தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைக்கான பயிற்சிப் பரீட்சை Selective School Practice Test 26/02/2018 Homebushதெரிவுசெய்யப்பட்ட பாடசாலைக்கான பயிற்சிப் பரீட்சை
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் சிறந்த மாணவர்களுக்கான
தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைக்கான பயிற்சிப் பரீட்சை தமிழ்ச்
சிறார்களுக்கென கடந்த மூன்று வருடங்களாக சிட்னியில் நடைபெற்று
வருகின்றது. இந்தப் பரீட்சை நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கத்தால்
நடாத்தப்படும்  தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைக்கான பரீட்சை ஒழுங்கு
முறையிலேயே நடாத்தப்படுகின்றது. அத்துடன் இப்பரீட்சையில் தோற்றும்
மாணவர்களுக்கு அவர்களது பெறுபேறுகள் உடனடியாக வழங்கப்படுவதுடன்இ
கேள்விகளுக்கான விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றன. இந்த
விளக்கப்பட்டறையில் பெற்றோர்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவது
ஒரு சிறப்பம்சமாகும்.

அனுபவம்மிக்க ஆசிரியர்களின் மேற்பார்வையில் இவ்வாறான பரீட்சைகளில்
அண்மைக்காலங்களில் தோற்றிய  மாணவர்களின் மீள்பார்வைக்
கருத்துக்களையும் உள்வாங்கி இப்பரீட்சைக்கான வினாத்தாள்கள்
தயாரிக்கப்படுகின்றன. இவ்வகையில்இ இப்பயிற்சிப் பரீட்சைகளில் கடந்த
காலத்தில்  தோற்றிய மாணவர்களது புள்ளிகள் அரசாங்கத்தால் நடத்தப்படும்
தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைக்கான பரீட்சைப் புள்ளிகளுடன் ஒத்ததாக
இருந்ததை காணக்கூடியதாக இருக்கின்றது. இப்பயிற்சிப் பரீட்சைகளில்
தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெறும் முதல் மூன்று மாணவர்களுக்கு
பரிசுகள் வழங்கப்படுகின்றன.
எனவே உங்கள் பிள்ளைகளுக்கான விண்ணப்பத்தை அனுப்பிவைப்பதுடன்இ
அவர்களுடன் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைக்கான பரீட்சைக்கு
தோற்றவுள்ள மற்ற மாணவர்களுக்கும் இதுபற்றி தெரிவித்துஇ இந்த
பரீட்சையில் தோற்றி முழுப் பயனையும் அடையுமாறு அன்புடன்
அழைக்கின்றோம்.
இப்பரீட்சை பற்றிய முழு விபரங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள
தாளில் உள்ளன.
தொடர்புகளுக்கு:
கேதீஸ் - 0433 088 725
பாஸ்கரன் – 0407 974 605
No comments: