.
கவிஞர்கள் ஏழையாக இருந்து ஊர் ஊராக திரிந்து பாடிக்கொண்டு இருப்பார்கள். அப்படியான ஒரு கவிஞர்தான் இந்த சத்திமுத்தபுலவர்.
நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே
கவிஞர்கள் ஏழையாக இருந்து ஊர் ஊராக திரிந்து பாடிக்கொண்டு இருப்பார்கள். அப்படியான ஒரு கவிஞர்தான் இந்த சத்திமுத்தபுலவர்.
நாராய் நாராய் செங்கால் நாராய்’ என்ற இப்பாடல் எனக்கு பிடித்த
பாடல். மிகவும் எளிமையாகப் புரியக்கூடியது. புற்நானூற்றுத்தொகுப்பில் இடம் பெற்ற
பாடல் என்று தமிழாசிரியர் திரு. வேலையா குறிப்பிட்டுள்ளார்.
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே
வரி | பொருள் |
---|---|
நாராய் நாராய் செங்கால் நாராய் | நாரையே நாரையே சிவந்த கால்களை உடைய நாரையே |
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன | பழங்கள் நிறைந்த பனைமரத்து கிழங்கை பிளந்தது போன்ற |
பவளக் கூர்வாய் செங்கால் நாராய் | பவளம் போல் சிவந்த கூர்மையான அலகை கொண்ட செங்கால் நாரையே |
நீயும் நின் பேடையும் தென் திசைக் குமரியாடி | நீயும் உன் பெட்டையும் தென் திசையில் உள்ள கன்யாகுமரியில் நீராடிய பின் |
வட திசைக்கு ஏகுவீராயின் | வட திசைக்கு திரும்புவீரானால் |
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி | எங்கள் ஊரில் உள்ள சத்திமுத்த குளத்தில் தங்கி |
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி | நனைந்த சுவர்களையும் கூரையையும் கனைக்கும் பல்லிகளும் கொண்ட |
பாடு பாத்திருக்கும் என் மனைவியை கண்டு | வீட்டில் என்னை எதிர்பார்த்திருக்கும் என் மனைவியிடம் |
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில் | எங்கள் அரசன் மாறன் வழுதி ஆளும் மதுரையில் |
ஆடையின்றி வாடையில் மெலிந்து | குளிர்காலத்தில் சரியான ஆடையில்லாமல் உடல் மெலிந்துபோய் |
கையது கொண்டு மெய்யது பொத்தி | போர்வை இல்லாததால் கையைக் கொண்டு உடம்பை பொத்தி |
காலது கொண்டு மேலது தழீஇப் | காலைக் கொண்டு என் உடலை தழுவி |
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும் | பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பை போல உயிரை பிடித்து வைத்திருக்கும் |
ஏழையாளனை கண்டனம் எனமே | உன் ஏழைக் கணவனை கண்டோம் என்று சொல்லுங்கள்! |
நாரை நாரை பாடல் என்னை 1967 இக்கு கொண்டு போய்விட்ட்து. முழு பாடல் உம் மறந்து விட்ட்து. இளம் பள்ளி வாழ்வை நினைக்கவும் இந்த இனிமையாந எளிமையாகப் புரியக்கூடிய இந்த கவிதையை தந்து அழகு தமிழை மீண்டும் பருகத் தந்த பாஸ்கரன் அன்னார் இட்கு மிக்க மிக்க நன்றிகள். இப்படி பல காலத்தால் அழியாத பொக்கிஷங்களை தருக. சில ஆசைகள் : அப்பிலே தோய்த்து அதை அடித்து நாலுமத்தை தப்பினால் அது நம்மை தப்பதோ --- ஒட்டக்கூத்தர் , இலவம்பஞ்சு கவிதை - திரு சோமசுந்தரப்புலவர் . மீண்டும் நன்றிகள் தம்பி கணேஷ் melbourne
ReplyDeleteThank you for your wonderful explanation 😍😍😘
DeleteEngal Thamizh Ayyaa Sengamalam idhai vunarchipoorvamaaga vaguppil vilakkinaar. Muzhu paadalai thanthamaikku thangalukku koaadi nandri
DeleteManivannan KP Chennai
நாரை நாரை பாடல் என்னை 1967 இக்கு கொண்டு போய்விட்ட்து. முழு பாடல் உம் மறந்து விட்ட்து. இளம் பள்ளி வாழ்வை நினைக்கவும் இந்த இனிமையாந எளிமையாகப் புரியக்கூடிய இந்த கவிதையை தந்து அழகு தமிழை மீண்டும் பருகத் தந்த பாஸ்கரன் அன்னார் இட்கு மிக்க மிக்க நன்றிகள். இப்படி பல காலத்தால் அழியாத பொக்கிஷங்களை தருக. சில ஆசைகள் : அப்பிலே தோய்த்து அதை அடித்து நாலுமத்தை தப்பினால் அது நம்மை தப்பதோ --- ஒட்டக்கூத்தர் , இலவம்பஞ்சு கவிதை - திரு சோமசுந்தரப்புலவர் . மீண்டும் நன்றிகள் தம்பி கணேஷ் melbourne
ReplyDeleteபாடல் வறுமையின் கொடுமையை தெளிவாக உணர்த்துகிறது!!!
