மேலும் சில பக்கங்கள்

மெளத்துக்கும் வராத நண்பனுக்கு.... -எச். ஏ. அ ஸீஸ்

.

அவர்கள்   இருவரும்  மேடையில்  உள்ளனர்
நானும்  நீயும்  என்ன  நினைக்கிறோம்
ஒருவரோ டொருவர்  பேச மாட்டார்
பேசினாலும்
கண்ணும்   கண்ணும்  சந்தியாமலும்
முகத்தைக்  கொஞ்சம்  சுழித்துக்  கொண்டும் தான்
பேசுவர்  என்றா

அவை  நானும்  நீயும்  செய்தவைகள்
நான்கு  அல்லது  ஐந்தாம்  வகுப்பில்
எனது  பலூனை  நீ   ஊசியால்  குத்த
உனது  கையில்  பென்சிலால்  குத்தினேன்
பின்னர்  நாங்கள்  பேசாதிருந்தோம்

மௌலவி  ஆசிரியர்  வகுப்புக்கு  வந்தார்
இஸ்லாமிய   மலரில்  ஓர்  உரையாடல்  இருந்தது
அதனை   இருவரும்  வாசிக்கச்  சொன்னார்

முகத்தை  நன்றாய்  நீட்டிக்  கொண்டும்
கண்ணும்   கண்ணும்  சந்தியாமலும்
அஸ்ஸலாமு  அலைக்கும்  என்று  நான்  சொல்ல
வ அலைக்கு   முஸ்ஸலாம்  என்று  நீ  சொல்லி
எவ்வளவு  கெதியாய்  உரையாடி  முடித்தோம்
ஆசிரியர்  நம்மை   போற்றி  மகிழ்ந்தார்


தேசமே கண்ணீரில் மிதக்கிறது .பாரத ரத்னா அப்துல் கலாம் மறைவு

.
*
குடியரசு முன்னாள் தலைவர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (84) மாரடைப்பால் திங்கள் கிழமை மாலை உயிரிழந்தார்.
இந்த இழப்பை தாங்க முடியாமல் தேசமே கண்ணீரில் மிதக்கிறது. மத்திய அரசு 7 நாள் துக்கம் அறிவித்துள்ளது. குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் திங்கள் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலாம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அங்கு நேற்று மாலை 6.30 மணி அளவில் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டி ருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அருகில் உள்ள பெதானி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு பிராண வாயு செலுத்தப்பட்டது. ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையின் இயக்குநர் ஜான் சாலியோ ரயான்தியாங் கூறியபோது, 'நாடித்துடிப்பு அடங்கிய நிலையில்தான் கலாம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார், மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்துள்ளது' என்று தெரிவித்தார்.
தகவல் அறிந்து மேகாலய ஆளுநர் சண்முகநாதன், மாநில தலைமைச் செயலாளர் வாஜ்ரி ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தனர்.

ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 1 - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.


தமிழர் வளர்த்த ஆடற்கலைகள் என்ற எனது நூல் மறுபதிப்பு பெற்றபோது நூலுக்கு அணிந்துரை தருமாறு நீண்டகால நண்பர் ரோசிரியர் மௌனகுருவை நாடினேன் அவர் “ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் என்று எழுதியது மட்டுமல்லாது எனது நீண்ட கால நாட்டிய அனுபவத்தைத் திரட்டி ஒரு பாரிய நூலாக எழுதவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பாரிய நூலாக எழுதும் எண்ணம் எனகில்லாத போதும் எனது அனுபவங்கள் பதியப்பட வேண்டியதே. நான் ஏனையோரில் இருந்து வேறுபடக் காரணமாக இருந்த எனது சிந்தனை சமூகக் கண்ணோட்டம் எனது நாட்டியத் தயாரிப்பில் நான் கையாண்ட வழிவகைகள் யாவும் நாட்டிய உலகின் வளர்ச்சிக்கு வேண்டியதே என்பதை உணர்ந்தேன்.

