அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
பயணியின் பார்வையில் - அங்கம் 18 கிண்ணியா பளிங்கு கடற்கரையில் குவியும் தென்னிலங்கை மக்கள் தம்பலகாமத்தில் குறிசொல்லும் பெண்களையும் மதம் மாற்றும் சமய அரசியல் முருகபூபதி
மாத்தளையிலிருந்து புறப்பட்டு கண்டிவந்து, அங்கிருந்து நீர்கொழும்பு வந்து இறங்கியதும், நண்பர் நுஃமானுடன் தொடர்புகொண்டு சுகமாக வந்து சேர்ந்துவிட்டதாகச்
சொன்னேன்.

மாத்தளையில் உறவினர்களை பார்க்கச்சென்று, மறுநாள் அதிகாலை புறப்பட்டு, ஊர் திரும்பியதும் வழியனுப்பியவருக்கு
சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் நுஃமானைத்தொடர்புகொண்டதும், அவர் " எங்கள் நாடு
முன்னேறவில்லை என்று யார் சொன்னது...? நேற்றுக்காலை கொழும்பில் மதியம் பேராதனையில்,
மாலையில்
கண்டியில், இரவு மாத்தளையில், மறுநாள் காலை நீர்கொழும்பில், ஆகா.... இலங்கையில்
பொதுப்போக்குவரத்தின் வேகம் அசத்துகிறது" என்றார்.

இலங்கையில் பாரதி -- அங்கம் 39 முருகபூபதி
இலங்
பாரதியின் கவிதைகளில் எளிமையும் ஓசைநயமும் சொற்சிக்கனமும் இருந்தமையால் இசைப்பாடல்களாகவும் அவை மாறிவிட்டன.

பாரதியும் தான் இயற்றிய
கவிதைகளை இராகத்துடன் பாடும் இயல்பைக்கொண்டிருந்தவர்.
பாரதியின் பக்தரான பாரதி தாசன் "பாரதிதான்
சிந்துக்குத்தந்தை " என்று எழுதியிருக்கிறார்.

சிந்துவகைப்பட்ட இசைப்பாடல்கள் பாரதிக்கு முன்பே மரபுவழியாக புனையப்பட்டிருக்கிறது என்று சொல்லும்
கணபதிப்பிள்ளையவர்கள், பாரதியின் எங்கள்
தாய் என்ற கவிதை காவடிச்சிந்திலே எழுதப்பட்டிருக்கும்
தகவலையும் பதிவுசெய்கிறார்.
" தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்" எனச்சொல்வதன் மூலம் அதன் தொன்மையை பாரதி குறிப்பிடுகிறார்.
தொன்று நிகழ்ந்திடும் யாவற்றையும் உணர்ந்துகொள்ளத்தக்கவர்கள்,
முக்காலங்களும் உணரும் முனிவர் வகையினைச்சார்ந்தவர்கள். அவர்களே, தமிழ்த்தாய் எப்போது
பிறந்தவள் என்று அறிந்து கூறமுடியாத இயல்பினையுடையவள்
அவள் என்று கூறுகிறார்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு
முன்தொடங்கியே கன்னித்தன்மை குலையாமல் வளர்ந்து வரும் இயல்பினை உடையவளாய் இருப்பதனாலேயே
அவளை இன்றும் " கன்னிதமிழ்" என்று
போற்றிவருகின்றோம். இன்று சிந்துவெளிமொழியினை ஆராய்ந்துகொண்டிருக்கும் உலகப்பேரறிஞர்கள்
கூட அவள் என்று பிறந்தவள் எனக்கூறமுடியாது கையை விரிக்கிறார்கள்.
நம்மை நிறைக்கட்டும் அந்த ஒளி - பவித்ரா
.

