.
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
ZOOM வழியான 1வது கலந்துரையாடல் ! மு. தளையசிங்கம் 14 மார்ச் 2021 - ஞாயிறு
பெண்கள் தின கவிதை 08.03 2021 பெண்கள் தினம்
.
தைப் பொங்கல் ஒரு தினம் தான்
தமிழ் வருடப் பிறப்பும் ஒரு தினம்தான்
பக்ரீத் பண்டிகையும் ஒரு தினம் தான்
பிறந்த நாள் கொண்டாட்டமும் ஒரு தினம் தான்
ஒற்றைத் தினமென்பதால்
ஓய்ந்து போகுமோ மகளிர் சக்தி.....
வாழ்த்தும் மனம்
பாராட்டும் குணம்
தோள் கொடுக்கும் தோழமை
எங்கேயெனத் தேடாதே
அன்புக்கு அடிபணி
ஆணவம் தகர்த்தெறி
தடைகளைப் புறம் தள்ளு
தலை நிமிர்ந்து நீ செல்லு
ஏரல் எழுத் தென்றாலும்
தடம் பதித்து முன்னேறு.....
பின்னிருந்து வழி காட்டும்
உள்ளிருந்து திறம் காட்டும்
பெண்ணினத்தின் மேன்மையை
முன்னிறுத்தும் வழி தேடு.....
ராஜ்குமார்
நன்றி
https://eluthu.com/
எழுத்தாளர் மாத்தளை சோமுவுடன் சிறப்புச் சந்திப்பு
அவுஸ்திரேலியாவில் வசிக்கின்ற எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்களின் இரண்டு நாவல்களுக்கு பரிசு கிடைத்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும் . தமிழக அரசின் கீழ் இயங்கும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த அயலக நாவலுக்கான பரிசு மாத்தளை சோமு அவர்களின் கண்டிச்சீமை நாவலுக்கு கிடைத்திருக்கின்றது . அடுத்ததாக அவர் எழுதிய பாலி முதல் மியன்மார்வரை என்ற பயணக் கட்டுரை நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த பயண நூல் என்பதற்கான பரிசிலைப் பெற்றிருக்கின்றது. இந்த நிலையில் மாத்தளை சோமு அவர்களை அவுஸ்திரேலியத் தமிழ் ஒஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் "யாதும் ஊரே" நிகழ்ச்சியின் வழியாகச்
சந்தித்து உரையாடிய போது
https://www.youtube.com/watch?பெண்மையின் பெருமையை கண்ணெனப் போற்றுவோம் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா
" மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்." ' மண்மகிழப் பெண் பெண்மகிழ வேண்டும் . பெண்ணைத் தெய்வம் என்கிறோம். மண்ணை பூமித்தாய் என்கிறோம். ஓடிவரும் நதிகளுக் கெல்லாம் பெண்ணின் பெயரையே சூட்டி நிற்கிறோம்.பிறந்த நாட்டைத் தாய் நாடு என்கிறோம். பேசும் மொழியைத் தாய் மொழி என்கிறோம். பெண்ணின் பெயரைப் பெரிதும் மதித்து இவற்றை யெல்லாம் செய்கின்ற சமூகமானது பெண்மையை எப்படிப் பார்க் கிறது ? அந்தப் பெண்மைக்கு எந்தளவு உயர்வினைக் கொடுக்கிறது ? அந்தப் பெண்மையின் நிலைதான் என்ன ? இவையெல்லாம் கேள்விகளாய் எழுந்து நிற்கின்றன !
உடல் அளவில் உறுதி மிக்கவனாக ஆண் விளங்கினாலும் மன வளவில் உறுதி மிக்கவளாகப் பெண்ணே விளங்குகிறாள். இதனா ல்த்தான் ' ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் ' என்று சொல்லப்படுகிறது. அவள் - தாயாக, தாரமாக , சகோதரமாக, மகளாக, தோழியாகக் கூட அமைந்து விடலாம். வீட்டின் அமைதியும் , ஆனந்தமும் வெளியில் வியாபித்து சமூகத்தையே சாந்திக்கு ஆட்படுத்தும் ஆற்றல் நிச்சயம் பெண் மையின் கைகளிலேதான் தங்கியிருக்கிறது. அந்த அளவுக்கு பெண்மை என்பது வாழ்க்கையின் பெரு வெளிச்சம் எனலாம். அந்தப் பெரு வெளிச்சத்தை அளித்து நிற்கும் பெண்ணை பெண்மையைப் போற்றும் தினமாகத்தான் " சர்வதேச மகளிர் தினம் " முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது எனலாம்.
