.
உலகெங்கும் வாழும் அனைத்து அன்னையர்களுக்கும் தமிழ் முரசின் அன்னையர் தின வாழ்த்துக்கள்
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
.
குழந்தையாய் உன் மடியில் கிடந்தபோது
சேலைத்தலைப்பில் ஒளிந்து விளையாடியபோது
விளையாடி களைத்து வீடு வர
நீ தலைகோதி விட்டு
போய் குளி என்றபோது
தாமதித்து வீடு வரும் போதெல்லாம்
படுக்கையிலே விழித்திருந்து
சாப்பிட்டுப் படு என்றபோது
ஒருமுறை கூட
நான் நினைத்துப் பார்த்ததில்லை
நீ என்னை விட்டு
போய் விடுவாய் என்று
நான் உழைக்கும் வயதில்
உன்னிடம் கேட்டேன்
என்ன வேணும் என்று
சிரித்துக் கொண்டே
எல்லாம் இருக்கு என்றாய்
அந்த சிரிப்பில் ஒரு பெருமிதம்
உன் பிள்ளை உழைக்கின்றான் என்று
மீண்டும் கேட்டேன்
ஒரு ஆசையும் இல்லையா
இருக்கிறது என்கிறாய்
நிமிர்ந்து உட்க்கார்த்துக்கொண்டேன்
Tuesday, May 4, 2021 - 6:44pm
- கேலி கிண்டல்களை தவிடுபொடியாக்கி சட்டசபைக்குள் பிரவேசிக்கும் ம.தி.மு.க
- தகர்ந்து போனது அ.ம.மு.கவின் கனவு; கூட்டு சேர்ந்த தே.மு.தி.கவும் படுதோல்வி
- தோல்வியுற்றாலும் பாராட்டப்பட வேண்டிய ஆளுமை கமல்
- கட்சிகள் ஒவ்வொன்றும் வென்றெடுத்த ஆசனங்கள்
சட்டசபைத் தேர்தலில் பெற்ற அமோக வெற்றியையடுத்து தமிழக முதல்வராக தி.மு.க தலைவர் ஸ்டாலின் எதிர்வரும் 7 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித்திடம் ஆட்சி அமைக்க ஸ்டாலின் இன்று உரிமை கோருகிறார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில், ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், தி.மு.க கூட்டணி 159 இடங்களில் வென்றுள்ளது.
இதில் தி.மு.க தனியாக 125 இடங்களில் வெற்றி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களிலும், அ.தி.முக தனியாக 65 இடங்களிலும் வென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
Friday, May 7, 2021 - 6:00am
கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிமையான வைபவம்
அமைச்சர்களும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம்
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடப் போவதாக சூளுரை
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்ற தி.மு.கவின் தலைவர் ஸ்டாலின் இன்று 7 ஆம் திகதி ஆளுநர் மாளிகையில், எளிய முறையில் பதவி ஏற்கின்றார். சட்டப் பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணி 159 இடங்களை பெற்றுள்ளது.
அறுதிப் பெரும்பான்மை பெற்றதால் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட முதல்வராக இன்று பதவி ஏற்கின்றார். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நேரு உள்ளரங்கில் பிரம்மாண்டமான பதவி ஏற்பு விழா நடத்த உத்தேசித்திருந்த நிலையில், கொரோனா தீவிரம் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் ஸ்டாலின் இன்று முதல்வராக பதவி ஏற்கின்றார்.
அங்கு அவருக்கும் பிற அமைச்சர்களுக்கும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
தி.மு.கவின் மூன்றாவது முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்கிறார். கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஸ்டாலின் நேரடியாக தெரிவு செய்யப்படும் முதல்வராகிறார்.
தமிழகத்தில் புதிய அரசு பதவிப் பிரமாண நிகழ்ச்சியை ஆடம்பர விழாவாக நடத்தாமல் ஆளுநர் மாளிகையிலேயே அதை நடத்துவது என்று நாங்கள் முடிவு செய்திருப்பதாக ஸ்டாலின் நேற்று கூறியுள்ளார்.