நாட்டிய கலாகேசரி பத்மபூசன் வளுவூர் இராமையா பிள்ளை அவர்களிடம் நாட்டியத்தை முறையாக கற்று அவர் நட்டுவாங்கத்துடன் பல கச்சேரிகள் செய்து பலரின் அபிமானத்தைப் பெற்றவள் நான். முதலிலே உலகம் என்னை திரும்பிப் பார்க்க காரணமாக இருந்தது எனது முதல் தயாரிப்பான கானகம் ஏகிய ராகவன் என்ற நாட்டிய நாடகமே. கொழும்பு St Bridgats Convent  கல்லூரி நிகழ்ச்சிக்காக 1974இல் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக கானகம் ஏகிய ராகவன் என்ற நாட்டியத்தை தயாரித்தேன். இராமாயணத்தில் பால இராமன் தவறுதலாக மந்தரையைத் தாக்கியது முதல் கைகேயி வரத்தால் தசரதன் உயிர் பிரிதல் தொடர்ந்து இராம இலக்குவர் சீதையுடன் கானகம் ஏகல் இதுவே நாட்டிய நாடகம். பரத நாட்டியத்தைக் கற்றவர் நளினம் மிகுந்த பெண்மை பொருந்திய பரதம் ஆண்பாத்திரத்தைப் படைப்பதற்கு உதவாது என்பதை உணர்ந்திருந்தேன்.

மலரும் முகம் பார்க்கும் காலம் - என்ற கவிதைத் தொடரை வெளியிட உள்ளோம்

.
மீண்டும் புதிய முயற்சியுடன்  தமிழ் எழுத்தாளர்  இணைய அகம்  உங்களுடன் கைகோர்க்கிறது.
வரும் 5.8.2015இல்   - மலரும் முகம் பார்க்கும் காலம் - என்ற கவிதைத் தொடரை   வெளியிட உள்ளோம் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.  
எமது வேணடுகோளை ஏற்று கவிதைத் தொடரில் பங்குபற்ற ஆதரவு தந்த தங்கள் அனைவருக்கும் தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் சார்பாக பணிவன்பான நன்றிகளை வணக்கத்துடன் தெரிவித்து இத்திட்டத்தில் இணைந்துள்ள படைப்பாளிகளின் பெயளர்களை இங்கே மகிழ்வோடு பதிவு செய்கின்றோம்.
திரு.பொலிகை ஜெயா - சுவிஸ்
திருமதி. கோசல்யா சொர்ணலிங்கம் - ஜேர்மனி
திருமதி.சுமதி பாலசசந்தர் - பிஜித்தீவு
திருமதி. சுபாஜினி சிறீரஞ்சன் - டென்மார்க்
திருமதி. ரஜனி அன்ரன் - ஜேர்மனி
திரு. ஆதவன் கதிரேசர்பிள்ளை – டென்மார்க்
திருமதி. பாமா இதயகுமார் - வன்கூவர், கனடா
திருமதி.வேதா இலங்காதிலகம் - டென்மார்க்
திருமதி. மாலினி மாலா – ஜேர்மனி
செல்வி. சறீகா சிவநாதன் - ஜேர்மனி
திரு. நோர்வே நக்கீரா – நோர்வே
திருமதி.நர்மதா சஞ்சீபன் - யாழ்ப்பாணம்

Mr & Mrs சுமைதாங்கி - வைகை

.

Mrs : டாலிங் அப்துல் கலாம்தான்  ரோகினி-1  செயற்கை கோளை விண்ணில விட்டவர் எண்டு எல்லாரும் கதைக்கீனம்
Mr :அது எங்கட சனம் கதைக்கிறது அமரிக்கன் அக்னி, பிரித்வி ,ஆகாஸ் எண்ட ஏவுகணையயளைப் பற்றித்தான் பயத்தில கத்திறான் டாலிங் .

முன்மாதிரியாக வாழ்ந்த படகோட்டியின் மைந்தன் - முருகபூபதி

.
" இளம்தலைமுறையினரே  கனவு  காணுங்கள் " என்று அறைகூவல்  விடுத்தவரின்  நீண்ட  கால  கனவு நனவாகவில்லை.
உலகத்தலைவர்களுக்கும்    தேசங்களுக்கும் முன்மாதிரியாக  வாழ்ந்த   படகோட்டியின்    மைந்தன்
   
