அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
மெல்பனில் மனிதநேயமிக்க மனித உரிமைப்போராளியின் அறைகூவல் - முருகபூபதி
.
இன மத மொழி வேறுபாட்டிற்கு அப்பால் ஒலித்த ஜயதிலக்க பண்டாரவின் நல்லிணக்கத்திற்கான குரல்
" ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவுபெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறுபோல் நடையினாய் வா வா வா "
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எங்கள் ஊருக்கு வந்திருந்த மகாகவி பாரதியின் பேத்தி விஜயபாரதி இந்தப்பாடலை தமது மதுரமான குரலுடன் பாடினார். இதே பாடலை நாம் பல அரங்குகளிலும் பாடசாலை விழாக்களிலும் வானொலிகளிலும் பாரதி நினைவு கொண்டாட்டங்களிலும் கேட்டிருப்போம். பல நடன ஆசிரியர்கள் இந்தப்பாடலுக்கு குழந்தைகளை ஆடவைக்கும் காட்சி இன்றும் தொடருகின்றது.
சமூகத்திற்கான செய்தியை அந்தப்பாடல் நூற்றாண்டு காலத்துக்கு முன்பிருந்தே ஒலித்துக்கொண்டிருக்கிறது.
அதே சமயம் பாரதியார் " சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் " என்று ஏன் பாடினார் ? என்று இன்றும் எங்காவது ஒரு குரல் கேட்டவண்ணமிருக்கிறது.

ஊடறுவின் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் - சௌந்தரி கணேஷன்
.
ஊடறுவின் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் ஆகஸ்டு 27, 28 ம் திகதிகளில் மலேசியாவில் பெனாங் என்னும் இடத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் முதல் தடவையாக நான் கலந்து கொண்டேன். அவுஸ்திரேலியாவில் இருந்து நானும் ஆழியாளும் சென்றிருந்தோம்.
இந்தப் பெண்கள் சந்திப்பு நிகழ்வுக்கு மையப்புள்ளி போல் செயல்படுகின்றவர் ஊடறு ரஞ்சி. இவர் சுவிசில் இருந்துகொண்டே அனைத்தையும் ஒருங்கிணைத்தார்.
மணிமொழியும் யோகியும் அவருக்குப் பேருதவியாக மலேசியாவிலிருந்து மற்றைய ஒழுங்குகளை மேற்கொண்டனர்.
இலங்கையில் இருந்து யாழினி,
புறொஃபி, விஜயலக்சுமி, கோகிலா, ஷாமிலா,
சந்திரலேகா, பவனீதா, ஜெசீமா ஆகியோரும் இந்தியாவிலிருந்து புதிய மாதவி, மாலதி மைத்ரி,
கல்பனா, ரஜனி, விஜயலக்சுமி,
பாரதி ஆகியோரும் மலேசியாவிலிருந்து மணிமொழி, யோகி, பிரேமா, கஸ்தூரி,
சிவரஞ்சனி, ரமேஸ்வரி ஆகியோரும் இன்னும் பலரும் கலந்து கொண்டனர்.
MUSICAL EVENING WITH DANCE FOR A WORTHY CAUSE 17/09/2016
DATE: 17 SEPTEMBER 2016
TIME: 6PM
21 ROSE
CRESCENT, REGENTS PARK SYDNEY
TICKETS :
$30 INCLUDING DINNER, CHILDREN
UNDER 10
FREE
ALL PROCEEDS
IN AID OF BLIND TECH ACADEMY, KILINOCHI,
SRILANKA, DURGA TEMPLE SYDNEY, ORPHANAGE GOOD LIFE CENTRE, TAMBARAM SOUTH INDIA
FOR TICKETS
PLEASE CONTACT :
BHAMA PACKIANATHAN 96426364 OR 0469757678
LALI
MAHADEVA 97642965
அழகான இளம்பெண்ணுக்கு முகேஷ் அம்பானி சொன்ன பதில்!!!!!!!!!!!!
.
பூஜா என்ற ஒரு அழகான இளம்பெண், ”பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்” என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இது குறித்து பூஜா கூறியதாவது, ”என் வயது 25. நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண்மகனை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?.” என்றார்.
இந்த பதிவை பார்த்த முகேஷ் அம்பானி அப்பெண்ணிற்கு பதில் அளித்து கூறியதாவது, “உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை தர நான் விரும்பிகிறேன். எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன். காரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால். இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். அழகு வருடத்திற்கு வருடம் குறைந்துக் கொண்டே போகும் ஒன்று.

