அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
காதல் இப்படியும் இருக்கலாம் - கயல்விழி மணிவாசன்
.
.
காதல் இப்படியும் இருக்கலாம்
விழி நோக்கா
அவனின்
விழி நோக்க
இந்த கயல் விழி
இதயம்
வழி பார்க்க
நல்ல நேரம் பிறப்பதாய்
குடுகுடுப்பைக் காரனும்
நடக்குமா என்று
நினைக்கையில்
பல்லியும் அதன் பாஷையில்
ஆம் சொல்ல
திறந்த கண்களுக்குள்
கலர் கலர் கனவுகள்
வட்டமிட
தூரத்தே தெரிந்த
வானம் அருகில்
வந்து என்னையும்
அணைத்துக்கொள்ள
அந்த
நட்சத்திரக்கூட்டத்தில்
நானும்
மின்னப்போவதாய்
தோன்றிய எண்ணத்திற்கு
முற்றுப்புள்ளி
வைத்து அப்பாத்தா
சொன்னாள்
அந்த
கிருஷ்ணா பய வந்தா
வீட்டுள்ளுக்கு கூப்பிடாத
அவன் கீழ் ஜாதி.
குனிந்த தலை நிமிராது
இன்றும்
குப்பையை சுமந்து செல்கிறான்
அவன்.
Nantri eluthu.com
காதல் இப்படியும் இருக்கலாம்
விழி நோக்கா
அவனின்
விழி நோக்க
இந்த கயல் விழி
இதயம்
வழி பார்க்க
நல்ல நேரம் பிறப்பதாய்
குடுகுடுப்பைக் காரனும்
நடக்குமா என்று
நினைக்கையில்
பல்லியும் அதன் பாஷையில்
ஆம் சொல்ல
திறந்த கண்களுக்குள்
கலர் கலர் கனவுகள்
வட்டமிட
தூரத்தே தெரிந்த
வானம் அருகில்
வந்து என்னையும்
அணைத்துக்கொள்ள
அந்த
நட்சத்திரக்கூட்டத்தில்
நானும்
மின்னப்போவதாய்
தோன்றிய எண்ணத்திற்கு
முற்றுப்புள்ளி
வைத்து அப்பாத்தா
சொன்னாள்
அந்த
கிருஷ்ணா பய வந்தா
வீட்டுள்ளுக்கு கூப்பிடாத
அவன் கீழ் ஜாதி.
குனிந்த தலை நிமிராது
இன்றும்
குப்பையை சுமந்து செல்கிறான்
அவன்.
Nantri eluthu.com
மரண அறிவித்தல் - நாகேஸ்வரி (லில்லி) சிவஞானசுந்தரம்
.
மரண அறிவித்தல் - நாகேஸ்வரி (லில்லி) சிவஞானசுந்தரம்
மரண அறிவித்தல் - நாகேஸ்வரி (லில்லி) சிவஞானசுந்தரம்
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் சிட்னி அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி (லில்லி) சிவஞானசுந்தரம் அவர்கள் 09-02-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் சிவஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும், ரஞ்சன் (சிட்னி), மோகன் (கனடா), தயான் (மெல்பேர்ண்), கௌரி (சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்; றேணுகா (சிட்னி), பிரேமினி (மெல்பேர்ண்), அஜன் (சிட்னி) ஆகியோரின் அன்பு மாமியாரும்; மாதங்கி, சங்கவி, ரஞ்சிதா, ஹர்ஷினி, ரவிகாந்த், நிரஞ்சினி, ரேஹான், ஷிவாணி ஆகியோரின் அருமை பேத்தியாரும்; காலஞ்சென்ற கைலாசபிள்ளை மணியர்பிள்ளையின் சகோதரியும்,காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் (மலேசியா), காலஞ்சென்ற தங்கலக்ஷ்மி செல்வராஜா (மலேசியா),காலஞ்சென்ற ராசலக்ஷ்மி நல்லையா (இலங்கை), காலஞ்சென்ற ஞானலக்ஷ்மி வாகீஸ்வரன் (சிட்னி), Drசிவபாலசுந்தரம் (மெல்பேர்ண்), யோகலக்ஷ்மி [யோகம்] மணியர்பிள்ளை (சிட்னி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை Rookwood Cemetery (Lidcombe), West Chapelல் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: ரஞ்சன் +61 428 138 232; தயான் +61 466 543 176.
சிட்னி ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தான கொடியேற்றம் 10.02.2019
.