ReplyDeleteVery good
ReplyDeleteநமக்கெல்லாம் தமிழ் இலக்கிய சுவையை அருமையாக ஆக்கித் தந்திருக்கும் தங்களது முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ReplyDeleteஎன் வயது 72. இந்தக் கவிதையை இணைய தளம் மூலம் நினைவூட்டல் செய்தமைக்கு நன்றி. அப்போது நடுநிலைப்பள்ளியில் இந்தப் பாடலை படித்து அப்போது இருந்த உணவுப் பஞ்சத்தைத் தேற்றிக் கொள்வேன்.. இல்லாமையால் வாடும் மக்களுக்கு ஆதரவு அளிப்பது மானுடர் கடமை. உலகில் ஏதோ ஒரு மூலையில் இன்னும் வறுமை தொடர்ந்து வருவது மிகவும் துயரமான நிகழ்வு. பசியுற்றோருக்கு உணவு, ஆடை இல்லாதவர்க்கு ஆடை வீடற்றோருக்கு வீடு வழங்குவது நம் கடமை.
ReplyDeleteபாடல்களில் இரு நயங்கள் சொல்லவேண்டும்
ReplyDelete'பழம்படு' உரிச்சொல் கிழங்கிற்கானது. மரத்திற்கானது அல்ல. பனையின் பழுத்த கிழங்கு உள்ளே சிவப்பாக இருக்கும். அதனை நாரையின் வாய்ச்சிவப்பிற்கு ஒப்பிடுகிறார் புலவர்
'எம்மூர் சக்திமுத்தவாவியில் தங்கி' ஊரின் பெயர் சக்திமுத்தம் குளத்தின் பெயரல்ல.
அந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் 'பட்டீஸ்வரம்' (துர்கை ஸ்தலம் என்று பிரபலம') என்ற கிராமத்தை ஒட்டிய சிறு கிராமம். அங்குள்ள சக்தி சிவனைத் தழுவிகொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். இணையத்தில் பல விவரங்ககள் உள்ளன
அருமை, சிறப்பு பிறர்புரியும் படியாக விளக்கி உள்ளீர்கள் பாராட்டுக்கள் Sir
ReplyDeleteAmmkksuper
ReplyDeleteதன்நிலை என்ன என்பதை இவ்வளவு அழகாக ஒரு பாடலில் கூறுவது புலவருக்கே உரிய தனி சிறப்பு
ReplyDeleteS.ammu
ReplyDelete0786285589
S.ammu
ReplyDelete0786285589
I read this poem 75 years ago . I accessed this without being hopeful of getting it . I thank the person who obliged me . Kind regards.
Delete12-5-24. Shamyaprasa
அற்புதம்
ReplyDeleteமாறன் வழுதி ஆண்ட காலம் என்பதைக்கூறி அவரது ஆட்சி காலத்து நிலையையும் விளக்கிவிட்டார், கவிஞர்.
ReplyDelete