அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
எல்லோரும் பொங்கிநிற்போம் !எம். ஜெயராமசர்மா .... மெல்பேண்
.
புத்துணர்வு புதுக்கருத்து
புறப்பட்டு வந்திடட்டும்
பொங்கலிட்டு மனம்மகிழ்ந்து
புதுப்பொலிவு பெற்றிடுவோம்
பொறுமையெனும் நகையணிந்து
பொங்கிநின்று மகிழ்ந்திடுவோம்
இறைநினைப்பை மனமிருத்தி
எல்லோரும் பொங்கிநிற்போம் !
குறையகன்று ஓடிவிட
இறைவனைநாம் வேண்டிடுவோம்
நிறைவான மனதுவரும்
நினைப்புடனே பொங்கிடுவோம்
துறைதோறும் வளர்ச்சிவர
துடிப்புடனே உழைப்பதென
மனமெண்ணி யாவருமே
மகிழ்வுடனே பொங்கிநிற்போம் !
சாந்தியொடு சமாதானம்
சகலருமே பெற்றுவிட
சந்தோஷம் வாழ்வினிலே
சகலர்க்கும் நிலைத்துவிட
மழைபொழிந்து பூமியெங்கும்
பயிர்செழித்து வளர்ந்துவிட
வழிவகுக்க இப்பொங்கல்
வாய்துவிட பொங்கிநிற்போம் !
மாபெரும் பொங்கல் விழா 14.01.2017
.
இன்றைய முழு பதிவுகளையும் பார்க்க கீழே உள்ள "OLD POST" என்பதை அழுத்துங்கள்
யாழ் இந்து பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் பொங்கல் விழா எதிர்வரும் தை மரதம் 14 ஆம் திகதி சனிக்கிழமை 2017ம் ஆண்டு நடைபெற உள்ளது.
சிட்னி மக்கள் அனைவரையும் , தமிழர் விழா, பொங்கல் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்நிகழ்வு குறித்த மேலதிக விபரங்களுக்கு யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த திரு. ரிஷி 0470 011 358 மற்றும் திரு. அறிவு 0430 385 505 ஆகியோருடன் தொடர்பு கொள்ளவும் .
இன்றைய முழு பதிவுகளையும் பார்க்க கீழே உள்ள "OLD POST" என்பதை அழுத்துங்கள்
தெணியான் 75 வது அகவையில் - முருகபூபதி
.
வடபுலத்தின் அடிநிலை மக்களின் விடுதலைக்காக எழுதிய தெணியான்
பொற்சிறையில் வாடும் புனிதர்களுக்காகவும் குரல்கொடுத்தவருக்கு 75 வயது
கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமையின் பிறந்ததினம் கடந்த 06-01-2017.
வடமராட்சியில் பொலிகண்டியில் கந்தையா - சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசன் , இலக்கியஉலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கி, அதுவே நிலைத்துவிட்டது.
தான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள தெணியானை மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் வர்ணிக்கப்பட்டவர்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பல நாவல்களும் சில விமர்சனக்கட்டுரைத்தொகுதிகளையும் தமிழ் இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கும் தெணியானின் பாதுகாப்பு என்ற சிறுகதை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப்பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான விவேகி இதழில் 1964 இல் தெணியானின் முதல் சிறுகதை பிணைப்பு வெளியாகியது. அதனைத்தொடர்ந்து, மல்லிகை, ஞானம், யாழ். முரசொலி, வீரகேசரி, தினக்குரல் உட்பட பல இதழ்களில் அயராமல் எழுதியிருப்பவர்.
இவருடைய கழுகுகள் (நாவல்) சொத்து (சிறுகதைத்தொகுதி) குடிமைகள் ( நாவல்) என்பன தமிழ்நாட்டில் பிரபல பிரசுர நிறுவனங்களான நர்மதா பதிப்பகம், என்.சி.பி.எச். மற்றும் கறுப்பு பிரதிகள் முதலானவற்றின் ஊடாக தமிழக வாசகர்களையும் சென்றடைந்துள்ளன.