படித்தோம் சொல்கின்றோம் --- முருகபூபதி
.
ஆவணக்காப்பாளரை ஆவணப்படுத்திய நூலகர் செல்வராஜா
படைப்பாளிகளும் பதிப்பகங்களும் கொண்டாடவேண்டிய அயராத செயற்பாட்டாளர்
" களிமண்ணால் கட்டப்பட்ட ஒரு பழங்காலத்து திண்ணை வீட்டின் ஒடுங்கிய முன் விறாந்தையில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஈயத்தாலான குற்றிகளைக்கொண்டு தனது நூல்களை தானே அச்சுக்கோர்த்து, ஒவ்வொரு பக்கங்களையும் மை தடவி காகிதத்தில் பதிந்து Proof பார்த்து, பின்னர் எழுத்துப்பிழைகளை சரிசெய்து, அவற்றை அசையாமல் பத்திரமாக பஸ்ஸில் எடுத்துச்சென்று அச்சகத்தில் அச்சிட்டு வெளியீட்டு முயற்சிகளை ஆரம்பித்தவர் கலாபூஷணம் பீ. எம். புன்னியாமீன். "
என்ற தகவலை தமது அருமைக்கணவர் மறைந்த பின்னர் முன்னுரையாக ஒரு முடிவுரை எழுதியிருக்கிறார் திருமதி மஸீதா புன்னியாமீன்.
இன்றைய நவீன கணினி அச்சுஊடக சாதனங்கள் இல்லாத அக்காலத்தில் மலையகத்தில் ஒரு புறநகர் பிரதேசத்தில் தனது வாழ்நாள் முழுவதும் தொடர்பாடல், தேடல், எழுத்து, பதிப்பு, விநியோகம் என்று அயற்சியின்றி தமிழ் சமூகத்திற்காக குறிப்பாக மாணவர்களுக்காகவும்

இலங்கைச் செய்திகள்
சவுதி மற்றும் குவைட்டில் பணிபுரிந்த 134 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்
மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல்
யாழ். பல்கலைக்கழகத்தில் தொழுகை அறை மீது 3ஆவது தடவையாகவும் தாக்குதல்!!
ஜோசப் பரராஜசிங்கம் கொலை : பிள்ளையான் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு.!
சட்டவிரோத மண் அகழ்வை நிறுத்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை
தமிழ் மொழியில் பொலிஸ் அவசர சேவைப் பிரிவு
ஐ.தே.க. சம்மேளனத்தில் தமிழில் தேசிய கீதம்
கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்
.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தற்போது கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்குகின்றன..கொடைக்கானல் மலைப் பகுதிகளான வடகவுஞ்சி, ஐந்து வீடு, பிரகாசபுரம் சாலை, சகாயபுரம், குறிஞ்சி ஆண்டவர் கோயில், கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறிஞ்சி செடிகள் காணப்படுகின்றன. தற்போது, இந்தப் பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் பூக்கவில்லை. ஆனால், பிரையண்ட் பூங்காவில் உள்ள குறிஞ்சித் தோட்டத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர். அதிலும் நீல வண்ணத்தில் பூத்துள்ள குறிஞ்சி மலர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன.இதுகுறித்து கொடைக்கானல் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் மோகன்ராம் கூறியதாவது: கொடைக்கானல் மலையில் கடந்த 2006-ஆம் ஆண்டு குறிஞ்சி மலர்கள் பூத்தன. இந்த நிலையில், பிரையண்ட் பூங்காவில் கடந்த ஆண்டு அக்டோபரில் அமைக்கப்பட்ட குறிஞ்சித் தோட்டத்தில், தற்போது குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. குறிஞ்சி மலர்களில் 20 வகைகள் உள்ளன. அவற்றில் சில வகை மலர்கள் இங்கு பூத்துள்ளன என்றார்.

