அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
சிட்னியை மெல்ல விழுங்கும் காட்டுத்தீ
வேலை முடிந்து ரயிலில் ஏறி சன்னலோரமாக அமர்ந்து Darling Harbour பக்கம் பார்க்கிறேன். முப்பது பாகை வெப்பத்தில் தக தகக்கும் சூரியனின் முகமே மாறிச் செஞ்சிவப்பாக இருக்கிறது.
வானமெங்கும் பெரு மழை கொட்டுவதற்கான கரு மேகங்கள் போலக் கருக்கட்டிச் சூழ்ந்திருக்கின்றன போலியான புகை மண்டலங்கள்.
ரயிலில் இருந்து இறங்கிக் கார் தரிப்பிடம் நோக்கி நடக்கும் போது அருகிலேயே குப்பையை எரித்துப் பிரியும் துகள்களாய் பறந்து பறந்து கொட்டுகின்றன.
ஒரு துகள் வந்து கண்ணையும் பதம் பார்த்தது.
கண்ணைக் கசக்கிக் கொண்டே நடந்தால் காரின் முன் கண்ணாடியில் திட்டுத் திட்டாய் எரிந்த இலைகளின் துகள்கள் ஒட்டியிருக்கின்றன. கடந்த வாரமும் இது போல ஒரு காட்டுத் தீப் பரவலின் வழியே வந்த ஒரு துகள் என் கண்ணைப் பதம் பார்த்து அதன் உறுத்தல் நிற்கவே சில மணி நேரம் ஆயிற்று.
போன கிழமையை விட இந்தக் கருந்துகள்கள் இன்று கொஞ்சம் பருமனாக, தார் போல இருக்கின்றன.
மாவீரர் நாள் ; உறுதிப்படுத்தப்பட்ட உரிமை
02/12/2019 அழுத்தங்கள், கெடுபிடிகள் இருந்த போதும், வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகள், பெரும்பாலும் தடையின்றி நடந்தேறியிருக்கின்றன.

“லங்கா ராணி”யின் பயணி அருளர் என்ற ஆதர்சம் விடை பெற்றார்
அம்புலிமாமா காலத்தில் இருந்த என்னைப் புரட்டிப் போட்ட படைப்பு லங்கா ராணி.
துயர் தோய்ந்த ஈழ வரலாற்றுப் பக்கங்களில் “லங்கா ராணி” நாவல் இன்று வரை தனித்துவமாக நோக்கக் கூடியதொன்று.

ஒன்று செங்கை ஆழியானின் “தீம் தரிகிட தித்தோம்” என்ற நாவல், இன்னொன்று அருளரின் “லங்கா ராணி”. பின்னாளில் ஈரோஸ் இயக்கத்தினர் இந்த நூலைத் தாமே மறு பதிப்புச் செய்யுமளவுக்கு மதிப்பு மிக்க பெறுமதியான ஆவணம் இது.

நான் சந்திக்க வேண்டும், பேச வேண்டும் என்று நெடு நாள் கனவு கண்ட “லங்கா ராணி” எழுதிய அருளர் என்ற அருளர் தன் சொந்த மண்ணிலேயே விடை பெற்று விட்டார். லங்கா ராணி இறக்கிய இடத்திலேயே முற்றுப் புள்ளி வைத்து விட்டுப் போயிருக்கிறார்.
எம் ஆதர்ச எழுத்தாளர், போராளி அருளரின் பிரிவால் வாடும் மகள்கள் என் பேஸ்புக் நட்பு சகோதரி Kali Arulpragasam கலி அருள்பிரகாசம் மற்றும் நம் இனத்தின் விடுதலை வேண்டி உலக அரங்கில் குரல் கொடுக்கும் பாடகி மாயா அருள்பிரகாசத்துக்கும் அன்னாரின் பிரிவில் எமது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்கிறேன்.
லங்கா ராணியை ஈழத்து நூலகத்தில் படிக்க
இலங்கை தமிழர் விவகாரம் ; இந்திய ஆங்கில தேசிய பத்திரிகைகளின் ஆசிரிய தலையங்கங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளதென்ன ?
04/12/2019 இலங்கையின் வடக்கு–கிழக்கு பகுதிகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ கொண்டிருக்கும் மனப்பாங்கு இந்தியாவினால் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என்கின்ற அதேவேளை அதிகார பரவலாக்கத்திற்கு மேலாக பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற அவரது விருப்பம் புதுடில்லிக்கும் சென்னைக்கும் கவலை தருவதாக இருக்கும்.