இருளிலும் இருளாக இருக்கும் ஐப்பசி அமாவாசை நாளில் இந்த உலகை ஒளியால் நிரப்பும் நாளாகத் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீப ஒளியின் பண்டிகையாக இருக்கும் தீபாவளியை இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்களும் நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர். வண்ண வண்ண ஒளிகளால் ஒவ்வொரு இதயமும் நிறையும் நாள் இது.
நரகாசுரனை கிருஷ்ணனும் சத்தியபாமாவும் சேர்ந்து கொன்ற தினமாக இந்துக்களால் தீபாவளி கொண்டாடப்படுகிறது. மகாவீரர் மோட்சத்தை அடைந்த தினமாக சமணர்களால் தீபாவளி அனுசரிக்கப்படுகிறது. அவரது கடைசி சம்வாதம் நடந்த அந்த நாள்தான் உத்தரதியாயன் சூத்திரம், விபாக் சூத்திரத்தை இந்த உலகுக்கு அளித்தார். அசோகர் பவுத்த சமயத்துக்கு மாறிய நாளை தீபாவளியாக பவுத்தர்கள் கொண்டாடுகின்றனர்.
பன்டிச்சோர் திவாஸ் என்ற பெயரில் சீக்கியர்கள் தங்களது ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளைத் தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர். அவருடன் சேர்ந்து 52 இந்து மன்னர்களையும் முகலாயப் பேரரசர் ஜஹாங்கிர் விடுவித்த நாள் அது. வீடுகள், குருத்வாராக்களில் தீபங்கள் ஏற்றி பட்டாசு, விருந்து, பரிசுகளுடன் குடும்பமாக சீக்கியர்கள் இந்நாளைக் கொண்டாடுகின்றனர்.
கறவை மாடு - யோகன் கன்பரா
.
தியாகுவின் கைத்தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அவன் எதிர்பார்த்தது போல சாந்தியின் தம்பி நடேசுதான். வெத்திலை சப்பிக்கொண்டே அவன் பேசுவது தெரிந்தது. இருமி செருமிக் கொண்டே பேசினான்.
" வேலுப்பிள்ளையரைக் கண்டனான். ஒன்றேகால் ரூபா வருமாம்." லட்சத்தை ரூபா என்பது அவ்விடத்து வழக்கம்.
" உதிலை அவர் கொமிஷனும் அடிப்பார்" கேட்டுகொண்டே கையில் அமர்ந்த நுளம்பை ஓங்கி அடித்தான் தியாகு.
"எல்லாம் ஜெர்ஸி குரொஸ் - கலப்பு. ஆனால் நல்ல கறவை மாடு. உன்னை போய் பார்க்கச் சொன்னார்."
" பத்து லீற்றர் கறக்குமோ?"
"அப்பிடித்தான் சொன்னார். "
"நம்பிக்கையான இடமோ?"
" புரட்டாசிக்கு முதல் முடிச்சால் நல்லது எண்டார். பிறகு விதைப்புக்காலம் வர விலை கூடினாலும் கூடுமாம்.
அவுஸ்ரேலிய கவிதைப் போட்டியில் தமிழ்ப் பெண்
.
அவுஸ்ரேலியாவில் சிறந்த கவிஞர்களை தேர்ந்தெடுப்பதற்காக Australian Poetry Slam champion போட்டி வருடா வருடம் இடம் பெற்று வருகின்றது. கடந்த பதின்நான்கு வருடங்களாக இப் போட்டி இடம்பெறுகின்றது. நாடு பூராகவும் நகரங்களிலும் , மாநகரங்களிலும் , மாகாணங்களுக்கிடையிலும் இறுதியாக தேசிய ரீதியிலும் இந்தப் போட்டிகள் நடத்தப் பட்டு வருகின்றது. 2017 ம் ஆண்டுக்கான தேசிய ரீதியிலான போட்டி சென்ற ஞாயிற்றுக் கிழமை 15.10 2017 அன்று சிட்னியின் புகழ் பூத்த Sydney Opera House stage இல் இடம் பெற்றது. இதில் சிட்னியில் வசிக்கும் இளம் தமிழ்ப் பெண்ணான செல்வி ஸ்ரீஷா ஸ்ரீதரன் 3 ம் இடத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 22 வயதான செல்வி ஸ்ரீஷா ஸ்ரீதரன் சிட்னியில் நடந்த Australian Poetry Slam champion போட்டியிலும் NSW வில் நடந்த போட்டியிலும் முதலாம் இடங்களில் வெற்றிபெற்று தேசிய ரீதியிலான போட்டிக்கு தெரிவாகிஇருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தப் போட்டியில் அவர் பாடிய கவிதையில் இன, நிற , மொழி , கலாசார வேறுபாடுகளின் வலி பற்றியும் அகதிகளாக புலம் பெயர்ந்து வந்த மக்களின் வலிகள் பற்றியும் கவிதையில் சாடியிருந்தார். ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிஞர்கள் பங்கு பற்றிய இந்த போட்டியில் இளம் தமிழ்ப் பெண்ணான செல்வி ஸ்ரீஷா ஸ்ரீதரன் 3 ம் இடத்திளலும் பன்னிரண்டு வயதான Solli Raphael முதலாம் இடத்தையும் தட்டிக் கொண்டார்கள்.