மல்லிகை ஜீவாவின் ( 1927 – 2021 ) வாழ்வில் சுவாரசியமான பக்கங்கள் - அங்கம் - 06 ஜெயகாந்தனும் மல்லிகை ஜீவாவும் முருகபூபதி
மல்லிகையில் ஜீவா 1970 களில் எழுதிய " ஒரு படைப்பாளியைப்பற்றி இன்னொரு சிருஷ்டியாளனின் பார்வை " - என்ற தொடர் விமர்சனக்கட்டுரை காரசாரமாக நீடித்து ஓய்ந்தது.
அவர் அக்காலப்பகுதியில் ஒவ்வொரு மாதமும் மல்லிகையை வெளியிட்டு, யாழ்ப்பாணத்தில் விநியோகித்துவிட்டு கொழும்புக்கு ரயிலேறிவிடுவார்.
அவரது ஒன்றுவிட்ட சகோதரர் இராசதுரை எமது நீர்கொழும்பூரில் ரோயல் சிகையலங்கார நிலையம் நடத்திக்கொண்டிருந்தார். அதற்குப்பின்புற ஒழுங்கையில்
இராசதுரை குடும்பத்துடன் வசித்தார்.
ஜீவா நீர்கொழும்புக்கு வந்தால், மாலைவேளையில் அவரை அழைத்துக்கொண்டு கடற்கரைக்கு வந்துவிடுவோம்.
அச்சந்திப்பில் , அடுத்த மாதம் ஜெயகாந்தன் பற்றி அவர் எழுதவிருக்கும் விடயங்களை எம்மிடம் சொல்வார்.
அவருடன் வாதம் செய்வோம். அவரும் விட்டுக்கொடாமல் தனது தரப்பு வாதங்களை சொல்வார்.
உன்னைப்போல் ஒருவன், இனிப்பும் கரிப்பும், வாழ்க்கை அழைக்கிறது முதலான அடிமட்ட - மத்தியதர வர்க்க மக்களினது கதைகளையும் சென்னையில் விளிம்பு நிலையில் வாழும் மக்களதும் வாழ்வை சித்திரித்த கதைகளையும் எழுதிவந்த ஜெயகாந்தன், ஆனந்தவிகடனில் மாதாந்தம் முத்திரைக்கதைகள் மகுடத்தில் 500 ரூபா சன்மானத்துடன் எழுதத்தொடங்கியதும், பாரிசுக்குப்போ முதலான மேல்வர்க்க மக்களின் கதைகளை எழுதத் தொடங்கிவிட்டார் என்றும், கம்யூனிஸ்ட் கட்சியின் பாசறையில் வளர்ந்த ஜெயகாந்தன், திடீரென, “ தான் எந்தக்கட்சிக்கும் தாலி கட்டிக்கொள்ளவில்லை “ என்று அதிரடியாக பிரகடனப்படுத்தியதும்தான் ஜீவாவுக்கு வந்திருந்த தார்மீகக் கோபம்.
எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 31 அமைச்சருக்கு இரண்டு மனைவி:- ஒன்று தமிழ் ! தருமுசிவராமைத் தேடி வந்த இரத்த உறவு ! ! முருகபூபதி
வீரகேசரி வாரவெளியீட்டில் முதலில் இலக்கியச்செய்திகள் என்ற பத்தி எழுத்தினை எழுதுமாறு ஊக்கமளித்த அதன் பொறுப்பாசிரியர் பொன். இராஜகோபால், எனக்கு ரஸஞானி என்ற புனைபெயரைச்சூட்டியபோது, ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்த சில நண்பர்கள் அதனைக்கேட்டு சிரித்தார்கள்.