சிதைவுறும் நம்பிக்கைகள்
02/12/2019 ஆட்சி மாற்றம் என்பது பக்கச்சார்பின்றி நேர்மையாக செயற்படும் அதிகாரிகளுக்கும், பக்கம் சார்ந்து செயற்படும் அதிகாரிகளுக்கும் சிக்கலானதாகவே அமைந்து விடுவது வழக்கம்.
ஆட்சிமாறும் போது, சந்தர்ப்பத்துக்கேற்ப மாறி விடும் அதிகாரிகள் தப்பிக் கொள்வார்கள். ஏதோ ஒரு பக்கம் சார்ந்து செயற்படும் அதிகாரிகள், அடுத்த முறை வரட்டும் என்று பதுங்கிக் கொள்வார்கள்.
நேர்மையாக செயற்படும் அதிகாரிகள் பந்தாடப்படுவார்கள். அவர்களுக்கு எந்த ஆட்சி வந்தாலும், சிக்கலாகவே இருக்கும்.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் நாங்கள் யாரையும் பழிவாங்கமாட்டோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ கூறியிருந்தார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவும் அதனை வலியுறுத்திக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் நடந்து வரும் சம்பவங்கள் பல, அரசியல் பழிவாங்கல்களாகவே, காழ்ப்புணர்வுகளாகவே தென்படுகின்றன.
தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டு, யட்டியந்தோட்டையில் தமிழர்கள் வீடுகளுக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாணந்துறையிலும், வேறு சில இடங்களிலும் தமிழ் மொழியிலான பெயர்ப் பலகைகள் அழிக்கப்பட்டன.
அதைவிட பல இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள், அலுவலகங்கள் சேதமாக்கப்பட்டிருக்கின்றன.
19 ஆவது திருத்தச்சட்டத்தினை நீக்குவதற்கான செயற்பாடுகள்
நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்தினை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது.

அந்தத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அங்கம் வகித்ததுடன் 100 நாள் வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டது. தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய 100 நாட்களுக்குள் 19ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நிறைவேற்று ஜனாதிபதி முறைமையிலுள்ள அதிகாரங்கள் ஓரளவுக்கு குறைக்கப்பட்டன. நிறைவேற்று அதிகாரத்துக்கும் பாராளுமன்றத்துக்குமிடையில் சமநிலையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
13 வது திருத்தம் நடைமுறைப்படுத்த முடியாத சில விடயங்களை கொண்டுள்ளது, தமிழ் தலைவர்கள் தங்களிடம் மக்களிடம் சென்று அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவேண்டும்- இந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் கோத்தாபய
02/12/2019 13வது திருத்தம் நடைமுறைப்படுத்த முடியாத சில விடயங்களை கொண்டுள்ளது இதன் காரணமாக சில மாற்றங்கள் அவசியம் என இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பகுதிகளிற்கு செல்லுங்கள் ,அவர்களுடைய வாழ்வாதாரத்தினை கவனியுங்கள்,அந்த பகுதிகளில் பணியாற்றங்கள் அவர்களுடைய விவகாரங்களிற்கு தீர்வை காணுங்கள்,அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள் என தமிழ் தலைவர்களிற்கு நான் தெரிவிக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்துஸ்தான் டைம்சின் பத்மா ராவோ சுந்தர்ஜிக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

13 ஆவது திருத்த சட்டமும் தமிழர்களின் அரசியல் தீர்வும்
புதிய ஜனாதிபதி கோத்ததாபய ராஜபக்ஷ பதவியேற்றுள்ள நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய நிலைமை உருவாகுமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி உட்பட பலரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடலின்போது தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்க்கும் வகையில் 13ஆவது திருத்த சட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை பிரதமர் நரேந்திரமோடி வெளிப்படுத்தியிருந்தார்.
பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கை தமிழர் தொடர்பான நிலைப்பாடு குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருந்தன. இந்தநிலையில் 13ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் கூட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மாற்று நிலைப்பாட்டை கொண்டுள்ளமை தற்போது பரகசியமாகியுள்ளது. இந்திய விஜயத்தின்போது அந்நாட்டின் ‘த இந்து‘ பத்திரிகை மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை ஆகியவற்றுக்கு ஜனாதிபதி பேட்டியளித்திருந்தார்.
L.R.ஈஸ்வரி 💃 80
“அம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணாலே வந்தது பாதி
சொல்லாமல் வந்தது மீதி”
பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முந்திய இரவுகளில் வானொலிக்கூடத்தில் தனிமையில், அந்த ஏகாந்தத்தை அனுபவித்துக் கொண்டே அடிக்கடி ஒலிபரப்பிய இந்தப் பாடலை நினைத்துக் கொண்டேன் இன்று. காலையில் வானொலி நிகழ்ச்சி படைக்கும் போதும் இந்தப் பாடலையே L.R.ஈஸ்வரிக்கான பிறந்த நாள் பாடலாக ஒலிபரப்பி நேயர்களின் தெரிவுகளுக்கும் வழி விட்டேன்.
லூர்து மேரி ராஜேஸ்வரி என்ற L.R.ஈஸ்வரியின் பிறந்த நாள் இன்று.
ஒரு பக்கம் P.சுசீலாத்தனமான முந்தானையை இழுத்து மூடியது போல அடக்கம் தொனிக்கும் குரல், இன்னொரு பக்கம் உஷா உதூப் போல துள்ளிசையில் தெறிக்கும் குரல் இப்படியாகப்பட்ட இரு வேறு பரிணாமங்களில் எல்.ஆர்.ஈஸ்வரியைத் தாண்டி இன்னொருவரின் உச்சத்தைக் காண முடியவில்லை. அவ்வளவு தூரம் பன்முகம் கொண்ட பாடகி இவர். அது மட்டுமா?
ஆடி மாசம் அம்மனுக்குக் கூழ் ஊத்துற நினைப்போடு குழாய் கட்டி அம்மன் பாடல்கள் முந்திக் கொள்ளும். சந்திக்குச் சந்தி “கற்பூர நாயகியே கனகவல்லி” எல்.ஆர்.ஈஸ்வரிகள் பாடிக் கொண்டிருப்பார்கள். பக்திப் பாடல் மரபில் சீர்காழி கோவிந்தராஜனைத் தொடர்ந்து எல்.ஆர்.ஈஸ்வரியையும் சேர்த்து விட்டுத் தான் மற்றவர்கள் வரிசையில் வரக் கூடிய அளவுக்கு பக்தி இலக்கியத்திலும் புகழோச்சியவர்.
அரசியலும் மதமும் ஒன்றாக பயணிக்கின்றனவா?
02/12/2019 மதமும் அரசியலும் ஒரே வண்டியில் சவாரி செய்யும் போது சூறாவளியும் பின் தொடர்கிறது (When religion and politics ride in the same cart, the whirlwind follows) என அமெரிக்காவின் விஞ்ஞான புனை கதை எழுத்தாளரும் பத்திரிகையாளருமான பிராங்க் ஹேர்பட் ஒரு தடவை கூறியிருந்தார்.