நட்சத்திர இயக்குநருக்கு உயிர் கொடுத்த பெண் ! - கி.மணிவண்ணன்
.

சிலிர்க்க வைக்கும் உண்மைக் கதை

''ஏழு மாசத்துல பொறந்த இது பொழைக்காது... எதுக்கு இன்னும் வீட்டுக்குள்ள வெச்சுக்கிட்டு வேடிக்கை பாக்கணும்? மூச்சு அடங்கற மாதிரி இருக்கு. நேரத்தோட பொதச்சுட்டு, மத்த வேலயப் பாருங்க.''
''வேண்டாம் அவசரப்படாதீங்க...''
- ஓடி வந்து அந்த பிஞ்சை அள்ளிக் கொண்டாள் ஒரு பெண்.
மரப்பாச்சி பொம்மைபோல, மூச்சு விடவே பலமில்லாத வகையில் பிறந்தது அந்த உயிர். அது, குறைமாதக் குழந்தைகளுக்கு 'இன்குபேட்டர்' வசதி இல்லாத காலம். அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ பார்த்தபின்... மண்ணைத் தோண்டி புதைத்துவிட்டு, வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விடும் கிராமத்துப் பச்சை மனிதர்களுக்கு நடுவில், ஓர் அன்பு தெய்வம் அக்குழந்தைக்கு உயிர்ப் பிச்சை கொடுத்தது!
''வயித்துல சுமந்து பெற்ற தாயைவிட, நான் என் முதல் தாயா நினைக்கறது அவங்களதான். என் வாழ்வை துவக்கி வைத்த, என் வாழ்க்கையில மிகமுக்கியமான பெண் அவங்கதான்!''
அந்த முதல் தாய்... டாக்டர் சாரா! ஏழு மாதத்திலேயே பிறந்த அந்த சிசு... திரைப்பட இயக்குநர் மகேந்திரன்!
உலகச் செய்திகள்
வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய ட்ரம்ப்
கார் குண்டுத் தாக்குதலில் பெண் ஊடகவிலாளர் படுகொலை!
பாலியல் புகாரால் பறிபோகிறது ஆஸ்கார் விருது
தாக்குதலுக்குத் தயாராகுங்கள்: யுத்தக் கப்பலுக்கு அமெரிக்கா உத்தரவு
வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய ட்ரம்ப்
18/10/2017 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை
மாளிகையில் உள்ள தனது ‘ஓவல்’ அலுவலகத்தில் இன்று (18) தீபாவளி
கொண்டாடினார். அவருடன், நிக்கி ஹாலே, சீமா வர்மா போன்ற அமெரிக்க-இந்தியப்
பிரமுகர்கள் மற்றும் அரசாங்கப் பிரமுகர்கள் பலரும் நிகழ்வில்
கலந்துகொண்டனர்.

மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்த ட்ரம்ப், அமெரிக்காவின் வளர்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்களின் பங்களிப்பைப் புகழ்ந்து பேசினார்.
“அமெரிக்காவின் கலைத்துறை, விஞ்ஞான, மருத்துவ மற்றும் பாதுகாப்புத் துறைகளிலும் பெரும்பங்களிப்புச் செய்திருக்கும் அமெரிக்கவாழ் இந்தியர்களை நான் இத்தருணத்தில் பாராட்டுகிறேன். இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு இருக்கும் நெருங்கிய தொடர்புகளை இந்நேரத்தில் நினைவுகூருகிறேன். அதுபோல், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான எனது உறுதியான நட்பையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
அவருடன், அவரது மகள் இவங்க்கா ட்ரம்ப்பும் நிகழ்வில் கலந்துகொண்டார். கடந்த தீபாவளி தினத்தன்று இவங்க்கா ட்ரம்ப், வேர்ஜீனியா மற்றும் ஃப்ளோரிடாவிலுள்ள இந்துக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைத்தவர் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ். எனினும், அவரது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற எந்தவொரு தீபாவளி கொண்டாட்டத்திலும் அவர் நேரடியாகக் கலந்துகொள்ளவில்லை. நன்றி வீரகேசரி

