அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
கதிரவன் எழுந்தனன் !
திரையிசை தந்த பாரதி பாட்டு - கானா பிரபா
அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி - கானா பிரபா
சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய நாட்களில் சுடச் சுட வாங்கி ஒரு தடவை அந்தப் புத்தக வாசனையை நாசியில் ஏற்ற வாசித்து மகிழ்ந்த “கோகுலம்” சிறுவர் இதழ் கொடுத்த அதே பரவச உலகத்துக்குப் பின் சென்று வாழ்ந்து விட்டு வந்தேன். அப்படியொரு பெருமிதத்தைக் கொணர்ந்தது ஈழத்தில் இருந்து இப்போது துளிர்த்திருக்கும் “அறிந்திரன்” சிறுவர் சஞ்சிகையின் வரவு.
இலங்கை தமிழ் இதழியலில் பேராசிரியர் கைலாசபதியின் வகிபாகம் -- அங்கம் -01
இலங்கை சேனையூர் அனாமிகா களரி பண்பாட்டு மையம், தமிழ்நாடு திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை , சென்னை டிஸ்கவரி புக்பெலஸ் ஆகியன இணைந்து டிசம்பர் 06 முதல் நடத்திய தொடர் காணொளி அரங்கு !
08-12 -2020 அரங்கில் முருகபூபதி சமர்ப்பித்த உரை
பேராசிரியர் க. கைலாசபதி இலக்கியத் துறை, இதழியல் துறை
மற்றும் கல்வித் துறையில் ஆற்றிய பங்கு அளப்பரியது. கைலாசபதி அவர்கள் மறைந்து முப்பத்தி எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது வாழ்வையும் பணிகளைப் பற்றியும் தொடர்ச்சியாக உலகில் எங்காவது ஒரு திசையிலிருந்து யாராவது ஒருவர் அல்லது ஏதேனும் ஒரு அமைப்பு பல தளங்களில் ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடுகின்றன. கருத்தரங்குகள் நடத்துகின்றன.
அந்த ரீதியில் எமது நண்பர் பேராசிரியர் பாலசுகுமார் கைலாஸ் அவர்களுக்காக அவரது நினைக்காலத்தில் இந்த
தொடர்கருத்தரங்கை ஒருங்கிணைத்துள்ளார்.
இதிலும் பாருங்கள்…. கைலாஸின் ஆத்மாதான் இதனையும் ஆக்கபூர்வமான வடிவத்தில் ஒழுங்கமைக்க தூண்டியிருக்கிறது என்ற நம்பிக்கையுடன் நானும் இதில் கலந்துகொள்கின்றேன்.
கைலாஸ் சிறந்த கல்விமான், இலக்கிய சமூக அரசியல் ஆய்வாளர். இலக்கிய திறனாய்விலும் ஒப்பியல் இலக்கிய விமர்சனத்துறையிலும் சிறந்த ஆளுமை என்பதில் எமக்கிடையே கருத்து பேதம் இருக்காது. அந்த பண்புகளுக்கெல்லாம் அப்பால், அவர் மிகச்சிறந்த நிருவாகி.
அவரிடமிருந்த குறிப்பிட்ட நிருவாகப்பண்பு, தனக்குப்பின்னரும் வரும் தலைமுறையிடத்தில் கடத்துகின்ற, அல்லது பாய்ச்சுகின்ற இயல்பு இருக்கிறது பாருங்கள், அதுதான் நாம் அவரிடம் கற்றுக்கொண்ட முன்மாதிரி.
அவரைக்கொண்டுபோய் எங்கோ ஒரு முன்பின் தெரியாத தேசத்தில் விட்டிருந்தாலும், அவர் தனது நிருவாகப்பண்பினை வெளிப்படுத்திக்கொண்டே இருந்திருப்பார். அவரது அந்தப்பண்பில் தன்முனைப்பு இருக்காது, மற்றவர்களை இனம்கண்டு, உற்சாகப்படுத்தும், ஊக்குவிக்கும், ஆலோசனை சொல்லும் இயல்புகளே மேலோங்கியிருக்கும்.
இந்தப்பின்னணிகளிலிருந்துதான் இலங்கை தமிழ் இதழியல் துறையில் கைலாசபதியின் வகிபாகத்தை பற்றி இந்த அரங்கில் பேசுவதற்கு முன்வந்துள்ளேன்.
'கோடிபெறுந் தாயன்பை நினைக்கச்செய் ததம்மா!'
............... பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்
பிறந்தநாளைக் கொண்டாடப்; பூக்கடையில் 'மாலை'
புதுப்பூவிற் கட்டித்தரச் சொல்லிவிட்டுக் கீழே
இறங்குகையில் படிக்கருகோர் சிறுமிதனைக் கண்டேன்
ஏங்கும்விழி எனையீர்க்க 'என்னம்மா' என்றேன்!
'உறங்கிடுமென் தாய்க்கொருபூ வாங்கப்பணம் இல்லை
ஒருவேளை என்பசியைப் பார்த்தறியாத் தெய்வம்!
மறந்துமொரு குறைவைக்கா தன்பினொடு வாழ்ந்த
மகராசிக்(கு) என்னாலே ஏதுபயன்' என்றாள்,
விழிசிந்தும் நீரோட அவள்விம்மி விம்மி
வேதனையோ டெனைப்பார்த்தாள்! விழிகசிய நின்றேன்!!
தளிர்மேனி நடுங்குவதைக் கண்டஞ்சி நானோர்
தாமரைப்பூக் கொத்தொன்றை வாங்கிக்கை யளித்துக்
'குளிர்வேளை நீபோகும் இடமெங்கே' எனவும்
'கூறிடுவேன் வழிகாட்டச் சேர்த்திடுவீர்' என்றாள்!
தெளிவாகப் பலகாத தூரத்திற் கப்பால்
திகைத்திட்டேன்! மயானமொன்றிற் கழைத்தென்னைச் சேர்த்தாள்.
அருண். விஜயராணி நினைவாக
.
நினைவு நாள் 13 டிசம்பர் (2015)
அவரின் நினைவு நாளை ஒட்டி 2016 Feb 21 அன்று தமிழ்முரசு அவுஸ்திரேலியாவில் வெளிவந்த கட்டுரையை மீள் பதிவு செய்கிறோம்
நினைவுகளின் நீட்சியில் அருண். விஜயராணி - தெய்வீகன் - ஆஸ்திரேலியா
போராளிகளுக்கு ஒரு சமர்ப்பணம் ! ( அங்கம் -02 ) ஒருவரலாற்றுக் கண்ணோட்டம் ! உத்தம்சிங்கும் உரும்பராய் சிவகுமாரனும் எடுத்த சபதம் !! சட்டத்தரணி செ. ரவீந்திரன்
ஜாலியன் வாலாபாக்கில் இந்தச் சம்பவங்கள் நடந்த போது உத்தம்சிங் என்ற இருபது வயது வாலிபனும் அங்கு நின்று காயப்பட்டிருந்தான். அவன் ஒரு சபதம் பூண்டான். அவன் படித்தவனல்லன். வெகுசீக்கிரம் தொழிலாளியாக வேலை பார்ப்பதற்கு ஆபிரிக்க நாட்டிற்கு சென்றான்.
அங்கிருந்து அமெரிக்காவை அடைந்தான். அங்கு அவனது சபதம் கனல்விட்டு எரிந்தது. அமெரிக்காவிலிருந்தும் நாட்டின் விடுதலை போராட்ட சக்திகளோடு முக்கியமாக லாலா லாஜ்பட் ராய், பகவத்சிங் போன்றோருடன் தொடர்பில் இருந்தான்.
அமெரிக்காவிலிருந்து 1927இல் இந்தியா வந்தபொழுது அனுமதிக்கப்படாத அரசியல் பிரச்சார ஆவணங்களும் சில துப்பாக்கிகளும் அவன் வசம் இருந்தமையால் கைதாகி , நான்கு
வருடங்கள் சிறை வாசம் அனுபவித்து வெளியே வந்தான்.
ஆனால், பிரிட்டிஷ் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்ட அடக்கு முறைகளினால் திரும்பவும் வெளியேறி பல ஐரோப்பிய நாடுகளூடாக இங்கிலாந்தை வந்தடைந்தான்.
அனார் கவிதைகள்- ஒரு சுருக்கமான அறிமுகம் பேராசிரியர் எம். ஏ. நுஃமான்
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் அனார் கவிதைகள் பற்றிய கலந்துரையாடலைத் தொடக்கிவைக்கும் முகமாக அனாரை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு சிறு குறிப்பை அனுப்பிவைக்குமாறு நண்பர் நடேசன் என்னைக் கேட்டுக்கொண்டார். அனாருக்கு புதிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை எனினும், கருத்தரங்கச் சம்பிரதாயத்துக்காக நான் இந்தச் சிறிய அறிமுகக் குறிப்பை உங்கள் முன்வைக்கின்றேன்.