                                          
கடல்  அலைகள்,  பொன்மணல்,
புனிதயாத்திரிகர்களின்  நம்பிக்கை,
இராமேஸ்வரம்   பள்ளிவாசல்  தெரு,
இவையெல்லாம்  ஒன்று  கலந்த  உருவம்  நீ...
என்  அன்னையே...
உன்  ஆதரவுக்கரங்கள்  என்  வேதனையை  மென்மையாய் அகற்றின
உன்  அன்பும்  ஆதரவும்  நம்பிக்கையும்  எனக்கு  வலிமை   தந்தன.
அதைக்கொண்டே  நான்  இந்த  உலகை
அச்சமின்றி   எதிர்கொண்டேன்
என்   அன்னையே...  நாம்  மீண்டும்  சந்திப்போம்
அந்த   மாபெரும்  நியாயத்தீர்ப்பு  நாளில்.
இவ்வாறு  தமது  அன்னையை   நினைத்து  கவிதை   எழுதிய  பாரத ரத்னா  அப்துல்கலாம்,  தமது  அன்னையிடமே   சென்றுவிட்டார்.
அவர்   மாபெரும்  நியாயத்தீர்ப்பு  நாள்  என்று  எதனைக் குறிப்பிட்டார் என்ற  விளக்கம்  இங்கு  அவசியமில்லை.
ஒரு  விறகு  வெட்டியின்  மகன்  அமெரிக்காவின்  ஜனாதிபதியானார். ஒரு    செருப்புத்தைக்கும்  தொழிலாளியின்  மகன்  ருஷ்யாவில் அதிபரானார்.
பாரத  நாட்டில்  ஒரு  படகோட்டியின்  மகன்  ஜனாதிபதியாகி  இன்று மக்களின்    மனங்களில்  வாழ்ந்துகொண்டு   விடைபெற்றார்.
இராமேஸ்வரமும்    இராமனும்  அரசியலாகிய  கதை   தெரியும். இராமர்    பாலம்  அமைத்த  இராமன்  எந்த  பொறியியல்  கல்லூரியில் படித்தான்   எனக்கேள்வி  கேட்டவரின்  தலையை   கொய்து எறியப்போனவர்களின்  செய்தியும்  தெரியும்.   இராமரா  -   பாபர் மசூதியா  என்ற  போர்க்களத்தில்   மாண்டுபோன  இன்னுயிர்கள் பற்றியும்   அறிவோம்.
இந்தப்பின்னணிகளுடன்    இலங்கையையும்  இந்தியாவையும் பிரிக்கும்   கடல்  எல்லைக்  கடலோரக்  கிராமத்தில்  ஏழ்மையான குடும்பத்தில்  பிறந்து,  இளம்தலைமுறைக்கு கலங்கரைவிளக்கமாகத்திகழ்ந்த   அப்துல்  கலாம்  என்ற  பிரம்மச்சாரி    விஞ்ஞானியாகவும்  எழுத்தாளராகவும்   திகழ்ந்தவர்.

கேள்விகளால் ஆனது - சிறுகதை - கே.எஸ்.சுதாகர்

.

சிட்னியின் புறநகர்ப் பகுதியில்தான் அந்த முதியோர் பராமரிப்பு இல்லம். அதன் பின்புறமிருந்த கார்த் தரிப்பிடத்தில் காரை நிற்பாட்டினேன். நண்பன் சிவத்தின் அம்மா நேசம் அங்குதான் இருக்கின்றார். அவரை அங்கு கொண்டுவந்து விட்டுப் போனதில் எனக்குப் பெருத்த சந்தேகம். தன்னைத்தானே கவனித்துக் கொண்டு, அடுத்தவருக்கு எந்தவித தொல்லையும் கொடுக்காமல் இருந்துவந்த அவரை - திடீரென்று யாருக்கும் சொல்லாமல் ஏன் அங்கு கொண்டுவந்து விட வேண்டும்? எதுவும் எப்பவும் நடக்கலாம் தான். ஆனாலும்?
அவரைப் பார்ப்பதற்காக சிவத்துடன் ஒரு தடவை இங்கே வந்திருக்கின்றேன். தனிய வருவது இதுதான் முதல் தடவை. கதவைத் தட்டிவிட்டு, சத்தம் ஒன்றும் உள்ளேயிருந்து வராததால் கதவை மெல்ல நீக்கிப் பார்த்தேன். ரெலிவிஷன் தன் பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. சாப்பாட்டு மேசையில் தலையைக் குப்புறக் கவிழ்ந்த வண்ணம் நேசம் இருந்தார். சாப்பாடு அப்படியே இருந்தது.
“அம்மா...மெதுவாகக் கூப்பிட்டேன். நான் எப்போதும் அவரை அம்மா என்றுதான் அழைப்பேன். அவர் தலையை நிமிர்த்திப் பார்த்துவிட்டு, “சிவம் வரவில்லையா?என்றார்.
“நான் வேலை விஷயமா இந்தப் பக்கம் வந்தனான். வந்தவிடத்திலை உங்களை ஒருக்கா பாத்திட்டுப் போகலாம் எண்டு வந்தனான்.
அவரின் முகம் திடீரென்று மலர்ந்தது. மெளனமாக என்னை உற்றுப் பார்த்தபடி இருந்தார். நான் அவருக்குப் பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்தேன்.
“அம்மா எப்படி இருக்கிறியள்?
“ஏன் எனக்கு என்ன குறை? எனக்கு மாறாட்டம் எண்டு சிவம் சொல்லியிருப்பானே!சொல்லும்போதே அவரின் நா தழுதழுத்தது. அந்த உரையாடலைத் திசை திருப்ப நினைத்தேன்.
“அம்மா... இப்ப எங்கடை ஊர்ப்பக்கம் போய்ப் பார்க்க ஆமிக்காரன்கள் விட்டிருக்கின்றான்கள். நான் ஒருக்கா இலங்கைக்குப் போய் எனது வீடு வளவுகளைப் பார்த்து வரலாம் எண்டு இருக்கிறன்.
“தம்பி  ராஜன்... எனக்கொரு உதவி செய்யவேணும்திடீரென்று எனது வலது கையைப் பிடித்து இடைமறித்தார் நேசம்.
“சொல்லுங்கோ அம்மா... செய்யிறன்

