப் பார்க்கிறோம் ? அந்தக் குழந் தைகளை எப்படி வளர்க்கிறோம் ? என்பதுதான் குழந்தையின் வாழ்க் கையிலே மிகவும் முக்கியமான நிலையாகும்.
குழந்தை என்னும் சொல் - பிறந்த குழந்தையினைக் குறிப்பதா கவே
யாவரும் கருதுகிறோம்.ஆனால் " குழந்தைத் தொழிலாளி " என்னும் பதம் சற்று வித்தியாசமானதாய் குழந்தைகளைப் பார்க்க வைக்கிறது. ஐந்து வயது தொடக்கம் பதினான்கு வயதுவரை உள்ள வர்கள் குழந்தைத் தொழிலாளர் என்னும் வகைக்குள் சிக்கித் தவிக் கிறார்கள். பிறந்த பிள்ளையினைக் குழந்தை என்பதுதான் பொது வான நியதி. ஆனால் 5 வயது தொடக்கம் 14 வயது வரைக்குள் இருக் கின்றவர்களும் குழந்தைத் தனம் மிக்கவராகையால் அவர்களும் " குழந்தை " என்னும் வட்டத்துக்குள் வந்து - தொழிலினைச் செய்யும் நிலையில் " குழந்தைத் தொழிலாளர் " என்று அழைக்கும் பொதுமை க்குள் வந்து நிற்பதை உலகமெங்கணும் காணுகிறோம். தொழிலாளர் எனும் பொழுது வயது வந்தவர்களே அங்கு வந்து நிற்பார்கள் என்பதுதான் நியாயமானது. ஆனால் இங்கு குழந்தைகளே தொழி லாளர் என்னும் நிலைக்குள் வந்து நிற்பதுதான் உலகத்தின் மாபெரும் கவலையாய், பிரச்சினையாய், முகி
ஈழத்துப் படைப்பாளி டென்மார்க் சண் கலைத்துறையில் 50 ஆண்டுகள் - கானா பிரபா
கனேடிய மண்ணில் தமிழியல் செயற்பாடுகளை ஆற்றி வரும் ஈழத்தமிழ்மகன் திரு பொன்னையா விவேகானந்தன் சிறப்பு நேர்காணல்!
தெய்வச் சேக்கிழார் குருபூசை 14/06/2021 திங்கள் மாலை 4:30 மணி Via Zoom
உ
சிவமயம்
பெரியபுராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் (மூலம்)
இப்புராணத்தின் பயனாவது: “மக்களின் சிந்தையிருள் போக்கி ஞானவெளி தந்து இகத்தும் பரத்தும் இன்பமளித்துப் பேரின்ப முத்தி உதவுதலேயாம். பேரின்ப வீடுபெறச் சாதனமாவதன்றி இதுவே அடையப்படு பொருளாகிய சாத்தியமுமாம் என்பது ஆசிரியரது பிற்றை வாழ்நாட் சரித வரலாற்றினால் அறியப்படும். கலை ஞானங்களை அறிந்து ஒழுகும் உலகியல் நல்வாழ்வுக்கும் இது பெருந்துணையாகும்.”
(அடியார்க்கு அடியேன் திரு C.K. சுப்பிரமணிய முதலியார் – “பெரியபுராண வரலாறு” - நூல் - காசித் திருமட வெளியீடானா பெரியபுராணம் – பக்கம் ix)
சைவ சித்தாந்த மையம் (விக்ரோறியா)
தெய்வச் சேக்கிழார் குருபூசையை ZOOM வழியாக 14/06/2021 திங்கள் மாலை 4:30 மணி முதல் நடாத்துகின்றனர்.
இறைவனருளால் நிகழ்வின் கீழுள்ள விபரங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. பங்கு பற்றுவோம் பலனைடைவோம்.
Join Zoom Meeting
Meeting ID: 864 7420 7495
Passcode: 587252
”மேன்மை கொள் சைவ நீதி உலகமெல்லாம்”
'நெடுமரங்களாய் வாழ்தல்' ஆழியாள் கவிதைகள் - கன்பரா யோகன்
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் வெளிவந்த 'நெடுமரங்களாய் வாழ்தல்' என்னும் ஆழியாள் (மதுபாஷினி) எழுதி வெளியிட்ட கவிதைத் தொகுப்பினை
வாசிக்க கிடைத்தனால் ஏற்பட்ட எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இங்கே முயல்கிறேன்.
இந்த தொகுப்பில் 25 கவிதைகளைத் தொகுத்திருக்கிறார். இவற்றுள் சில ஏற்கனவே சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.