அதென்ன ரஸஞானி…? சொதிஞானியும் இருக்கிறாரா..? என்று கேலிசெய்தார்கள் !
மல்லிகையில் கதை, கட்டுரை எழுதிக்கொண்டிருந்தபோது அதற்கு எதிர்வினைகள் வரவில்லை. வெகுஜன ஊடகத்தில் எழுதத்தொடங்கினால், வரும் எதிர்வினைகளையும் எதிர்நோக்கவேண்டும். அதனால்தான் உமக்கு அந்தப்புனைபெயரை சூட்டினேன் என்று இராஜகோபால்
சொன்னார்.
அவர் இலக்கிய மேடைகளுக்கெல்லாம் செல்லமாட்டார். பத்திரிகை ஆசிரியர்கள், திரைப்பட இயக்குநர்களைப்போன்று மறைந்திருக்கவேண்டும் என்பார். அக்காலத்தில் வெளியான தமிழ்த்திரைப்படங்களில் இயக்குநர்கள் ஏ. பிம்சிங், கே. எஸ். கோபாலகிருஷ்ணன், ஶ்ரீதர், கே. விஜயன், கே. மாதவன், எஸ். பி. முத்துராமன் முதலானோரை திரையில் பார்க்கமுடியாது. அவர்களின் பெயர்தான், எழுத்து ஓடும்போது இறுதியில் காண்பிக்கப்படும்.
இராஜகோபால், தனது படத்தையும் எவருக்கும் கொடுக்கமாட்டார். எழுத்தாள நண்பன் காவலூர் ஜெகநாதன், அடிக்கடி தமிழகம் சென்றுவருவார். அவர் ஊடாக பல தமிழக இலக்கிய புதினங்களை பெற்றும் எனது பத்தியில் எழுதினேன். சில மாதங்களில் இலக்கியச்செய்திகள், இலக்கிய பலகணி என பெயர்மாற்றம் பெற்றது.
தினகரன் வாரமஞ்சரியில் நண்பர் எஸ். திருச்செல்வம் அறுவடை என்ற பத்தி எழுத்தையும், சிந்தாமணியில் அதன் ஆசிரியர் எஸ். டி. சிவநாயகம் இலக்கிய மேடை என்ற பத்தி எழுத்தையும் அதே காலப்பகுதியில் எழுதினர்.
ஈழத்து இலக்கிய வாசகர்கள் வார இறுதியில் இந்த மூன்று பத்திரிகைகளையும் கையில் எடுத்தால், முதலில் இந்தப்பத்திகளை படிக்கும் ஆர்வம் மிக்கவர்களாக விளங்கினார்கள்.
எனது இலக்கியப்பலகணியில், மூத்த – இளம்தலைமுறை இலக்கியவாதிகளையும் கலைஞர்களைப் பற்றியும் எழுதினேன். நூல்களின் இலக்கிய இதழ்களின் அறிமுகம், இலக்கிய கூட்டங்களின் செய்திகள், பிரதேசவாரியாக நடக்கும் இலக்கியப்போட்டிகள் முதலான பல தகவல்களை அந்தப்பத்தியில் தொடர்ந்து தொகுத்து எழுதினேன்.
ஸ்வீட் சிக்ஸ்டி 5- தாய் சொல்லை தட்டாதே - ச சுந்தரதாஸ்
.
புரட்சி நடிகர் எம் ஜி ஆர் இன் நடிப்பில் தொடர்ந்து 16 படங்களை தயாரித்து வெளியிட்டவர் சாண்டோ சின்னப்ப தேவர். சரித்திர படங்களில் மட்டுமன்றி சமூகப் படங்களிலும் எம் ஜி ஆரால் நடிக்க முடியும் என்பதை உறுதி செய்யும் வகையில் இவரது படங்கள் அமைந்தன. அந்த வகையில் தேவர் பிலிம்ஸ் தயாரித்த இரண்டாவது படம்தான் தாய் சொல்லை தட்டாதே.
