மேலும் சில பக்கங்கள்

நாங்கள் அவர்கள் வாக்கிழத்தல்! - மப்றூக்

.

த்தியங்களால் அவர்கள்
எம்மைச் சமரசம் செய்தது
ஆறு கோடைகளுக்கு முன்னதான
ஆவணி மாதமொன்றின்
இளவெயில் பொழுதினில்தான்
வெந்து கிடந்த எங்கள் ரணங்களை
அவர்கள் முன் விரித்து வைத்தோம்
வசிய வார்த்தைகளால்
வருடிக் கொடுத்தார்கள்
எங்கள் வாழ்வுக்கும் வயிற்றுக்குமாய்
தங்கள் ஊண் உறக்கம் துறப்பதாக
மீண்டும்
சத்தியங்களால் அவர்கள்
எம்மைச் சம்மதிக்கச் செய்தார்கள்
எல்லோரும் ஒரு முறை கரகோசித்தோம்
நண்பன் தேநீர் பகிர
எங்கள் விடியலை நினைத்து
சுவைத்தோம்
அவர்களுக்காகப் பிரார்த்தித்து
வழியனுப்பி வைத்தோம்
அவர்களின் பெயரில்
வாக்குகளை இறைத்தோம்

திரும்பிப்பார்க்கின்றேன் தேடுதலில் ஈடுபட்ட மூத்த நடன நர்த்தகி நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் - முருகபூபதி


கற்காலம்   முதல்  கம்பியூட்டர்  காலம்  வரையில் ஆடற்கலையின்  நுட்பங்களின்  ஆய்வில்   தேடுதலில் ஈடுபட்ட  மூத்த  நடன  நர்த்தகி   நாட்டிய  கலாநிதி கார்த்திகா  கணேசர்
இலங்கை,  இந்தியா,   அவுஸ்திரேலியா   என  தொடரும் அவரது   கலை   உலகப்பயணத்தில்  எளிமையே அவருடை    வலிமை.


கொழும்பில்  கலை  இலக்கிய  நண்பர்கள்  கழகம்  என்ற  அமைப்பு 1970  களில்  இயங்கியது.   இதில்  எழுத்தாளர்கள்  சாந்தன்,  மாவை நித்தியானந்தன்,   குப்பிழான்  சண்முகன்,  யேசுராசா,  இமையவன், நெல்லை . பேரன்  உட்பட  சில  நண்பர்கள்  அங்கம்வகித்து  அடிக்கடி கலை,  இலக்கிய  சந்திப்புகளை   நடத்திக்கொண்டிருந்தார்கள்.
சில   நிகழ்ச்சிகளை  வெள்ளவத்தை  தமிழ்ச்சங்கத்திலும்  நடத்தி  மூத்த  எழுத்தாளர்களை  அழைத்து  அவர்களின்  இலக்கிய அனுபவங்களை   பேசவைத்தார்கள்.
இலங்கையின்  வடபகுதியைச் சேர்ந்த  இந்த  இலக்கிய  நண்பர்கள் தொழில்   நிமித்தம்  கொழும்பில்  வாழ்ந்துவந்தனர்.  பெரும்பாலும் அனைவருக்கும்   அப்பொழுது  திருமணம்  ஆகியிருக்கவில்லை.
இந்த  பிரம்மச்சாரிகள்  நடத்திய  சில  சந்திப்புகளில் நீர்கொழும்பிலிருந்து  சென்று  கலந்துகொள்ளும்  சந்தர்ப்பங்களும் எனக்குக்கிடைத்தது.    சில  சந்திப்புகள்  நண்பர்களின்  வாடகை அறைகளில்  நடக்கும்.
அங்கிருக்கும்  கட்டில்களே  ஆசனங்கள்.
நாடகம்,   கவிதை,  சிறுகதை,  நாவல்,  விமர்சனம்  என்று அந்தக்கலந்துரையாடல்கள்   அமைந்திருக்கும்.   மிகவும்  தரமான கருத்துப்பரிமாறல்களுக்கு  களம்  அமைத்திருந்த   அச்சந்திப்பில்  ஒரு நாள்  நாட்டியம்  பற்றிய  கலந்துரையாடல்  நடந்தது.


நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா 11.09.2015

.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா வெள்ளிக்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது. லட்சணக்கணக்கான பக்தர்களின் அரேகரா கோஷத்தின் மத்தியில் நல்லூர் கந்தன் தேரில் வீதியுலா வந்தார். அதிகாலை நடைபெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து காலை 7.15 மணியளவில் சுவாமி தேருக்கு எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து தேர் வீதியுலா வந்து காலை 9.15 மணிக்கு இருப்பிடத்தை அடைந்தது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு பெருந்தொகையாக பக்தர்கள் வருகை தந்திருந்தனர். தொலை தூரங்களில் இருந்து வந்த பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவுசெய்யும் பொருட்டு வகை வகையான காவடிகள், பாற்செம்பு, கற்பூரச் சட்டிகளை ஏந்திவந்த காட்சிகள் வீதியெங்கும் பரவசமாக இருந்தன. கந்தனின் தேருலாக் காட்சியைக் காண வந்த பக்தர்களுக்கு தாக சாந்தியை பல்வேறு இடங்களிலும் தண்ணீர்ப்பந்தல் அமைத்து அடியவர்கள் வழங்கினர்.





இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வழங்கும் மெகா கீதவாணி 19.09.15

.

யாழ்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் சிட்னி பெருமையுடன்  வழங்கும் மெகா கீதவாணி இம்முறை பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது. இந்துக் கல்லூரி 125ம் ஆண்டைக் கொண்டாடும் வேளை, சிட்னி பழைய மாணவர் சங்கம் 10வது கீதவாணியை உலகப் புகழ் ட்ரம் சிவமணி மற்றும் மன்மதராசா புகழ் மாலதி, புலி உறுமுது புகழ் அனந்துவுடன் மேடையேற்ற உள்ளனர். 





இலங்கைச் செய்திகள்


மக்கள் விரும்பாத தீர்வை ஏற்கோம் : வலியுறுத்துகிறார் எதிர்க்கட்சித்தலைவர்

நான் ஒரு கண்காட்சி அமைச்சராக இருக்க போவதில்லை : அமைச்சர் மனோ கணேசன்

அவுஸ்திரேலியா சுற்றுலா பெண் மீது பாலியல் சேஷ்டை

யாழ். நீதிமன்ற தாக்குதல் : மூவருக்குப் பிணை

யாழ். பல்கலைக்கழக மாணவ குழுக்களுக்கிடையில் கைகலப்பு

புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு (அமைச்சர்களின் விபரம் )

மக்கள் விரும்பாத தீர்வை ஏற்கோம் : வலியுறுத்துகிறார் எதிர்க்கட்சித்தலைவர்

08/08/2015 எதிர்க்­கட்­சித் ­த­லைவர் பத­வியை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஏற்றுக் கொண்டுவிட்­டது என்­ப­தற்­காக தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கி­டைத்து விட்­ட­தாக யாரும் அர்த்தம் கொள்­ளக்­கூ­டாது. மக்கள் விரும்­பாத எந்தத் தீர்­வையும் நாம் ஏற்­கப்­போ­வ­தில்லை என்று எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.


சுட்ட பழம், சுடாத பழம். - சிறுகதை - கே.எஸ்.சுதாகர்

.

ஜெகதீசன் அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப்பதினைந்து வருடத்தில் அவர் கண்ட 'தேட்டம்' - இதோ உங்கள் முன்னாலே வானளாவி நிற்கும் இந்த 'வசந்தமாளிகை'தான்.

வசந்தமாளிகை மூன்றுமாடிகள் கொண்டது. அடித்தளம் நிலமட்டத்திற்கும் கீழே இருப்பதால் சிலர் அதை, "உது இரண்டு மாடிகள்தான்" என்று சீண்டுவார்கள். அவரது காணித்துண்டை 'சரிவு நிலம்' என்று யாராவது சொன்னால் ஜெகதீசனுக்குக் கோபம் வரும். 'சிலோப் லான்ட்' (slope) என்று திருத்திச் சொல்லுவான். பேஸ்மன்றில் (basement) றம்பஸ் றூமும்(rhombus room) ஸ்ரோர் றூமும்(store room) உண்டு. அவரது வீடு பெயருக்குத் தக்கமாதிரி வசந்தமாளிகைதான்.