“சட்டப் பேரவைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை தி.மு.க தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தமிழகத்து மக்கள் வழங்கியிருக்கின்றனர். இந்த மகத்தான வெற்றிக்கு வழிவகுத்து தந்திருக்கும் அனைவருக்கும் தி.மு.க சார்பில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்தாண்டு காலமாக தமிழகம் ஒரு பாதாளத்திற்குப் போயிருக்கிறது என்பதை நாட்டு மக்கள் நன்கு புரிந்து, அதனைச் சரி செய்ய தி.மு.க தலைமையில் அமைந்திருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றியை வழங்கி இருக்கிறார்கள்.
எந்த எதிர்பார்ப்போடு அந்த வெற்றியைத் தந்து இருக்கிறார்களோ, எந்த நம்பிக்கையோடு எங்களிடத்தில் இந்தப் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்களோ, அந்த நம்பிக்கைக்கு ஏற்ற வகையில், அந்தப் பொறுப்பை உணர்ந்து எங்களுடைய ஆட்சி நிச்சயம் அதனை நிறைவேற்றித் தரும்” என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
“எங்களையெல்லாம் ஆளாக்கிய கருணாநிதி ஐந்து முறை தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் முதல்வராக இருந்து தமிழகத்து மக்களுக்கு ஆற்றியிருக்கின்ற பணிகளையெல்லாம் நாங்கள் உணர்ந்து, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எப்படிப் பயிற்றுவித்து இருக்கிறாரோ, அந்த வழிநின்று எங்கள் கடமையை நிச்சயம் ஆற்றுவோம்” என்றார் ஸ்டாலின்.
நேற்றுமுன்தினம் தி.மு.க முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஸ்டாலின் சந்தித்தார். அப்போது அவர் சட்டமன்ற கட்சி தலைவராக எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார். ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரினார். இதை கவர்னர் பன்வாரிலால் ஏற்றுக் கொண்டார்.
நாகசுர மேதை காருகுறிச்சி அருணாசலம் அவர்களது பிறந்த நாள் நூற்றாண்டுச் சிறப்பு உரையாடல் இசை விமர்சகர் திரு லலிதா ராம் உடன்
எழுத்தாளர்களும் முகநூல் கலாசாரத்திற்குள் சிக்கிவிட்டதனால், தத்தம் படைப்புகளுக்கு அங்கீகாரம் தேடி அலைந்துகொண்டிருக்கின்றனர்.
எத்தனைபேர் தமது படைப்பை பார்த்தார்கள்…? படித்தார்கள்…? விருப்பம் ( Like ) தெரிவித்தார்கள்…? எதிர்வினையாற்றினார்கள்…? என்பதை ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.
முழு உலகமும் சினிமா முதல் விளையாட்டுக்கள், அரசியல் மற்றும் சமகால கொரோனோ புள்ளிவிபரங்கள் அனைத்தும் கைத்தொலைபேசிக்குள் அடங்கிவிடுகிறது. இவைதவிர வாட்ஸ் அப் அலைப்பறையை ரசிக்கும் – பகிரும் பண்பாடும் பெருகிவிட்டது.
இந்தப்பின்னணியில் புத்தகங்கள் பத்திரிகைகள், இதழ்களும்
உலகெங்கும் புத்தக சந்தைகள், கண்காட்சிகள் நடந்தாலும் மக்களிடம் வாசிக்கும் பழக்கம் அருகித்தான் வருகிறது. ஈழத்து தமிழ் சமூகம் நீண்டநெடுங்காலமாக இந்திய ஜனரஞ்சக வணிக இதழ்களில்தான் மோகம் கொண்டிருந்தது.
அவற்றுடன் போட்டிபோட்டுக்கொண்டுதான் இலங்கையில் பல தரமான சிற்றிதழ்கள் தோன்றித் தோன்றி மறைந்தன.
இன்று இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஜீவநதியும், கொழும்பிலிருந்து ஞானமும், மட்டக்களப்பிலிருந்து அவ்வப்போது மகுடம் காலாண்டிதழும் அநுராதபுரத்திலிருந்து படிகள் இதழும் வெளியாகின்றன.
