மேலும் சில பக்கங்கள்

தேர்தல் ! - எம் . ஜெயராமசர்மா ...


image1.JPG

                பாலாறும் தேனாறும்
                   பாய்ந்தோடும் ஊரெல்லாம்
                பலருக்கும் இலவசங்கள்
                     பக்குவமாய் கிடைத்துவிடும்
                வேலையற்ற அனைவருக்கும்
                      விரைவில் வேலைகொடுத்திடுவோம்
                வாக்களித்துத் தேர்தலிலே
                        வாகைசூட வைத்திடுங்கள் !

              ஆட்சிதனில் அமர்ந்தவுடன்
                      அனைவரையும் அணைத்திடுவோம்
              அக்கிரமங்கள் அனைத்தையுமே
                      அடியோடு அழித்திடுவோம்
               போக்குக்காட்டிப் பொய்யுரைக்கும்
                      பொறுப்பற்ற தலைமைகளை
               தேர்தல்தனில் வென்றபின்னர்
                       திசைதெறிக்க ஓடவைப்போம் ! 

             காவல்த்துறை நீதித்துறை
                  கசடனைத்தும் களைந்தெறிவோம்
            கற்பழிப்பு வழிப்பறிக்கு 
                   காட்டமாட்டோம் கருணையினை 
             போதைவகைப் பாவனையை 
                   பொங்கிநின்று பொசுக்கிடுவோம்
            காதலுடன் வாக்களித்து
                  தேர்தல்வெல்லச் செய்திடுங்கள் !

இலங்கைச் செய்திகள்


காணாமல்போனோரின் தேடுதல் நடவடிக்கைக்கு எச் சந்தர்ப்பத்திலும் நான் தயார் : யாழில் ஜனாதிபதி

ஜனாதிபதியை சந்தித்தார் இளவரசர்

மக்களுக்கு சேவை செய்வதில் வேறுபாடு காட்டுவதில்லை ; வவுனியாவில் ஜனாதிபதி

 தமிழர்களை மிரட்டிய இராணுவ அதிகாரி இடை நிறுத்தம்

 "அவமதிப்பான நடத்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் பதவியை தொடரலாம்" ஜனாதிபதி

கழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு



காணாமல்போனோரின் தேடுதல் நடவடிக்கைக்கு எச் சந்தர்ப்பத்திலும் நான் தயார் : யாழில் ஜனாதிபதி

05/02/2018 காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகேற்ப தேவையான கலந்துரையாடல், தேடுதல் நடவடிக்கைகளுக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
யாழ். மாநகர சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற இம்மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி இங்கு மேலும்  உரையாற்றுகையில்,
1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ள காங்கேசன்துறையிலிருந்து பருதித்துறை வரையிலான ஏ பீ 21 வீதியை மக்களுக்காக திறந்து வைக்கவுள்ளேன்.
இவ்வீதியை திறந்து வைப்பதன் மூலம் மக்களுக்கு சுமார் 50 கிலோமீற்றர் பயணத்தூரம் குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், எவ்வித பேதங்களுமின்றி யாழ் மக்களுக்கு அபிவிருத்தியின் நன்மைகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி என்றவகையில் தான் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.

நூல் விமர்சனம்: வாழ்வனுபவங்களை இரசனையுணர்வுடன் பேசும் சொல்லவேண்டிய கதைகள் நீலாம்பிகை கந்தப்பு



நூல் விமர்சனம் "சொல்லவேண்டிய கதைகள்" நீலாம்பிகை கந்தப்பு - இலங்கை

தனது வாழ்வின் அனுபவங்களை நகைச்சுவையுடன் இரசனை குன்றாது எழுதுபவர் முருகபூபதி.  அவ்வாறு அவர் எழுதிய தொடர்தான் 'சொல்லவேண்டிய கதைகள்'. இலங்கை வடபுலத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் 20 மாதங்கள் தொடர்ந்து வெளியான இந்தத்தொடர் தற்போது ஜீவநதியின்  82 ஆவது வெளியீடாக எமது கரங்களுக்கு கிட்டியுள்ளது.