சிட்னி ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தான கொடியேற்றம் இன்று 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அம்மன் ஆலயம் அமைக்கப்பட்டு வருடாந்த உற்சவம் மிக சிறப்பாக நடை பெற்று வருகின்றது . பக்தர்கள் நிறைந்திருக்க நாதஸ்வர இசைக் கலைஞர்களின் இசை வெள்ளம் தேனாக பாய அம்மன் அழகிய தங்க சிம்ம வாகனத்தில் பவனி வந்த காடசி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
வாசகர் முற்றம் -- அங்கம் 05 - முருகபூபதி
.
எங்கள் தங்கராஜா திரைக்கு வந்தவேளையில் பிறந்த மதுரை கல்லுப்பட்டி ராஜா
மலையடிவாரங்களில் இலக்கியசுவாசத்தில் திழைத்தவரின் வாசிப்பு அனுபவங்கள்
"இரவுக்கும்
பகலுக்கும் இனியென்னவேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும்
பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக்கோலம்"
இந்த பாடல் திரையிலும் வானொலியிலும் ஒலித்தவேளையில் சங்ககால தமிழர் நாகரீகம்
தழைத்த " கீழடி" அமைந்துள்ள மதுரையில் கல்லுப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு
விவசாயக்குடும்பத்தில் பிறந்த இந்தக்குழந்தைக்கு
தற்போது 45 வயதாகிவிட்டது.
இந்தப்பாடலில் கவியரசு கண்ணதாசன் இப்படியும் ஒரு வரி எழுதியிருப்பார்: "கவிஞர் சொன்னது கொஞ்சம் - இனி காணப்போவது
மஞ்சம்" இதே கவிஞர், பார்மகளே பார்
திரைப்படத்திலும் ஒரு பாடல்வரியை இவ்வாறு எழுதியிருந்தார். "நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே. அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே"
இந்தப்பத்தியில் இடம்பெறும் முதலாவது பாடல் வரிகள் வரும் திரைப்படம்
எங்கள் தங்கராஜா வெளியான காலத்தில், அந்த அம்மாவுக்கு பிரசவ வலி கண்டுள்ளது. கட்டிலில்
கவிதை படித்ததால் , தொட்டிலுக்கு வந்தது அந்தக்குழந்தை. அதனால் ராஜா எனப்பெயரிட்டார்கள்.
பய பக்தி – குறுங்கதை ( யோகன், கன்பரா )
.
கோடை இரவு அது. பகலெல்லாம் வீசும் அனல் காற்று
தணிந்திருந்தாலும் புழுக்கம் குறையவில்லை.
பெரும் இடிச் சத்தம் கேட்டு அவர் திடுக்கிட்டு விழித்துக் கொண்டார். அந்தப் பேரோசையின் அதிர்வு அடங்கு முன் தொடர்ந்து மின்னல் வெளிச்சம் யன்னல் திரையின் ஒரத்துக்குள்ளால்
அவர் படுக்கையறையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இன்னொரு நெடும் மின்னல் காற்றை
கிழித்து நிலத்தை முட்ட வருகிறது. பேரிடி விழப்போகிறது. காதை பொத்தக் கையை எடுக்குமுன் அது நிலத்தில் இறங்கி விட்டது.
படுக்கையறைக்கு மிக அருகிலேயே விழுவது போல உணர்ந்தார்.
அதி சக்தி கொண்ட ஆட்டிலரி ஷெல் வந்து விழும் சத்தத்துக்கு நிகரான
அந்தச் சத்தம் அடங்கு முன்னேயே வெளியே பெரிய
டியூப் லயிட் ஒன்று எரிய தொடங்கு முன்
அடிக்கடி மின்னுவது போல அடுத்தடுத்து மின்னல்களின் பால் வெளிச்சம்.
படுக்கையிலிருந்து எழும்பாமலேயே அந்த வெளிச்சத்திலேயே சுவர் மணிக் கூட்டைப் பார்த்தார். மணி ஒன்றரை.
யன்னல் திரையைத் திறந்து வெளியே பார்க்கவே துணிவில்லை. இருளில் நீந்தியபடியே மெல்ல வரவேற்பறை யன்னலுக்குப் போய்ப்
பார்க்கலாமா? இந்த நேரத்தில் மின் விளக்குகள் எதனையும் போட முடியாது.
மெல்ல நடந்து அந்த வரவேற்பறையை அடைவதற்குள் இடைவெளியில்லா
முழக்கங்களின் அதிர்வில் இதயமே அறுந்து தொங்குவது போல உணர்ந்தார். அவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.
மனைவி வீட்டிலில்லை. அவளுக்கு இன்று ஆஸ்பத்திரியில்
இரவு ஷிஃப்ட் வேலை. அவளுக்குப் போன் பேசிப்
பார்க்கலாமா? அதுவும் இப்போது ஆபத்தானதுதான்.