இதற்கு முன் அவர் தயாரித்த தாய்க்குப்பின் தாரம் படம் வெற்றி கண்ட போதும் அவருக்கும் எம்ஜிஆருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருந்தார்கள். தனது புதிய தயாரிப்பில் ஜெமினி கணேசனை ஒப்பந்தம் செய்து படத்திற்காக சில பாடல்களையும் ஒலிப்பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் தேவரைப் போன்ற நல்லதொரு தயாரிப்பாளரை ஒதுக்குவது தனது தொழிலுக்கு நல்லது அல்ல என்பதை உணர்ந்த எம்ஜிஆர் அவரை நேரில் சந்தித்து தனது நட்பை புதுப்பித்துக் கொண்டார். எம்ஜிஆர் பொன் முட்டையிடும் வாத்து என்பதை உணர்ந்திருந்த தேவரும் அவருடன் மீண்டும் இணைந்து கொண்டார் அதன் விளைவு படத்திலிருந்து ஜெமினி அகற்றப்பட்டு எம்ஜிஆர் ஒப்பந்தமானார்.
கதாநாயகியாக சரோஜாதேவி இணைந்துகொண்டார் . இளமையாகவும் அழகாகவும் தோன்றி ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டார் அவர். பிரபல வசனகர்த்தாவான ஆரூர்தாஸ் இப்படத்திற்கு தான் முதன்முறையாக எம்ஜிஆருக்கு வசனம் எழுதினார். இதில் இவர் எழுதிய வசனங்கள் எம்ஜிஆரை கவரவே பின்னர் மேலும் பல படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பை எம்ஜிஆர் அவருக்கு வழங்கினார். படத்தில் அவர் எழுதிய விதவையின் முகத்தில் விழிப்பதை பலர் சகுன தடையாக நினைப்பார்கள் ஆனால் நான் தினமும் என் அம்மாவின் முகத்தில் விழிப்பது தான் வெற்றிக்கு மேல் வெற்றி அடைந்து வருகின்றேன் என்ற வசனம் எம்ஜிஆரை மட்டுமன்றி எல்லோரையும் கவர்ந்து இருந்தது.
ஒரு தாய்க்கு இரண்டு மகன்கள் மூத்தவன் கொள்ளைக்காரன் இளையவன் பொலிஸ் அதிகாரி இருவரும் ஒருத்தியையே காதலிக்கிறார்கள். ஆனால் அவளின் தந்தையோ பகலில் பாங்கராகவும் இரவில் கொள்ளைக்காரனாகவும் நடமாடுகின்றான். தாயோ இருதலை கொள்ளியாக தவிக்கிறாள் .
இப்படி அமைந்த கதையில் தாயாக கண்ணாம்பா நடித்திருந்தார். கண்டிப்பு உருக்கம், வேதனை என்று எல்லாவற்றையும் தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் அவர். அவரின் மூத்த மகனாக அசோகன் நடித்தார் . இப்படத்தில் அவரின் நடிப்பிற்கு கிடைத்த வெற்றி, தொடர்ந்து எம்ஜிஆர் படங்களில் நடிக்க வழிவகுத்தது.
படத்தில் வில்லனாகவும் கதாநாயகியின் தந்தையாகவும் நடித்த எம் ஆர் ராதா தோன்றும் அனைத்து காட்சிகளிலும் முத்திரை பதிக்கத் தவறவில்லை. அவர் பேசும் வசனங்கள் கட்டை குரலில் பேசுவது எல்லாம் ரசிகர்களின் கரகோஷத்தை பெற்றுக்கொடுத்தது.