இலங்கைச் செய்திகள்


பிர­த­ம­ராக்­க­மாட்டேன் என்று ஜனா­தி­பதி கூறி­யுள்ள நிலையில் மஹிந்­த­வினால் வெற்­றி­பெற முடி­யுமா?

கிளிநொச்சி 3 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் 14 வயது மாணவன் கைது

அப்துல் கலாமின் மறைவுக்கு பிரதமர் அனுதாபம்

அப்துல் கலாமின் மறைவிற்கு ஜனாதிபதி அனுதாபம்

ஹிருணிகா உட்பட ஐவருக்கு கட்சி உறுப்புரிமை நீக்கம்

தெற்காசிய முகநூல் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு


ஆசானுடன் கடைசி நாள்: கலாம் ஆலோசகரின் உணர்வுக் குறிப்புகள்

.

அவருடன் நான் கடைசியாகப் பேசி 8 மணி நேரம் மட்டுமே கடந்திருக்கிறது. (இது கலாமின் ஆலோசகர் ஸ்ரீஜன் பால்சிங் அவரது ஃபேஸ்புக்கில் இப்பதிவை பதிந்த போது குறிப்பிடப்பட்டிருந்த நேரம்) தூக்கம் என் கண்களுக்குள் நுழைய மறுத்து இமைகளை விட்டு விலகிச் செல்கிறது. துக்கம் கண்ணீராகக் கரை புரண்டோடுகிறது. அதில் கலாமின் நினைவுகள் கலந்து வழிந்தோடுகின்றன.
அப்துல் கலாமுடன் நான் சேர்ந்திருந்த அந்த கடைசித் தருணமானது 27-ம் தேதி நண்பகல் 12 மணிக்குத் தொடங்கியது. குவாஹாட்டிக்கு விமானத்தில் ஒன்றாக புறப்பட்டோம். டாக்டர் கலாம் 1-ஏ எண் கொண்ட இருக்கையிலும் நான் 1-சி இருக்கையிலும் அமர்ந்திருந்தோம். அவர் அடர் நிறம் கொண்ட ஆடை அணிந்திருந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் 'நல்ல நிறம்' என அவரது ஆடையைச் சுட்டிக்காட்டிச் சொன்னேன். அப்போது என் மனம் அறிந்திருக்கவில்லை அதுவே அவரை நான் பார்க்கும் கடைசி நிறமென்று.
பருவமழை காலத்தில், விமானத்தில் இரண்டரை மணி நேரம் பயணம் என்பது சற்று எரிச்சலைத் தருவதே. அதுவும் விமானத்தின் சிறு ஜெர்க்குகள் எனக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால், கலாமுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். எனது வெறுப்புணர்வைப் புரிந்து கொண்ட கலாம், என் அருகில் இருக்கும் கண்ணாடி ஜன்னலுக்கு மேல் இருக்கும் திரையை இழுத்துவிட்டு "இப்போது நீ அச்சமின்றி இருக்கலாம்" என்றார்.
விமானப் பயணம் ஒருவழியாக முடிந்தது. அடுத்ததாக ஐ.ஐ.எம். ஷில்லாங்குக்கு கார் மூலமாக இரண்டரை மணி நேரப் பயணம். விமானப் பயணம், கார் பயணம் என பயணமே 5 மணி நேரத்தை விழுங்கிவிட்டது. ஆனால் அந்த 5 மணி நேரமும் நாங்கள் நிறையப் பேசினோம், ஆலோசித்தோம், விவாதித்தோம். கடந்த ஆறு ஆண்டுகளில் இதுபோன்ற நிறைய தருணம் எனக்கு வாய்த்திருக்கிறது.

துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சி

.


துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் நடன நிகழ்ச்சி 25.07.2015 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. 

