எஸ்.பொ.வின் மகன் மருத்துவர்
அநுர, சென்னையில் மித்ர பதிப்பகத்தின் சார்பில் முழுநாள் இலக்கிய விழாவை வெகு சிறப்பாக நடத்தி முடித்த பின்னர் சிட்னியிலும் ஒரு பெரு விழாவை 28-08-2004
ஆம்
திகதி
சிட்னி
ஹோம்புஷ் ஆண்கள் உயர்நிலைக்கல்லூரியில் நடத்தினார்.
இவ்விழாவில்
மூத்த
கவிஞர்
அம்பியின்
பவள
விழா நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அன்றைய விழாவில் மித்ர வெளியீடுகளான ஆசி. கந்தராஜாவின் உயரப்பறக்கும் காகங்கள், தமிழச்சி சுமதி தங்கபாண்டியனின் எஞ்சோட்டுப்பெண், நடேசனின் வண்ணாத்திக்குளம், கவிஞர் அம்பியின் அந்தச்சிரிப்பு, எஸ்.பொ.வின் சுயசரிதை வரலாற்றில் வாழ்தல் - இரண்டு பாகங்கள், எஸ்.பொ. ஒரு பன்முகப்பார்வை, மற்றும் பூ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
மண்டபம்
நிறைந்த
இலக்கிய
சுவைஞர்கள் . அனைவருக்கும் அன்று இராப்போசன
விருந்தும்
வழங்கினார்
அநுர.
இந்த
நிகழ்விற்கு
முருகபூபதி
தலைமை
ஏற்க,
ந.கருணகரன், பேராசிரியர் பொன். பூலோக சிங்கம், திருநந்த குமார்,
டொக்டர் ஜெயமோகன், மா. அருச்சுணமணி,
தனபாலசிங்கம், குலம் சண்முகம் ஆகியோருடன் இலங்கையிலிருந்து வருகை தந்த ஞானம் ஆசிரியர் மருத்துவர்
தி.ஞானசேகரன் தமிழகத்திலிருந்து வருகை தந்த தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் ஆகியோரும் உரையாற்றினர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்நிகழ்வின்
நிகழ்ச்சிகளை
ஒருங்கிணைத்து
அறிவித்தார்
ஓவியர் ஞானத்தின் புதல்வன் ஞானசேகரம் ரங்கன்.
பொன்னுத்துரையின்
வாழ்வில்
என்றும்
பக்கபலமாக
விளங்கிய திருமதி பொன்னுத்துரை அவர்களை மேடைக்கு அழைத்து அவருக்கு
பூச்செண்டு
வழங்கினார்
முருகபூபதியின்
மகள் பிரியாதேவி.
இந்நிகழ்வில்
நன்றியுரையை
நிகழ்த்தியவர்
மாத்தளை
சோமு அவர்களினால் எஸ்.பொ.வுக்கு 1989 இல் சிட்னியில் அறிமுகப்படுத்தப்பட்ட
பத்திரிகையாளர்
சுந்தரதாஸ்.