கண்ணதாசனின் ஏழு பாடல்களையும் சௌந்தரராஜன் சுசீலா பாடி இருந்தார்கள். போயும் போயும் மனிதனுக்கு, சிரித்து சிரித்து என்னை, பூ உறங்குது பொழுதும் உறங்குது, காட்டுக்குள்ளே திருவிழா ஆகிய பாடல்கள் கேவி மகாதேவனின் இசையில் அரை நூற்றாண்டைக் கடந்தும் ஒலிக்கின்றது. குலதெய்வம் ராஜகோபால் ஜெமினி, தேவர் ஆகியோரும் நடித்திருந்தனர். தம்பி திருமுகம் படத்தை இயக்கியிருந்தார்
குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட தாய் சொல்லை தட்டாதே நூறு நாட்கள் ஓடி எம்ஜிஆர் தேவர் நட்பிற்கு காரணமாகவும் அமைந்தது அதுமட்டுமின்றி இதில் இடம்பெற்ற எம்ஜிஆர் சரோஜாதேவி ஜோடிக்கு ரசிகர்கள் இடையே ஏற்பட்ட வரவேற்பு அவர்களை மேலும் பல படங்களில் நடிக்க வழிசெய்தது .
மூத்தோர் கடன் - முன்மாதிரியாக நடத்தல்!
…………………..பல் மருத்துவ கலாநிதி பாரதி இளமுருகளார்.
எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் சிந்தைதனில் மலர்கிறது! இமைமூடும் கணத்திலே இதமாகச் செந்நாவிலே பழுக்கிறது! கண்விழிக்கச் செவிப்புலத்தே தேனாகக் கனிகிறது! நொடிப்பொழுதிலே அளப்பிலா இன்பம் அளித்து மெய்சிலிர்க்க வைக்கிறது! அத்துணைச் சிறப்புமிக்கது எமது தமிழ் அல்லவா?. தோற்றிய காலத்தைக் கணக்கிட எவராலும் முடியவில்லை! தமிழன்னை சூடிய அணிகளைச் சொல்லிட வார்த்தைகள் தோன்றவில்லை! ‘முச்சங்கத (து) அரியணை ஏறி மன்னர் முடிதொட்ட மூவரும் அடிதொட்டுப் போற்றிய தமிழ்’என்று பெருமிதம் கொண்டதொடு சிந்தையிற் தேனமுதூறி – நாவில் தித்தித்துத் தித்தித்துச் செவிவழி ஏறி வந்து கனிந்(து இருள் கீறி – எம்மை வாழ்விக்கும் மொழி ……’ தமிழ் என்று போற்றி மகிழ்ந்தவர் “தங்கத் தாத்தா”. “பழைமைப் புலமைசான்ற தொல்காப்பியம் தமிழன்னை வீற்றிருக்கும் சிங்காசனம்! சிவம் வளர்க்கும் திருத்தொண்டர் புராணம் திருமுடி! வளமான வாழ்விற்குத் தளம் அமைக்கும் திருக்குறள் நீதி நிலைநாட்டும் செங்கோல்! குண்டலகேசி அவளின் பொற்றோடு! மெய்ப்பொருள்; விளக்கும் சிவஞானபோதம் நெற்றித்திலகம்! பத்திச்சுவை ததும்பும் நாயன்மார்களின் திருமுறைகள் பொன் ஆரங்கள்! சிந்தாமணியும் சூளாமணியும் தங்கப் பதக்கங்கள்! வளையாபதி கை வளையல்! இராமாயணம் கணையாழி! மணிமேகலை இடையணி மேகலை! சிலப்பதிகாரம் பாதச்சிலம்பு! நாலடியார் வண்ண மிதியடி! ஐந்திலக்கணங்களை விளக்கும் ஒப்பரிய நூல்கள் வித்தாரமணிகள்! இப்படி எத்தனையோ அணிகளால் அலங்கரிக்கப்படடவள் எம்தமிழன்னை” என்று விதந்துரைக்கிறார் தங்கத் தாத்தாவின் ‘நாமகள் புகழ்மாலை” என்றும் நூலிற்கு உரை எழுதிய பண்டிதைமணி பரமேசுவரி இளமுருகனார் அம்மையார். இவ்வண்ணம் பல்வேறு சிறப்புகளுடன் பொலிவுற்று இலங்கிய எமது செம்மைத் தமிழ் படிப்படியாக அணியிழந்து - பொலிவிழந்து செந்தமிழ் வளங்;குன்றி - சிற்றிலக்கியக் கதாநாயகர்களின் புதுமையிலக்கியம் என்ற பெயரில் பல மொழிக் கலப்புடன் கொடுந்தமிழ் வழக்கிற் சிக்குண்டு - புனிதத்தன்மை கெட்டு நிற்கும் பரிதாப நிலைமையைக் கண்ணுற்றுச் “செந்தமிழ் மக்களே வாரீர் - எங்கள் தெய்வத் தமிழ்மொழிச் சீரினைத் தேரீர் அந்தமில் எம்;மொழி மாதா – படும் அல்லலைத் தீர்க்க அறிவு வராதா?” என்று சென்ற நூற்றாண்டிலேயே மனங் குமுறினார் தீர்க்கதரிசியான “தங்கத்தாத்தா”.
