மேலும் சில பக்கங்கள்

ஒரு கவிதை

.
இந்தக் கவிதையை  எழுதியவர்  யார் என்று தெரியவில்லை  யாருக்காவது தெரிந்தால் தமிழ்முரசை  தொடர்புகொள்ளுங்கள் 

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!
      
வசதியாகத்தான் இருக்கிறது மகனே
      
நீ கொண்டு வந்து சேர்த்த
      
முதியோர் இல்லம்
      ...
 • 
பொறுப்பாய் என்னை
      
ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
      
வெளியேறிய போதுமுன்பு நானும்
      
இது போல் உன்னை
      
வகுப்பறையில் விட்டு விட்டு
      
என் முதுகுக்குப் பின்னால்
      
நீ கதறக் கதறக்
      
கண்ணீரை மறைத்தபடி
      
புறப்பட்ட காட்சி
      
ஞாபகத்தில் எழுகிறது!

திரும்பிப்பார்க்கின்றேன் -திருமதி சிவமணி நற்குணசிங்கம் - முருகபூபதி

.

அதிபர் பணியிலிருந்து ஓய்வுபெறும் மணிவிழா நாயகி
   ஆசிரியப்பணியில்  தாயாகவும்  சகோதரியாகவும்  வாழ்ந்த
 கிழக்கிலங்கை பெரிய நீலாவணை   திருமதி  சிவமணி  நற்குணசிங்கம்
    
                                     முப்பத்தியைந்து  வருடங்களுக்கு  முன்னர்,  அதாவது  1980 ஆம்  ஆண்டு    டிசம்பர்  மாதம்  17  ஆம்   திகதி  எமது  குடும்பத்திற்கு  ஒரு புதியவிருந்தினர்   பெண் குழந்தைவடிவில்  வந்தாள்.   அவளுக்கு  பாரதி என்று  பெயர்சூட்டினோம்.
அவள்   பிறந்து  சில  நாட்களில்,    இரண்டு  இளம்  யுவதிகள் இயற்கை  எழில்கொஞ்சும்  மலையகம்  பதுளையிலிருந்து  விருந்தினர்களாக   எமதில்லம்  வந்தார்கள்.   அந்த  இரண்டு விருந்தினர்களினதும்    கரங்களில்  எமது  குழந்தை  தவழ்ந்தாள்.
வந்த  யுவதிகள்  இருவரும்  பதுளையில்  ஒன்றாக  ஆசிரியப்பணியில் ஈடுபட்ட  உடன்பிறவாச்சகோதரிகள்.   அவர்கள்தான்  செல்வி  சிவமணி, செல்வி. சரோஜினி.   எனது  குடும்பவாழ்விலும்  பொதுவாழ்விலும்  எனக்கு ஏராளமான   பாசமலர்கள்.  அந்த   பாசமலர்களின்  பட்டியலில்  இந்த  இரண்டு   ஆசிரியைகளும்  எமது    குடும்பத்தில்  இணைந்தனர்.
காலம்  சக்கரம் பூட்டிக்கொண்டு  ஓடும்.   இடையில்  1983  வன்செயல், இடப்பெயர்வு,   புலப்பெயர்வுயார்  யார்  எங்கே ?  என்பது  தெரியாமல் ஒவ்வொருவரும்   நினைவுகளை  மனதில்  தேக்கிவைத்துக்கொண்டு அலைந்திருக்கிறோம்.    வாழ்ந்திருக்கிறோம்.

கவிவிதை - 8 - நம்பிக்கை - --விழி மைந்தன் --

.


ஏழைக் கிராமம் அது.
உலகப் பெரிய மனிதர்கள் மறந்து விட்ட ஒரு சிறிய நாட்டில், நாட்டுத் தலைவர்கள் அடிக்கடி எண்ணாத  ஒரு பின்தங்கிய பிரதேசத்தில், பிரதேச நகரத்தார் அடிக்கடி செல்லாத ஒரு பிற்பட்ட கிராமம்.