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மற்றும் அடுத்த கட்டமாக இடம்பெற்று வரும் சம்பவங்களைப் பார்க்கும் போது சூறாவளி தொடருமோ என்ற அச்சம் சிறுபான்மை மக்களிடத்தே தோன்றியுள்ளதை மறுக்க முடியாது.
ஜனாதிபதி கோத்தாபயவின் வெற்றி 56 இன் பின்னர் பௌத்த பிக்குகள் பெற்ற வெற்றியா?
03/12/2019 நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில், மொத்தமாக 160 தேர்தல் தொகுதிகளில் சஜித் பிரேமதாஸ 46 தேர்தல் தொகுதிகளில் வெற்றிப் பெற்றதுடன் ஏனைய 114 தொகுதிகளிலும் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார். சஜித் வென்ற தேர்தல் தொகுதிகளில் 22 தொகுதிகள் வட கிழக்கைச் சார்ந்தன. தென்னிலங்கையில் வென்ற 24 தொகுதிகளில் தமிழர்களும் முஸ்லிம்களும் கணிசமாக வாழும் தேர்தல் தொகுதிகளிலேயே வெற்றிப் பெற்றுள்ளார்.

இரு பனை மரங்கள் - பொன் குலேந்திரன் (கனடா)
.
“இயற்கையை ஊடுறுவிப் பார்! அப்போது உனக்கு எல்லாம் நன்றாகப் புரியும்” - அல்பேர்ட் ஐன்ஸ்டையினின் பொன்வாக்கு
மனிதர்கள் எல்லோரும் ஒரே கருத்தைக் கொண்டவர்களாக இருப்பதில்லை. அவர்களது சிந்தனைகள் அவர்கள் செய்யும் தொழில் சம்பந்தப்பட்டதாகவே பெரும்பாலும் இருக்கும். எந்த காட்சியைiயும் பார்த்து வெவ்வேறு விதமாகச் சிந்திப்பார்கள். உதாரணத்துக்கு அறிவியல் அறிஞன் அல்லது ஒரு விவசாயி இயற்கையைப் பார்க்கும் பார்வயிலிருந்து ஒரு கவிஞனின் பார்வை வேறுபட்டது. அறிவியல் அறிஞன் இயற்கையை ஆராய்ச்சி நோக்குடன் பார்ப்பான். விவசாயி தனது விவசாய தொழில் நோக்கத்தோடு பார்ப்பான். சாதாரண மனிதன் இயற்கைக் காட்சியைப் பார்த்து மகிழ்வான். ஆனால் கவிஞனோ தான் மாத்திரம் பார்த்து மகிழாமல் பிறரும் வாசித்து இரசிக்கும் சொல்லோவியம் ஆக்குகிறான். இதை அடிப்படையாக வைத்த உருவகக் கதை இது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வட்டுக்கோட்டை என்ற ஊருக்குச் செல்லும் பாதையின் ஒருபுறம் வாவி, மறுபுறம் கற்கள் நிறைந்த கல்லுண்டாய் வெளி. வல்லைவெளிக்கு ஈடாகத் தோற்றமளித்த அந்த அமைதியான வெளியில் வாவிக்கு அருகே 17 கி மீ பயணித்த வழுக்கை ஆறு அராலிக்கு அருகே எரிகயுடன் கலக்க முன் இரு உயர்ந்த பனைமரங்கள் ஒன்றை ஒன்று பிரியாத நிலையில் அருகருகே வானத்தில் உள்ள முகில்களை முத்தமிடுவது போல் காட்சியளித்தன. இம்மரங்கள் இப்போது இருக்கிறதோ தெரியாது, ஏன் என்றால் நான் பார்த்தது 1990 இல் சடைத்த பனம் ஓலைகள் சோழகக் காற்றின் தழுவலில் ஒரு இதமான ரீங்காரத்தைக் காற்றில் பரவச் செய்தன. அம் மரங்களுக்கு அடியில் உள்ள பற்றைகள் தங்களுக்கும் அது போன்ற கம்பீரமான நிலை ஏற்படாதா என ஏங்கின. பாதையின் ஓரிடத்தில் இருந்து அவ்விரு மரங்களைப் பார்த்தால் ஒரு தனி மரமாகக் காட்சியளிக்கும். சற்று விலகி நின்று பார்த்தால் இரு மரங்களாகத் தோன்றும். இத்தோற்றத்தை இடமாறுதோற்றம் (Parallax) என்பர். வீதியில் செல்லும் பலதரப்பட்ட வழிப்போக்கர்கள் சற்றுநேரம் நின்று இயற்கையின் சிருஷ்டிப்பை ரசித்து தங்கள் கற்பனைரதத்தை ஓடவிட்டு, மனதில் உள்ள ஆசைகளை வெளிப்படுத்தினர். அவ்வெண்ணங்களின் பிரதிப்புகளைச் சற்று உற்று நோக்கின்:
படித்தோம் சொல்கின்றோம்: பெண்களை காவியமாந்தர்களாக படைத்தவர்களும், பெண்ணாகவே பார்த்த சிந்தனையாளர்களும் ஓவியா எழுதிய “ கருஞ்சட்டைப் பெண்கள் “ முருகபூபதி
இராமாயணத்தில் வரும்
சீதை, மகாபாரதத்தில் வரும் குந்தி,
காந்தாரி, திரௌபதி, சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி, மாதவி, நளவெண்பாவில்
வரும் தமயந்தி பற்றியெல்லாம் அறிந்திருப்பீர்கள்.

இந்தப்பெண்களையெல்லாம் கஷ்டப்படுத்திய இந்த ஆண்களின் படைப்புகளுக்கு எமது சமூகம் காவியம் என்றும் பெயர் சூட்டிக்கொண்டது.
வள்ளுவரும் என்ன செல்கிறார்:
அடிசிற்கினியாளே… அன்புடைய மாதே பதிசொற் தவறாத பாவாய்… அடிவருடி பின்தூங்கி முன்
எழுந்த பேதையே…. “ என்று தனது மனைவி
வாசுகி மரணித்த பின்னர் அவளை சிதையிலே
வைத்து தீவைப்பதற்கு முன்னர் பாடினாராம்!
அவளது மரணத்தின் பின்னர்
வள்ளுவருக்கு அடிவருடியது யார்..? என்பது தெரியவில்லை.

எமது வாழ்நாளில் பலதரப்பட்ட இஸங்களை பார்த்துவருகின்றோம்.
கம்யூனிசம், மார்க்ஸிசம், ஷோசலிஸம், இவை தவிர,
கிளாசிசம்
- மேனரிஸம் -
ரொமாண்டிசிசம் - மொடர்னிசம்,
எக்ஸ்பிரஷனிசம் - ரியலிசம் - நச்சுரலிசம் – சிம்பலிசம்
– இமேஜிசம் - எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்றெல்லாம் ஏராளமான இஸங்கள் இருக்கின்றன.
ஆனால், ஆணிஸம் – பெண்ணிஸம் என்று எதுவுமில்லை. பெண்ணியம் இருக்கிறது.
ஆண்ணியம் இருக்கிறதா..?
தந்தை “ பெரியார் பெரியார் “ என்று
காலம்பூராவும் சொல்லிவருகின்றோம். சுயமரியாதை இயக்கத்தின் தந்தை எனப்போற்றுகின்றோம்.
ஆனால், அவருக்கு பெரியார் என்ற பட்டத்தை யார் சூட்டினார்கள்..? என்று பார்த்தால், 1938 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற
பெண்கள் மாநாட்டில்தான் அவருக்கு அந்தப்பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி இந்நூலில்
தெரியவருகிறது.