சொல்லவேண்டிய கதைகள் தொடர்பான எனது மன வெளிப்பாடுகளைப் பகிர விரும்புகின்றேன்.

வழித்துணை (சிறுகதை) - கானா பிரபா



சிட்னியின் பரபரப்பான காலை வேளை என்பதைக் காட்டுகிறது விசுக்கி விசுக்கிப் போகும் ஒவ்வொருவரினதும் வேக நடைவேலைக்குப் போகும்கூட்டத்தோடுடிசம்பர் தொடங்கி ஜனவரி ஈறாக விடுமுறைக் கழிப்பில் இருந்து மீண்டு இன்று தொடங்கும் பள்ளிக்கூட மாணவரும் சேர்ந்துகொள்ளரயில் நிலையம் கூட்டத்தால் நிரம்பி வழிகிறதுமஞ்சள் கோட்டுக்கு இந்தப் பக்கமாக நில் என்ற அறிவிப்பு எழுத்துகளையும் காலால்மிதித்துக் கொண்டு சனம் முன்னே கடந்து போகிறது.
காலை 7.17 க்கு North Sydney செல்லும் ரயிலின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்ஒவ்வொரு நாளும் கணக்காக அதே ரயிலைப் பிடிப்பதால்அதன் ஐந்தாம் பெட்டியின் கதவு எங்கே திறக்கும் என்ற கணிப்புத் தப்பாமல் காத்து நிற்பேன்என்னைப் போலவே ஒவ்வொரு பெட்டியிலும் ஏறத்தனித் தனிக் கூட்டம் நிற்கும்இதோ அவன் வந்து விட்டான்கூடவே தாயும் தாயின் கையில் ஒரு கைக்குழந்தையும்அந்த சீனப் பையனும் North Sydney இல் இருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கிறான்.
பள்ளிச் சீருடையும் இரண்டு கைகளிலும் பிணைத்த புத்தகப் பையும்தொப்பியும் போட்டுக் கொண்டு சிலுப்பிக் கொண்டே அதே இடத்துக்குவருவான் தன் தாயுடன்.

ஒவ்வொரு நாளும் மகனைக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டுத் திரும்புவாள் போல.
கைகளை அகல விரித்து அவன் ஆயிரம் கதைகள் பேசதாய்க்காரியோ கதை கேட்டுக் கொண்டே அவனின் தலையை வருடிக் கொண்டேஇருப்பாள்சில நேரத்தில் தாயை இறுக அணைத்துத் தன் பாசத்தை வெளிப்படுத்துவான்அவளும் அவன் தலையை மோந்து பார்க்குமாற் போலமுத்தமிட்டுத் தடவுவாள்.
சில சமயம் பொட்டலத்தைப் பிரித்து ஏதாவதொன்றைத் தின்னக் கொடுப்பாள்அவனும் வாய்க்குள் அள்ளிப் போட்டு அவதி அவதியாகச்சாப்பிடுவான்.
ரயிலில் இருந்து எதிரே இருக்கும் இவர்களின் பாச விளையாட்டைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டு
புத்தகம் வாசித்துக் கொண்டு வருவேன்.
இவனின் வயதில் தான் நானும் தான் எத்தனை திருவிளையாடல்களைச் செய்திருக்கிறேன்இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கும்ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு கள்ளத் தீனி வேணும் எனக்குபுளூட்டோகுளுக்கோ ரச என்று ஆச்சி கடையில் இருக்கிறதில் தொடங்கிவீட்டில் அம்மாவை அரியண்டப்படுத்தி ஒவ்வொரு நாளும் வாய்க்கு ருசியாகச் செய்து தர வேண்டும் என்று போராட்டம் தான்.
உனக்கு வாய் முழுக்கச் சூத்தைப் பல்லு வரப் போகுது கக்காக்குள்ள புழுவெல்லாம் வரும் பார்” என்று அதட்டியெல்லாம் பார்ப்பார் அம்மா.