துபாய் இந்திய துணைத் தூதரகம் இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்திர தனுஷ் என்ற நிகழ்ச்சியினை தொடர்ந்து நடத்தி வருகிறது. 10-ஆவது முறையாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் திரிபுராவின் தெய்வீக பெண்மையான பாலதேவி சந்திரசேகர் பங்கேற்றார். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் நடனம் ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தார். துவக்கமாக குத்துவிளக்கினை அவர் ஏற்றி வைத்தார். 

நடன நிகழ்ச்கிக்குப் பின்னர் பாலதேவி சந்திரசேகருக்கு இந்திய துணைத் தூதரக கலாச்சார அதிகாரியும், ஹெச்.ஓ.சியுமான தீபா ஜெயின் நினைவுப் பரிசினை வழங்கி கௌரவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் துணைத்தூரக அலுவலர் ஆர். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

புலிகளை அழித்தவர்கள் புலிகளின் பெயரால் வாக்குத் திரட்டும் அருவருப்பான ஆதாரங்கள்: கோசலன்

.

சுனாமி நிதியுதவி என்ற பெயரில் இலங்கை சென்ற ஜோர்ஜ் பூஷ் மற்றும் பில் கிளின்டன் - 2004
சுனாமி நிதியுதவி என்ற பெயரில் இலங்கை சென்ற ஜோர்ஜ் பூஷ் மற்றும் பில் கிளின்டன் – 2004

அமெரிக்க அரசு போராட்டங்களை அழிப்பதற்கும் எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளில் (counterinsurgency) ஈடுபடுவதற்கும் பணம் வழங்குவதற்கான அரச அமைப்பின் பெயர் யூஸ்எயிட்(USAID). இந்த நிறுவனம் உலகம் முழுவதிலும் ஏற்படுத்திய அழிவுகள் புதியவை அல்ல. சர்வதேச அபிவிருத்திக்கான அமரிக்க முகவர் அமைப்பு( United States Agency for International Development (USAID)) என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம் இலங்கையில் 1972 ஆம் ஆண்டிலேயே தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டது.
இலங்கையின் அரசியல் நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக மார்கா என்ற நிறுவனத்திற்கு நிதி வழங்கியது. இந்த நிறுவனத்தின் ஊடாக பல்வேறு உள்ளகத் தகவல்களி அமெரிக்க அரசு ஆவணப்படுத்திக்கொண்டது.
2013 ஆம் ஆண்டு தனது நாட்டில் உளவு வேலைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தி USAID ஐ பொலீவிய அரசாங்கம் வெளியேற்றியது.

பூவால் நேர்கோடு வரைந்து இறுதி அஞ்சலி செலுத்திய அப்துல் கலாமின் அண்ணன்

.


மறைந்த அப்துல் கலாமின் உதவியாளராக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றிய ஸ்ரீஜன் பால் சிங் இன்று தனது பேஸ்புக்கில் கூறியுள்ளதாவது; "நான் கலாம் அவர்களிடம், எப்போது என்னை உங்கள் சொந்த ஊருக்கு கூட்டி செல்ல போறீங்க? என்று அடிக்கடி கேட்பேன். அப்படி கடைசியாக கேட்டபோது அவர், 'அடுத்த ஆண்டு கோடையில் என் அண்ணாவுக்கு 100 வயதாகிவிடும். அதை நான் சிறப்பாக கொண்டாடி அவரை சந்தோஷப்படுத்த முடிவு செய்துள்ளேன். அப்போது நீ உட்பட என் நண்பர்கள் அனைவரையும் அழைத்து போகிறேன். அப்போது அண்ணன் வீட்டில் நான் வடிவமைத்த சோலார் நிலையத்தையும் பார்க்கலாம்' என்று கூறினார்.

உலகச் செய்திகள்


அப்துல் கலாம் காலமானார்

அமெ­ரிக்க ஜனா­தி­பதி எதி­யோப்­பியா விஜயம்

அப்துல் கலாமின் உடல் இராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

மகத்தான மாமனிதர் மண்ணுக்குள் விதைக்கப்பட்டார்

இந்திய பெருங்கடலில் விமானத்தின் பாகம்: எம்.எச்.370 விமானத்தினுடையதா?

எம்.எச்.17 விமான அனர்த்த விசாரணை தீர்ப்பாயத்தை ஸ்தாபிப்பதற்கான ஐக்கிய நாடுகள் தீர்மானம் தோல்வி

மியன்மாரில் வெள்ளம் : 27 பேர் பலி


200ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் யாழ்.மத்திய கல்லூரி

.
news
யாழ்.மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 200ஆவது ஆண்டினை நெருங்கும் நிலையில், 2016 ஆம் ஆண்டில் 200ஆவது ஆண்டு விழாவினை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்லூரியின் அதிபர் க. எழில்வேந்தன் நேற்று தெரிவித்தார்.