நெகிழ வைக்கும் A Gun & A Ring திரைப்படம் பற்றி ஒரே பார்வையில் பல விமர்சனம் - C.Paskaran

.
  1. பார்த்து ரசித்த A GUN AND A RING திரைப்படம், தமிழ் முரசு அவுஸ்ரேலியா தளத்திற்காக செ .பாஸ்கரன்
  2. தூங்கும் பனிநீரே தனது தளத்திற்காக சோபாசக்தி
  3. கடவுள் தந்த துப்பாக்கியும் ஒரு மோதிரமும் காலம் சஞ்சிகைக்காக யமுனா ராஜேந்திரன்
  4. ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும், குமுதம் தீராநதி சஞ்சிகக்காக அ. முத்துலிங்கம்
  5. A Gun and A Ring - எங்கட கதை சொல்லும் சினிமா, தென்றல் சஞ்சிகக்காக கானா பிரபா
  6. ஒரு துவக்கும் ஒரு மோதிரமும், ரமணன்
  7. ஒபுலம்பெயர் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்: துப்பாக்கியும் கணையாழியும், காலசுவடு பத்திரிகைக்காக கருணா வின்சென்ற்
  8. ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் திரைப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள், எதுவரை சஞ்சிகக்காக தவ சஜிதரன்
  9. புதிய ஆரம்பம்!, 4TamilMedia தளத்திற்காக ஜீ உமாஜி

மலரும் முகம் பார்க்கும் காலம் 12 - தொடர் கவிதை


Click for Options

.

அகங்காரம் அழித்து யாம் எனவே வாழியவே பகைமொழியால்
அகஞ்சூழும் புகையனைத்து எழில் கொண்டு வாழியவே !
அரிச்சுவடி அரவணைத்து தமிழக்குயிலென்று வாழியவே !
அந்தமது இல்லையென்னும் மமதையுடன் வாழியவே !

செருக்கேறும் செழுமைபெற்ற பொற்குயிலே உந்தன்
மலரும் முகம் பார்க்கும் காலமெது உரைத்திடவா ?
ஊனமாய் ஊமைகளாய் உருக்குலைந்த உன் தளிர்கள்
உரக்க அழைத்திடும் காலமே அதுவல்லவா !

குனிந்து குனிந்து கேள்விக்குறியாய் கூன்விழுந்த முதுகுகளே !
பணிந்து பணிந்து படிக்கட்டாய்ப் போன பதிவுகளே !
கல்தோன்றி மண்தோன்றிய காலத்தின் பின்தோன்றிய
மொழிகட்கு அடிபணிதல்தான் முறையோ?

ஏன் அன்னையைப் பெற்றெடுத்த அன்னைக்கும் அன்னையாம்
ஏன் தமிழ்க் கிழவியவளின்
மலரும் முகம் பார்க்கும் காலம் வந்திடுமோ ?

முழுமையாக தொடர் கவிதைகளை பார்க்க விரும்பினால் இடது பக்கம் இருக்கும் மேலும் சில பக்கங்களுக்குள் பார்க்கலாம் 

எதிரி அல்லாத, எதிர்ப்பு இல்லாத எதிர்க்கட்சியா? - நோர்வே நக்கீரா

.

vjpHfl;rpj;jiytuhf NjHe;njLf;fg;gl;l ,uh rk;ge;jd; IahTf;Fk; j.Nj.$ f;Fk; tho;j;Jf;fisf; $wpf;nfhz;L murpay; Gyj;jpDs; EisNthk;.

vjpHg;gurpay; vd;gd. ehk; jkpoHfs; vd;w xw;iw mbg;gilf;fhuzpiaf;  nfhz;L elj;jg;gl;l murpay; tpgr;rhuNk ,t;turpay;fspd; %yhjhukhFk;. ,J jkpoPog;gpufldj;jpDhlhf Gypfs; tiu njhlHe;jJ. Gypfspd; mopTlDk;> grp> Jd;gk;> Nghhpd; mopTfSld; czHr;rp murpay; epd;Wgpbf;f KbahJ mopa Kad;wNghJk; xU rpyUk;> fl;rpfSk; vQ;rpapUe;j czHr;rpaurpaiyAk; vjpHg;gurpaiyAk; fhg;ghw;w Kad;wdH. ,jd; xU tbtk;jhd; gpughfud; capUld; ,Uf;fpwhH vd;gJkhFk;. rup gpughfud;jhd; capUld; ,Uf;fl;LNk. gilfSld; ,Ue;j gpughfudhy; vijr;rhjpf;f Kbe;jJ?