கமலாதம்பிராஜா - அஞ்சலி நினைவுக்குறிப்புகள் - முருகபூபதி




அஞ்சலி:
மூத்த ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா (1944-2018)
வீரகேசரி குடும்பத்திற்கு நினைவுகளைத்தந்துவிட்டு கனடாவில் விடைபெற்ற சகோதரி
                                                                                 முருகபூபதி
வாழ்வின் அந்திம காலங்களில் தனித்துவிடப்படுபவர்கள், விடப்பட்டவர்கள் பற்றி அறிந்திருக்கின்றேன். அவ்வாறு தனித்தே வாழ்ந்திருக்கும் ஆளுமைகள் பற்றி பேசியும் எழுதியும் வந்திருக்கின்றேன்.
சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வீரகேசரி பிரசுரமாக ஒரு நாவல் வெளிவந்தது. ' நான் ஓர் அனாதை' என்ற அந்த நாவலை எழுதியவர் கமலா தம்பிராஜா. கதை மறந்துவிட்டது! அவர் அந்தத்தலைப்பில் ஏன் எழுதினார்? என்பதற்காகவாவது மீண்டும் அதனைத்தேடி எடுத்துப்படிக்கவேண்டும்போலிருக்கிறது. நானறிந்தவரையில் சகோதரி கமலா, தனது தனிப்பட்ட வாழ்வின் பெரும்பொழுதுகளை தனிமையில் கழித்திருந்தாலும், அவர் சார்ந்திருந்த ஊடகத்துறையில் பலருக்கும் மத்தியில் கலகலப்பாக உரையாடிவாறு  இயங்கிக்கொண்டே  இருந்தவர்.
கடந்த 7 ஆம் திகதி அவர் கனடாவில் டொரொன்டோவில் காலமானார் என்ற  தகவல் கிடைத்ததும் உடனடியாக அதனை ஊர்ஜிதப்படுத்திக்கொள்வதற்காக கனடாவில் வதியும் வீரகேசரியின் முன்னாள் விளம்பர - விநியோக முகாமையாளர் திரு.து. சிவப்பிரகாசம் அவர்களைத்தொடர்புகொண்டேன்.
அதன்பின்னர், இலங்கையிலிருக்கும் ' கலைக்கேசரி' ஆசிரியை திருமதி அன்னலட்சுமி இராசதுரை அவர்களுக்கும் செய்தி சொல்லி துயரத்தை பகிர்ந்தேன்.
வீரகேசரியிலிருந்து கமலா, தகவல் அமைச்சிற்குச்சென்ற பின்னர் அவ்வப்போது எங்கள் அலுவலகத்திற்கு வந்தால் நெடுநேரம் அன்னலட்சுமி அக்காவுடன்தான் பேசிக்கொண்டிருப்பார்.
வீரகேசரி பத்திரிகையில் செல்வி கமலா தம்பிராஜா 1970 களிலேயே ஊடகவியலாளராக தனது தொழிலை ஆரம்பித்தவர். அதன்பிறகு 1972 இல் நான் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபராக அங்கு இணைந்தேன்.
அதனால் அவர் எனக்கு மூத்த ஊடகவியலாளர். 1977 இல் நான் அங்கு ஒப்புநோக்காளராக ( Proof Reader) வேலைக்குச்சேர்ந்த வேளையில் கமலா, தகவல் அமைச்சின் செய்தித்தொடர்பாளர் பணியில் இணைந்துவிட்டார்.