யாழ்.மத்திய கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மத்திய கல்லூரி 2016 ஆம் ஆண்டு 200ஆவது ஆண்டினை அண்மித்துக் கொண்டிருக்கின்றது. இதனை முன்னிட்டு 200ஆவது ஆண்டு விழாவினை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இதனை வெகு சிறப்பாக கொண்டாட தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதியில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரையான ஒரு வருடமும் பல்வேறு நிகழ்வுகளை நடாத்த தீர்மானித்து, நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளதுடன், எதிர்வரும் 18 ஆம் திகதி அன்று பாரிய நடைபயணம் ஒன்றினையும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயர்ந்த பண்புகளையும், சமூகத்திற்கு வெளிப்படுத்தும் நோக்கத்துடன், அந்த நடை பயணத்தினை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த நடை பயணத்தின் மூலம் மத்திய கல்லூரியின் பெருமையும், பண்புகளையும் சமூகத்திற்கு எடுத்துரைக்கப்படும்.’ என்றும் தெரிவித்தார்.
Nantri 

onlineuthayan.com

காலத்தை ஆளும் கலாம் - ம.ரமேஸ்

.


வெண்ணிலவின் ஒளி  பட்டு  தண்ணிலவின் குளிர்கண்டு  பனிபடர்ந்த புற்களில் காகங்களும்  வேறு பறவைகளும் எதை எதையோ தேடின.    அவன்  படுக்கையைச்   சுருட்டி  வைத்துவிட்டு  சோம்பல் முறித்தான்,  அசையும்   அலைகளை  உற்றுப்பார்த்தான்  யோசித்தான் 
சில பறவைகள்  கடலின் மேலே  அழகாகப் பறந்து சென்றன இவை எங்கே  எதற்காகப்  பறக்கின்றன,  ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு  .  மகனே  என்றவாறு  தேநீருடன்  வந்தார் 
தந்தை,  கையில் தேனீரைப்  பணிவுடன் வாங்கிய  மகன்  சற்றுச்   சோர்வாக  இருந்து  யோசிப்பதைக் கண்ட  தந்தை  சொன்னார் ,  மகனே  இந்த வானில் பறக்கும்  பட்சிகளைப்பார்த்தாயா  எந்தத் துணையும் இன்றி  இறக்கைகளை மட்டுமே நம்பி  முடியும் என்ற  குறிக்கோளுடன் எதற்கும்  அஞ்சாது  பறக்கின்றன.

   மேலே வானம்  கீழே  ஆழி  இடையில்  தங்க  ஒரு மரமில்லை 
கொத்தியுண்ண அவைகளுக்கு எதுவுமில்லை  முகில்களைக் கிழித்து  விரைகின்றன தங்களுக்கான எதையோ  தேடி,  தேடச் செல்பவனுக்கு மனதில் தைரியம் வேண்டும்  பயம் கூடாது   வேகம் வேண்டும் . கடந்த   இரண்டு நாட்களாக நீ எதைப்பற்றி   யோசனை செய்கின்றாய்  அது என்ன வென்று  அறிவேன் மகனே . வடக்கே தனியாகச்  சென்று  மேற்படிப்பைப்  படிக்க வேண்டியுள்ளதே  புரியாத மொழி  வித்தியாசமான  யாவும் எப்படி  சமாளிப்பேன் என்பதையிட்டே  நீ துயரப் படுகின்றாய் என்பதை அறிவேன். பயம் வேண்டாம் வருங்காலத்தில் எப்படி எவரிடத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவு உனக்கு உண்டு சென்று வா மகனே வென்று வா நலமாக . 

1987 ஜூலை 27 - ஒரு சிட்டுக்குருவி விழுந்தது

.