உடற்கூற்றின்பிரகாரம் பார்த்தால், ஆண்களைவிட பெண்கள்தான்
வலிமையானவர்கள். ஒரு குழந்தையை சுமந்து பெற்றெடுக்கும் வலிமை மகத்தானது. அதனை தாய்மை
என்று மென்மையாக சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகின்றோம்.
பெரியார் திடலில் சுமார் ஓராண்டுகாலம் நடைபெற்ற
நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட உரையின் முழுவடிவமும் இந்த நூலில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
பாரதநாட்டில் தோன்றிய காவிய மாந்தர்களை படைத்த
ஆண்கள், பெண்களை அவதானித்து சித்திரித்த போக்கிலிருந்து முற்றிலுமாக மாறிய நிலையில் மேற்கத்தைய கார்ல்மார்க்ஸ்,
லெனின், ஏங்கல்ஸ் முதலான ஆண்கள் பெண்கள் பற்றிக் கொண்டிருந்த கருத்துக்களையும் இந்நூல் உரத்துப்பேசுகிறது.
மழைக்காற்று - தொடர்கதை - அங்கம் 13 முருகபூபதி
அபிதா, சற்று நிலைதடுமாறிவிட்டாள்.
சுபாஷினியிடமிருந்து அப்படி ஒரு செய்தி வரும் என்று அவள் எதிர்பார்க்காதமையால் வந்த
தடுமாற்றம். சுபாஷினி தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தாள்.


தன்னிடம் சொல்லக்கூடாத ஒன்றை சொல்லிவிட்டோம்
என்று கலங்குகிறாளோ தெரியவில்லை. அபிதா விரைந்துவந்து சுபாஷினியை அணைத்துக்கொண்டு, “ எதுவும்
இப்போது பேசவேண்டாம். எழும்புங்க. போய் தோய்ந்துவிட்டு
வாங்க. நேற்று அரைத்துவைத்த தோசை மாவு இப்போது
புளித்திருக்கும். சுடச்சுட சுட்டுத் தாரன்.
வாங்க. “ சுபாஷினியை அபிதா எழுப்பினாள்.

“ ரீச்சர் வேறு ஏதும் சொன்னாங்களா..? “
“ இல்லை. அங்கேயும் கடும்மழையாம். மின்னல் வெட்டுது.
கணநேரம் பேசமுடியாது என்று சொல்லி வைச்சிட்டாங்க. ஸ்கூல் அதிபருக்கு இன்று கோல் எடுத்து, தனது நிலைமையை சொல்வாங்களாம். “ சுபாஷினி
எழுந்து குளியலைறக்குச்சென்றாள்.
சுபாஷினி தோய்ந்துவிட்டு
திரும்பிவந்ததும் அவளது வாழ்வில் நடந்த விபரீதம் எதனையும் கேட்கக்கூடாது என்பதில் அபிதா தீர்மானமாயிருந்தாள்.
ஆனாலும் மனதில் , “ என்ன நடந்திருக்கும்? “ என்ற
கேள்வி அரித்துக்கொண்டிருக்கிறது.
உயர்திணையின் அவுஸ்திரேலியக் கவிஞர்களுக்கான அழைப்பு
அன்புடையீர்,
அவுஸ்திரேலியாவில் பல காத்திரமான கவிஞர்கள் இருக்கிறார்கள். சிலர் ஆசு கவிகள்! நினைத்தவுடனே கவி படைக்க வல்லோர். மேலும் சிலர் மரபுக் கவிஞர். வரம்புக்குள் நின்று வசீகரமாகக் கவிதர வல்லோர்! மேலும் சிலர் வீச்சு வாள் போலும் வார்த்தைகளை சுழல விட்டு சொற்போர் செய்ய வல்லார்! இவைகள் எல்லாம் கைக்கொள்ள வல்லாரும் நம்முள்ளே உளர்.
எனினும் அவர்களை ஒருங்கிணைத்து கவி இன்பம் பெற வாய்ப்புகள் நமக்குள்ளே அதிகம் இல்லை. வாழ்க்கையும் வேலையும் போட்டி போடும் உலகில் சுந்தரத்தமிழில் சிந்துக் கவி இயற்றவும் அதனை இயக்கவும் ஓர் உந்து சக்தி தேவையாகவே இருக்கிறது. ஏனைய கலைவெளிகளுக்கு வேண்டப்படுவது போலவே!
தவிரவும், அவுஸ்திரேலியச் சமூகம் நோக்கியதான கவிஞர்களின் சிந்தனைகளும் அவர்களின் கவிதா விசாலங்களும் கூட பெருமளவு ஆவணப்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது.