வரவேற்பறை யன்னல் திரையை மெல்லியதாக திறக்க இன்னொரு மின்னல் கோடு. வெளியே அதன் வெளிச்சத்தில்
முன் தோட்டத்தில் நிழல் மரம் ஒன்று விறைத்தபடி நிற்கிறது. காதை இறுக்கப் பொத்தினார். ஆனால் அதையும் மீறி அடுத்தடுத்து மூன்று நான்கு அடுத்தடுத்து விழுந்து
பேரோசையை எழுப்பின. அந்த சத்தம் முழக்கி வாசிக்கும் தவிலினை நினைப்பூட்டியது. யன்னல் அதிர்வில்
நடுங்குகிறதா? அது உண்மையானால் விழுவதெல்லாம்
மிக அண்மையில்தான். அவர் போகுமிடமெல்லாம் துரத்தி
வருகிறது. இலக்கு அவர் தான் என்பது புரிந்தது.
வாழ்வெனும் நதியாக- திதி [1] - வெங்கடேஷ்
.
படம் ஒளி கரைந்து உள் நுழையும் காட்சியாக, (ஃபேட்-இன்) செஞ்சுரி கவுடாவின் இருமலுடன், ஆடு கோழிகளின் சப்தத்துடன் துவங்குகிறது. கர்நாடகாவில், மாண்டியாவின் கடைக்கோடி உட்கிராமம் நோடேகொப்பலு. செஞ்சுரி கவுடாவிற்கு 101 வயது. தெருவின் மண்டபப் படியில் ஊன்றி நடக்கும் குச்சியுடன் உட்கார்ந்துகொண்டு, போவோர் வருவொரிடமெல்லாம் எகத்தாளம் பேசிக்கொண்டிருக்கிறார். இவரின் பழக்கமே இதுவென்பதால் யாரும் இவரைச் சட்டை செய்வதில்லை.
தெருவில் மாடு பிடித்துக்கொண்டு போகும் பெண்ணைப்பார்த்து, “ஏம்மா, வீட்டுல யாரும் ஆம்பளைங்க இல்லயா?… நீ எதுக்கு புடிச்சிட்டு போற…போ…போய் வீட்டுல தூங்கு,” என்கிறார். பள்ளி குழந்தைகள் கடந்து போகும்போது “ஓய்…வந்துட்டிங்களா…வாங்க…வாங்க…நில்லுங்க…” என்று சத்தம் போடுகிறார். குழந்தைகள் கிளுகிளுவென்று சிரித்துக்கொண்டே ஓடுகின்றன. கறுப்பு கோட் போட்டுக்கொண்டு வரும் இன்னொருவரைப் பார்த்து “என்னாப்பா…உன் பொண்டாட்டி இன்னொருத்தர் கூட ஓடிப் போயிட்டாளாமே…இப்ப என்ன பண்ணப்போற…” ஹா…ஹா…வென்று சிரிக்கிறார். கறுப்பு கோட்காரர் எதுவும் பேசாமல் எதிர்க்கடைக்குச் சென்று செய்தித்தாள் வாங்கிக்கொண்டு போகிறார். “போ…போ…அப்படியே ஊரவிட்டுப் போயிரு,” என்கிறார்.
மெதுவாக குச்சி ஊன்றி எழுந்து, எதிர் கடைக்காரரைப் பார்த்து, “ஏனு…இன்னிக்கு காபி கொடில்லா…நானு ஹோகுதினி…” என்று சொல்லிவிட்டு “உன்னையும்…உங்கம்மாவையும்…” என்று கெட்டவார்த்தைகளில் திட்டிக்கொண்டே உட்தெருவில் மெதுவாக நடந்துபோகிறார். ஒரு வீட்டின் மண்சுவரோரம் இடதுகையில் குச்சி ஊன்றிக்கொண்டே, மடங்கி சிறுநீர் கழிக்க உட்காருகிறார். சட்டென்று வலதுபக்கம் மண் தரையில் சாய்ந்து இறந்துவிடுகிறார்.
“திதி” டைட்டில் கார்டு இங்கு வருகிறது.

மனத் தடை; பெண் விடுதலை குறித்து.... நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்
.
ஒரு சில தினங்களுக்கு முன் நடந்த விருந்தொன்றில் இரு பெண்கள் பேசிக்கொண்டிருந்தனர். இந்த இருவரின் உரையாடல் கேட்பதற்கு மிகவும் சுவாரிசமாக இருந்தது. அதனால் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.