தமிழ் மூத்த பிரசைகள் சங்கத்தின் 25 ம் ஆண்டு விழா
.
தமிழ் மூத்த பிரசைகள் சங்கத்தின் 25 ம் ஆண்டு விழா படங்கள்
தமிழ் மூத்த பிரசைகள் சங்கத்தின் 25 ம் ஆண்டு விழா படங்கள்
'யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் ' - கணநாதன் மெல்போன்
.
ஒரு நாள்
எங்கள் பெரியண்ணாவுடன் நாங்கள் நால்வரும் கூடியிருந்து தேனீர் அருந்தி பல கதைகள்
பேசிக்கொண்டிருந்தோம். அவர்
எங்களைப் பார்த்து, “எங்கள் தகப்பனார் ஐந்து ஆண்பிள்ளைகளை பெற்றெடுத்தார். நாங்கள் ஐவரும் மூன்று பையன்களையே
பெற்றோம்,” என்றார். இது
அவரின் ஆதங்கம்.
எங்களை
பஞ்ச பாண்டவருக்கு பலர் ஒப்பிடுவர். என் பெரியண்ணா பாண்டவருள் மூத்தவர் போல் ஒரு
தர்மன். அவர் தம்
வாழ்க்கையை எங்களுக்கும் வறுமைப்பட்ட
உறவினருக்கும் அர்ப்பணித்தார்.
என் அப்பா
இறந்த போது நான் எட்டு மாதக் குழந்தை. ஆழ்ந்த துக்கத்தில் இருந்த எங்கள் அம்மா, மன
வைராக்கியத்துடன் எங்கள் எல்லோரையும் கட்டிக்காத்து வளர்த்தார். அம்மா எங்களுக்கு ஒரு தெய்வம்.
பெரியண்ணா
மெட்ரிகுலேஷன் பாஸ் பண்ணி, பின்னர் டாக்டர் சின்னத்தம்பியிடம் கொழும்பில் வேலை பார்க்கும் போது, அந்த டாக்டர் கொடுத்த ஊக்குதலால் அவர்
மருத்துவ படிப்புக்கு வாய்ப்புக் கிடைச்சது. பெரியண்ணா பகலில் மருத்துவக் கல்லூரியில் படித்த
பின்னர், இரவில் டாக்டரின் கிளினிக்கில் வேலை
பார்த்தார். மாசச் சம்பளத்தில் தன் செலவு போக
மீதியை அம்மாவுக்கு தவறாமல் அனுப்புவார்.
அதன்
பின்னர் அம்மா வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது.
என்
மூன்றாவது அண்ணன் பேரும் புகழும் சேர்த்து தமிழ் சமூகத்தில் மதிப்பும்
மரியாதைக்கும் ஏற்ற குடும்பம் என்ற பெயரை பெற்றுத்தந்தவர்.
தமிழே... தமிழே.... - இரா. சோழன்
.
என் கண்ணின் கருவிழியாய் விண்ணின் முழு மதியாய்
என்னுள் நிறைந்தவளே இளம் கதிரே
கதிரே இளம் கதிரே காலம் பல காலம்
நீயே உலகாலும் நிலை அதுவே
நிலை பெற நீ வேண்டும் கலை பல கற்றுவித்த
கவின் மலர் கற்பகமே பொற்கொடியே
பொற்காலம் தோற்றுவித்த புகழ் மாமனிதன் அவன்
மறை நூல் எழுதி வைத்த வள்ளுவனாம்
வடிவாய் எடுத்துரைத்த இருவரி இருவரிகள்
தலைமுறை தலைமுறையாய் வழிகாட்ட
காட்டிய வழியால் நாம் கடமையை தவறாமல்
போற்றியே புகழ் வாழ வழிவகுத்து
வகுத்த வழி நல் வழியாய் நாம் எல்லாம் நலம் வாழ
தொகுத்தளித்த பழம்மொழியே பைந்தமிழே
முற்றும் துறந்தவரும் முதிர் நல் மூத்தவரும்
கற்றுத்தெரிந்தவரும் கல்லாதவரும்