அதன் காரணமாக, வருகிற 2020 புதுவருடத்திலிருந்து உயர்திணையின் செயல்பாடுகளின் ஒரு முன்னோட்டமாக அவுஸ்திரேலியத் தமிழ் கவிஞர்களை ஒன்றிணைத்து மாதம் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கவிதைகளைக் கோருவதெனவும்; அவைகள் யாவும் வந்து சேர்ந்த காலக் கிரமத்தின் படி அடுத்த மாத ஆரம்பத்தில் திகதிவாரியாக உயர்திணை வலைப்பக்கத்தில் பிரசுரிப்பதெனவும் உயர்திணை நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது.
இலங்கைச் செய்திகள்
வெள்ளத்தில் மூழ்கியது திருகோணமலை மாவட்டம்!
கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக ஊழியருக்கு பயணத் தடை!
கிளிநொச்சியில் கனமழை ; மக்கள் வீடுகளுக்குள் வெள்ளம்
தூதரக பணியாளரின் உடல்நிலை காரணமாக அவரை விசாரணைக்குட்படுத்த முடியாத நிலை- சுவிஸ் மீண்டும் தெரிவிப்பு
மட்டக்களப்பில் வெள்ள அபாயத்தைக் குறைக்க குளங்களின் வான்கதவுகள் திறப்பு
கண்ணிவெடி அகற்றலுக்கு 2 மில்லியன் டொலர்கள் - கனடிய அரசாங்கம் அறிவிப்பு
நோர்வே தூதுவர் - ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சந்திப்பு
வெள்ளை வேன் சாரதியென அறிமுகப்படுத்தியவர், ராஜிதவின் ஊடவியலாளர் மாநாடு குறித்து விசாரணை
1300 இரண்டாம் மொழி பயிலுனர்களின் நிலை என்ன? - நிர்க்கதியாகியுள்ள மலையக இளைஞர் யுவதிகள்
ஜனாதிபதியை சந்தித்த பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
கனடா உயர் ஸ்தானிகர், சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
யு.என்.டி.பி.யின் ஆசிய- பசுபிக் பிராந்திய பணிப்பாளராக இலங்கைத் தமிழ்ப் பெண்
சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் இலங்கை விஜயம்- அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து ஆராய இரு தரப்பும் இணக்கம்
கல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடி மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்
அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் நிரந்தர சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவை நீடிக்கும் - அலைனா டெப்லிட்ஸ்
எதிர்க்கட்சி தலைவர் சஜித்தே..!: முடிவை அறிவித்தார் ரணில்...!
ஊவா பொலிஸ் பிரதானியின் உதவியாளராக சி.ஐ.டி.யின் பணிப்பாளரான திசேரா
தூதரக பணியாளரை மருத்துவசிகிச்சைக்காக இலங்கைக்கு வெளியே கொண்டு செல்ல சுவிஸ் வேண்டுகோள்- அரசாங்கம் மறுப்பு
ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சியா ? : ஐந்து இளைஞர்கள் கைது
சீரற்ற காலநிலையால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : வடக்கு, கிழக்கில் வெள்ளத்தினால் மக்கள் பெரும் அவலம்
பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் !
ஜனாதிபதி கோத்தாபயவுடன் சந்திப்பினை மேற்கொண்ட அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்!
2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு
வெள்ளத்தில் மூழ்கியது திருகோணமலை மாவட்டம்!
03/12/2019 திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாத்திமா பாலிகாவித்தியாலயத்தின் வீதி ஊடாக கடும் மழை காரணமாக அப்பகுதி இன்று மாலை வேளையில் மூழ்கியுள்ளது.

