புரியாத புதிர்

புரியாத புதிர் நீண்ட நாளாய்
எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று. பெயர் மாற்றப்பட்டு நாட்கள் நகர்ந்து
போய் தற்போது வெளியாகியிருக்கிறது. படத்தின் பெயர் போல கதைக்குள்
ஒளிந்திருக்கும் சம்பவம் என்ன, புதிர் புரியுமா என பார்ப்போம்.
கதைக்களம்
விஜய்
சேதுபதி ஒரு கிடார் இசைக்கலைஞர். தன் நண்பனின் இசைக்கருவிகள் தொழிலை
கவனித்து வருகிறார். வயலின் வாங்க கடைக்கும் வரும் ஹீரோயின் காயத்திரியின்
நட்பு கிடைக்கிறது.
காயத்திரி இசை ஆசிரியையாக பணி செய்கிறார். இருவரும் நெருங்கிய
நண்பர்களாக பின் காதல் மலர்கிறது. இவரின் அன்பான கல்லூரி தோழி ஒரு
கட்டத்தில் தற்கொலை செய்துகொள்கிறார்.
கதையின் ட்விஸ்ட் இங்கே தான்.
சமூக வலைதளக்குற்றங்கள், சைபர் கிரைம் என காயத்திரியை சுற்றுகிறது. மீராவாக
நடித்திருக்கும் இவரின் பின்னணியில் நடக்கும் சம்பவங்கள் விஜய்
சேதுபதிக்கு தெரியவர அவர் நிலை குலைந்து போகிறார்.
தன் நண்பன்
தற்கொலை செய்துகொண்டது, காயத்திரி சம்பவம் என அடுத்தடுத்த நிகழ்வால் விஜய்
சேதுபதியின் குணங்களில் வரும் திடீர் மாற்றம் காயத்திரிக்கு ஒரு ட்விஸ்ட்.
ஒரு கட்டத்தில் விசயம் இவருக்கு தெரியவர இவரும் தற்கொலைக்கு முயல்கிறார்.
விஜய்
சேதுபதி தன் நிலையில் இருந்து மீண்டாரா, காயத்திரி உயிருக்கு என்னானது,
சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார், அமானுஷ்யமா, திட்டமிட்ட சதியா
என்பது புரியாத புதிரின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
விஜய்
சேதுபதி ஒரு நகரத்து இளைஞராக கலக்கியிருக்கிறார். அவரின் நடிப்பு,
சூழ்நிலையால் குணம் மாறும்விதம் என டபுள் ஆக்ட் போல தோன்றும். அவரின் உடல்
அசைவுகள், நடிப்பிற்கு உணர்வுகள் கொடுக்கிறது.
காயத்திரி விஜய்
சேதுபதிக்கு பொருத்தமான ஜோடியாக மாறியிருக்கிறார். ஒரு கட்டத்தில் இவரும்
கதைக்கு ட்விஸ்டாக மாறியது எதிர்பாராத ஒன்றாக இருக்கும்.
விஜய்
சேதுபதியின் படங்களில் ஹூயூமர் இருக்கும். ஆனால் இப்படத்தில் நண்பனாக
அர்ஜுனன் வந்தாலும் பெரிதளவில் காமெடிகள் எதுவும் இல்லை. ஹீரோவுக்கு
வைக்கப்படும் செக் சமீபத்தில் பரவி வரும் ப்ளூ வேல் கேம் போல தோன்றும்.
ஹீரோ
ஹீரோயின் ரொமான்ஸ் தான் படத்தில் தனித்துவம். இருவருக்கும் கெமிஸ்ட்ரி
ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. அதற்கேற்ப பாடல்களும் ஓகே. இடையில் திடீரென
வந்து கைதாகும் ரமேஷ் திலக் எங்கிருந்து வந்தார், எதற்காக வந்தார் என்பது
சஸ்பென்ஸ்..
வேறொருவரின் தற்கொலையில் நாமும் ஒரு காரணமாக
இருக்கிறோம். தற்கொலை பிரச்சனைகளுக்கு தீர்வல்ல. பார்க்கும் பார்வை கூட
தற்கொலைக்கு தூண்டும் என சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
க்ளாப்ஸ்
விஜய் சேதுபதியை பாராட்ட வேண்டும். கதை தேர்ந்தெடுத்த விதம், அதற்கு ஏற்ப மாறிய விதம், ரொமான்ஸ் என ஸ்கோர் அள்ளுகிறார்.
மீரா என்ற பெயர் காயத்திரிக்கு பொருந்தியதோடு விஜய் சேதுபதியுடன் கெமிஸ்ட்ரியில் இணையாக நடித்திருக்கிறார்.
இயக்குனர் கதையை காட்டிய விதம் கச்சிதம், இருக்கையின் நுனியில் உட்கார வைத்துள்ளது. ஆங்காங்கே கதைக்கு தேவையான பின்னணி இசை.
பல்பஸ்
கதையில் சில இடங்களில் லாஜிக் இடிப்பது போல தோன்றலாம்.
ரமேஷ் திலக் வந்துபோகும் காட்சி கதையின் பாதையை மாற்றுகிறதோ என தோன்றுகிறது.
மொத்தத்தில் புரியாத புதிர் கதைக்கு சரியான பெயர். அத்தனை பொருத்தம். புதிரின் உச்சம், உணர்ச்சியுடன் விளையாடுகிறது.
நன்றி CineUlagam