மேலும் சில பக்கங்கள்

நன்றியுணர்ச்சி ! - எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண்

image2.JPG
.
        
          கோடியைக் கொடுத்து நிற்போம்
              கொடைதனில் சிறந்து நிற்போம்
          வாடிய வாட்டம் காணில்
                மனமெலாம் இரங்கி நிற்போம்
          கூடிய மட்டும் நல்லாய் 
               குணமுடன் நடந்தே நிற்போம் 
         ஆருமே சொல்ல மாட்டார்
             அதன் பெயர் நன்றியாகும் ! 
  
                        
       பிள்ளையின் பின்னால் நின்றாலும்
           பெரும்பாசம் கொடுத்துமே வளர்த்தாலும்
      கள்ளமே இல்லாமல் உழைத்தாலும்
            கருணையுடன் கடமைகளைச்  செய்தாலும்
     உள்ளமெல்லாம் உருக்கமே கொண்டாலும்
            ஊணுறக்கம் தனைத்துறந்து நின்றாலும்
     நல்லவரே எனும்நினைப்பும் வாராதே
          நன்றியுணர்வு என்பதுவுமே   மலராதே !

பயணியின் பார்வையில் -- அங்கம் 10 எல்லாம் கடந்துசெல்லும் வாழ்வில், சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முருகபூபதி



-->

நெல்லியடி பஸ் நிலையத்திலிருந்து  அச்சுவேலிக்குப்  புறப்படும்போது, " அடுத்து எங்கே செல்கிறீர்...?" எனக்கேட்டார் நண்பர் கேதாரநாதன்.
" அச்சுவேலியில் எனக்கு ஒரு பெறா மகள் இருக்கிறாள். அவளுக்கு கடந்த ஆண்டு திருமணமானது. என்னால் வரமுடியவில்லை. தற்பொழுது அவள் தாய்மையடைந்துவிட்டாள். பார்த்து வாழ்த்தவேண்டும்.  உபசரிக்கவேண்டும்" என்றேன்.
" இன்றும் நாளையும் உறவுகளைத்தான் தேடிச்செல்வதற்கு நேரம் ஒதுக்கியிருக்கின்றேன். பயணங்களில் நான் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களைத்தான் பார்த்துவிட்டு திரும்புகின்றேன். உறவுகளைப்பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டை எனது வீட்டில் குடும்பத்தினர் எனக்கு சுமத்துகின்றனர்.
சொந்தம் எப்போதும் தொடர்கதைதானே... அதனால் சொந்தங்களுக்காகவும் நேரம் ஒதுக்கவேண்டியிருக்கிறது" என்று மேலும் விரிவாக நண்பரிடம் சொல்லிவிட்டுப்புறப்பட்டேன்.
குறிப்பிட்ட அச்சுவேலி  பெறாமகள், எனது மனைவியின் அக்கா மகள். இங்கும் ஒரு கதை இருக்கிறது. 1987 இல் வடமராட்சியில் லலித் அத்துலத் முதலி காலத்தில் நடந்த ஒப்பரேஷன் லிபரேஷனில் அந்த அக்கா கொல்லப்பட்டார்.
அவர் பருத்தித்துறை வேலாயுதம் வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். தனது மூன்று பெண்குழந்தைகளுடன் வரும்போது பொம்மர் தாக்குதலில் படுகாயமுற்றார். குழந்தைகளுக்கும் காயம்.
மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் தாயின் உயிர் பிரிந்தது. அன்டன் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல்தான் உடனிருந்து உதவிகள் செய்ததாக பின்னர் அறிந்தேன். அந்தக்குழந்தைகளின் சித்தியான எனது மனைவி,  எங்கள் பெறாமக்களையும் இம்முறை அவசியம் பார்க்கவேண்டும் என்று வலியுறுத்தித்தான் என்னை வழியனுப்பினாள்.

1000 கவிஞர்கள் கவிதை நூல் - வெளியீடு 2017

.


ஒக்டோபர் மாதம் 21 ஆந் திகதி 32 உலகநாடுகளைச் சேர்ந்த 1000 கவிஞர்களின் கவிதைகளைத் தாங்கி உலகின் மிகவும் பெரிய கவிதைத் தொகுப்பு நூல் யாழ்பாணத்தில் வெளியீடு செய்யப்படும் பெருவிழா நடைபெற இருக்கிறது. தமிழ்க்கவிதை நூல் வெளியீட்டில்
இவ்விழா மிகவும் சிறப்புடையதாக  அமைகிறது.