September 11, 2016--- மகாகவி பாரதி நினைவு தினம
.
வீட்டில் தங்கி படிக்க உதவியதற்கு நன்றிக்கடன் காட்டிய மாணவர்
மகாகவி சுப்பிரமணிய பாரதி வாழ்ந்த காலகட்டத்தில் பள்ளி களில் தங்கி படிப்பதற்கு விடுதி, சாப்பிடுவதற்கு மதிய உணவு, பஸ் வசதி கிடையாது. மாணவர்கள் உறவினர் வீடுகளில் தங்கியிருந்தும், பல கி.மீ. தொலைவு நடந்து சென் றும் பள்ளிகளில் படிப்பது வழக் கம். பண்ணையார், பெரும் நிலச் சுவான்தாரர் வீட்டுக் குழந்தைகள் மாட்டுவண்டி, குதிரை வண்டிகளில் பள்ளிக்குச் சென்று படித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத் திகுளம் அருகே வாதலகரை கிராமத்தைச் சேர்ந்த பண்ணையார் பாப்பு ரெட்டியாரின் மகன் காமு ரெட்டியார் என்பவர், எட்டயபுரத்தில் பாரதியின் வீட்டில் தங்கியிருந்து அங்கு உள்ள ராஜா உயர்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். பாரதியின் வீட்டில் தங்கி படிக்க உதவி செய்ததற்கு நன்றியாக அவரது மறைவுக்குப் பின், காமு ரெட்டியார், பாரதியின் மனைவி செல்லம்மாளுக்கு 33 ஆண்டுகளாக மாட்டு வண்டியில் சாப்பாட்டுக்குத் தேவையான விளைபொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.
இந்தத் தகவலை செல்லம்மாள், காமு ரெட்டியாருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை காமு ரெட்டியாரின் வாரிசுகள் தற்போது பாதுகாத்து வருகின்றனர். இந்த கடிதத்தின் நகலை வைத்துள்ள காமு ரெட்டியாரின் வாதலகரை ஊரைச் சேர்ந்த மதுரை பராசக்தி நகரில் வசிக்கும் ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் எம்.எஸ்.சேகர் கூறியதாவது:
காமு ரெட்டியாரின் மகனும், நானும் ஒன்றாகத்தான் படித்தோம். காமு ரெட்டியாரை 1915-16ம் ஆண்டு காலகட்டத்தில் எட்டயபுரத்தில் உள்ள ராஜா உயர்நிலைப் பள்ளியில் சேர்க்க அவரது தந்தை பாப்பு ரெட்டியார் அழைத்துச் சென்றுள்ளார். எட்டயபுரத்தில் இருந்து வாதலகரை 40 கி.மீ. தூரத்தில் இருந்ததால் அவ்வளவு தூரம் தினமும் மகனை அனுப்ப பாப்பு ரெட்டியாருக்கு விருப்பம் இல்லை. எட்டயபுரத்தில் அவரது உறவினர்கள் வீடும் இல்லை.

தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த வெள்ளை மாளிகை
.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது தாய் மொழியான தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மாற்று மொழியாக ஏற்றது மிகுந்த மனவலியை தருகிறது என மாணவி வாசித்த கவிதை அனைவரையும் வெகுவா கக் கவர்ந்தது.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் தேசிய மாணவர்களுக்கான கவிதைப் போட்டி நேற்று நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மாணவ, மாணவிகள் உட் பட 4 பேரின் கவிதை களைப் பாராட்டி ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா கவுரவித்தார்.
‘‘தலைமுடியைப் போல எனது பூர்வீகமும் உதிரத் தொடங்கி விட்டது. அம்மா! எங்கே எனக்கு வழுக்கை விழுந்துவிடப் போகிறதோ என அஞ்சுகிறேன்’’ என தமிழகத்தைச் சேர்ந்த மாயா ஈஸ்வரன் கவிதை வாசித்ததும், பார்வையாளர்கள் மத்தியில் ஒருவித பிரமிப்பு ஏற்பட்டது. கடைசியில், ‘‘அம்மா! நான் தமிழ் பேசி 3 ஆண்டுகள் உருண்டோடி விட்டது’’ என கனத்தக் குரலுடன் அவர் முடித்ததும், பார்வையாளர்களிடம் இருந்து எழுந்த கரவொலி அடங்க வெகுநேரமானது.