ஒரு பெண்ணின் வயது 21. ஒரு காரியாலயத்தில் வேலை பார்க்கிறாள். இவளைக் கமலா என அழைப்போம். மற்றவளைச் சங்கரி என வைத்துக் கொள்வோம். சங்கரிக்கு வயது 24. இவள் ஒரு ஆரம்பப் பாடசாலை ஆசிரியை.
பேச்சுவாக்கில் கமலா தான் பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட பையனையே மணந்து கொள்வேன்; காதல் எதுவும் பண்ண மாட்டேன்; காதலிப்பது என்பது பெற்றோரின் விருப்பத்துக்கு மாறான செயல் என்றாள். 24 வயது சங்கரியோ ‘ அப்போ உனக்கு ஆணின்மேல் பெண்ணுக்கு இயற்கையாகத் தோன்றும் கவர்ச்சி அது தான் Attraction வருவது இல்லையா என திகைப்புடன் வினவினாள். Attraction வருவதால் மட்டும் திருமணம் புரிந்து விட முடியுமா? திருமணத்துக்கு வேறு சில விஷயங்களும் உண்டே! அவன் நம் கலாசாரத்துக்கு ஒத்து வருபவனாகவும் இருக்க வேண்டுமில்லையா? என்ற கேள்வியைக் கேட்க, சங்கரி, முதலிலே Attraction இருக்க வேண்டும். இந்த Attraction இல்லா விட்டால் திருமணம் செய்து கொள்வது தப்பு; அத்தோடு இருவரும் பழகி ஒத்து வருமா என்பதையும் முடிவு செய்ததன் பின்பு தான் திருமணம் செய்யலாம் என்றாள்.
கமலா, அது எல்லாம் சரி அல்ல. எனது அம்மா முடிவு செய்வதே எனக்குச் சரியாக இருக்கும் என்றாள். அதற்கு சங்கரி, அப்போ உனது அம்மாவுக்குப் பிடித்தவர் தான் உனக்குப் பிடித்தமானவராக இருக்கும் என்கிறாய் எனக் கூற, கமலா மேலும் ஒரு தனது வாழ்க்கைத் திட்டத்தைக் கூறினாள். தான் திருமணம் ஆன பின் வேலைக்கு; அதுதான் தொழில் பார்க்கப் போவதில்லை என்றாள். மனைவியானவள் வேலை பார்த்தால் அவளால் குடும்பத்தைச் சீராக நடத்த முடியாது என்று சொல்ல, சங்கரி திகைத்துப் போய், உனக்கு Financial Independence வேண்டாமா எனக் கேட்டாள். அதற்குக் கமலா, Financial Independence என எண்ணுவதால் தான் குடும்பங்கள் பிரிகின்றன என்றாள்.

வட மாகாணத்தில் பௌத்த மாநாடு
.
வட மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வட மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி இந்த பௌத்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் வட மாகாண ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
வவுனியாவிலுள்ள ஶ்ரீ போதிதக்ஷணாராமய விஹாரையில் இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
- வடக்கு கிழக்கு பிரதான பௌத்த பிக்குவும், வவுனியா ஶ்ரீ போதிதக்ஷணாராமய விஹாரையின் விஹாராதிபதியுமான சியம்பலாகஸ்வெவ விமலசார தேரரின் முழுமையான அனுசரணையின் கீழும், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் கருப் பொருளின் கீழும் இந்த பௌத்த மாநாடு நடத்தப்படவுள்ளது.
படித்தோம் சொல்கின்றோம்: - முருகபூபதி
.
"சிறந்த சிறுகதை அது முடிந்த பிற்பாடுதான் தொடங்குகிறது"
அண்டனூர் சுரா எழுதிய "பிராண நிறக்கனவு" கதைத்தொகுதி
தமிழில் சிறுகதை இலக்கியம் வ.வே.சுஅய்யரின் குளத்தங்கரை அரசமரம் என்ற கதையிலிருந்து தொடங்கியிருப்பதாக இலக்கிய ஆய்வாளர்கள் சொல்லிவருகிறார்கள். இலங்கையிலும் தமிழகத்திலும், சிங்கப்பூர், மலேசியா உட்பட தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அந்நிய தேசங்களிலும் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் பல்வேறு பரிமாணங்களைப் பெற்றிருப்பதனால், தலை முறை அடிப்படையில் சிறுகதை எழுத்தாளர்களின் வீச்சையும் படைப்பாளுமையையும் விமர்சகர்கள் இனம் கண்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிராண நிறக்கனவு கதைத் தொகுப்பினை வரவாக்கியிருக்கும் தமிழகத்தைச்சேர்ந்த அண்டனூர் சுரா எனது தொடர் வாசிப்பு அனுபவத்தில் புத்தம் புதிய தலைமுறையைச் சேர்ந்தவராகவே இனம் காணப்படுகிறார். இவரது கதைகள் ஏற்கனவே இலக்கியப்
பரிசில்களும் பெற்றுள்ளன. அண்மையில்
தமிழ்நாடு தேனியில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை
முதல் மாநில மாநாட்டில் அண்டனூர் சுராவின் ‘ பிராண நிறக் கனவு ‘ சிறுகதைத்தொகுப்பு வெளியிடப்பட்டது.