,d;iwa ajhHj;j murpaypd; Kd; czHr;rpaurpaYk;> vjpHg;gurpaYk; Njhy;tpaile;jd vd;gij ele;J Kbe;j NjHjy;fs; Fwpfhl;b epw;fpd;wd. tapW grpf;Fk;NghJ ehk; jkpoH vd;W %r;Rg;gpbj;J czT $lf;fpilf;fg;Nghtjpy;iy vd;gij kf;fs; czHe;Jtpl;lhHfs; vd;gij mwpf. jkpoHfSf;F vd xU epue;ju> epd;kjpahd vjpHfhyk; Njit vd;why;> epr;rak; ,uh[je;jpu murpaNy xNutop. ,e;j murpaiy rk;ge;jH mofhfNt nra;J te;Js;shH vd;gij fle;j NjHjy;fSk;> eltbf;iffSk; fl;bak; $wp epw;fpd;wd.

உலகச் செய்திகள்


'உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன்': சிறுவனின் சடலத்தை எடுத்த பொலிஸ் அதிகாரி

சிரி­யா­வி­லுள்ள பிர­தான எண்ணெய் வயலின் பகு­தி­களைக் கைப்­பற்­றிய ஐ.எஸ். தீவி­ர­வா­திகள்

குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு உத­வு­வ­தற்கு 6 பில்­லியன் யூரோ நிதி ஒதுக்­கீடு

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தில் பாரிய தீ விபத்து: 14 பேர் காயம்

ஜப்பானில் கடும் மழை : 90 ஆயிரம் பேர் பாதிப்பு

மக்கா பள்ளிவாசலில் பாரந்தூக்கி சரிந்து வீழ்ந்ததில் 107 பேர் மரணம்! 230 பேர் காயம்

'உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன்': சிறுவனின் சடலத்தை எடுத்த பொலிஸ் அதிகாரி

07/09/2015 “சிறுவனை பார்த்த போது உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன். ஆனால் உயிரிழந்து காணப்பட்டான்' என்று துருக்கி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சிறுவனின் சடலத்தை எடுத்த துருக்கி பொலிஸ் அதிகாரி மெக்மெட் சிப்லாட் தெரிவித்துள்ளார்.


போர்க்களத்தில் ஒரு பூ’ படத்துக்கு தடை விதித்ததை எதிர்த்து வழக்கு!

.
இசைப்பிரியா பற்றிய ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்’’ என்று அந்த படத்தின் டைரக்டர் கணேசன் கூறினார்.
இசைப்பிரியா கதை
இலங்கையில் பத்திரிகையாளராக இருந்த தமிழ் பெண் இசைப்பிரியா, சிங்கள ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கருவாக வைத்து, ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற படம் தயாரிக்கப்பட்டது. இசைப்பிரியாவாக தான்யா நடித்து இருக்கிறார். இளையராஜா இசையமைத்து இருக்கிறார். கு.கணேசன் டைரக்ஷனில், குருநாத் சலதானி தயாரித்து இருக்கிறார்.
இந்த படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் கொடுக்க மறுத்து தடை விதித்து இருக்கிறது. இதுதொடர்பாக படத்தின் டைரக்டர் கு.கணேசன் சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் சினிமா


பாயும் புலி


சுசீந்திரன் -விஷால் ஏற்கனவே பாண்டியநாடு படத்தில் ஹிட் கொடுத்து ரசிகர்களை கவர்ந்த கூட்டணி. இதை தொடர்ந்து இன்னும் ஒரு படி மேலே பாக்ஸ் ஆபிஸை வேட்டையாட பாயும் புலியாக களம் இறங்கியிருக்கிறார்கள்.

அதே மதுரைக் களம், சுசீந்திரனுக்கு உண்டான கட்டப்பஞ்சாயத்து, கடத்தல், சேஸிங் காட்சிகள் என அனைத்து ஆக்‌ஷன் பார்முலாவும் பாயும் புலியிலும் உண்டு.
கதைக்களம்
மதுரையில் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறது ஒரு பெரிய கும்பல், அதில் யாருக்கும் தெரியாமல் ஊரில் இருக்கும் பெரிய பணக்காரர்களாக பார்த்து மிரட்டி பணம் பறிக்கிறது. பணம் கொடுத்தால் உயிர், இல்லையெனில் சின்ன பாலத்திற்கு அடியில் பிணமாக கிடப்பார்கள்.
அனைவரும் உயிருக்கு பயந்து பணத்தை கொடுக்க, அதே ஊரில் இவர்களை திட்டமிட்டு பிடிக்கும் போலிஸ்காரர் ஒருவரை நடுரோட்டில் கொல்கிறார்கள். இத்தனை அராஜகம் நடக்கும் ஊரில் விஷால் போலிஸாக பதவி ஏற்கிறார்.
ஆனால், 10 நாட்களுக்கு முன்பே ஊருக்கு வந்து காஜலை சந்தித்து காதலில் விழுகிறார். காதலித்து டூயட் பாடுவார் என்று பார்த்தால், திடிரென்று யாருக்கும் தெரியாமல், பணம் பறிக்கும் கும்பலை என்கவுண்டர் செய்து டுவிஸ்ட் வைத்து ‘இது ஒரு ரகசிய ஆப்ரேஷன்’ என்கிறார்.
இந்த டுவிஸ்ட் முடிவதற்குள், இவர் கொன்றது தலைவன் இல்லை, இந்த கும்பலுக்கு தலைவன் இவரா? என்று கேட்க வைத்து, அடுத்தடுத்து அந்த கும்பலை எப்படி அழித்தார்? என மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக சுசீந்திரன் கூறியிருப்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஆறடி உயரம், கம்பீரமான தோற்றம் என போலிஸுக்கே உண்டான மிடுக்குடன் விஷால் முழுப்படத்தையும் தாங்கி செல்கிறார். இவருக்கு அடுத்து படத்தில் நல்ல ஸ்கோர் செய்வது விஷாலின் அண்ணனாக வரும் சமுத்திரக்கனி தான். இவரின் திரைவாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு படமாக இந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது.
படத்தின் இரண்டாம் பாதி முழுவதையும் இழுத்து செல்வது இவர் கதாபாத்திரமே. காஜலுக்கு நான் மகான் அல்ல படத்தை விட குறைந்த கதாபாத்திரம் தான், அதிலாவது காதல் காட்சிகளில் நம்மை கவர்ந்தார். இதில் அதில் கூட கவரவில்லை. கதைக்குள் இவரை கொண்டு வரவேண்டும் என்பதற்காக சில காட்சிகள் இருக்கின்றது. சூரி தன் மனைவியிடம் சிக்கி தவிப்பதை விஷாலிடம் கூறும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் சிரிப்பு சத்தம் அடங்க சில நேரம் ஆகிறது.
படத்தின் கடைசி 45 நிமிடம் ஜெட் வேகத்தில் செல்கின்றது. குறிப்பாக காஜலின் அப்பாவை பின் தொடர்ந்து அந்த கும்பலை விஷால் துரத்தும் காட்சி சீட்டின் நுனிக்கு வரவைக்கின்றது. வழக்கம் போல் சுசீந்திரன் தனக்கே உண்டான நெகிழவைக்கும் கிளைமேக்ஸுடன் நம்மை கலங்க வைக்கிறார்.
க்ளாப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி, குறிப்பாக அந்த சேஸிங் காட்சி, டி.இமானின் பின்னணி இசை, வேல்ராஜ் அந்த இருட்டிலும் மிக துல்லியமாக படம் பிடித்துள்ளார். சுசீந்திரனுக்கே உண்டான வேகமான திரைக்கதை.
பல்ப்ஸ்
படத்தின் முதல் பாதி கிட்டத்தட்ட படம் ஆரம்பித்து 40 நிமிடம் வரை கதைக்குள் செல்லாமல் இருப்பது, காஜல் அகர்வால் படத்தில் எந்த இடத்திலும் ஒன்றவே இல்லை. பாடல்கள் பாண்டியநாடு அளவிற்கு ரசிக்கும்படி இல்லை.
மொத்தத்தில் ஆரம்பத்தில் புலி தடுமாறினாலும் இரண்டாம் பாதியில் தான் நினைத்த இடத்தை (பாக்ஸ் ஆபிஸ்) குறி வைத்து பாய்ந்துள்ளது இந்த (பாயும்) புலி.

ரேட்டிங்- 2.75/5  நன்றி   cineulagam