மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
சிரித்தனன் இறைவன் செப்பினான் விடையை !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மல்லிகை ஜீவாவின் ( 1927 – 2021 ) வாழ்வில் சுவாரசியமான பக்கங்கள் - அங்கம் - 07 ஜீவாவின் பார்வையில் கைலாஸ் – சிவத்தம்பி ! தெருவோரம் நின்று விசிலடித்த வில்லாதி வில்லன் !! முருகபூபதி
ஈழத்து இலக்கிய உலகில் பெரிய ஆளுமைகளாக விளங்கிய விமர்சகர்கள் – பேராசிரியர்கள் கைலாசபதி – சிவத்தம்பி ஆகியோர் மீது மல்லிகை ஜீவா பெருமதிப்பும் பேரபிமானமும் கொண்டிருந்தவர்.
சிவத்தம்பி, ஜீவா இணைந்திருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் ( மாஸ்கோ சார்பு ) அங்கத்துவம்பெற்றிருந்தவர்.
கைலாசபதி சீனசார்பு நிலையெடுத்தவர். எனினும் அக்கட்சியில் ( பீக்கிங் சார்பு ) இணையாமல், தொழிலாளி – செம்பதாகை முதலான இதழ்களில் புனைபெயர்களில் எழுதினார். தேசிய கலை இலக்கியப்பேரவை கைலாசபதியை கொண்டாடியது.
அத்துடன் கைலாஸ் சீனாவுக்குச்சென்று திரும்பி, தமது மனைவி சர்வமங்களத்துடன் இணைந்து மக்கள் சீனம் -காட்சியும் கருத்தும் என்ற நூலையும் எழுதினார்.
சிவத்தம்பி, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தார். அத்துடன் இச்சங்கம் நடத்திய மாநாடுகளின்போது தீர்மானங்களை வரைவதற்கும் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரனுக்கு பக்கத்துணையாக விளங்கினார்.
ஜீவா கைலாசபதியை பன்மையில் மரியாதையுடன் அழைப்பார். ஆனால், சிவத்தம்பியுடன் ஒருமையில் , “ என்னடாப்பா, நீ…. வா… போ….” என்று உரிமையுடன் பேசுவார்.
ஒருசந்தர்ப்பத்தில் ஜீவாவிடம் இந்த இரண்டு
இலக்கியப்பேராளுமைகள் பற்றியும் உங்களது பார்வை என்ன..? என்று கேட்டபோது, ஜீவா பின்வருமாறு தெரிவித்தார்.
அச்சமயம் கைலாசபதி உயிரோடு இல்லை. அவர் 1982 டிசம்பரில் மறைந்துவிட்டார்.
ஜீவா சொல்கிறார்:
இந்தக்கேள்விக்கு பதில்சொல்வது அத்தனை சுலபமானது அல்ல. ஒரே கேள்வி – பதிலில் சட்டென சொல்லக்கூடியதுமல்ல. இருவரையும் சமகாலத்தில் தெரிந்துகொண்டவன். சமமாகவே தெரிந்துவைத்திருப்பவன்.
மிக நெருக்கமாகவும் பேசிப்பழகியவன். இதில் சங்கடம் என்னவென்றால் ஒருவர் ( கைலாஸ் ) மறைந்துவிட்டார். எனவே கருத்துச்சொல்வதில் கஷ்டம் இதில் உள்ளது.
கைலாசின் மனவுணர்வுகளை லேசில் புரிந்துகொள்ளமுடியாது. உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ளவே மாட்டார்.
சிவத்தம்பி அப்படி அல்ல ! குழந்தைப்பிள்ளை. நேசிப்புக்கு மிக நெருக்கமானவர். கைலாசின் நேர் சம்பாஷணையை வைத்து அவரது அறிவின் ஆழத்தை அளவிட்டுவிட முடியாது. ஆனால், சிவத்தம்பியுடன் பேசும்போது, அவரது எழுத்தைவிட அவருடன் சம்பாஷிக்கும் ஒவ்வொரு வேளையும் நான் பிரமித்துப்போவதுண்டு.
இப்படியானவரிடம் நான் ஒரு மாணவனாக ஓரிரு வருடங்கள் இருந்திருந்தால் எத்தனை அறிவுபெற்றிருப்பேன்…? என்று எனது மனம் ஏக்கமடைவதுண்டு.
" நற்றுணையாவது நமச்சிவாயவே " இருத்துவோம் சிவ நாமத்தை திருத்துவோம் மனமதை !
முன்னாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா
மனிதர்களை மாண்புடன் வாழச்செய்வதற்கு நல்ல நெறிகளைக் காட்டி நிற்கும் உன்னத பணியினை சமயம் ஆற்றி வருகிறது. சமயம் என்பது சமூகத்தின் ஆணிவேர் எனலாம்.காட்டில் விலங்குகளுடன் வாழ்ந்த மனிதனின் வாழ்வில் காலத்தின் மாற்றத்தினால் ஏற்பட்ட பலவித வளர்ச்சிப் படியில் சமயம் என்பது மிகவும் உன்னதமானது உயர்ந்து என்று கருத முடிகிறது. விலங்குகளுடன் இருந்த மனிதன் விலங்காய் விளக்கமின்றி இருந்த மனிதன் விலங்கினத்தினின்று வேறுபட்டு மாறுபட்டு நிற்பதற்கு சமயமும் அது சார்ந்த கொள்கைகளும் மடை மாற்றம் செய்திருக்கின்றன என்பது மறுத்
உலகின் தொன்மையான சமயம், சனாதனதர்மம் , பல வாழ்வியல் கோட் பாடுகளைத் தன்னகத்தே கொண்ட சமயம் , நமது சைவசமயம் எனும் பொழுது நாமெல்லாம் எவ்வளவு பெருமை கொள்ளுதல் வேண்டும் ! பக்திப் பாடல்களை கொண்டிருக்கும் சமயம்கூட எங்கள் சைவசமயமே ஆகும்.! இசையினால் இறைவனை அடையலாம் என்னும் பாங்கில் பண்கள் பல கொண்ட பக்திப் பனுவல்களை தன்னகத்தே வைத்திருக்கும் சமயமும் எமது சைவசமயமே ஆகும். !
எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 32 “ ஊருக்கு நல்லது சொல்வேன் “ எழுதியவரின் பின்னணியில் சொல்லவேண்டிய செய்திகள் ! ஊடகவியலாளர் தனபாலசிங்கமும் தமிழ்ப் பத்திரிகை உலகமும் !! முருகபூபதி
கொழும்பில், கொம்பனித்தெரு பிரதேசத்தில் மக்கள் பிரசுராலயம் என்ற புத்தகக்கடை இருந்தது. அங்கும் பொரளை கொட்டாவீதியில் அமைந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக்காரியாலயத்திலும் ஒரு புத்தகக்கடை இயங்கியது.
இங்கு சோவியத் இலக்கியங்களின் மொழிபெயர்ப்பு நூல்களை பெறலாம். அத்துடன் சோவியத் தகவல் பிரிவில் பணியாற்றிய ராஜகுலேந்திரன் என்ற நண்பரும் எனக்கு பல சோவியத் இலக்கிய நூல்களை தருவார்.
மாக்சிம்கோர்க்கி, அன்டன் செக்கோவ், தாஸ்தாவஸ்கி, டால்ஸ்டாய், முதலானோரின் படைப்புகளும் வாசிக்கக்கிடைத்தன.
வீரகேசரிக்கு பணிக்குச்செல்லும்போது நான் எடுத்துச்செல்லும் பேக்கில் வீட்டில் தந்துவிடும்
சாப்பாட்டுப்பொதியுடன், ஏதாவது ஒரு புத்தகமும் இருக்கும். பஸ்பயணத்தில் அமருவதற்கு ஆசனம் கிடைத்தால் படிப்பேன்.
சிலசமயங்களில் மல்லிகை இதழும் எனது பேக்கில் இருக்கும். வீரகேசரி ஒப்புநோக்காளர் பிரிவுக்கு நான் தெரிவுசெய்யப்பட்ட காலத்தில், வடக்கில் கரவெட்டியிலிருந்து வந்து இணைந்துகொண்ட வீரகத்தி தனபாலசிங்கம், எப்பொழுதும் தலைகுனிந்தவாறு அமைதியாகத்தான் இருப்பார். அதிகம் பேசவும்மாட்டார்.