‘எனக்குத் தெரிந்தவர்கள்' என்ற தலைப்பிலான கவிதை மனதின் இருமை நிலைகளை, சாதாரண நானும், என்னுள்ளே ஒளிந்துள்ள மற்றைய நானும் கொண்டுள்ள பட்டும் படாத உறவை சுவாரஷ்யமாக சொல்கிறது. அந்த ‘நான்’ -க்கு சாதாரண ‘நான்’ சுவாரஷ்யமற்ற பேர்வழியாய்த் தெரியும் முரண் நகையுடன் முடிகிறது கவிதை.
'பின்னைய வாசிப்பு' இத் தொகுப்பில் இன்னொரு குறிப்பிடத்தக்க கவிதை. காரிய-காரணத் தொடர்பை சில அரசியல், வரலாற்று நிகழ்வுகளுடன் கோர்த்து சொல்லப்பட்ட து, குறிப்பாக இந்த வரிகள் ;
'நந்திக்கடலில் பின்னால்
அணுவாயுத வல்லரசுகளின்
சதுரங்கப் பலகை அலைகளில்
ஆடிக் கொண்டு கிடக்கிறது'
இதை கற்பனையில் காட்சிப்படுத்தினால் இந்தப் படிமத்தின் செறிவு இன்னும் ஒரு படி கூடுகிறது.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எதிர்வரும் 20 ஆம் திகதி நடத்தவுள்ள இணையவழி காணொளி நினைவரங்கு
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், கலை, இலக்கியம், கல்வி, இதழியல், சமூகம் மற்றும் வானொலி ஊடகத்துறை சார்ந்து பணியாற்றி, அவுஸ்திரேலியாவில் முன்னர் மறைந்த தமிழ் ஆளுமைகளை நினைவுகூரும் அரங்கினை எதிர்வரும் 20 ஆம் திகதி ( 20-06-2021 ) ஞாயிறு – இரவு 7-00 மணிக்கு ( அவுஸ்திரேலியா – மெல்பன் நேரம் ) இணையவழி காணொளியூடாக நடத்தவிருக்கிறது.
சங்கத்தின் தலைவர் மருத்துவர் ( திருமதி ) வஜ்னா ரஃபீக் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை எழுத்தாளரும், சங்கத்தின் துணை நிதிச்செயலாளருமான திரு. லெ. முருகபூபதி ஒருங்கிணைத்துள்ளார்.
இந்தத் தொடர் அரங்கின் முதலாவது அங்கம் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி நடந்தவேளையில், ஏற்கனவே அமரத்துவம் எய்திய எழுத்தாளர்கள் எஸ். பொன்னுத்துரை , நித்தியகீர்த்தி, காவலூர் இராஜதுரை, கலாநிதிகள் வேந்தனார் இளங்கோ, ஆ. கந்தையா, பேராசிரியர்கள் பொன். பூலோகசிங்கம், கைலாசநாதக் குருக்கள் ஆகியோரின் வாழ்வும் பணிகளும் தொடர்பான நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
இந்தத் தொடர் அரங்கின் இரண்டாவது அங்கம் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
என்றும் என்னவள் - தேவகி கருணாகரன்
.
எனது நண்பன்
பாலுவின் தாயார் சாமுண்டீஸ்வரி காலமாகிவிட்டார்,
என்றும் அவரது ஈமக் கிரியைகள் சிட்னியின் மக்குவாரி பார்க் கிரிமட்டோரியத்தில் உள்ள மக்னோலியா சப்பலில் வரும் சனிக்கிழமை அன்று காலை பத்து மணிக்கு நடைபெறும், எனத் தமிழ் சமூக வானொலியில்
அறிவித்ததைக் கேட்டேன்.
என் நண்பனின் தாயார் ஆகையால் என் அனுதாபத்தை தெரிவிக்க முப்பது கிலோ
மீட்டர் தூரத்திலிருந்த கிரிமட்டோரியத்திற்கு காரில் புறப்பட்டேன். சிட்னியின் இளவேனிற் கால சூரிய
ஒளியில் அந்தக் காலைப் பொழுது பிரகாசமாகவிருந்தது. போய் இறங்கியதும், மண்டப வாசலிலிருந்த
பார்வையாளர் குறிப்பேட்டில் கையொப்பம் வைத்துவிட்டு, அங்கு நின்ற நண்பன்
பாலுவிடம் கை கொடுத்து அவன் தோளை அழுத்தி அனுதாபங்களைத் தெரிவித்துவிட்டு உள்ளே சென்றேன்.