பிறவி மேதைகள் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்
.
உலகில் பிறப்பவர்களில் ஒரு சிலரே அதீத திறமையைப் பிறப்பிலேயே பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதிலும் சிறு பிராயத்திலேயே உலகம் வியக்கக் கூடிய அதிதிறமையைக் காட்டும் மேதைகளும் அப்பப்போ பிறந்து உலகை வியக்க வைக்கிறார்கள். இவர்களையே நாம் குழந்தை மேதைகள் என்கிறோம். இவர்களை ஆங்கிலத்திலே Child Prodigy என்பார்கள்.
இத்தகைய மேதைகள் தாம் சிறந்து விளங்கும் துறைகளிலே கற்றுக் கொண்டு மேதைகள் ஆனவர்கள் அல்ல. அது அவர்களுக்குப் பிறவிக் கொடையாகக் கிடைத்தது. இவர்கள் தமது துறையில் மேதமைத் தன்மையோடு திகழ்ந்த போதும் சாதாரண வாழ்க்கையிலே பிடிவாதங்களும் கிறுக்குத்தனங்களும் உடையவர்களாக இருந்ததையும் காண முடிகிறது.
மகாலிங்கம் எனப்படும் மாலி புல்லாங்குழல் வாசிக்க யாரிடமும் கற்றுக் கொள்ளவில்லை. மாலி எட்டு வயதிலேயே தன் புல்லாங்குழல் வாத்திய வாசிப்பில் அபார திறமையைக் காட்டியவர். தன் வாசிப்பால் பல்லாயிரம் ரசிகர்களை மயக்கியவர். இவர் சிறு பையனாக இக் குழலிசையை வாசிக்கும் போது தன் குழல் இசையால் உலகை மயக்கிய கிருஷ்ன பரமாத்மாவே மறு பிறப்பெடுத்து வந்துள்ளார் என அவர் ரசிகர்கள் கூறுவார்களாம்.
ஒரு சமயம் அந்த வேணுகோபாலனின் புல்லாங்குழல் இசை தரும் அந்தச் சிறுவனைக் காண நிகழ்ச்சி நடந்த மண்டப வாயிலில் பெரிய கூட்டமாம். மண்டபத்துக்குள் யாரும் நுழைய முடியவில்லை. எட்டு வயதான வித்துவான் மாலி கூட்டத்தில் ஒருவராக நின்று கொண்டு மண்டபத்துக்குள் நுழைய முடியாது திகைத்தாராம். மாலிக்கு மிருதங்கம் வாசிக்க வந்த கலைஞர் நல்ல வாட்டசாட்டமான பேர்வழி. மாலியை இடுப்பிலே தூக்கி வைத்துக் கொண்டு மண்டபத்தை அடைந்து விட்டாராம். அப்புறம் என்ன பிறவி மேதை புல்லாங்குழல் இசையால் மக்களை மயக்கினார்.
இவர் எப்படி கற்றுக் கொள்லாமலே கலைஞரானாரோ அதே போன்று Geometry Problems ஐத் தீர்ப்பது அவருடய விருப்பமான பொழுது போக்காக இருந்ததாம் என்பதும் ஒரு சுவாரிசமான விஷயம். சிலர் Cross words, Puzzles களில் நாட்டமுடையவர்களாக இருப்பது மாதிரி இவர் சிக்கலான கணக்குகளுக்கான விடைகளைக் கண்டுபிடிப்பதில் மிக ஆர்வமுடன் இருந்தார் என்பர். இதன் காரணமாக Geometry - கேத்திரகணித ஒற்றைகளை இவர் கையில் எப்போதும் காணலாமாம். எத்தகைய கூட்டமானாலும் சில சமயம் அந்த கணித கணக்குப் பிரச்சினைகளுடன் மாலி ஒன்றி மெளனமாகி விடுவாராம். ஒரு வேளை இசையுலகில் இம்மேதை நுழைந்திருக்கா விட்டால் கணித மேதை ஆகி இருப்பாரோ யார் கண்டார்!?