எனினும், பல பத்திரிகைகளை சமகாலத்தில் இணைய
இந்தப்பின்னணிகளுடன் யாழ்ப்பாணம் நல்லூரிலிருந்து எங்கட புத்தகங்கள் என்ற பெயரில் ஒரு சிற்றிதழ் வெளிவரத்தொடங்கியுள்ளது.
இதன் இரண்டாவது இதழை ( 2021 ஜனவரி ) லண்டனில் வதியும் நூலகர் நடராஜா செல்வராஜா எமக்கு தபாலில் அனுப்பியிருந்தார். செல்வராஜா எப்போதும் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக திகழ்பவர். ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை ஆவணப்படுத்தும் குறிப்புகளை தொகுத்து நூல்தேட்டம் என்ற பெருந்தொகுப்பினையும் வெளியிட்டுவருபவர்.
எங்கட புத்தகங்கள் இதழை எமக்கு அறிமுகப்படுத்திய நூலகர் செல்வராஜாவுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.
இரண்டாவது இதழின் முகப்பு மனதை கவர்ந்திருக்கிறது. ஒரு பாலகன் ஒரு தமிழ் நூலைப்படித்துக்கொண்டிருக்கும் காட்சி சிறப்பானது.
அடுத்துவரும் தலைமுறையிடம் வாசிப்பு பழக்கத்தை தூண்டவேண்டும் என்பதற்கு அடையாளமாக முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
புத்தகங்களைத் தேடுவோம், நூலகங்களை அமைப்போம்,
Friday, May 7, 2021 - 12:18pm
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கணித பிரிவின் புதிய பாடத் திட்டத்திற்கமைய குறித்த மாணவன் 3A சித்தி பெற்று தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இம் மாணவன் கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் 9A சித்தி பெற்றிருந்ததுடன் , தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 182 புள்ளிகளை பெற்று சித்தி அடைந்துள்ளார். அதேவேளை கடந்த 2014ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பற்றி பதக்கம் வென்றுள்ளார். கல்வி செயற்பாடுகள் மாத்திரமின்றி இணை பாடவிதான செயற்பாடுகளிலும் தனது திறமைகளை வெளிக்காட்டி பல வெற்றிகளை பெற்றுள்ளார். நன்றி தினகரன்
ஒரே வருடத்தில் க பொ த உயர்தர பரீட்சையில் அகில இலங்கையில் தமிழ் சகோதரங்களின் சாதனை.. இப்படியொரு சாதனை இதுவரை காலமும் நடந்ததாக சரித்திரமும் இல்லை, இனிவரும் காலங்களில் நடப்பதற்கும் சாத்தியமும் இல்லை.. ஒரே வருடமும், அதோடு இருவரும் அண்ணனும் தங்கையும். சாவகச்சேரியை சேர்ந்த இந்த இருவருக்கும் 3A.. அண்ணன் அகில இலங்கையில் முதலாம் இடம், தங்கை அகில இலங்கையில் 30ம் இடம்.. அண்ணா engineering, தங்கை medicine.. இதுவல்லவா சாதனை.
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா அன்புச் சுமையெனவே சுமந்தவண்ணம் எண்ணி மகிழும்
அன்புத் தெய்வம் அம்மா
…….. பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்
அன்புத் தெய்வம் அம்மா
மாசி லாத தூய அன்பை
மகிழ்ந்து பொழிந்த அன்னையைப்
பேசிப் போற்ற வார்த்தை இல்லை!
பெற்ற அம்மா தெய்வமே!
விரத மிருந்து பரனைத் தொழுது
வேண்டி வரத்தாற் பெற்று
இரவு பகலாய்க் கண்ணின் மணிபோல்
என்னை வளர்த்தாள் அன்னையே!
நேசக் கரத்தால் என்னைத் தூக்கி
நெஞ்சில் அணைத்து மகிழ்ந்தவள்
பாசத் தோடு ஆசை பொங்கப்
பண்பில் மலர வைத்தவள்!