புதிய நோக்கில் பாரதி இன்று (டிச.11) பாரதி பிறந்த நாள் - முனைவர் இளசை சுந்தரம்
எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 19 அரசியல் கைதிகள்: அன்றும் இன்றும் ! இலக்கிய – பத்திரிகை எழுத்து, அரசியல் எழுத்தை நோக்கி நகர்ந்த கதை !! முருகபூபதி
டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி முக்கியமான தினம். இன்றுதான் சர்வதே மனித உரிமைகள் தினம்.
அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம், ஆண்கள் தினம், அகதிகள் தினம், காதலர் தினம் என்று ஏதாவது ஒன்று வருடம் ஒருமுறை வந்துவிட்டு, கடந்துசென்றுவிடும்.
அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் வந்தால், அதற்காக பரிசுப்பொருட்கள் வாங்குவதற்கு ஆர்வம் காண்பிப்பார்கள். பரஸ்பரம் வாழ்த்துக்களை கூறுவார்கள். மலர்கள், மலர்க்கொத்துக்கள் விற்பனையாகும் கடைகளில் ஆட்கள் வந்து செல்வார்கள்.
ஊடகங்களும் இதுபற்றி ஓரிரு பக்கங்களில் கட்டுரைகளை வெளியிட்டு, தனது ஊடகதர்மத்தை நிலைநாட்டிவிடும்.
காதலர்கள் கவிஞர்களாயின் காதலர் தின கவிதை எழுதுவார்கள்.
அன்னை, தந்தை பாசம் மிக்க கவிஞர்களும் ஏதாவது கிறுக்குவார்கள்.
குறிப்பிட்ட இந்தத் தினங்கள் பற்றிய அடிப்படை அறிவோ பிரக்ஞையோ எனக்கில்லாதிருந்த ஒரு காலத்தில் இலங்கையில் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதியன்று வெளியிடவேண்டிய மனித உரிமைகள் தொடர்பான பிரசுரத்தை நான் எழுதநேர்ந்தது.
அந்தப்பிரசுரம் அவ்வேளையில் சிறைகளில் அடைபட்டுக்கிடந்த அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் எனக்கோரும் பிரசுரம்.
எமது இலங்கையில் காலம் காலமாக அரசியல் கைதிகள் சிறைகளில் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள்.
அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 44 – டங்கா – சரவண பிரபு ராமமூர்த்தி டங்கா – தோற்கருவி
இரும்பு அல்லது மரத்தாலான உடல்பகுதி கொண்டது டங்கா. முரசின் அமைப்பில் இருக்கும். முகங்கள் தோலால் மூடி
இருக்கும். குச்சிக்கொண்டு முழக்கப்படும். இதை டமாரம் என்றும் சிலர் அழைக்கிறார்கள்(டமாரம் என்று வேறு ஒரு இருமுக தோலிசைக்கருவியும் உண்டு). இரு கருவிகள் சேர்ந்தது இந்த டங்கா. டங்கி என்றும் சில இடங்களில் பெயர் வழங்குகிறது. போர், அரச ஊர்வலங்களில் இந்த கருவிகள் முக்கிய இடத்தைப் பிடித்து இருந்தன. அரசர்களின் காலத்திற்குப் பிறகு இக்கருவிகள் பெரும்பாலும் கோவில் விழாக்களில் தான் பயன்பாட்டில் உள்ளது. சென்ற நூற்றாண்டில் காஞ்சி பெரிய சங்கராச்சார்யாரின் ஊர்வலங்களில் டங்காவும் அதைச் சுமந்து செல்லும் மாடுகளும் இருந்தன. பெரும்பாலும் இந்த இசைக்கருவி காளை மாடு, குதிரை மீது கட்டி இசைக்கும் வழக்கம் இருந்தது. கோவில் சிற்பத் தொகுதிகளில் நாம் இந்த சிற்பங்களை இன்றும் காணலாம். டங்கா பற்றிய குறிப்புகள் பிற்கால இலக்கியங்களில் உள்ளன.
மதுரை மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் விழா
நாட்களில் காளை மாடு மீது டங்கா வைத்து ஊர்வலமாக செல்வதை நாம் இன்றும் காணலாம். சென்ற மாதம் இந்த கோவிலின் டங்கா மாடு இறந்து விட்டது. சில ஆண்டு முன்பு வரை மதுரையில் டங்கா இசைக்கருவி யானையின் மீதும் வைத்து இசைக்கப்பட்டது. காஞ்சிபுரம் வரதராசர் மற்றும் காமாட்சியம்மன் கோவில்களிலும் டங்கா உள்ளது. காமாட்சியம்மனின் மாசி மக பெருவிழாவில் சென்ற ஆண்டு வரை குதிரை மீது வைத்து டங்கா ஊர்வலம் நடைபெற்றது. இந்த வருடம் நிறுத்திவிட்டார்கள். வரதாராசர் கோவிலில் குதிரை மீது வைத்து விழா நாட்களில் டங்கா இசைக்கும் வழக்கம் இப்பொழுதும் உள்ளது. பெரும்பாலும் பெயர் அளவில் தட்டப்படும் என்று சொல்லலாம்.