இது மாலி பெரியவரான பின் நடந்த கதை. சபாவில் மாலியின் கச்சேரியை ஒழுங்கு செய்து டிக்கட்டுகளும் விற்றாகி விட்டது. மாலியின் வாசிப்பைக் கேட்க மண்டபம் நிறைந்த கூட்டம். மாலி தன்னால் வாசிக்க முடியாது; தன் ஷீஷ்யனே அன்றய தினம் வாசிப்பார் எனச் சபா மண்டபத்திற்கு ஷீஷ்யனை அனுப்பி விட்டு அருகில் உள்ள உணவகத்தில் போண்டாவை இரசித்துக் கொண்டிருந்தாராம்.
" வளர் காதல் இன்பம் " குறு நாவல் - வாசகனின் பார்வை !
அவுஸ்திரேலியாவில் சிறுகதை, குறுநாவலில், முத்திரை பதித்தவர்தான்
பொறியியல் பட்டதாரியான கே.எஸ். சுதாகர் அவர்கள். ஒருவரியை எழுதினாலும் ஓராயிரம் வரிகளை எழுதினாலும் வாசிப்பவர் மனதில் பதியும் வண்ணம் எழுதுகின்ற எழுத்து ஆழுமை மிக்கவர்தான் சுதாகர் அவர்கள். அவர்களின் கைவண்ணத்தில் " வளர் காதல் இன்பம் " என்னும் குறு நாவல் நூலுருப்பெற்று தற்போது சென்னையில் இடம் பெறும் புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது.ஈழத்தவர் , குறிப்பாக பொறியியலாளராக இருக்கின்றவர் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் தமிழையும், எழுதுவதையும் , விடா
மல் தொடருகிறார் என்னும் பொழுது அவரைக் கட்டாயம் பாராட்டி வாழ்த்தியே ஆகவேண்டும். " வளர் காதல் இன்பம் " குறு நாவல் முழுக்க முழுக்க அவுஸ்திரேலிய நாட்டில் நடைபெறும் கதையாய் வளர்கிறது.கதையின் கருவில் கற்பனை என்பதைவிட - சுதாகர் அவர்களின் நட்பு வட்டாரத்தில் நடந்த சம்பவம் போலும் ஒரு தோற்றமே தென்படுகிறது எனலாம்.இந்தக் குறுநாவலை குறுநாவல் என்று பெயர் சூட்டி இருந்தாலும் இது வளரும் நிலையினைப் பார்க்கும் பொழுது ஒரு முழுநாவலின் வடிவமாய் தெரிகிறது என்றும் எண்ண வைக்கிறது.
சிட்னி துர்க்கை அம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரியும் (11/03/2021) Rudra Abhishekam யும் 14/03/2021
மஹா சிவராத்திரி வியாழன், 11 மார்ச் 2021
ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயத்தில், “மகா சிவராத்திரி” 8 வது நாள் “சிவ மஹோத்ஸவம்” கொண்டாட்டங்களுடன் ஒத்துப்போகிறது.
கவிதையும் திரைப்படப் பாடல்களும் அன்றும் இன்றும் தில்லானா… தில்லானா… கொரோனாவாகியது எங்கனம்…? நூடில்ஸின் வாழ்வுதனை சூது கவ்வும் இடியப்பம் ஓர் நாள் வெல்லும் “ அம்மி கொத்துவதற்கு பொற்கொல்லர் அவசியமில்லை. “ முருகபூபதி
நான் ஒரு புலவனோ, கவிஞனோ அல்ல என்பதை முதலில் சொல்லிவிட்டே இந்த பதிவுக்குள் வருகின்றேன்!