17/10/2017 உலகத் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரையும்
குலைநடுங்கச் செய்த ‘பனாமா பேப்பர்’ விவகாரத்தில் முன்னின்று உழைத்த
புலனாய்வு ஊடகவியலாளரான டெப்னி கொரோனா காலிஸியா நேற்று (16) படுகொலை
செய்யப்பட்டார்.

மால்ட்டாவின் கிராமங்களில் ஒன்றான மால்பினிஜா என்ற இடத்தில், இவர் தனது காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென கார் வெடித்துச் சிதறியதில் இவர் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து ஆராய்ந்த பொலிஸார், இது கார் குண்டுத் தாக்குதல் என்பதை உறுதிசெய்துள்ளனர்.
டெப்னியின் படுகொலை குறித்து கண்டனம் தெரிவித்துள்ள மால்ட்டா பிரதமர் ஜோசப் மஸ்கட், இது ஊடக சுதந்திரத்தின் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார்.
டெப்னியின் மோசடிக் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளவர்களில் பிரதமர் ஜோசப்பும் ஒருவர்.
மால்ட்டா தீவின் அரசியல்வாதிகள் பலரின் மோசடிகளை தனது ‘ப்ளொக்’ மூலம் அண்மைக்காலமாக வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் டெப்னி. ஐம்பத்து மூன்று வயதாகும் இவர், மூன்று பிள்ளைகளுக்குத் தாயாவார்.
பனாமா பத்திர விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த இருபத்தெட்டு ஊடகவியலாளர்களுள் டெப்னி பிரதானமானவர். நன்றி வீரகேசரி

16/10/2017 கடந்த 35 ஆண்டுகளாக ஹாலிவுட்டில் படவிநியோகம்
மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஹார்வி வெய்ன்ஸ்டீன் கடந்த 30
ஆண்டுகளுக்கும் மேலாக நடிகைகள், பெண் உதவியாளர்களுக்கு பாலியல் தொல்லை
கொடுத்து வந்ததாக கடந்த வாரம் பிரபல நாளிதழ் ஒன்று ஆதாரங்களுடன் விரிவான
செய்தி ஒன்றை வெளியிட்டது.

1998 ஆம் ஆண்டு வெளியாகி சிறந்த படம் உட்பட ஏழு ஆஸ்கர் விருதுகளை வென்ற படம் ‘ஷேக்ஸ்பியர் இன் லவ்’. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரே 65 வயது நிரம்பிய ஹார்வி வெய்ன்ஸ்டீன்.
இச் செய்தி தந்த உந்துதலை அடுத்து ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகள் தாமாகவே முன்வந்து ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை கூறி வருகிறார்கள்.
ஹாலிவுட்டில் மிக அதிக சம்பளம் பெரும் நடிகையும், இயக்குநருமான ஏஞ்சலினா ஜோலி மற்றும் கைனத் பால்ட்ரோ, காரா டெலவிங் உட்பட பல முன்னணி நடிகைகளும் துணை நடிகைகளும் புகார் கூறி வருகின்றனர்.
இச் செய்தி கசிவின் பின்னர் ஹார்வி வெய்ன்ஸ்டீனின் மனைவி அவரைவிட்டுப் பிரிந்து சென்றுள்ளார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பரப்புரைக்காக ஹார்வி வெய்ன்ஸ்டீனிடமிருந்து பெற்ற நன்கொடையை திரும்பி அளிக்கப்போவதாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் விருதுக் குழு ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு வழங்கிய ஆஸ்கர் விருதை திரும்ப ஒப்படைக்கக் கோரும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் பிரிட்டீஷ் திரைப்பட அகாடமியான ‘பாப்டா’ உறுப்பினர் பதவியிலிருந்து ஹார்வி வெய்ன்ஸ்டீனை நீக்கி இருக்கிறது.
நிலைமை கைமீறிச் சென்றதை அடுத்து ஹார்வி வெய்ன்ஸ்டீன் தனது கடந்த கால அழுக்கான வாழ்க்கைக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமெரிக்க புலனாய்வு அமைப்பு விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளது.
ஹார்வி மீது வழக்குத் தொடுக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 25 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நன்றி வீரகேசரி