மூத்த ஊடகவியலாளர் செல்வி கமலா தம்பிராஜா கனடாவில் காலமானார்


அஞ்சலி:
மூத்த ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா நினைவுகள்
                                                                            முருகபூபதி
இலங்கையின் மூத்த தமிழ் ஊடகவியலாளர் செல்வி கமலா தம்பிராஜா கடந்த 7 ஆம் திகதி காலை கனடாவில் டொரொன்டோவில் காலமானார்.
இலங்கையில் நான் பணியாற்றிய வீரகேசரி பத்திரிகையில் செல்வி கமலா தம்பிராஜா அவர்களும் பணியாற்றினார். 1970 களிலேயே அவர் அங்கு ஊடகவியலாளராக தனது தொழிலை ஆரம்பித்தவர். அதன்பிறகு 1972 இல் நான் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபராக அங்கு இணைந்தேன்.
அதனால் அவர் எனக்கு மூத்த ஊடகவியலாளர். 1977 இல் நான் அங்கு ஒப்புநோக்காளராக ( Proof Reader) வேலைக்குச்சேர்ந்த வேளையில் கமலா, தகவல் அமைச்சின் செய்தித்தொடர்பாளர் பணியில் இணைந்துவிட்டார்.
அவ்வப்போது வீரகேசரி அலுவலகம் வந்து தனது நண்பர்கள் சிநேகிதிகளுடன் உறவைப்பேணிக்கொண்டிருந்தார். அவர் எழுதிய நாவல்   'நான் ஒரு அனாதை' வீரகேசரி பிரசுரமாக வெளியானது. கமலா யாழ்ப்பாணத்தில் பிரபல வேம்படி மகளிர் கல்லூரியில் தனது உயர்தர வகுப்பைத்தொடர்ந்த காலத்திலேயே எழுத்தாற்றல், பேச்சாற்றல் நிரம்பிய ஆளுமைமிக்க பெண்ணாக திகழ்ந்ததாக அவருடைய ஆசிரியை,  தற்பொழுது சிட்னியில் வதியும் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார். வேம்படி மகளிர் கல்லூரியிலிருந்து பேராதனை பல்கலைக்கழகத்திற்கு பிரவேசித்த கமலா,  பட்டம் பெற்றதும் ஊடகவியலாளராகவே வீரகேசரியில் இணைந்தவர்.
அதனால் செய்தி எழுதுவது, வரும் செய்திகளை செம்மைப்படுத்துவது, மொழிபெயர்ப்பது முதலான துறைகளிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வந்திருப்பவர்.  பின்னாளில் இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தவர்.
இலங்கையில் முதல் முதலில் ரூபவாஹினி தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது, அங்கு  தமிழ் செய்தி வாசிப்பாளராகவும் சிறுவர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். ஈரானிய உயர் ஸ்தானிகராலயத்திலும்  செய்தித் தொடர்பாளராகவும் சேவையாற்றியவர்.