செய்யுள்களை ரசிப்பதற்கு புலவனாகவோ, கவிதைகளைப் பற்றிப் பேசுவதற்கு கவிஞனாகவோ நாம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை!
கவிதையை நயத்தல் உணர்வுபூர்வமான அறிவுபூர்வமான விடயம். ஒரு காலத்தில் இலக்கியம் கவிதை வடிவிலும் காவிய முறைமையிலும் தோன்றியது.
கால மாற்றங்கள் மரபுக்கவிதையிலிருந்து வசன கவிதைக்கு
வந்து, பின்னர் புதுக்கவிதை வடிவம் பெற்று, தற்காலத்தில் கவிதை என்ற ஒற்றைப்பரிமாண வடிவத்தில் அழைக்கப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டு முதல் வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ்த்திரைப்படங்களில் எவ்வாறு கவிதை செல்வாக்கு செலுத்தியது என்பதையும் நாம் பார்க்கமுடியும்.
1944 ஆம் ஆண்டில் வெளிவந்த தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் படத்தில் இடம்பெற்ற பாடல்களை எழுதிய பாபநாசம் சிவன் அவர்களும் கவிஞர்தான். இவருக்கு முந்திய மகாகவி பாரதியார் வாழ்ந்த காலத்தில்,
தமிழ்த்திரைப்படங்கள் இல்லை. ஆனால், பாரதியின் கவிதைகள் பல திரையிசைப்பாடல்களாகிவிட்டன.
பாரதி சிறந்த சந்தக்கவிஞர். அவரது கவிதை வரிகளில் ஓசை நயமும் பொருள் பொதிந்த எளிமையான சொற்களும் இழையோடும். சாதாரண மக்களும் புரிந்துகொள்ளத்தக்க கருத்துக்கள் செறிந்திருக்கும்.
அதனால் ரசிகர்கள் அவரது கவிதைகள் திரைப்பட பாடல்களாக மாறியவேளையில் அவற்றில் லயித்து நெருங்கிவிட்டார்கள்.
இசையமைப்பாளர்கள் பலர் அவரது ஒரே பாடலுக்கு வெவ்வேறு இசைக்கோர்வைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இலங்கைச் செய்திகள்
கொவிட்-19 உடல்களை அடக்க இரணைதீவில் இடம்
இரணைதீவில் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய விசா சேவை மையம் மீள திறப்பு
கொரோனா சடலங்கள் அடக்கம் செய்ய இரணைதீவு பொருத்தமான இடமல்ல
கொரோனா சடலங்கள் அடக்கம்; தற்காலிக ஏற்பாடே இரணைதீவு
இலண்டன் போராட்டத்துக்கு ஆதரவு?; கலையரசன் எம்.பி. உள்ளிட்ட 09 பேருக்கு நீதிமன்ற தடையுத்தரவு
மூவின நல்லிணக்கத்தினை வலியுறுத்தும் பேரணி யாழ். வந்தடைவு
கொவிட்-19: இன்று 7 ஜனாஸாக்கள் நல்லடக்கம்
கொவிட்-19 உடல்களை அடக்க இரணைதீவில் இடம்
கொவிட்-19 காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதற்காக, கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட, இரணைதீவை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இன்று (02) கொழும்பிலுள்ள, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உலகச் செய்திகள்
2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் திட்டம்
ஜனநாயக ஆர்வலர்கள் மீது பொலிஸ் குற்றச்சாட்டு பதிவு
மியன்மார் அரசியல் பதற்றம்: ஆசியான் முயற்சி ஸ்தம்பிதம்
நவெல்னி கொலை முயற்சி: ரஷ்ய அதிகாரிகள் மீது அமெரிக்கா புதிய தடை
ஜப்பான் செல்வந்தர் மெசாவா நிலவு பயணத்திற்கு அழைப்பு
ஹொங்கொங் தேர்தல் முறையில் மாற்றம் செய்ய சீனா நடவடிக்கை
இம்ரான் கானுக்கு நெருக்கடி
2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் திட்டம்