உலகச் செய்திகள்
ஜப்பான் நிஜ ஏவுகணையொன்றை காணும் காலம் தொலைவில் இல்லை - வட கொரியா எச்சரிக்கை
ஈரான் ஆர்ப்பாட்டம் : 208 பேர் பலி : சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவிப்பு
கண்டனத் தீர்மானத்தை கொண்டு வருவதற்கான விசாரணையில் ட்ரம்ப் ஆஜராகப் போவதில்லை
வட கொரியாவில் புனித மலைக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நகர்
டிரம்பிற்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணையை கொண்டுவருவதற்கான போதிய ஆதாரங்கள் - அமெரிக்க குழு அறிக்கை
ஐ.என்.எக்ஸ் .மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனைகளுடன் பிணை
நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க ஜனாதிபதி பிரித்தானியா விஜயம்
நத்தார் பரிசாக எதனைப் பெறுவது என்பது அமெரிக்காவின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது - வடகொரியா எச்சரிக்கை
தனது கனவு நகரை திறந்து வைத்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்
பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி, எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை பெண் வைத்தியர்: சந்தேக நபர்கள் நால்வரும் சுட்டுக்கொலை
ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு !
ஜப்பான் நிஜ ஏவுகணையொன்றை காணும் காலம் தொலைவில் இல்லை - வட கொரியா எச்சரிக்கை
02/12/2019 ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே மனோதிடம் இல்லாத அரசியல் குள்ளர் ஒருவர் என வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் 1969 - 2019 ச சுந்தரதாஸ் - பகுதி 23
மகனே நீ வாழ்க
1969ம் ஆண்டு தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்பட்ட ஜெய்சங்கருக்கு பொன்னான ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டின் பதின்மூன்று படங்களில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார். அதாவது மாதம் ஒரு படம் என்ற ரீதியில் அவர் நடித்த படங்கள் வெளிவந்தன. இது வேறு எந்த கதாநாயக நடிகனும் இது வரை முறியடிககாத இனியும் முறியடிக்க முடியாத சாதனையாகும். படத்தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் ரசிகர்களின் ஆதரவை ஜெய்சங்கர் பெற்றிருந்ததினாலேயே இது சாத்தியமானது.