மனிதர்களின் பாதம் பதியாத அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் பயணித்துப் பறவைகளின் வாழ்வை அவதானித்தவர். “சோதனைக்கூடத்தில் ஒரு நுண்ணோக்கி அடியில் பறவையைக் கிடத்தி ஆராயும் ஆய்வாளர் அல்ல நான். பறவையின் வாழ்வுலகுக்குள் பிரவேசித்து, அவற்றின் வரலாற்றைப் பதிவுசெய்வதே என் நோக்கம்” என்றார். ‘எந்தப் பறவையும் உன்னைப் பார்க்கவில்லை என்று எண்ணாதே, நீ பார்க்கும் முன்னரே அது உன்னைப் பார்த்திருக்கும்’ எனும் வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் - அவர்தான் இந்தியன் பறவையியலின் தந்தை என வாஞ்சையுடன் அழைக்கப்படும் சலீம் அலி.
1896-ல் மும்பை அருகே கேத்வாடி என்ற ஊரில் பிறந்தார் சலீம் அலி. 10 வயதில் வேட்டைப் பிரியராக இருந்த சலீம், ஒருநாள் விளையாட்டுத் துப்பாக்கியால் ஒரு சிட்டுக்குருவியைச் சுட்டார். மஞ்சள் நிறக் கழுத்துப்பட்டை கொண்ட அந்த அபூர்வமான குருவி, நொடிப் பொழுதில் மரக் கிளையிலிருந்து கீழே சரிந்து விழுந்து இறந்தது. ‘தி ஃபால் ஆஃப் எ ஸ்பேரோ’ எனப் பின்னாளில் தன் சுயசரிதைக்குப் பெயர் சூட்டும் அளவுக்கு சலீமை ஆழமாகப் பாதித்தது அந்தத் தருணம். பறவைகளை ரசிக்கத் தொடங்கினார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிளைவ் ரைஸ் மரணம்

.

உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராகக் கருதப்படுபவரும், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான கிளைவ் ரைஸ் கேப்டவுனில் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. 

அவர் சிறிது காலமாக மூளைக்கட்டி நோயினால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கேப்டவுன் மருத்துவமனையில் செவ்வாயன்று அவரது உயிர் பிரிந்தது.

கடந்த மார்ச் மாதம் புற்று நோய் தொடர்பான சிகிச்சைக்காக பெங்களூரு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வலது கை வேகப்பந்து வீச்சாளரும், பேட்ஸ்மெனும் ஆவார்.

ஆல்ரவுண்டரான கிளைவ் ரைஸ் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளில்தான் ஆடியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்ட காலத்தில் இவர் பெரும்பாலும் ஆடிவந்தார். தடை நீக்கமடைந்த பிறகு 1991-ம் ஆண்டுக்கு இந்தியாவுக்கு முதன் முதலாக வந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கிளைவ் ரைஸ் இருந்தார். ஆனால் அப்போதே அவருக்கு வயது 40-ஐ கடந்திருந்தது, இதனால் 1992 உலகக் கோப்பையை இழந்தார் இந்த அதிரடி ஆல்ரவுண்டர்.


வேண்டும் - காரைக்குடி. பாத்திமா ஹமீத்

.
பறக்கும் விமானம் பாதுகாப்பாக
தரையிறங்க வேண்டும்!-கப்பலில்
பயணிக்கும் மீனவர்கள் பத்திரமாக
கரைசேர வேண்டும்!

முதியோர் இல்லங்கள்
மூடப்பட வேண்டும்!
அநாதை விடுதிகள்
அகற்றப்பட வேண்டும்!

வரதட்சணை இன்றிப் பெண்கள்
மணம்முடிக்கப்பட வேண்டும்!
வட்டியில்லாக்கடன் கொடுத்து
வறுமைபோக்கிட வேண்டும்!