மெல்பனில் பாரதி பள்ளியின் மற்றும் ஒரு புதிய வளாகம் உதயம் - ரஸஞானி









மெல்பன் பாரதி பள்ளியின் மற்றும் ஒரு மைல்கல்
சவுத்மொராங் பிரதேசத்தில் புதிய வளாகம் ஆரம்பம்
                                                                               ரஸஞானி
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்வோம்!" என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் அவுஸ்திரேலியா மெல்பனில் 1994 ஆம் ஆண்டு உதயமாகியது  பாரதி பள்ளி.  1987 இற்குப்பின்னர் அவுஸ்திரேலியாவிற்குப்புலம் பெயர்ந்த  கலைஞரும் எழுத்தாளருமான மாவை நித்தியானந்தனின் முயற்சியினால் இங்கு தொடங்கப்பட்ட மெல்பன் கலை வட்டத்தின் ஏற்பாட்டில் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட "பெற்றோர் பிள்ளைகள் உறவு" என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட முழுநாள் கருத்தரங்கின் பெறுபேறுதான் பாரதி பள்ளியின் தோற்றம்.
வெள்ளிவிழாக்காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பாரதி பள்ளியின் வளர்ச்சியில் தொடர்ச்சியாக ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்த மெல்பன் வாழ் தமிழ் அன்பர்கள், தமிழ் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவருக்கும் மற்றும் ஒரு நற்செய்தியை பாரதி பள்ளி நிருவாகத்தினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கியிருக்கிறார்கள்.
மலர்ந்துள்ள புதிய ஆண்டு முதல் மற்றும் ஒரு பாரதி பள்ளி வளாகத்தை சவுத்மொராங் (South Morang) என்னுமிடத்தில் ஆரம்பித்திருக்கிறார்கள்.  
கடந்த  7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதிய வளாகத்தின் தொடக்கவிழா சிறப்பாக நடந்தது. பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்களுடன் புதிய மாணவர்களான குழந்தைகளும் பங்கேற்று விழாவை களைகட்டச்செய்தனர்.
தொடக்கவிழாவை  City of Whittle sea  பிரதேச துணைமேயர் செல்வி எமிலியா ஸ்டெர்ஜோவா அவர்களும், சவுத்மொராங் கனிஷ்ட பாடசாலை அதிபர் திரு. பில் பனஸ் அவர்களும் மங்கல விளக்கேற்றித் தொடக்கிவைத்தனர்.
               பாரதி பள்ளியின் வளாகங்கள் மெல்பனில் East Bur wood ,  Dandenong     ,  Clayton , Reservoir, Berwick, Dandenong North ஆகிய பிரதேசங்களில் இயங்கிவருகின்றன. மெல்பனில் சவுத்மொராங் பிரதேசத்திலும் மற்றும் அதனைச்சூழ்ந்துள்ள எப்பிங், வொலார்ட், மேர்ண்டா, டோரின், மில்பார்க், லேலோர் முதலான பிரதேசங்களிலும் குடியேறி வசிக்கத்தொடங்கியிருக்கும் தமிழ்க்குடும்பங்களின் பிள்ளைகளின் நலன் கருதி புதிதாக இங்கும் ஒரு வளாகம் தொடங்கப்பட்டுள்ளது.
"வாழ்க வாழ்க பாரதி பள்ளி என்றும் வாழ்க வாழ்கவே " எனத்தொடங்கும் பாடசாலைக்கீதத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. பாரதி பள்ளியின் வளர்ச்சியை தொடர்ந்து அவதானித்து வருகின்றமையால், அதன் தொடர்ச்சியில் கடந்து  சென்ற மைல் கற்களும் நினைவுக்கு வருகின்றன.



உலகச் செய்திகள்


மாலைதீவில் அரசியல் குழப்பம் ; முன்னாள் ஜனாதிபதி கைது : அவசரகால நிலை பிரகடனம்

சிரியா விமான மற்றும் ஷெல் தாக்குதலில் 29 பேர் பலி!!!

காஷ்மீர் மக்களுக்கான அரசியல், இராஜதந்திர ஆதரவினை வெளிப்படுத்தியது பாகிஸ்தான்

பன்னிரண்டு குழந்தைகள் படுகொலை









மாலைதீவில் அரசியல் குழப்பம் ; முன்னாள் ஜனாதிபதி கைது : அவசரகால நிலை பிரகடனம்

06/02/2018 மலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூம் மற்றும் அந்நாட்டின் பிரதம நீதியரசர் அப்துல்லா சயீட் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அவசரகாலநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
தனது பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்ற நிலை உள்ளதால், அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் எதிர்வரும் 15 நாட்களுக்கு அவசரகாலநிலையை பிரகடனம் செய்துள்ளார்.
மாலைதீவின் முன்னாளல் ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூமின் வீட்டை நேற்றிரவு சுற்றிவளைத்த மாலைதீவு பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளதுடன் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அந்நாட்டின் பிரதம நீதியரசர் அப்துல்லா சயீட்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாலைதீவெங்கும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா - ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திரை விமர்சனம்