என்னிடம் சோவியத் பிரசுர நூல்கள், மல்லிகை இருப்பதை பார்த்துவிட்டு, அவற்றை வாசிப்பதற்கு கேட்பார். அவ்வாறுதான் நாம் நண்பர்களானோம்.
அவர்
வீரகேசரி விளம்பரப்பிரிவில் முக்கிய பொறுப்பில் இருந்த கந்தசாமியின் சகோதரியின் மகன்.
எனினும் கந்தசாமியுடனும், தனபாலசிங்கம் அவசியமின்றி பேசமாட்டார்
.
அருள்மிகு திருமுருகன் திருப்பள்ளி எழுச்சி
இயற்றியவர் பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி
உ
சிவமயம்
அருள்மிகு திருமுருகன் திருப்பள்ளி எழுச்சி
காப்பு
மலையெல்லாம் மகிழ்ந்தினிய வள்ளி யோடு
மகிழ்வானைத் தெய்வயானை வரித்த கோனை
நிலையில்லா நிலைகொண்டே உழலும் பத்தர்
நினைந்தேத்தும் வழிபாட்டை நெகிழ்ந்தே ஏற்று
விலையெழுத முடியாநற் பதத்தை நல்கும்
விமலனுமை முருகனுக்கேர் பதிகம் பாடக்
கலையெழுதக் கொம்பொடித்த கருணை ஞானக்
கற்பகத்தின் பொற்கமலம் காப்ப தாமே.
இலங்கைச் செய்திகள்
'வடக்கு நோக்கிய நட்புறவு பயணம்'
ஓட்டமாவடியில் இதுவரை 31 ஜனாஸாக்கள் அடக்கம்
இரணைதீவில் அடக்கம்; இதுவரை அனுமதியில்லை
மூன்றாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்கள் போராட்டம்
யாழ்.- சென்னை நேரடி விமான சேவை; விரைவில் ஆரம்பிக்க திட்டம்
தீ விபத்து; 16 வீடுகள் முற்றாக தீக்கிரை 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் நிர்க்கதி
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் நேற்று யாழ்ப்பாணம் விஜயம்
'வடக்கு நோக்கிய நட்புறவு பயணம்'
உலகச் செய்திகள்
அவசரமாகக் கூடுகிறது பிரிட்டன் அரச குடும்பம்
கமலா ஹாரிஸ் ஆவஸ்திரேலிய பிரதமரிடம் பேச்சுவார்த்தை
மியன்மார் ஆர்ப்பாட்டங்களில் மேலும் இருவர் சுட்டுக்கொலை
மியன்மார்: சுற்றிவளைக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் விடுவிப்பு
சவூதியின் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல்: எண்ணெய் விலை உயர்வு
ஹரி, மேகன் கருத்து: மகாராணி வருத்தம்
மியன்மாரில் தடுப்புக்காவலில் 2ஆவது கட்சி அதிகாரி மரணம்
அவசரமாகக் கூடுகிறது பிரிட்டன் அரச குடும்பம்
“வடக்கு ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு” மனோ கணேசன் வெளியிட்டுள்ள தகவல்
வடக்கில் உள்ள நான்கு மாவட்டங்களின் காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக காணியமைச்சர் சந்திரசேன பதிலளிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
“யாழ்ப்பாணத்திலிருந்த வட மாகாண பிராந்திய காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம், இப்போது யாழ் மாவட்ட அலுவலகமாக குறைக்கப்பட்டு, வடக்கின் ஏனைய நான்கு மாவட்டங்களின் ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக காணியமைச்சர் சந்திரசேன பதிலளிக்க வேண்டும்” என தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடுமையான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தமிழர் தாயகத்தின் வடக்கு மாகாணத்திற்குரிய அனைத்து காணிகளுக்கான ஆவணங்களும் அநுராதபுர மாவட்ட செயலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
வடக்கின் காணி ஆவணங்கள் ஏன் அநுராதபுரம் கொண்டு செல்லப்பட்டன? முன்னாள் ஆளுநர் வெளியிட்ட தகவல்
கொழும்பில் இருக்கும் காணி ஆணையாளரிடமிருந்து கிடைக்கவேண்டிய ஒழுங்கான ஒத்துழைப்புக்கள் வலுவாக கிடைக்கவேண்டும் என்பதற்காகவே வடமாகாண காணி ஆவணங்கள் அநுராதபுரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதே தவிர வடமாகாணத்தை சேர்ந்த எந்த அதிகாரங்களும் பறிக்கப்படவில்லை. பறிக்கப்படக்கூடாது. பறிக்கப்படமுடியாது.