இலங்கையில் பாரதி -- அங்கம் - 30 முருகபூபதி


-->
மகாகவி பாரதியை நாம் இன்றும் கொண்டாடுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பல விடயங்களில் அவர் முன்னோடியாக விளங்கியதும் ஒரு காரணம்தான்.
குழந்தைகளை அதட்டி வளர்க்கும், கண்டித்து ஒதுக்கும் சமூகத்திடம் எதுவும் சொல்லாமல், குழந்தைகளைப்பார்த்து " ஓடிவிளையாடு பாப்பா" பாதகம் செய்வாரைக்கண்டால் மோதி மிதித்துவிடு பாப்பா" என்றும் அறிவுரை பகன்றவர்.
"முகத்தில் காறி உமிழ்ந்துவிடு..." என்று அக்காலத்தில் எவரால் அப்படி துணிந்து சொல்ல முடியும். தமிழ் சமூகத்திற்காக மாத்திரமல்லாது முழு உலகிற்கும் தன்னம்பிக்கையை அவர் புகட்டினார்.
                                எண்ணிய முடிதல் வேண்டும்
            நல்லவே எண்ணல் வேண்டும்
               திண்ணிய நெஞ்சம் வேணும்
            தெளிந்த நல்லறிவு வேணும்;
                 பண்ணிய பாவமெல்லாம்
            பரிதிமுன் பனியை போலே,
                 நண்ணிய நின்முன் இங்கு
                             நசிந்திடல் வேண்டும் அன்னாய் !


உலகச் செய்திகள்


புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி மக்களின் பங்களிப்பு அவசியம் : இந்தியாவின் 71 வது சுதந்தர தின விழாவில் மோடி

அமெ­ரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை.!

ஸ்பெயினில் தீவிரவாதத் தாக்குதல் : 13 பேர் பலி, 50 பேர் படுகாயம் 

4 வரு­டங்­க­ளுக்கு மௌன­மாகும் பிக் பென் மணிக்­கூடு





புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி மக்களின் பங்களிப்பு அவசியம் : இந்தியாவின் 71 வது சுதந்தர தின விழாவில் மோடி

இந்தியாவின் 71 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டை விழாக்கோலம் பூண்டுள்ளது.


ரஹ்மான் - புத்திசைக்கு வயசு இருபத்தைந்து - கானா பிரபா





ஆகஸ்ட் 15. 1992 ரோஜா திரைப்படம் வெளிவருகிறது. தமிழ்த் திரையிசையின் அடுத்த போக்கை அது தீர்மானிக்கப் போகிறது என்ற முடிவு ஏதும் அந்தச் சமயத்தில் தீர்மானிக்கப்படாத சூழலில், இயக்குநர் கே.பாலசந்தர் தன் கவிதாலயா நிறுவனத்துக்காக வெளியார் ஒருவரை வைத்து இயக்கும் இன்னொரு படம் ( இதற்கு முன் நெற்றிக்கண், ஶ்ரீ ராகவேந்திரா, வேலைக்காரன் உள்ளிட்ட படங்களை கவிதாலயாவுக்காக எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார்)
என்ற கவனிப்பு , அதையெல்லாம் தாண்டி மணிரத்னம் என்ற நட்சத்திர இயக்குநரின் அடுத்த படம் என்ற ரீதியிலேயே பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணுகிறது.