அந்த வகையில் ஜெய்சங்கர் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த படம்தான் மகனே நீ வாழ்க. அவருக்கு ஜோடியாக லட்சுமியும் விஜயகுமாரியும் நடித்திருந்தார்கள். இவர்களுடன் நாகேஷ் சச்சு சுந்தரராஜன் எஸ். என். லட்சுமி ஆகியோரும் இடம் பெற்றார்கள்.
தாய்க்கும் மகனுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் விதத்தில் படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. படத்தில் தாய் வேடத்தில் நடிக்க வழமையாக அம்மா வேடத்தில் நடிக்கும் பண்டரிபாய், எம். வி. ராஜம்மா போன்றோர் தெரிவு செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக பழைய கதாநாயகியான அஞ்சலிதேவி தாயார் பாத்திரத்தை ஏற்றிருந்தார். பாசமும் கண்டிப்பும சேர்ந்த குணாம்சத்தை அவர் வழங்கியிருந்தார். ரசிகர்களுக்கும ஒரு புதிய தாயைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது.
இரட்டை வேடக் கதை என்றலே ஆள் மாறாடடக் கதைதானே பிரபலம். இதில் அனாதையான மாணிக்கம் பணக்கார வீட்டு இளைஞனான செல்வமாக நடிக்க வேண்டிவருகிறது. செல்வத்தின் தாயின் பாசம் அவனை தொடர்ந்து அங்கேயே தங்கச் செய்கிறது. ஆனால் ஒனறன்பின் ஒன்றாக வரும் செல்வத்தின் ஒரு காதலி, மனைவி ஒரு கொழல வழக்கு என்பன அவனை இக்கட்டில் தள்ளுகிறன.