பக்கத்தே காடு. காட்டையொட்டிச் சில வயல்கள். மாரியில் நீரும் கோடையில் சேறும் இருக்கிற ஒரு தாமரைக் குளம். காட்டுப் புல்வெளிகளில் மேய்ந்து விட்டுப்  பின்னேர  வாக்கில் குளத்தில் உருண்டு புரண்டு செல்கிற சில எருமைகள். அவற்றைப்பார்த்துக் கீச்சிட்டு ஏளனம் செய்து விட்டு நிற்காமல் பறந்து விடுகிற பச்சைக் கிளிகள்.

மூங்கில் இலைக் காடுகளே …– கவிஞர் காவிரிமைந்தன்.

.

அடர்ந்து வளர்ந்த மூங்கில்காடுகளில் காற்று மழை புயல்களினிடையே சிக்கிடும்போது ஒரு சில துளைகள் உண்டாகும்! அதில் உண்டான துளைகளின் வழியே காற்று நுழைந்த போது புல்லாங்குழல் நாதம் கண்டறியப்பட்டது, அதுவே பூபாளம் எனப்பட்டது.
காலைக் கதிரவன் கடலில் குளித்தெழுந்து வருகின்ற அழகும், அதிகாலை இளங்குயில் பாடி நமை அழைக்கும் இனிமையும் நம் இதயத்திற்கு இதமானவை. எனவேதான் திரைப்படப்பாடல்களில் பெரும்பாலும் தொடக்கம் புல்லாங்குழல் இசையிருக்கும்.
மிகக்குறைந்த செலவில் திரைப்படம் எடுப்பதையும், அதில் அன்றாட வாழ்க்கையில் சராசரி மனிதர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அலசி ஆராய்வதையும் தனது கொள்கைகளாய் கொண்டிருந்த விசு அவர்கள் இயக்கிய “பெண்மணி அவள் கண்மணி” திரைப்படத்தில் தேனிலவு செல்லும் தம்பதிகள் பாடும் பாடலாய் இந்தப் பாடல்!

உலகச் செய்திகள்


தாய்­வானின் முத­லா­வது பெண் ஜனா­தி­பதி தெரிவு

ஆங்கிலத்தை கற்காத முஸ்லிம் பெண்கள் நாடு கடத்தபடுவார்கள்

ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முயன்ற சீமான் கைது 

யேமனில் பொலிஸ் தலை­மை­யகம் மீது வான் தாக்­குதல்; 25 பேர் உயி­ரி­ழப்பு

தீவிரவாத தாக்குதல்களால் ஈராக்கில் 22 மாதங்களில் 18,800 பேர் பலி

பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு : 21 பேர் பலி: பலர்  காயம்

ரஷ்ய வான் தாக்குதல்களில் 1,000 க்கும் அதிகமான பொதுமக்கள் பலி


சிட்னி துர்க்கை அம்மன் தேவஸ்தானம் அலங்கார உத்சவம் 13 02 16

.

13 - 02 - 2016   Sat   சிட்னி துர்க்கை அம்மன் தேவஸ்தானம் அலங்கார உத்சவம் ஆரம்பம் 

22 - 02 - 2016   Mon  சிட்னி துர்க்கை அம்மன் தேவஸ்தானம் மகா மக தீர்த்தோற்சவம்

24 - 02 - 2016   Wed  சிட்னி துர்க்கை அம்மன் தேவஸ்தானம் அலங்கார உத்சவம் நிறைவு நாள் 

" இவர்களிடம் பேனைகளும் அவர்களிடம் துப்பாக்கிகளும் இருந்தன. "‏ லெ.முருகபூபதி

.
பிரான்ஸில் வதியும் படைப்பாளி திரு. கோமகன் முருகபூபதியுடன்   நடத்திய  நேர்காணல்  எதுவரை  இணைய  இதழில்  இம்மாதம் வெளியாது அதனை  தமிழ்முரசு  பகிர்ந்துகொள்கிறது. 