இளையராஜாவை விட்டு விலகிய வைரமுத்துவுக்கு பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் என்ற ரீதியில் அப்போது கை கொடுத்தவை ஏவிஎம் நிறுவனமும், பாலசந்தரின் கவிதாலயாவும் தான். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் கே.பாலசந்தருக்கும் இளையராஜாவுக்கும் எழுந்த விரிசல், கவிதாலயா நிறுவனத்தோடு இளையராஜா இசையமைத்து (இதுவரை) வெளியான இறுதிப் படம் என்ற கணக்கில் பாலசந்தரின் சீடர் அமீர்ஜான் இயக்கிய "உன்னைச் சொல்லிக் குற்றமில்லை" படம் அமைந்து நிற்கிறது. மணிரத்னத்தை வைத்து கே.பாலசந்தர் படம் பண்ணுவோம் என்று தீர்மானித்த போது இளையராஜாவை விட்டு விலகி இன்னொரு இசையமைப்பாளரோடு சேரத் தயக்கம் காட்டினாராம் மணி ரத்னம் (ஆதாரம் Weekend with Star இல் சுஹாசினி). ஆனால் பாலசந்தரோ அது ஒத்துவராது என்று சொல்லி விட்டாராம். அந்த நேரத்தில் பாலசந்தரும் தான் இயக்கிய அழகன், வானமே எல்லை ஆகிய படங்களுக்கும், தன் சிஷ்யர் வஸந்த் இயக்க, கவிதாலயா சார்பில் தயாரித்த நீ பாதி நான் பாதி ஆகிய படங்களுக்கும் மரகதமணி (கீரவாணி) ஐயும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய அண்ணாமலை படத்துக்கு தேவாவையும் ஒப்பந்தம் செய்து விட்டார். இவற்றில் "நீ பாதி நான் பாதி" படத்தைத் தவிர அனைத்துமே ஜனரஞ்ச ரீதியில் வெற்றி பெற்றவை. அதுவும் 1992 ஆம் ஆண்டில் பாலசந்தர் இயக்க மரகதமணி இசையமைத்த "வானமே எல்லை", சுரேஷ் கிருஷ்ணா இயக்க தேவா இசையமைத்த "அண்ணாமலை", மணிரத்னம் இயக்க ரஹ்மான் இசையமைத்த "ரோஜா" என்று மூன்று வெவ்வேறு இசையமைப்பாளர்களை வைத்து கவிதாலயா தயாரித்த படங்கள் சூப்பர் ஹிட். இது தமிழ்த் திரையுலகமே கண்டிராத புதுமையான, சவாலுக்கு முகம் கொடுத்த வெற்றி. ஏன் கவிதாலயா போன்ற தயாரிப்பு நிறுவனமே எதிர்காலத்திலும் கூட இப்படியொரு வெற்றியைக் கண்டதில்லை.

9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இலங்கை வானொலியில் தமிழகத்துக்கான ஒலிபரப்பு தொடக்கம்

.

9 ஆண்டுகளுக்கு பின்னர், இலங்கை வானொலியில் தமிழகத்துக்கான ஒலிபரப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
லண்டன் பிபிசி தமிழோசை, சிங்கப்பூர் ஒலி, மலேசிய வானொலிக் கழகம், பாகிஸ்தான் சர்வதேச வானொலி, சீன தமிழ் வானொலி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா, ஜெர்மன் ரேடியோ, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு வானொலி நிலையங்கள் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பின என்றாலும் முதன்முதலில் தமிழ் ஒலிபரப்பை தொடங்கியது இலங்கை வானொலி தான்.
1925-ம் ஆண்டில் 'கொழும்பு ரேடியோ' என்ற பெயரில் நிறுவப்பட்ட இலங்கை வானொலி நிலையத்துக்கு, உலகின் இரண்டாவது வானொலி நிலையம் என்ற பெருமையும் உண்டு. (பிபிசி வானொலி 1922-ம் ஆண்டில் லண்டனில் முதன்முதலாக நிறுவப்பட்டது) இலங்கை வானொலி தனது வர்த்தக சேவைப் பிரிவை 30.09.1950-ல் தொடங்கிய உடனேயே, இந்திய துணைக் கண்ட அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

முருகபூபதியின் புதிய நூல்வெளியீடு - சொல்லவேண்டிய கதைகள்

.
இலங்கை ' ஜீவநதி'