ஆறு வெள்ளி நிற கைபிடிகள் பளபளக்க விலையுயர்ந்த தேக்கு மர பெட்டியில்
வளர்த்தியிருந்த சாமுண்டீஸ்வரி அம்மையாரின், கால் மாட்டில் நின்று அவர் ஆத்மா சாந்தியடையட்டும் என வேண்டிக் கொண்டேன்.
இதற்குமுன் அவரை நான் பார்த்ததில்லை. தக தக வென்ற அவருடைய வெள்ளைநிற முகத்திற்குப்
பூச்சும், உதட்டில் லேசான லிப்ஸ்டிக்கும் பூசி, சுமங்கலியாகப் போகும் அவருக்கு நெற்றியில் குங்குமப்
பொட்டும் இட்டு, தலையில் பூவும்
வைத்திருந்தனர்.
வைரத்
தோடும், வைர ஒற்றைக் கல்
மூக்குத்தியும் முகத்தை அலங்கரிக்க, கழுத்தில் வைர அட்டியலும் தாலியுடனும் முதிர்ந்த
அழகியாகக் காட்சியளித்தார். இந்த வயதில் இப்படி என்றால் இளமையில் எவ்வளவு அழகாகவிருந்திருப்பார்?
ஆணும் பெண்ணும் உரிமைகளும் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்
.
சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கிலே பெண் வகித்த பங்குகள் பல. வரலாற்று காலத்திற்கு முற்பட்ட கால மனித இனம் பெண்ணைத் தலைமையாகக் கொண்டு வாழ்ந்த இனக்குழுக்களாக வாழ்ந்ததைக் காண்கிறோம்.
இங்கு பெண் தலைவியானதற்குக் காரணம் ஆணால் பெற முடியாத இன்னொரு மனிதனை தன்னுள் வளர்த்து வெளிக்கொணர்பவள் பெண் என்பதனாலாகும். அன்று இருந்த மனித சிந்தனை வளர்ச்சியில் இவ்வாறு தான் பெண் இனம் போற்றப்பட்டது.
இனக்குழுக்களுக்கு மனித சக்தி வேண்டி இருந்தது. நோய் மற்றும் மிருகங்களின் தாக்குதலால் இலகுவில் மனிதன் இறந்து விடும் நிலை அன்று இருந்தது. இதனால் பெரிய கூட்டம் ஒன்று தம்மைப் பெருப்பிக்கவும் பாதுகாக்கவும் வேண்டி இருந்தது. இதனால் மனிதனைப் பெற்றுத் தரும் பெண் போற்றப்பட்டாள். தலைவியும் ஆனாள்.
காலத்தின் ஓட்டத்திலே; மனித சமுதாய வளர்ச்சியிலே; இனப்பெருக்கத்தில் ஆணின் பங்கு என்ன என்பதை மனிதன் புரிய ஆரம்பித்தான். இனக்குழுவாக வாழ்ந்த வாழ்க்கையும் மாறத்தொடங்கியது. இனக்குழு உயிர்வாழ சேர்ந்து வாழ வேண்டிய நிலை இருந்தது. ஆனால் நிலையாக வாழத்தொடங்கிய மனிதன் நிலத்தில் உரிமை கொண்டான். இது எனது; எனக்கே உரியது; எனக்கே சொந்தமானது என்ற சிந்தனை வளர, தனக்குப் பிறந்த பிள்ளைகளே தனது வாரிசு மற்றவர்களுக்குப் பிறக்கும் பிள்ளை மாற்றானது, இதன் காரணமாகப் பிள்ளையைப் பெற்றுத் தரும் பெண் தனக்கு உரியவளாக வேண்டும். மனிதனை மனிதன் அடக்கி ஆள வேண்டும் என்ற சிந்தனை முளை விட்டது. அந்தச் சிந்தனையின் அமுலாக்கம் முதலில் பெண்ணை அடக்குவதில் தான் ஏற்பட்டது. பெண்ணைத் தனக்கு மட்டும் சொந்தமாக்குவதற்கு தோன்றியதே ஆண் ஆதிக்க அடக்கு முறை.
பெண் தலைவியான வாழ்வு போய், பெண் ஒருவனுக்கு மட்டும் உரியவள் என்ற எண்ணம் வளர்ந்தது. அவளின் அழகு, வசீகரம் அத்தனையும் அவனுக்குச் சொந்தமானது. பிறனின் கண்ணில் அவள் பட்டுவிடக்கூடாது என்பதற்காக பர்தாவால் மறைக்கப்படும் கொடுமையை நாம் இன்றுவரைக் காண்கிறோம். ஆனால் ஆணோ பல தார மணம் செய்து கொள்ளச் சமூகம் அனுமதித்தது. பெண்ணுக்கு மட்டும் கற்பு நிலை என்ற சிந்தனை பரப்பப் பட்டது.