ஈழத்து இபுகலிட இலக்கியப்பரப்பில் லெ.முருகபூபதி தனக்கெனப் பல முத்திரைகளைப் பதித்துக்கொண்டவர். தாயகத்தில் உள்ள எக்ஸ்பிறஸ் நியூஸ் பேர்ப்பர்ஸ் சிலோன் பிறைவேற் லிமிட்டெட் (Express News Papers (Cey) (Pvt) Limited)  நிறுவனத்தின் தமிழ் பத்திரிகைகளில் ஒன்றான வீரகேசரியில் 1972 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது ஊடகப்பணி மற்றும் இலக்கியப்பணி இன்று வரை தொடர்கின்றது. லெ.முருகபூபதி  சமூகஇ கலை இலக்கிய செயற்பாட்டாளராக இருந்து வருகின்றார். நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும், அதனது கொழும்புக் கிளையின் செயலாளராகவும் , பின்னர் . 1987 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து, அங்கு தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடாத்துவதில் முன்னின்று உழைப்பதும், 2011 ஆம் ஆண்டில் தாயகத்தில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பிரதம இணைப்பாளராகச் செயற்பட்டதும் குறிப்பிடத்தக்கன.


இலங்கைச் செய்திகள்


சிறுவன் உயிரிழந்தமைக்கு வைத்தியர்கள் பதில் கூறவேண்டும் என மக்கள் ஆர்பாட்டம்

யாழ் - கொழும்பு சொகுசு பஸ் விபத்து : ஒருவர் பலி, 8 பேர் காயம்

பருத்தித்துறை - திருகோணமலைக்கு புதிய பஸ் சேவைகள்

உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!

உறவினர்களால்   இராணுவத்தினரிடம் நேரடியாக  கையளிக்கப்பட்டவர்களுக்கு    என்ன நடந்தது? : பிரதமரின் கூற்றால் அதிர்ச்சி

அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன  காலமானார்

நாடு திரும்பிய ஊடகவியலாளர் கைது 

யுத்த காலத்தில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க தீர்மானம்

முத்தமிழ் வித்தகர் ! - ( எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா )

.      

   மட்டுநகர் வாவியிலே மீன்கள் பாடும்
           மகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும்
   கட்டளகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும்
          களனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும்
   இட்டமுடன் கமுகு தென்னை ஓங்கிநிற்கும்
           இசைபாடிக் குயில்களெங்கும் மயக்கி நிற்கும்
   எத்திக்கும் இயற்கைவளம் தன்னைப் பெற்ற
             எழில் பெற்ற இடமே கிழக்கிலங்கையாகும் !


            ஈழத்தின் கிழக்காக இருக்கின்ற காரைதீவில்
            ஞானமாய் வந்துதித்தார் நம்துறவி விபுலாநந்தர்
            துறவியாய் ஆனாலும் தூயதமிழ் துறக்காமல்
            அமைதியாய் பணிசெய்து அவருயர்ந்து நின்றாரே !

            விஞ்ஞானம் படித்தாலும் விரும்பியே தமிழ்படித்தார்
             நல்ஞானம் அவரிடத்தில் நயமோடு இணைந்ததுவே
             சொல்ஞானம் சுவைஞானம் எல்லாமும் சேர்ந்ததனால்
             செல்லுமிட மெல்லாமே  சிறப்பவர்க்குச் சேர்ந்தனவே !

அமரர் திருமதி அருண் விஜயராணி - அஞ்சலி நினவுப்பகிர்வு

.