ஜீவநதியின்  82  ஆவது வெளியீடாக எழுத்தாளர் லெ.முருகபூபதியின் ‘சொல்ல வேண்டிய கதைகள்’ பத்திக்கட்டுரைகளின் தொகுப்பு வெளியாகின்றது.
 இந்த பத்திக் கட்டுரைகள் 2013 தை மாத ஜீவநதியில் வெளிவரத் தொடங்கி ஜீவநதியின் 20 இதழ்களில் தொடராக வெளியானவை. இந்த தொடர் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
முருகபூபதி  தனது வாழ்வில் சந்தித்த மனிதர்கள், தன் வாழ்வியலுடன் தொடர்புடைய நிகழ்வுகள், மனதில் பதிந்த நிகழ்வுகள், சமூகத்திற்கு நன்மை பயக்கும் விடயங்களை சுவாரஸ்யமான மொழியில் மனதில் நிலைத்து நிற்கும் வண்ணம் தந்திருக்கின்றார். ஒவ்வொரு பத்தியில் இருந்தும் மக்களுக்கான செய்திகள் வழங்கப்பட்டுள்ளன.
முருகபூபதி  நீண்டகால இலக்கிய அனுபவம் மிக்க பல்துறை ஆற்றல் மிக்கவர். பல்வேறு இலக்கியகாரர்களுடன் தொடர்பில் இருப்பவர்.  தொடர்ச்சியான எழுத்துச் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் உன்னத படைப்பாளி.  பல மாநாடுகளை நடத்தியர். இலக்கிய செயற்பாட்டாளராக திகழ்ந்து வருபர். பல்வேறு இலக்கிய பரீட்சயமிக்க இவர் பல நூல்களை வெளியிட்டு வாசகர் மனதை கவர்ந்தவர். ஜீவநதியுடன் நீண்ட காலமாக தொடர்புடையவர். முருகபூபதி அவர்களின் இந்தத்  தொகுப்பும் வாசகர்களிடையே வரவேற்பை பெறும் என்ற எண்ணத்துடன், மகிழ்வுடன் இந்த தொகுப்பை வெளியிட்டு வைக்கின்றோம்.
க.பரணீதரன்
ஆசிரியர் ஜீவநதி
jeevanathy@yahoo.com

இலங்கைச் செய்திகள்

இலங்கையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் அவுஸ்திரேலியா

பாகிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதின விழா ; இலங்கையுடனான 2300 வருட தொடர்பை குறிக்கும் புத்தகம் வெளியீடு

கடுமையான வரட்சி : நாடளாவிய ரீதியில் 12 இலட்சம் பாதிப்பு..!

கிளிநொச்சியை சூழும் அபாயம் : 815 பேருக்கு இதுவரை டெங்கு நோய்த்தொற்று

அம்பிடிய சுமணரட்ன தேரர் தேங்காய் உடைத்து காணி அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் ரயிலினை மறித்து மக்கள் போராட்டம் : பொலிஸார் குவிப்பு



கந்தபுராணம் சூரபதுமன் வதை படலம் - சி மருதபிள்ளை அவர்கள் செய்த பொழிப்புரை

.


கந்தபுராணத்தில் முக்கிய பகுதியான சூரபதுமன் வதை படலம் - சி மருதபிள்ளை அவர்கள் செய்த பொழிப்புரை 1965 வெளிவந்தது கீழே காணலாம்.கீழேயுள்ள சுட்டிகளில் நீங்கள் அவற்றை PDF வடிவில் தரவிறக்கம் செய்யலாம்.

கருப்பு வெள்ளையில்,

வண்ணத்தில்,

உங்களிடம் இது போன்ற "சூரபதுமன் வதை படலம்" பழமையான புத்தகங்கள் இருந்தால் அவற்றை எண்ணிமைப்படுத்த (Scan and Digitize) ஆர்வமாக உள்ளோம்.

தமிழ் சினிமா

நிபுணன்



பெரும் நடிகரின் படங்களுக்கு எப்போதும் ஒரு வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் இருக்கும் முக்கிய நட்சத்திரமான அர்ஜுன் அவர்களின் நிபுணன் வந்துள்ளது. நினைத்த படி வந்துள்ளதா இந்த நிபுணன், அர்ஜுன் மீண்டும் ஆக்‌ஷன் கிங் என நிரூபித்தாரா என பார்ப்போம்.