இவ்வாறு என்று முன்னாள் வடமாகாண ஆளுநரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும், சுதந்திர கட்சியின் வன்னிமாவட்ட தலைவருமான சுரேன் இராகவன் தெரிவித்தார்.
வவுனியா கந்தசுவாமி கோவிலுக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அவர் விசேட பூஜை நிகழ்வுகளில் கலந்துகொண்டுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
திரிஷ்யம் 2 திரைவிமர்சனம்
மோகன் லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பிரமாண்ட வெற்றியடைந்த படம் திரிஷ்யம். இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று (19/02/2021) OTT-யில் வெளிவந்துள்ளது. இரண்டாம் பாகம் எப்படி என்பதை பார்ப்போம்...
கதைக்களம்
முதல் பாகத்தில் மோகன்லால் அந்த பையனை தான் கொல்லவே இல்லை என சாதித்து அந்த கேஸில் இருந்து வெளியே வருகிறார்.
அதை தொடர்ந்து 6 வருடம் கழித்து மீண்டும் அந்த கேஸை போலிஸார் தொடங்குகின்றனர். அதற்காக இரண்டு வருடம் யாருக்கும் தெரியாமல் மோகன்லால் குடும்பத்தை நோட்டமிடுகின்றனர்.
இதை தொடர்ந்து மோகன்லால் மீண்டும் இந்த பிரச்சினையில் சிக்க அதிலிருந்து மீண்டாரா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
மோகன்லால் ஜார்ஜ்குட்டியாக நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார், கடைசி வரை முகத்தில் எந்த ஒரு டென்ஷனையும் காட்டாமல் அவர் நடித்தாலும், படம் பார்க்கும் நமக்கு செம்ம டென்ஷன் ஏற்றுகிறார்.
அதிலும் மீண்டும் அந்த கேஸில் மாட்டிக்கொண்டு அவரை விசாரிக்கும் இடத்தில் கொஞ்சம் கூட எமோஷ்னல் ஆகாமல் நிதானமாக பேசுவது மோகன் லால் மீண்டும் மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகர் என்று நிரூப்பிக்கின்றார்.
படத்தின் முதல் காட்சியிலேயே மோகன்லால் அந்த பையனை புதைத்துவிட்டு வருவதை ஒருவர் பார்ப்பது போலவும், அதிலிருந்து அந்த கேஸ் ஓபன் செய்வது போன்ற விஷயங்களை கொண்டு வந்தது ஜீத்து ஜோசப் எத்தனை வாழ்த்து வேண்டுமானாலும் சொல்லலாம்.
படத்தின் முதல் பாதி எப்போது மோகன்லால் மாட்டுவார் என்றே சென்றாலும் கொஞ்சம் சுவாரஸியம் குறைய ,இரண்டாம் பாதி மாட்டிய பிறகு அவர் அதிலிருந்து வெளியேற செய்யும் வேலைகள் சீட்டின் நுனிக்கு வர வைக்கிறது.
க்ளாப்ஸ்
மோகன்லாலின் நடிப்பு, ஒன் மேன் ஷோவாக கலக்கியுள்ளார்.
படத்தின் திரைக்கதை, அதிலும் கிளைமேக்ஸ் டுவிஸ்ட்.
பல்ப்ஸ்
படத்தின் முதல் 40 நிமிடம் கொஞ்சம் மெதுவாகவே நகர்கிறது.
மொத்தத்தில் திரிஷ்யம் 2-ம் உங்களை மிகப்பெரிய ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
நன்றி CineUlagam