கொங்கு நாட்டிலும் பல இடங்களில் காளை மாடு மீது டங்கா வைத்து இசைக்கும் வழக்கம் உள்ளது. பழனி முருகனின் தைப்பூச காவடி பயணங்களில் நாம் கிராமப்புர மக்கள் காளை மாடு மீது டங்கா வைத்து இசைத்து வருவதை பாரம்பரியமாக்க கடைபிடிக்கிறார்கள். இவையன்றி இப்பகுதிகளில் காளை மாடுகளின் மீது வைத்து இசைக்கப்படும் சிறுமுரசு என்னும் இசைக்கருவியும் உண்டு.இதுவும் டங்காவை ஒத்து இருக்கும்.
இலங்கைச் செய்திகள்
பொலிஸ் சேவை ஆணைக் குழு உறுப்பினராக பரமேஸ்வரன் நியமனம்
ஜூன் மாதத்தின் பின் தரையிறங்கிய முதல் விமானம்
இலங்கையின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் திறப்பு
வடமராட்சியில் பொலிஸாரின் அட்டகாசம்- நபர் ஒருவரை துப்பாக்கி முனையில் வைத்து சுட்டுக்கொன்றுவிடுவேன் என மிரட்டல்!
கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வது தொடர்பில் சாதக சூழல்
முன்னாள் DIG வாஸ் குணவர்தனவுக்கும் கொரோனா தொற்று
விமான நிலையங்களை 26 முதல் திறக்க ஏற்பாடு
பொலிஸ் சேவை ஆணைக் குழு உறுப்பினராக பரமேஸ்வரன் நியமனம்
தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழு உறுப்பினராக கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபரும் சட்டத்தரணியுமான த.ப. பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி அவருக்கு இந்நியமனத்தை வழங்கியுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் யாப்பின் 41(ஏ) மற்றும் 155 (ஏ) (1) சட்டப்பிரிவுக்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் நயினாதீவை பிறப்பிடமாகவும் யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவராகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டமாணி பட்டத்தையும் அத்துடன் சட்டத்தரணியுமாவார்.
பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 26- எதிர்காலம் - சுந்தரதாஸ்
.
ஜெமினி, ஜெய்சங்கர் என்று இரண்டு கதாநாயகர்களைக் கொண்டு படம் உருவானது இவர்கள் இவருடன் பத்மினி, வாணிஸ்ரீ நாகேஷ் பாலையா பாலாஜி சுருளிராஜன் எஸ் என் லக்ஷ்மி ஆகியோரும் படத்தில் நடித்தனர். இவர்கள் எல்லோரும் இடம்பெற்ற படத்தில் ரசிகர்களை கவரும் வண்ணம் நடித்து ஸ்கோர் பண்ணியவர் பத்மினி தான்.
உலகச் செய்திகள்
இங்கிலாந்தில் ஐம்பது பில்லியன் பவுண்ட் பணத்தை காணவில்லை
சவூதி, இஸ்ரேல் பிரதிநிதிகள் பிராந்திய மாநாட்டில் முறுகல்
குறுங்கோளில் பாறை மாதிரியை பெற்ற ஜப்பான் விண்கலம் பூமிக்கு திரும்பியது
வெனிசுவேல பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மடுரோ கூட்டணிக்கு வெற்றி
பெண் ஊடகவியலாளர் ஆப்கானில் படுகொலை
ஜோ பைடன், ஹாரிஸ் ஆண்டின் சிறந்தவர்களாக ‘டைம்’ தேர்வு
மொரோக்கோ - இஸ்ரேல் இடையே இராஜதந்திர உறவுக்கு உடன்படிக்கை
இங்கிலாந்தில் ஐம்பது பில்லியன் பவுண்ட் பணத்தை காணவில்லை
வருமுன் காத்து சமூகத்தை பாதுகாப்போம் சமத்துவ கட்சி இளைஞர் அணியினரால் கொரோனா விழிப்புணர் செயற்றிட்டம்
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம்; தற்கொலை?
2018ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடரில், முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த, சின்னத்திரை நடிகை சித்ரா (VJ Chithra) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தொலைக் காட்சஇந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், பலரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை என்றே அவரை அழைத்து வந்தனர். இவருக்கென்று சமூக வலைதளத்தில் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.