முதல் மாநில மாநாட்டில் அண்டனூர் சுராவின் ‘ பிராண நிறக் கனவு ‘ சிறுகதைத்தொகுப்பு வெளியிடப்பட்டது.
இந்த நூல் குறித்து எனது வாசிப்பு அனுபவத்தை இங்கு பதிவுசெய்கின்றேன்.
புதிய தலைமுறையைச் சேர்ந்தவராயினும் இவரது ஆற்றல் முதிர்ச்சியடைந்த படைப்பாளிகளுக்கு நிகரானது. இத்தொகுப்பில் "மிடற்றுத்தாகம்" முதல் "
ம் " என்ற கதை வரையில் ஒவ்வொன்றும் தனித்துத் தெரிவதும் சிறப்பு.
அதனால் அயர்ச்சியின்றி வாசகரினால் எளிதாக நெருங்கவும் முடிகிறது.இவரது கதைகளில் அவதானிப்பு, பாத்திரச் சித்திரிப்பு, சுற்றுச்சூழல், இந்திய மாநிலங்களின் பண்பாட்டுக்கோலங்கள், பிரதேச பேச்சு மொழி வழக்கு, சமூகச்சிக்கல்கள், குடும்ப உறவுகள், குறியீட்டுப் படிமங்கள், நனவோடை உத்தி, பின் நவீனத்துவம் முதலான அம்சங்கள் அனைத்தும் முழுமை பெற்றிருப்பதனால், ஒவ்வொரு கதையும் ஆச்சரியப்படவைக்கின்றன.
அழுகிய நிலையில் ரஜினி பட வில்லன் மரணம்! இறப்பில் மர்மம், விசாரணையில் போலீஸ்
.
ரஜினியின் நடிப்பில் கடந்த 1994ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் வீரா. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக இந்தி நடிகர் மகேஷ் ஆனந்த் என்பவர் நடித்திருந்தார். இவர் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவர்.
மும்பையில் வசித்து வரும் இவர் பட வாய்ப்பு இல்லாமல் கடந்த 18 ஆண்டுகளாக தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்த வந்தார். கடந்த ஆண்டில் மட்டும் ஒரு படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் வேலை செய்யும் பெண் வழக்கம்போல் காலையில் வீட்டு கதவை தட்டியுள்ளார். திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்த போது அங்கு அழுகிய நிலையில் மகேஷ் ஆனந்த் பிணமாக கிடந்துள்ளார். அவருக்கு அருகில் சில மது பாட்டில்கள் கிடந்துள்ளன. மரணம் மர்மமான முறையில் நடந்துள்ளதால் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
மகேஷ் ஆனந்த், ரஜினியின் வீரா படத்தில் மட்டுமில்லாமல் விஜய்காந்தின் பெரிய மருது படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கற்றவை நற்றுணையாகும் - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...
.
படித்திடுவார் பல பேர்கள்
படித்திடுவார் பல பேர்கள்
பட்டந்தனை குவித்து நிற்பார்
பட்டம் பெற்ற பின்னாலே
பண்பதனை விட்டு நிற்பார்
பட்டம் யாவும் அவருக்கு
பணம் உழைக்க வழிசமைக்கும்
பண்பதனை வாழ்வில் அவர்
பறக்க விட்டே இருந்திடுவார்
அன்பு பாசம் நேசமெலாம்
அவர் படிப்பில் அடங்கிருக்கும்
ஆனாலும் அவர் மனமோ
அதன் பக்கம் அணுகாது
அதிகாரம் அகங் காரம்
அவரிடத்தே அமர்ந்து விடும்
அவர் படித்த படிப்பெல்லாம்
அழுதபடி பார்த்து நிற்கும்
கற்றவற்றை மனம் இருத்தி
கசடுதனை அகற்ற வேண்டும்
கற்றவற்றில் வரும் பொருளை
நற்றுணையாய் கொள்ள வேண்டும்
கற்றவற்றால் காசு தேடும்
கருத்தினையே மாற்ற வேண்டும்
கற்ற கல்வி சிறப்படைய
கண்ணியத்தை ஏற்க வேண்டும்