என்னாளும் மகிழ்ச்சியன்றோ ! -எம் .ஜெயராமசர்மா ... மெல்பேண் ...
.
வானம் மகிழ்வடைந்தால்
வானம் மகிழ்வடைந்தால்
மழையினைத் தந்துவிடும்
பூமி மகிழ்வடைந்தால்
புதுவிளைச்சல் கொடுத்துவிடும்
சாமி மகிழ்வடைந்தால்
சகலதும் கிடைத்துவிடும்
ஆதலால் மகிழ்ச்சியினை
அகிலமெலாம் விரும்புறதே !
பூக்கொடுக்கும் மரங்களெல்லாம்
பூமிக்கு மகிழ்ச்சிதரும்
பழங்கொடுத்து மரங்களெல்லாம்
பலருக்கும் மகிழ்ச்சிதரும்
சினமகற்றி வாழ்ந்துவிடின்
தினமுமே மகிழ்ச்சிதான்
அதைமனதில் கொண்டுவிட்டால்
அகிலமே மகிழ்ச்சியுறும் !
காவிரி பிரச்னை கடந்து வந்த பாதை...!
.
மீண்டும் தண்ணீர் எண்ணெயாய் பற்றி எரிய துவங்கி இருக்கிறது. நைல் நதியை பங்கிட்டுக் கொள்வதில் எகிப்து, எத்யோப்பியா, சூடான் என மூன்று நாடுகள் அமர்ந்து பேசி சுமூகமான ஒரு தீர்வை எட்டி விட முடிகிறது. ஆனால், ஒரே தேசத்திற்குள் உள்ள மூன்று மாநிலங்களுக்குள், தண்ணீரைப் பங்கிட்டுக் கொள்வதில் கன அடிக் கணக்கில் பிரச்னைகள். பல லட்சம் கன அடி நீர் பகிர்ந்து கொள்ளப்பட்டதெல்லாம், இனி எப்போதும் உயிர்த்தெழ முடியாத இறந்த காலம் ஆகிவிட்டது. வெறும் 15,000 கன அடி நீர் பத்து நாட்களுக்கு பகிர்ந்துக் கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் சொல்லியதற்கே சாலை மறியல், முழுக் கடையடைப்பு என கர்நாடகவுக்கு காய்ச்சல் நூறு டிகிரியைத் தாண்டிவிட்டது. தமிழகத்திலிருந்து சென்ற பேருந்துகள், கர்நாடகாவுக்குள் நுழைய முடியாமல் வரிசைகட்டி ஒசூரில் நிற்கிறது. கர்நாடகாவும் தமிழகத்துக்குச் செல்லும் பேருந்து சேவையை நிறுத்திவிட்டது. மாண்டியா பகுதியில் பல பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. இது எதுவும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அப்படியே அமல்படுத்தச் சொல்லியதற்காக இல்லை. வெறும் 15,000 கன அடி நீர் தரச் சொல்லியதற்கு தான் இவ்வளவும்.
அம்மா - - அபிநயா
.
ஆடிமாதத்தில் ஆண்குழந்தை பிறந்தால் ஆட்டிவைத்திடும் என்றபோதிலும் ஆவல்!
ஆயகலைகள் அறுபத்திநான்கையும்
கற்றுத்தர ஆசை!
கற்றுத்தர ஆசை!
அழகு தேவதையாய் அலங்கரிப்பு!
இன்முகமும் ,இனிய பேச்சும்
உபச்சாரமும்,உணவும் அடையாளங்கள்!
உபச்சாரமும்,உணவும் அடையாளங்கள்!
என் வெற்றிகளில் என்னைவிட வெற்றிக்களிப்பு!
விருதோ ,வேலையோ சிறப்பாக இருக்க சிந்திப்பு!
அர்த்தமில்லா புலம்பல்களையும்
அமைதியாய் கேட்டு ஆறுதல்!
அமைதியாய் கேட்டு ஆறுதல்!
உலகச் செய்திகள்
அமெரிக்காவின் அடி வருடியா இந்தியா?
"பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விரைவாக விலக வேண்டும்"
தான்சானியாவில் பூமியதிர்ச்சி ; 13 பேர் பலி ; 200 பேர் காயம்
அமெரிக்காவின் அடி வருடியா இந்தியா?
08/09/2016 (கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு (எல்எஸ்ஏ) ஒப்பந்தம் என்பது அதில் கையெழுத்திடுகிற நாட்டின் ராணுவ வசதிகளை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ள சட்டரீதியான அங்கீகாரத்தை அளிக்கிறது. அவ்வாறு