           
கடந்த  13-12-2015 ஆம் திகதி அமரத்துவம் எய்திய அருண். விஜயராணியின் நினைவாக நடைபெறும் அஞ்சலி நிகழ்வு  -  நினவுப்பகிர்வு நடைபெறும் இடம்:
              PRESTON CITY HALL
 (284, Gower Street, Preston, Victoria - 3072, Australia)
       காலம்: 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை
 மாலை 4.30 மணிமுதல் மாலை 6.30 மணி வரையில்.
  தங்கள் வரவை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-
திரு. அருணகிரி ( கணவர் )     0416 25 5363

                arun16354@gmail.com

தேர் பந்தம்

.
வணக்கம்,

நமது சமய இலக்கியங்களில் உள்ள பல அற்புதங்களில் ஒன்றாக "சித்ர கவியும்" ஒன்றாக அமைந்துள்ளது.இதில் ஒரு வகை தேர் பந்தம்.தமிழில் மேலும் முரசு , வேல் , நாக பந்தங்கள் உண்டு என்று சொல்கிறார்கள்.இதில் தேர் பந்த பாடல்களை ஒரு தேர்வடிவில் நம்மால் வரைய/காண்பிக்க முடியும்.

1
1 2 1
1 2 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 4 5 4 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 2 1
1 2 1
1


தேர் பந்தம் இயற்றியவர்கள் இதோ.

மாணவர் தற்கொலை! எங்கே தவறினோம்?

.

இந்த பதிவை  எழத தூண்டியதே ..


ரோஹித் என்ற மாணவனின் தற்கொலை நிகழ்ச்சி தான்.,

என்ன ஒரு மாபெரும் இழப்பு.  உயர்கல்வி படிக்கும் மாணவன் ஒருவன் இனிமேலும் என்னால் இதை தாங்கி கொள்ள முடியாது என்ற முடிவு. இது நாம் ஒரு சமூதாயமாக தவறிவிட்டோம் என்று தான் காட்டுகின்றது.

மிகவும் பழமைவாய்ந்த புகழ்பெற்ற ஒரு பல்கலைகழகம்.  அதில் "டாக்டரேட்" வாங்குவதற்கு வந்த மாணவர்கள், அதில் ஒருவர் தான் இந்த ரோஹித்.

அங்கே இரு  மாணவ அமைப்புகளுக்கு ஒரு பிரச்சனை.

இம்மாதிரியான பிரச்சனைகளில் கல்லூரி  நிர்வாகம் மட்டுமே தலையிட வேண்டும் என்ற சட்டம் வர வேண்டும்.  அதற்கும் முன்பு.. ஒர் நிமிடம்,  கல்லூரி நிர்வாகிகள் நியமிப்பதில் அரசியல்வாதிகள் தலையிடக்கூடாது.  இந்த தறுதலை அரசியல்வாதிகள் பெரும்பாலானோர் கல்லூரி அருகே மருந்துக்கு கூட செல்லாதவர்கள்.

உதாரணம் : பிரதமர் மோடி, கல்வி அமைச்சர் ஸ்மிரிடி இராணி,  காங்கிரஸ் தலைவி சோனியா, ராகுல், முதல்வர் ஜெயலலிதா, முன் னால் முதல்வர் கருணாநிதி, "கும்பிடறேன் சாமி பன்னீர்செல்வம்", மற்றும் பலர்.

கலகத்தின் கலைமுகம் கே.ஏ.குணசேகரன் - வீ. அரசு

.
நாட்டார் இசை, நாடகத் துறை, ஆய்வுத் துறை என்று பல தளங்களில் இயங்கியவர் கே.ஏ.குணசேகரன்.

பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் காலமான செய்தியை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. 1955-ல் சிவகங்கை அருகே மாறந்தை கிராமத்தில் பிறந்தவர் அவர். 1970-களின் இறுதியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பை முடித்தார். 1978-ல் காந்தி கிராமம் நாடகப் பயிற்சிப் பட்டறைகளில் பேராசிரியர் சே. இராமானுஜத்தின் பயிற்சியில் நாடகப் பயிற்சி பெற்றார்.
1980-களில் தமிழில் நவீன நாடக எழுச்சி உருவானது. இந்த எழுச்சியின் விளைவாக, தமிழ்நாட்டில் செயல்பட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகள் வெகுஜனத் தளத்தில் நாடகங்களையும் அரசியல் கருத்து பரப்புரைப் பாடல்களையும் நிகழ்த்தத் தொடங்கினர். இந்தக் காலத்தில் பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் பல முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து மேடைகளில் நாட்டார் இசை மரபு சார்ந்த அரசியல் பாடல்களைப் பாடத் தொடங்கினார். அன்றைக்கு, பிரபலமாக அறியப்பட்ட நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயியைத் தமிழகத் தொலைக்காட்சி ஊடகங்களில் அறிமுகப்படுத்தியவரும் இவரே.

தாஜ்மஹால் – கட்டியவர்களின் விரல் வெட்டப்பட்டதா?

.

புதிய ஏழு அதிசயங்களுக்கான போட்டியில் 100 மில்லியன் வாக்குகள் பெற்றது தாஜ்மஹால். தாஜ் மஹால் என்றால் பெர்சிய மொழியில் மாளிகைகளின் மகுடம் என்று பொருள். வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட அந்த பிரம்மாண்டம் 1632 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1643 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஒட்டுமொத்த அரங்கத்தையும் கட்டி முடிக்க 1963 ஆம் ஆண்டு வரையிலும் ஆனது.
ஷாஜகான் தனது மனைவிகளில் ஒருவரான மும்தாஜுக்காக கட்டிய கல்லறை என்பதை விடவும் தாஜ்மஹால் பற்றி சொல்ல ஏராளம் தகவல்கள் நிறைந்துள்ள – மனித அறிவும், கலை நயமும், உழைப்பும் குவிந்த பொக்கிசமே தாஜ்மஹால் ஆகும்.
20 ஆயிரம் கலைஞர்கள்:
உஸ்தாத் அஹமத் லஹரி, மிர் அப்துல் கரிம் என்ற வடிவமைப்பாளர்களின் தலைமையில் 20 ஆயிரம் கலைஞர்கள் இணைந்து இந்தக் கட்டுமானத்தை உருவாக்கியுள்ளனர். ஷாஜகான் இப்படியான கட்டுமானங்களை அமைப்பதில் தனியான விருப்பத்தோடு இருந்ததாக சொல்கின்றனர்.