20/10/2017 வடகொரியா மீது தாக்குதல் நடத்தத் தயாராக
இருக்குமாறு அமெரிக்க யுத்தக் கப்பல் ஒன்றுக்கு கட்டளை
பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் கடற்பகுதியில் கண்காணிப்புப் பணியில்
ஈடுபட்டிருக்கும் ஏவுகணை எதிர்ப்பு கப்பல் ஒன்றுக்கே இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
‘தோமாஹோக்’ ரக ஏவுகணையை வடகொரியா மீது ஏவத் தயார் நிலையில் இருக்குமாறு பெயர் குறிப்பிடப்படாத அக்கப்பலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அணுவாயுதப் போர் விளிம்பு நிலையில் இருக்கும் நிலையில், இந்த உத்தரவால்
வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்குமான போர் எந்தக் கணத்திலும் ஆரம்பமாகும்
சூழல் தோன்றியுள்ளது. நன்றி வீரகேசரி
இலங்கைச் செய்திகள்
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதம் இடைநிறுத்தம்!
பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் - ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு
சிறையில் சுந்தரகாண்டம் வாசிக்கும் நாமல் எம்.பி.
ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் தேசிய தீபாவளி விழா
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதம் இடைநிறுத்தம்!
17/10/2017 தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் மற்றும்
அவர்களின் விடுதலை கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்தன
சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து
கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமா
மெர்சல்

தளபதி படம் வருகின்றது என்றாலே
திரையரங்கிற்கு திருவிழா தான். அதே நேரத்தில் வெற்றிக் கூட்டணி அட்லீயுடன்
வருவது கூடுதல் சரவெடி தான். விஜய் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில்
எடுக்கப்பட்ட படம் மெர்சல், ரகுமான் இசை, ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்தின்
100வது படம், வடிவேலு ரீஎண்ட்ரீ என இவை அனைத்தையும் தாண்டி முதன் முறையாக 3
விஜய் நடிக்க, தளபதி தெறியை தொடர்ந்து மெர்சலில் மிரட்டினாரா? பார்ப்போம்.
கதைக்களம்