பிறந்தோம் மறைந்தோம் என்பது வாழ்க்கை அல்ல. உண்டோம் உழைத்தோம் உறங்கினோம் என்பதும் வாழ்க்கை அல்ல. இருக்கும் காலத்தில் யாருக்காவது
பலரும் பிறக்கின்றோம். ஆனால் சிலரின் பிறப்புத்தான் பலருக்கு முன் மாதிரியாய், சமூகத்துப் பயனுள்ளதாய், என்றுமே எண்ணி ப்பார்ப்பதாய் அமைகிறது என்பது கருத்திருத்த வேண்டிய உண்மை யெனலாம். அப்படியான ஒருவரைப் பற்றியும் அவரின் சமுதாயத் சிந்தனைபற்றியும் அறிய வேண்டாமா ?
அப்படியான ஒரு மாண்புமிக்க பிள்ளை - இறை பக்தியும், மனித நேயமும், கருணையும் கொண்ட குடும்பத்தில் ஜெனீவா என்னும் இடத்தில் 1828 ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம்
' வளரும் பயிரை முளையிலே' தெரியும் என்பார்கள். ஹென்றி டியூனண்டும் பயனுள்ள பயிராய் முளைவிட்டார். மற்றவருக்கு உதவ வேண்டும், மற்றவர் படுகின்ற துன்பங்களைப் போக்க வேண்டும் என்னும் நல்ல சிந்தனைகள் ஹென்றியின் இளம் பருவத்திலேயே முகிழ்த்து விட்டது எனலாம். சமுதாய நலன் சார்ந்து சிந்திப்பதற்கு அவரின் பெற்றாரும் உற்ற துணையாக விளங்கினார்கள் என்பது நோக்கத்தக்கது.சிறையிலே கைதிகளுக்குக் கொடுக்கப்படுகின்ற கடுமையான தண்டனையை இவரின் மனம் ஏற்க மறுத்தது.அதனால் சிறைக்கூடங்களுக்கே சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை தேறுதல் படுத்துவதில் கவனம் செலுத்தி னார் என்பதும் நோக்கத்தக்கதேயாகும்.
வங்கித் தொழிலினைத் தேர்ந்தெடுத்து வளமாக வாழ்க்கையினை அமைத்தாலும் இவரின் சிந்தனை துயரப்படுகின்றவர்கள் பக்கமே சென்றது எனலாம்.1859 ஜூன் மாதம் 25 ஆந் திகதி இவர் வட இத்தா லிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது " சோல்பரினோ " யுத்தம் நடை பெற்றிருந்தது.ஆஸ்திரியா, பிரா
இச்சங்கத்தின் அங்குரார்ப்பணம் அக்காலப்பகுதியில் கொழும்பில் மருதானை வீரரத்தன மண்டபத்தில் நடந்திருக்கிறது.
" ஒரு முற்போக்கு இலக்கியப் பரம்பரை வளர நம்நாட்டு எழுத்தாளர்களுக்குச் சரியான தலைமை அளித்து வழிநடத்தும் அமைப்பாகவும், அதன் கொள்கைகளையும் வேலைத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தும்
இந்தத் தகவல்களை ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும் என்ற நூலில் மூத்த எழுத்தாளர் சுபைர் இளங்கீரன் பதிவுசெய்துள்ளார்.
1956 ஆம் ஆண்டில் - இலங்கையில் கொழும்பு, குருணாகல், கண்டி, மாத்தளை, திருக்கோணமலை, அநுராதபுரம், யாழ்ப்பாணம் ஆகிய ஊர்களிலும் மலையகத்தில் பல நகரங்களிலும் இ.மு. எ. சங்கம் பாரதிக்காக பல விழாக்களை நடத்தியபோது எனக்கு ஐந்து வயது. பாரதி விழாவுக்கென தமிழகத்திலிருந்து மூத்த இலக்கிய விமர்சகரும் புதுமைப்பித்தனின் சகாவும் பாரதி இயல் ஆய்வாளருமான தொ. மு. சி. சிதம்பர ரகுநாதனை சங்கம் வரவழைத்தது. அச்சமயம் அவர் எமது நீர்கொழும்பு வீட்டுக்கும் வந்தார்.
.