தமிழ் சினிமா - கதகளி






பசங்க-2 வெற்றி உற்சாகத்தில் பாண்டிராஜ், நடிசர் சங்க வெற்றியில் விஷால் இருவரும் இணைந்து படம் தான் கதகளிஆம்பள, பாயும் புலி படம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
சினிமாவில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என விஷால்மீண்டும் பாண்டியநாடு ஸ்டைலில் ஒரு யதார்த்த ஆக்‌ஷன் களத்தில் இறங்கியுள்ளார்.
கதைக்களம்
கடலூர் மீனவர் தலைவனாக தம்பா, அந்த ஊரில் அவர் வைத்தது தான் சட்டம், அவர் சொன்னால் தான் ஒருவர் தும்ம கூட முடியும் என்ற அளவிற்கு கட்டப்பஞ்சாயத்து நடத்துபவர். இவருக்கு எங்கும் எதிரிகள் தான். எல்லோரிடமும் ஏதாவது வம்பு செய்வது என தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டே இருக்கின்றது.
அதில் ஓர் கூரிய கத்தி தான் விஷால். விஷாலின் குடும்பத்தையும் தம்பா ஒரு முறை தாக்க, இதில் விஷாலின் அப்பாவிற்கு ஒரு கால் போகிறது. ஆனால், நமக்கு எதற்கு பிரச்சனை என விஷால் வெளிநாடுசெல்கிறார்.
கேத்ரினுடன் திருமணத்திற்காக விஷால் கடலூர் வரும் நிலையில் தம்பாவை யாரோ ஒருவர் கொல்கிறார். தம்பாவை கொன்றது யார் என்று போலிஸ் தேட ஆரம்பிக்க, விஷால், விஷாலின் அண்ணன்மைம் கோபி, விஷாலின் நண்பர்கள் என பலரது மேல் சந்தேகம் எழுகிறது.
போலிஸ் வழக்கை உடனே முடிக்க இதில் விஷாலை இழுத்து விடுகின்றது, விடிந்தால் திருமணம், விஷாலின் குடும்பம் உயிருக்கு பயந்து ஊர் ஊராக சுற்ற, தம்பாவை யார் கொன்றார்கள் என விஷாலே களத்தில் இறங்கி கதகளி ஆடுவதை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்து கூறியிருக்கிறார் பாண்டிராஜ்.
படத்தை பற்றிய அலசல்
விஷால் ஆறடி இளைஞனாக கம்பீர தோற்றம், இன்னும் 50 பேரை அடித்தால் கூட நம்பலாம், ஆனால், ஸ்டண்ட் காட்சிகளில் பறந்து பறந்து அடிக்காமல் மிக யதார்த்தமாக கலக்குகிறார். தன் குடும்பத்திற்கு ஏதும் ஆக கூடாது என தவிக்கும் தருணம், தம்பாவை யார் கொன்றிருப்பார்கள் என பதட்டம் என பாண்டியநாடு விஷால் பேக்.
கேத்ரின் வெறும் காதலிக்க மட்டும் தான், விஷாலின் நண்பராக வரும்கருணாஸ் கொஞ்சம் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார், இடையில் நடிகர் சங்கத்தை எல்லாம் லைட்டாக அவரே கலாய்க்கிறார்.
படத்தில் எத்தனை நடிகர்கள் நடித்திருந்தாலும், படத்தின் மிகப்பெரும் பலமே திரைக்கதை தான். பாண்டிராஜ் அடுத்து என்ன அடுத்து என்ன, டுவிஸ்ட்டுக்குள் ஒரு டுவிஸ்ட், அந்த டுவிஸ்ட்டுக்குள் ஒரு டுவிஸ்ட் என ஆடியன்ஸ் பல்ஸை எகிற வைக்கின்றார்.
ஹிப்ஹாப் ஆதி இந்த முறை அனைவரையும் ஏமாற்றி விட்டார், பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருந்தாலும், படத்தில் வரும் 2 பாடல்களும் மனதில் நிற்கவில்லை. பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவும் இரண்டாம் பாதி முழுவதையும், அந்த இரவிற்குள் நம்மையும் பதட்ட பட வைக்கின்றது.
க்ளாப்ஸ்
கண்டிப்பாக இரண்டாம் பாதி தான், மிக நேர்த்தியான ஒரு ராவ்வான ஸ்கிரீன் ப்ளே. அந்த குடும்பத்திற்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது, யார் அந்த கொலையை செய்திருப்பார்கள் என ஆடியன்ஸ் நெகங்களை கடிக்க வைத்ததிலேயே பாண்டிராஜ் பாஸ் மார்க் வாங்கி விட்டார்.
பல்ப்ஸ்
படம் ஆரம்பித்து கதைக்குள் செல்ல அரை மணி நேரத்திற்கு மேல் இழுக்கின்றது.
மேலும், டுவிஸ்ட்டை கொஞ்சம் இடைவெளி விட்டு அவிழ்ந்திருந்தால் இன்னும் சுவாரசியம் நிறைந்திருக்கும், அடுத்தடுத்து உடனே டுவிஸ்ட்டை உடைப்பது, கொஞ்சம் யதார்த்ததை விலகி உள்ளது.
மொத்தத்தில் விஷாலுக்கு வழக்கமான ஆக்‌ஷன் என்றாலும், பாண்டிராஜ் முதன் முறையாக ஆக்‌ஷன் களத்தில் இறங்கி கதகளிஇல்லை ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்.

ரேட்டிங்- 3/5             நன்றி     cineulagam