.
அஞ்சறைப் பெட்டிக்குள்
அடைந்துபோன உணர்வுகள்
அடுக்களைக்குள் முடங்கிய
அடிமைத்தன வாழ்க்கை!
வடித்திடும் சோற்றுநீரும்
வடிந்திடும் கண்ணீரும்
ஒன்றாகிப் போய்விட்ட
ஒற்றையடிப் பாதைகள்!
சேலையின் தலைப்போடு
செருகிவைத்த ஆசைகள்!
கானலின் நீராக
கலைந்துபோன கனவுகள்!
ஏரெடுத்தும் பாராமல்
ஏடெடுத்தும் படிக்காமல்
புகைக்குள் மறைந்திட்ட
பொறுமையான பெண்கள்!
அஞ்சறைப் பெட்டிக்குள்
அடைந்துபோன உணர்வுகள்
அடுக்களைக்குள் முடங்கிய
அடிமைத்தன வாழ்க்கை!
வடித்திடும் சோற்றுநீரும்
வடிந்திடும் கண்ணீரும்
ஒன்றாகிப் போய்விட்ட
ஒற்றையடிப் பாதைகள்!
சேலையின் தலைப்போடு
செருகிவைத்த ஆசைகள்!
கானலின் நீராக
கலைந்துபோன கனவுகள்!
ஏரெடுத்தும் பாராமல்
ஏடெடுத்தும் படிக்காமல்
புகைக்குள் மறைந்திட்ட
பொறுமையான பெண்கள்!