படத்தில் ஜெய் இரட்டை வேடம் என்றால் படம் முழுவதும் காட்சிக்கு காட்சி வியாபித்திருந்தவர் நாகேஷ்தான். ஜோடி இல்லாமல் தனி ஆவர்த்தனமாக நகைச்சுவையை வழங்கியிருந்தார் அவர்.
படத்திற்கு கதைவசனம் எழுதியவர் பாலமுருகன். கருத்தாழம் மிக்க வசனங்களுடன் நாகேஷிற்கான நகைச்சுவை வசனங்களையும் திறமையுடன் எழுதியிருந்தார் பாலமுருகன். லட்சுமி படம் முழுவதும் கவர்ச்சியாக வருகிறார். விஜயகுமாரி அதற்கு நேர்மாறாக வருகிறார்.
தமிழ் சினிமா - இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரை விமர்சனம்
ரஞ்சித் எப்போதும் தரமான கருத்துக்களை தன் படங்களில் மூலம் சொல்லி வந்தவர். அவரை போலவே அவருடைய கண்டுப்பிடிப்பான மாரி செல்வராஜும் அப்படியான ஒரு தரமான கருத்தை கூற, இவர்கள் வரிசையில் அதியன் ஆதிரை வந்துள்ளார். இவர் சொல்ல வந்த கருத்தியல் ரஞ்சித், மாரிசெல்வராஜ் போல் ஜெயித்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
இரும்பு கடையில் லாரி ட்ரைவராக வேலைப்பார்க்கும் தினேஷ், டீச்சராக இருக்கு ஆனந்தியை காதலிக்கின்றார். ஆனால், ஆனந்தி வீட்டில் சாதி ரீதியாக பிரச்சனை இருக்க எதிர்ப்பு இருக்கிறது.
ஆனால், இதைவிட பெரிய பிரச்சனை அந்த இரும்பு கடைக்கு இரண்டாம் உலகப்போரில் இருந்து மிஞ்சிய குண்டுகளில் ஒன்று கரை ஒதுங்கி இவர்கள் கடைக்கு வருகிறது.
அந்த குண்டை கைப்பற்ற அரசாங்கம் ஒரு பக்கம், இதை கண்டுப்பிடித்து மக்களின் முன்பு ஆபத்தை நிரூபிக்க சமூக நல மாணவர்கள் ஒரு பக்கம், கடைசியில் அந்த குண்டு யார் கைக்கு கிடைத்தது, இல்லை வெடித்ததா? என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
அட்டக்கத்தி தினேஷ் நடித்தால் தரமான படம், இல்லையென்றால் நடிக்காமல் இருக்கிறேன் என்று இருப்பார் போல, அந்த அழுக்கு லுங்கியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, குண்டை பாதுக்காக்க பதறி, காதலியை தேடி பதட்டத்தில் என நடித்து அசத்தியுள்ளார். இவர் தமிழ் சினிமாவை பயன்படுத்த தேவையில்லை, இவரை தான் தமிழ் சினிமா இயக்குனர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆனந்திக்கு ட்ராவலுக்கும் அப்படி என்ன ஒற்றுமை தெரியவில்லை, அவர் நடித்தாலே ஒரு பயணத்திலேயே தான் உள்ளார், கடைசி வரை கட்டினால் இவரை தான் கட்டுவேன் என கங்கனத்துடன் கிளைமேக்ஸில் கூட வீட்டை விட்டு வெளியேறும் காட்சி அப்லாஸ் அள்ளுகிறார்.
முனிஷ்காந்த் இவரின் இன்னஸண்ட் தான் பெரிய பலம், இரண்டாம் பாதி முழுவதும் கலகப்பிற்கு பஞ்சமில்லை இவரிடமிருந்து. அதே நேரத்தில் காமெடியாகவே 'இது நம்ம நாட்டு குண்டு நம்மளை கொல்லாது, பாகிஸ்தானில் வெடிக்கும்' என கிண்டலடிப்பது எல்லாம் அதியன் ஆதிரையின் உள்குத்துக்கள். அதோடு படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் வரும் ரமேஷ் திலக், மெட்ராஸ் ஜானி கூட இயல்பான நடிப்பை அளித்து செல்கின்றனர்.
படத்தின் மிகப்பெரிய பலமே வசனங்கள் தான், மனுஷே எத்தன பேர் செத்தாலும் கவலையில்லை, இப்படி ஒரு விஷயம் தெரியக்கூடாது என்று நினைக்கும் அரசாங்கம், எவன் எப்படி போனால் என்ன எனக்கு என் சாதி கௌரவம் முக்கியம் என்று நினைக்கும் கயல் ஆனந்தி அண்ணன் இருவரும் வேறில்லை என தோன்ற வைக்கின்றது.
மேலும், படத்தின் முதல் பாதியில் குண்டு தினேஷ் கையில் கிடைத்ததுமே இடைவேளை விடுவதற்கு நல்ல இடமாக இருந்தும், காட்சிகள் இன்னும் சில நிமிடங்கள் நீள்கின்றது, இவை நாட்டை அழிக்கும் குண்டு முக்கியமா? இல்லை தன் காதல் முக்கியமா? என்று தினேஷ் பார்வையில் கதையை நகர்த்தி இடைவேளைவிட்ட இடமும் நன்றாக இருந்தது.
உலகில் மற்ற நாட்டு அனு கழிவுகளை இந்தியாவில் எப்படி இறக்கினர், அது எப்படி கரை ஒதுங்கி, எத்தனை ஆயிரம் பேரை பழியாக்குகிறது என்பதை காட்சியால் விளக்கிய விதம் அருமை.
உலகின் எப்பேற் பட்ட போர்களை காட்டி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை, சொல்லியே அதன் வீரியத்தை புரிய வைக்கலாம் என்று கிளைமேக்ஸில் அந்த ஜப்பான் காரர் பேசுவது நாடு கடந்து கண்டிப்பாக நம்முள் இருக்கும் மனிதாபிமானத்தை தூண்டும் காட்சிகள்.
டென்மாவின் இசையில் பின்னணி மிரட்டல், அதிலும் குண்டை காட்டும் போதெல்லாம் வரும் இசை நமக்கே இது வெடிக்க கூடாது என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது, பாடல்களில் காதல் பாடலை விட, கூத்து பாடல்கள் அதை படமாக்கிய விதம் கவர்கிறது, ஒளிப்பதிவு பற்றி புகழ, கடைசியில் குண்டு லாரியில் இருக்க, போலிஸ் துரத்தும் அந்த டாப் ஆங்கிள் காட்சி ஒன்று போதும் கிஷோர் குமாரின் ஒளிப்பதிவிற்கு பாராட்டுக்கள் குவிய, அதிலும் முதல் படம் என்பது கூடுதல் சிறப்பு.
க்ளாப்ஸ்
படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும்.
படத்தில் எடுத்துக்கொண்ட களம், இன்றைய இந்தியாவிற்கு தேவை என்பதை மிக தெளிவாக சொன்னது.
படத்திம் வசனங்கள் மேலும் கூத்து கலைகள் வழியாக முதலாளிகளின் ஆதிக்கத்தை காட்டிய விதம்.
இசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்.
படத்தின் எடிட்டிங் செல்வா ஆர்.கே, முதல் பாதி காட்சிகள் நீண்டாலும், அவை கதைக்கு தேவை என்பதால் எங்கும் கத்திரி போடாமல் விட்டது, இரண்டாம் பாதி அத்தனை விறுவிறுப்பாக கொண்டு சென்றது.
பல்ப்ஸ்
படத்தின் முதல் பாதியில் இடைவேளைக்கு முன்பு தினேஷ்-ஆனந்திக்கு இடையே வரும் டூயட் பாடல்.
தினேஷ் தூக்கி திரியும் குண்டு வெடித்ததா? இல்லையா? என்பதை விட மொத்தத்தில் அதியின் ஆதிரையின் கருத்தியல் புரட்சி குண்டு அழுத்தமாக வெடித்துள்ளது, ரஞ்சித்தின் மற்றொரு புரட்சி படைப்புக்கு ஒரு பூங்கொத்து. நன்றி CineUlagam.