தென் இந்தியர்களும் நாமும் தமிழர்கள் தான். ஆனால் நம் உணவுப் பழக்க வழக்கங்கள் மாறுபட்டவை. அவர்கள் Three Course Meal சாப்பிடுவார்கள். அதாவது முதலிலே சாம்பாருடன் சோறு, பின் இரசத்துடன் சோறு, அதன் பின் தயிர் அல்லது மோர் உடன் சோறு. பாயாசம் இருக்குமானால் பாயாசம் கடசியல்ல. மோர் சாப்பிடு முன் பாயாசம் உண்பது அவர்களது வழமை.
ஒரு முறை கதாசிரியர் அகிலன் வீட்டில் சாப்பாடு. அழைக்கப்பட்ட விருந்தாளி எமது தமிழ் பேராசிரியர். தில்லை நாதன் அவர்கள். Madras University யில் அவர் Postgraduate Degree செய்துகொண்டிருந்த காலம் அது. தமிழ் நாட்டிற்குப் புதிது. அவரது இலையில் சாதம் போட்டு சாம்பார் இடப்பட்டதாம். அவர் அதைச் சாப்பிட்டார். எமது ஊரிலோ இலையில் சாப்பாடு முடியுமுன் விருந்தாளி மேலும் சோறு போடுவார். இங்கோ நீங்கள் சாம்பார் சாதத்தை முற்றாக முடித்தால் தான் இரசத்திற்குச் சோறு போடப்படும். சாம்பாருடம் இரசம் கலக்கப்படாது. தில்லை நாதனோ நம் ஊர் பாணியில் விருந்தாளி போடுவார் எனக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுகிறார். திருமதி. அகிலன் விருந்தாளி சாப்பிடாததால் மேலும் இலையில் சாதம் பரிமாறவில்லை.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர் எழுத்தாளர். நீர்வை. பொன்னையன். இவர் முதன் முறையாகத் தலைமன்னாரில் கப்பலில் ஏறி இராமேஸ்வரம் வந்தடைந்தார்.. பிரயணக் களைப்பு. உணவகம் ஒன்றில் நுழைந்தவர் 5 தோசை என்று Order கொடுத்தாராம். யாழ்ப்பணக் கடைத் தோசை எல்லாம் அந்தக்காலத்தில் உள்ளங்கையளவு இருந்த காலம் அது.
வன்னி HOPE - நிதி தொண்டு நிகழ்ச்சிக்கான செய்தி
டாக்டர் குஷ்வின் ராஜமணியிடமிருந்து ஒரு செய்தி - வன்னி ஹோப்பின் நிதி உதவி
.
60 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் பிரபலமாக விளங்கிய பட நிறுவனங்களில் ஒன்று நாராயணன் கம்பெனி. இவர்கள் தயாரித்த படங்களுக்கு எல்லாம் மங்களகரமான பெயர் சூட்டுவார்கள். கணவனே கண்கண்ட தெய்வம், மனம்போல மாங்கல்யம், தாயுள்ளம் என்று இவர்கள் தயாரித்த படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை குறிப்பாக பெண்கள் மத்தியில் பெற்றன. அந்த வகையில் அவர்கள் உருவாக்கிய கடைசி படம் தான் பாக்கியலட்சுமி.குடும்பக்கதையானா இப்படத்தை புது இயக்குநர் கேவி சீனிவாசன் இயக்கியிருந்தார் அத்துடன் கதை வசனத்தையும் அவரே எழுதி இருந்தார். நாராயணன் கம்பெனியினர் தயாரித்த பெரும்பாலான படங்களில் கதாநாயகனாக நடித்தவர் ஜெமினி கணேசன். அந்தவகையில் இதிலும் அவர் நாயகனாக நடித்தார். படத்தில் அவருக்கு இரண்டு ஜோடிகள் ஒருவர் சவுகார் ஜானகி, மற்றையவர் இ வி சரோஜா.