ஆந்திராவில் உள்ள மலைக்கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் விஜய் சேதுபதி. களவாடுவதையே தொழிலாக கொண்டுள்ள அந்த ஊர் மக்கள், அதிலும் சில விதிமுறைகளை பின்பற்றுகின்றனர். ஒருவரை துன்புறுத்தி, கொடுமை செய்து களவு செய்யக்கூடாது என்பதில் அந்த ஊர் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். இந்நிலையில், விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் மற்றும் ராஜ்குமார் தமிழ்நாட்டுக்கு வந்து கொள்ளையடிக்கின்றனர்.<
/div>
இவ்வாறாக திருடி வரும்போது, ஒருநாள் நாயகி நிகாரிகாவின் போட்டோவை ஒருவீட்டில் பார்க்கிறார் விஜய் சேதுபதி. இதையடுத்து நிகாரிகாவை பற்றிய விவரங்களை சேகரிக்கிறார். அதில் நாயகி ஒரு கல்லூரியில் படித்து வருவது தெரிந்து அங்கு செல்கிறார்.
இதற்கிடையே நிகாரிகாவுக்கும், அவள் படிக்கும் கல்லூரியில் சீனியராக வரும் கவுதம் கார்த்திக்குக்கும் இடையே காதல் மலர்கிறது. இந்நிலையில், அங்கு வரும் விஜய் சேதுபதி நிகாரிகாவை கடத்தி தன்னுடைய கிராமத்திற்கு கடத்தி செல்கிறார். தனது காதலியை மீட்கும் முயற்சியில் இறங்கும் கவுதம் கார்த்திக், டேனியலையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு அந்த கிராமத்திற்கு செல்ல முயல்கிறார்.
கடைசியில் கவுதம் கார்த்திக் நிகாரிகாவை மீட்டாரா? விஜய் சேதுபதி ஏன் நிகாரிகாவை கடத்தினார்? அவருக்கும், நிகாரிகாவுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
களவாணியாக விஜய் சேதுபதி விறைப்பாக நடித்திருக்கிறார். ரமேஷ் திலக், ராஜ் குமாருக்கு இடையேயான காமெடிக்கு நடுவே விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றமும், அவரது உடற்மொழியும் மிடுக்காக இருக்கிறது. வித்தயாசமான கெட்டப்களில் வந்து ரசிக்க வைக்கிறார். கவுதம் கார்த்திக் ஒரு கூலான மாணவனாக, வெகுளித்தனத்துடன் வந்து ரசிக்க வைக்கிறார். கவுதம் கார்த்திக் – டேனியல் இணையும் காட்சிகள் காமெடியின் உச்சகட்டம்.
கொடுத்த கதாபாத்திரத்தை பிசிறின்றி பதிவு செய்திருக்கிறார் காயத்ரி. நிகாரிகா அழகு தேவதையாக வந்து ரசிக்க வைக்கிறார். அவரது துணிச்சலும், பாவனைகளும் ரசிகர்கர்களுக்கு விருந்தாக அமைகிறது. ரமேஷ் திலக், ராஜ்குமார் இணைந்து செய்யும் காமெடியை ரசிக்கும்படியாக இருந்தாலும், மேலும் ரசிக்க வைத்திருக்கலாம். டேனியல் மனதில் நிற்கும்படியாக காமெடியில் கலக்குகிறார்.
மலைக்கிராமத்தில் வாழ்ந்து கொண்டு களவு தொழில் செய்து வரும் நாயகன், நகரத்துக்கு வந்து இங்குள்ள நாயகியை கடத்திச் செல்லும்படியாக கதையை நகர்த்தினாலும், அதிலும் ஒரு பிளாஸ்பேக் வைத்து வழக்கமான ஒன்றாக காட்டியிருக்கிறார் இயக்குநர் ஆறுமுககுமார். படத்திற்கு முக்கிய பலமே காமெடி தான். அந்த காமெடிக்காக படக்குழு கடுமையாக உழைத்திருந்தாலும், காமெடியை மேலும் வலுப்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. மற்றபடி படம் மசாலா கலந்து காட்டப்பட்டுள்ளது சிறப்பு.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது. பின்னணி இசையும் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ எல்லா நாளும் நன்நாளே.

நன்றி tamilcinemas.news