பயன்படுத்திக் கொள்வதற்கான சேவை மற்றும் பொருள்களுக்கு ஒரு தொகையையும் அளிப்பதற்கு வகை செய்கிறது.)
தமிழ் சினிமா
குற்றமே தண்டனை

தமிழ் சினிமாவை வேறு தளத்திற்கு எடுத்து செல்ல ஒரு சிலரே போராடி வருகின்றனர். இந்த லிஸ்டில் காக்கா முட்டை என்ற படத்தின் மூலம் இடம்பிடித்தவர் மணிகண்டன். இவர் இயக்கத்தில் இளையராஜா இசையில், விதார்த், பூஜா நடித்துள்ள படம் குற்றமே தண்டனை.
கதைக்களம்
ஒரு கொலை பல பேரின் வாழ்வில் தொடர்புடையதாக மாறுகிறது, அந்த கொலை எதற்காக நடந்தது, ஏன் நடந்தது, யார் செய்தார்கள், அந்த கொலையால் இவர்களின் வாழ்க்கை எப்படி திசை திரும்புகின்றது என்பதை மிகவும் யதார்த்தமாகவும், த்ரில்லாகவும் கூறியிருக்கிறார் மணிகண்டன்.

படத்தை பற்றிய அலசல்
மணிகண்டன் எப்போதும் தரமான படத்தை தான் இயக்குவேன் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் போல, வெற்றிக்காக போராடி வரும் விதார்த்தை இந்த படத்தில் தேர்ந்தெடுத்ததற்காகவே பாராட்டலாம்.
அவரும் உடம்பில் ஒரு குறையுடன் பயணிக்கும் காட்சிகள் மிகவும் யதார்த்தம், படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் யதார்த்தமாக வந்து செல்கின்றது.
ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரம் சிறியது என்றாலும் மனதில் பதியும் படி நடித்து செல்கிறார், நாசர், ரகுமான், பூஜா என அனைவரும் கதைக்கு தேவையான யதார்த்த நடிப்பை வழங்கியுள்ளனர்.
மணிகண்டனின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய ப்ளஸ், அவரே இயக்கம் ஒளிப்பதிவு என்பதால் தனக்கு என்ன மாதிரியான காட்சி வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அழகாக காட்டியுள்ளார்.

க்ளாப்ஸ்
நடிகர், நடிகைகளின் யதார்த்த நடிப்பு, கதைக்களம்.
இளையராஜாவின் பின்னணி இசை, எந்த இடத்தில் இசை வேண்டும், எங்கு வேண்டாம் என்று உணர்ந்து செய்துக்கொடுத்துள்ளார்.
படத்தின் வசனங்கள்.

பல்ப்ஸ்
மெதுவாக செல்லும் திரைக்கதை.
மொத்தத்தில் குற்றமே தண்டனை படத்தின் கதாபாத்திரம் மட்டுமின்றி நம்மையும் பதட்டப்பட வைக்கின்றது. சினிமா விரும்பிகள் கண்டிப்பாக பார்த்துவிடுங்கள்.