குறும்பாகவும் துடிப்பாகவும் நடிக்கும் பாத்திரம் சரோஜாவுக்கு. அதனை அருமையாக செய்திருந்தார் அவர். அதேபோல் உணர்ச்சிகளை கொட்டி உருக்கமாக நடிக்கும் வாய்ப்பு சவுகார் ஜானகிக்கு கிட்டியது. பழக்கப் படட வேடம் என்பதால் இலகுவாக அதனை செய்திருந்தார். இவர்களுடன் பி கண்ணாம்பா தங்கவேலு சரோஜா ஆகியோரும் நடித்திருந்தார்கள்.
சிறுவயதிலேயே திருமணம் ஆகிவிடும் நாயகி மீண்டும் இளம் வயதிலேயே தன் கணவனை சந்திக்கிறார். ஆனால் அவனோ வேறு ஒரு பெண்ணின் கணவனாக காட்சி அளிக்கிறான். இவன்தான் தன் கணவன் என்று சொல்ல முடியாமல் அவள் பரி தவிக்கிறாள்.
ரிஷாட் MPயை விடுவிக்குமாறு புத்தளத்தில் மக்கள் எழுச்சி
கணிதப் பிரிவில் சாவகச்சேரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் முதலிடம்
வடமாகாணத்தில் கொரோனா தொற்றுக்களை எதிர்கொள்வதற்கு சுகாதாரத் துறையினர் தயார்
ரிஷாட் எம்.பி. பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதில் சட்ட சிக்கல் இல்லை
ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் சபை தலைவராக மஹிந்த ராஜபக்ஷ
இலங்கையில் கொவிட்-19 புதிய அலை: இளைஞர் யுவதிகளும் பாரிய அபாயத்தில்
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி நேற்று முதல் வழங்கல்
மாகாண சபை தேர்தல் முறைமை: அரசாங்கத்துடன் இணைந்துள்ள தமிழ் எம்.பிக்கள் கலந்துரையாடல்
யாழ்.மாநகர காவல் படையின் பணியாளர்கள் நாலாம் மாடிக்கு அழைப்பு!
ரிஷாட் MPயை விடுவிக்குமாறு புத்தளத்தில் மக்கள் எழுச்சி
அநியாயமான முறையில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கோரி புத்தளத்தில் நேற்று (02) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. புத்தளம், கொழும்பு முகத்திடலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புத்தளம் மாவட்டத்திலிருந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மெக்சிகோ மெட்ரோ மேம்பாலம் உடைந்து விழுந்ததில் 23 பேர் பலி
மியன்மார் போராட்டக்காரர் எட்டுப் பேர் சுட்டுக்கொலை
பைடனின் ‘விரோதக் கொள்ளை’ குறித்து வடகொரியா எச்சரிக்கை
மியன்மாரில் பொட்டலத்தில் இருந்த குண்டு வெடித்ததில் ஐவர் உயிரிழப்பு
மியன்மார் போராட்டக்காரர் எட்டுப் பேர் சுட்டுக்கொலை
உலகில் கொரோனா தினசரி சம்பவம் இரட்டிப்பாக உயர்வு
50 வயதுக்கு மேற்பட்டோருக்கு பிரிட்டனில் 3ஆவது தடுப்பூசி
சிரியாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் சரமாரி தாக்குதல்
மெக்சிகோ மெட்ரோ மேம்பாலம் உடைந்து விழுந்ததில் 23 பேர் பலி
மெக்சிகோ தலைநகரில் ரயில் சென்றுகொண்டிருக்கும்போது மெட்ரோ மேம்பாலம் உடைந்து விழுந்ததில் 23 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இதன்போது பல ரயில் பெட்டிகள் பரபரப்பான வீதியில் விழுந்ததில் ஒரு கார் வண்டி நொறுங்கியுள்ளது. இடிபாடுகளில் மேலும் பல வாகனங்கள் சிக்கி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிட்னி ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தானம் 2021 மே 16 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள லட்சர்ச்சனை ஏற்பாடு செய்து வருகிறது. லட்சர்ச்சனை குறிப்பாக ஒருவரின் பாவங்களையும் துன்பங்களையும் கழுவுவதற்காகவும், குடும்ப ஒற்றுமையுடன் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்காகவும் செய்யப்படுகிறது. இந்த சிறப்பு நாளில் அனைவருக்கும் வளமான வாழ்க்கைக்காக அன்னை துர்காவுக்கு 100,000 க்கும் மேற்பட்ட அர்ச்சனைகள் செய்யப்படுகிறது. உங்கள் பெயர் & நக்ஷத்திரத்தை அளித்து பங்கேற்கலாம் மிகவும் புனிதமான இந்த நிகழ்வை 20 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் (குருக்கள்) நடத்துவார்கள். தற்போதைய சூழ்நிலையில் COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு சிறப்பு பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக எங்கள் தாய் துர்கா தேவியிடம் பிரார்த்தனை செய்கிறோம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 6, 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது அதில் 75.4% வாக்குகள் பதிவாகின. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக இங்கு எம். சின்னதுரை (சிபிஎம்), ஜெயபாரதி (அதிமுக), கே.ஆர்.எம்.ஆதிதிராவிடர் (TMJK), மோ ரமிளா (நாதக), பி.லெனின் (அமமுக) மற்றும் பல சுயேச்சைகள் போட்டியிட்டார்கள். அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் எம். சின்னதுரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் ஜெயபாரதி அவர்களை 12721 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்
Friday, May 7, 2021 - 10:50am
நடிகர் பாண்டு, பாடகர் கோமகன் நேற்று மரணம்
தமிழக பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா தொற்றினால் நேற்று காலமானார். அவருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், அவருக்கு வயது 74.
மறைந்த நடிகர் இடிச்சபுளி செல்வராஜின் தம்பியான நடிகர் பாண்டு, நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சின்னதம்பி, காதல் கோட்டை, ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாண்டுவின் நடிப்பு பலராலும் பேசப்பட்டது.
திறமைமிக்க ஓவியரான நடிகர் பாண்டு, பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை அழகுற வடிவமைத்தவர். அ.தி.மு.கவின் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘கெப்பிட்டல் லெட்டர்ஸ்’ நிறுவனத்தை நடத்தி வந்த நடிகர் பாண்டுவுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாண்டுவின் மனைவி குமுதாவும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். நடிகர் பாண்டுவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக நடிகர் விவேக், இயக்குநர் கே.வி. ஆனந்த் ஆகியோர் உயிரிழந்த நிலையில், தற்போது நடிகர் பாண்டுவின் மறைவும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதேவேளை பிரபல பாடகர் கோமகனும் நேற்று கொரோனாவினால் மரணமானார். கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். பின்பு, மேல் சிகிச்சைக்காக மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை அயனாவரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டு நேற்று (06/05/2021) அதிகாலை 01.30 மணியளவில் உயிரிழந்தார்.
கடந்த 2004ஆம் ஆண்டு சேரன் இயக்கி, நடித்த ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் இடம்பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே...’ பாடலின் மூலம் உலகம் முழுக்க புகழ் பெற்றார் பாடகர் கோமகன். பரத்வாஜ் இசையில் இப்பாடலை எழுதிய பா.விஜய்க்கும், பாடகி சித்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன. இப்பாடலில் நடித்ததோடு கடைசியில் உணர்வுபூர்வமாக ஓரிரு வார்த்தைகள் பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் கோமகன்.
மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினராகவும் பணியாற்றியுள்ள கோமகன், இசைப்பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். அவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக அரசு ‘கலைமாமணி’ விருதினை வழங்கி கௌரவித்தது. பாடகர் மறைவுக்கு திரையுலகினரும் அவரது ரசிகர்கள் பலரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா திரையுலகில் தொடர்ந்து பல பிரபலங்களும் கொரோனாவுக்கு இரையாகி வருவது அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தினமும் காலையில் எழுந்தவுடனே ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழக்கும் செய்தியை கேட்டு வருவதே மிகப் பெரிய மன உளைச்சலாக மாறி வருகிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை தொடர்ந்து சமீபத்தில் இயக்குநர் கே.வி. ஆனந்த் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், நடிகர் பாண்டு, கோமகன் ஆகியோரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளமை ரசிகர்களை பெரும் துயரில் ஆழ்த்தி உள்ளது. நன்றி தினகரன்