அதை தொடர்ந்து விஜய்யை விலைபேச நினைக்கும் டாக்டர்,
ப்ரான்ஸில் நடக்கும் மேஜிக் ஷோவில் கொல்லப்படுகின்றார். இதையெல்லாம்
செய்தது யார் என்று காவல்துறை அதிகாரி சத்யராஜ் தேடி வர மாறனாக இருக்கும்
பிடிப்படுகின்றார்.
அதே நேரத்த்தில் எஸ்.ஜே.சூர்யா மாறனை யதார்த்தமாக
தொலைக்காட்சியில் பார்க்க, அவருக்கு சில நினைவுகள் வந்து உடனே மாறனை கொல்ல
கட்டளையிடுகின்றார்.
உடனே அவரின் அடியாட்கள் மாறனை கத்தி முனையில்
வைக்க, அதை தொடர்ந்து பல சுவாரசிய முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்கின்றது.
எஸ்.ஜே.சூர்யா ஏன் மாறன் விஜய்யை கொலை செய்ய சொன்னார், எதற்கு ப்ரான்ஸில்
அந்த டாக்டரை விஜய் கொன்றார் என பல காட்சிகளுக்கான விடை இரண்டாம் பாதியில்
தெரிகின்றது.
படத்தை பற்றிய அலசல்
விஜய் ஒன் மேன் ஷோவாக படம்
முழுவதும் காலில் சக்கரம் கட்டி சரவெடியாக வெடிக்கின்றார். ஒரே நேரத்தில்
மருத்துவராக இருந்துக்கொண்டு, அப்படியே மேஜிக் செய்யும் காட்சிகள் படத்தில்
உண்மையாகவே எத்தனை விஜய் என்று யோசிக்க வைக்கின்றது. இதையெல்லாம் விட
தூக்கி சாப்பிடுவது மதுரை தளபதி தான்.
வேஷ்டி, சட்டை என மீசையை
முறுக்கி அவர் சண்டைப்போடும் காட்சிகள் ரசிகர்களுக்கு செம்ம விருந்து.
படத்தின் கதைக்களம் மக்களின் மிக முக்கியமான தேவைகளின் ஒன்று, அதில் விஜய்
போல் மாஸ் ஹீரோ நடிப்பது பட்டித் தொட்டியெல்லாம் இந்த பிரச்சனையை கொண்டு
சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில்
படத்தின் பல காட்சிகளில் விஜய்யை அரசியலுக்கு கொண்டு வரும் நோக்கத்திலேயே
தான் வசனங்கள் நிறைந்துள்ளது. ஏன் அட்லீ இப்படி? என்று கேட்க வைக்கின்றது,
ஆனால், ‘இன்று சிசேரியன் குழந்தை என்றால் ஆச்சரியமாக பார்க்கின்றார்கள்,
இன்னும் 30 வருடம் கழித்து சுகபிரசவம் என்றால் ஆச்சரியமாக பார்ப்பார்கள்’
என எஸ்.ஜே.சூர்யா பேசும் வசனம் தற்போதுள்ள சூழ்நிலையை கன்னத்தில் அறைந்தது
போல் உள்ளது.
எஸ்.ஜே.சூர்யா இரண்டு சீன் வந்தாலும் சரி, மூன்று சீன்
வந்தாலும் சரி தனக்கான கதாபாத்திரத்தில் கலக்கிவிடுகின்றார். ஆனால்,
அவ்வப்போது ஸ்பைடர் வாசனை வருகின்றது, கொஞ்சம் ரூட்டை மாற்றுங்கள் சார்.
படத்தின்
மிகப்பெரும் பலமே மதுரை போஷன் தான். விஜய்க்கும், நித்யா மேனனுக்கும் உள்ள
கெமிஸ்ட்ரி மிகவும் கவர்கின்றது. அதிலும் அவர் நித்யா மேனனிற்கு பிரசவம்
நடக்கும் போது தன் மூத்த பையனிடம் கதை சொல்லும் காட்சி செம்ம க்ளாஸ்.
அதே
நேரத்தில் படத்தின் நீளம் தான் பெரிய பிரச்சனையாகவே இருக்கின்றது. என்ன
தான் காட்சிகள் நன்றாக இருந்தாலும் படத்தின் நீளம் ஒரு கட்டத்தில் பொறுமையை
சோதிக்கின்றது. அதிலும் கிளைமேக்ஸ் எல்லாம் எம்.ஜி.ஆர் காலத்து பார்முலா.
டெக்னிக்கலாக
படம் மிகவும் பலமாக உள்ளது, அதிலும் விஷ்ணுவின் ஒளிப்பதிவு முதல் படம்
என்று யார் சொன்னாலும் நம்ப முடியாது. ரகுமானின் பாடல்கள், பின்னணி இசை
ரசிக்க வைக்கின்றது, ஆளப்போறான் தமிழன் ரிப்பீட் மோட் தான்.

க்ளாப்ஸ்
படத்தின் கதைக்களம் தற்போது நாட்டில் நிலவும் விஷயங்களுக்கு மிக ஏற்ற கதை.
விஜய் ஒரே ஆளாக படத்தை தாங்கி செல்கின்றார். பாடல் காட்சிகளில் எல்லாம் இந்த வயதிலும் நடனத்தில் தூள் கிளப்புகின்றார்.
மதுரை ப்ளாஷ்பேக் காட்சிகள். விஷ்ணுவின் ஒளிப்பதிவு, ரகுமானின் இசை
பல்ப்ஸ்
சத்யராஜ்,
காஜல், சமந்தா இவர்கள் எல்லாம் படத்தில் இருக்கின்றார்கள். ஆனால், ஏன்
இருக்கின்றார்கள் என்பதை மக்கள் மட்டுமில்லை இயக்குனரே மறந்துவிட்டார்.
வடிவேலுவின் எந்த ஒரு காமெடி காட்சியும் பெரிதும் க்ளிக் ஆகவில்லை.
படத்தின் நீளம், இன்னும் கொஞ்சம் காட்சிகளை குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் மெர்சலில் விஜய் சொன்னது போல் அவர் மிரட்டிவிட்டார், ஆனால், அட்லீ மிரட்டவில்லையே...