தமிழ் சினிமா


இனிமே இப்படித்தான்


”கண்ணா லட்டு தின்ன ஆசையானு” கேட்டவங்க, சந்தானத்துக்கு கிட்ட ”கண்ணா 2 வது லட்டு தின்ன ஆசையானு” கேட்க உருவானதுதான் “இனிமே இப்படிதான்”.
கதை
படத்தின் Trailer கூட தேவையில்லை படத்தின் Poster வைத்தே கதை சொல்லிறலாம். 1980களில் சிவக்குமார், பாக்கியராஜ், மோகன் போன்ற காதல் மன்னர்கள் எடுத்து அதிலும் வெற்றியடைந்த கதைக்களம் தான் ( பின் குறிப்பு : இது 2 மனைவி கதை அல்ல). ”வெறும் வாயிலே வடை சுடுற” மாதிரி இருக்கும் ஒரு பையன் (சந்தானம்). “பார்த்த ஒரு லுக்”கிலயே ”அத்தனை அழகையும்” ”தேடி ஓடி” ”ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்” வைக்கறார் சந்தானம். பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.
படத்தை பற்றிய அலசல்
ஒரு பெண்ணை காதலித்து இன்னொரு பெண்ணை நிச்சயம் செய்து விழிபிதுங்கும் கதையின் நாயகனாக வரும் சந்தானம் பட்டைய கிளப்புகிறார். முகத்தோற்றம், உடல்தோற்றம், சிகையலங்காரம், உடை, நடனம், சண்டை காட்சி என ஹீரோவிற்கான அனைத்தையும் மெருகேற்றியிருக்கார். காதலை propose பண்ணும் காட்சியிலும் சரி, காதலியை துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சியிலும் சரி நம்ம ஊர் பசங்களுக்கு புது Trend ஏற்படுத்தி கொட்டுக்கிறார், interval முன் வரும் காட்சியிலும் Restaurants காட்சியிலும் அரங்கமே சிரிப்பொலியில் அதிருகிறது.
பின் “காதலிக்கவில்லைனு prove பண்ணு”னு சொல்லும் காட்சியில் ”அடங்கப்பா இது உலக நடிப்புடா சாமி”. ”மெகா சீரியல் பாத்து அழுகுற பொம்பளைகள விட கல்யாண CD பாத்து அழுகுற ஆம்பளைங்கதான் அதிகம்” ”மரமே இப்படி இருந்தா மாங்கா எப்படி இருக்கும்” இது போன்ற சிரிப்பு Punch வசனங்ளுக்கு பஞ்சமே இல்லை. மொத்ததில் சந்தானம் ஹீரோவாக "BACK WITH A BANG".
படத்தில் வரும் இரு ஹீரோயின்களுக்கும் பொருத்தமான கதாபாத்திரங்கள். சந்தானத்தை பார்க்கும் முதல் காட்சியிலேயே அறைவது முதல் சந்தானத்தை மிரட்டுவது வரை கலக்கியுள்ளனர். பாடல் காட்சிகளில் கவர்ச்சியை அள்ளி தெளித்திருக்கிறார் ஆஷ்னா, மொத்தத்தில் “BOLD AND BEAUTIFUL". குடும்ப பெண்ணாக வரும் அகிலா, வரும் கொஞ்ச காட்சிகளிலும் அவரின் கதாபாத்திரத்தை நிலை நிறுத்தியிருக்கிறார்.
படத்தின் மற்றொரு தூண் தம்பி ராமையா, சந்தானத்தோடு தாய் மாமாவாக வந்து இவர் செய்யும் காரியங்களும், கொடுக்கும் யோசனைகளும் ”அதிரி புதிரி” குறிப்பாக சந்தானத்தை ஆண்மை சோதனைக்கு அழைத்து செல்லும் காட்சியில் பொறுப்பான ”மாமா”வாக நடந்து கொள்கிறார். ladies tailor ஆக வரும் VTV கணேஷ் ஆங்காங்கே சிரிக்க வைக்க உதவியிருக்கிறார்.
முழு நீள நகைச்சுவை கதையை எடுத்து அதை சரியாக கையாண்ட படத்தின் இயக்குனர்கள் முருகன் ஆனந்த் இருவருக்கும் பாராட்டுக்கள். பாடல்கள் எல்லாம் ஏற்கனவே பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டான நிலையில் பின்னணியிலும் பின்னியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி. நாயகன், நாயகிகள், துணை நடிகர்கள் என அனைவரையும் மிக அழகாக காட்டிய கோபி ஜகதீஸ்வரனின் கேமரா, பாடல் காட்சிகளை மேலும் மெருகேற்ற உதவுகிறது. படத்தின் நீளத்தை குறைத்து, படத்தின் சுவாரஸ்யமாக கொண்டு செல்ல அந்தோனி L ரூபனின் editing பக்க பலமாக உள்ளது.
க்ளாப்ஸ்:
தனக்கு என்ன வருமோ அதை அழகாக வெளிக்காட்டி இருக்கிறார் சந்தானம். ரசிகர்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதை அப்படியே கொடுத்திருக்கிறார்கள் படக்குழுவினர். படம் முழுவதும் நம் stress மறைந்து போகும் அளவிற்கு சிரித்து கொண்டே இருக்க வைக்கும் வசங்கள். படத்தின் Climax Twist யாரும் எதிர்பாராதது.
பல்ப்ஸ்:
பல படங்களில் பார்த்த அதே cleache காட்சிகள். காதலில் பொண்ணுங்கள மட்டும் குத்தம் சொல்லி கலாய்ப்பதை குறைத்து இருக்களாம். படத்தில் யார் எந்த வேலை செய்கிறார்கள் என்று கடைசி வரை சொல்லவே இல்லையே?.
மொத்தத்தில் சந்தானம் முழு நீள ஹீரோவாகி இனிமே நாங்களும் ஹீரோ தான் என்று இப்படத்தின் மூலம் நிரூபித்துவிட்டார்.
ரேட்டிங் : 3.25/ 5
நன்றி cineulagam