கதைக்களம்

அர்ஜுன் ஒரு உயர் போலிஸ் அதிகாரி. இவருக்கு ஒரு குடும்பம் இருப்பது போல, காவல்துறையிலும் இவருக்கு ஒரு குடும்பமாக வரலட்சுமியும், பிரசன்னாவும் இருக்கிறார்கள்.
அர்ஜூனுக்கு ஒரு டாஸ்க் மேலிடத்தில் இருந்து வருகிறது. அதில் மக்களுக்கு பெரும் தொந்தரவாக இருக்கும் ஐவரை பிடிக்க வேண்டும் என்ற கட்டளை.
அதற்குள் பல விசயங்களுக்காக போராடும் சமூக ஆர்வலர் ஒருவர் கொடூரமாக கொலைசெய்யப்படுகிறார். இங்கு தான் கதை சூடுபிடிக்க தொடங்குகிறது.
வித்தியாசமான பிளான், மறைமுக எச்சரிக்கை, சீக்ரட் கோட் வேர்ட்ஸ் என பல நுணுக்கங்களை தடயமாக விட்டு செல்கிறான் அந்த கிரிமினல்.
நடந்ததை விசாரிக்க தொடங்கியதுமே அடுத்தடுத்து டாக்டர், வக்கீல் என இரண்டு கொலைகள். விசாரணை வலுக்க அடுத்தது யார் என்ற துப்பு கிடைக்கிறது.
முக்கிய கட்டத்தில் ஒரு பெரும் டிவிஸ்ட். அர்ஜூனுக்கு பெரும் ஆபத்து. பலியாகப்போகும் அந்த கடைசி நபர் யார். அர்ஜூன் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டாரா? சீரியல் கொலையாளி யார்? பிடிபட்டானா? அந்த நால்வரை கொல்வதன் பின்னணி உண்மை என்ன என்பது தான் முழுக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனை ஏற்கனவே போலிஸ் அதிகாரியாக பார்த்திருப்போம். அவருக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் அதே வேகத்தை இந்த ரோலில் காட்டியுள்ளார். குறிப்பாக அவருக்கு இது 150 வது படம்.
வரலட்சுமி சொல்லவே வேண்டாம். தன் திறமையை நிரூபித்து ஜாம்பவான்களிடம் பாராட்டை வாங்கியவர். தற்போது இந்த படத்தில் ஒரு துப்பறியும் போலிஸாக அவர் களமிறங்கியுள்ளார். சீஃப் சீஃப் என அர்ஜீனை சுற்றும் இவருக்கும் ஒரு எதிர்பாராத ஆபத்து.
அடுத்தது பிரசன்னா. இவரை ஹீரோ, வில்லன் என பார்த்திருப்போம். ஆனால் இப்படத்தில் சற்று வித்தியாசமான ஒரு ரோல். தன் திறமையை நிரூபிக்க ஒரு சான்ஸ். இவரும் தன் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
வைபவ் அர்ஜூனுக்கு தம்பியாக வந்தாலும் சிறு சிறு ரோல்கள் மட்டுமே. தனக்கே உரிய இயல்பான ஸ்டைலை வைபவ் விடவில்லை.
சுமன், சுஹாசினி என ஜோடியாக இருவரும் ஒரு முக்கிய காட்சியில் வருகிறார்கள். எதிர்பாராத ஒரு இடத்தில் நடிகர் கிருஷ்ணாவும் வந்துபோகிறார் இல்லை இல்லை, இறங்கி விளையாடியுள்ளார் என்றே சொல்லலாம்.
ஒரு கிரைம் ஆக்‌ஷன் ஸ்டோரிக்கு உரிய தீம் மியூசிக்

கிளாப்ஸ்

ஆக்‌ஷன் கிங் தான் அனைத்து இடங்களிலும் முழு ஸ்கோர் அள்ளுகிறார். அவருக்கே உரிய ஸ்டைல் சற்றும் குறையவில்லை.
தீம் மியூசிச், பேக்ரவுண்ட் பிளே, ஹைப் சீக்குவன்ஸ் என அனைத்திலும் பொருந்துமாறு இசையமைத்துள்ளார் நவீன்.
இயக்குனர் அருண் வைத்யநாதனின் இரண்டு வருட முயற்சியை பாராட்டலாம். கதையாக்கம், காட்சிகள் நகர்த்தும் விதம் என படம் முழுக்க எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.

பல்பஸ்

எல்லா விசயங்களும் சரியாக அமைந்து விட்டால் போதாது. ஏதாவது ஒரு குறை இருக்க வேண்டும் தானே. ஒரு சில இடத்தில் சிறியதாய் கண்ணிற்கு தென்படும்.
வரலட்சுமி டப்பிங் பேசுவதில் கொஞ்சம் நிறுத்தி பேசலாம் என தோன்றுகிறது.
பிரசன்னா, வரலட்சுமி இரு திறமைசாலிகளுக்கு இன்னும் சவால் வைத்திருக்கலாம்.
சூப்பர் ஸ்டாரே படத்தை பார்த்துவிட்டு கண்டிப்பாக ஹிட் என கூறியிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம். மொத்தத்தில் நிபுணன் நின்று விளையாடுகிறார். அனைவரும் பார்க்கலாம்.
நன்றி  CineUlagam