மேலும் சில பக்கங்கள்

குடிக்கக் கொஞ்சம் தண்ணி தாங்கோ! - பானுபாரதி-

.
இது தீவகத்தில் மெலிஞ்சிமுனை என்ற மீன்பிடிக் கிராமத்தின் இன்றைய நிலை, நாளைய வரலாறு. -
தாகத்தில் நா வரண்டு
தவிக்கிறது கிராமம்.
மனிதக் கருவாடுகளாய்
அதன் மக்கள்.

மாண்புமிகு தலைவர்கள்
தலை மறைவு.

நாளை வருவார்கள்
தண்ணீர் ஆய்வுகள் செய்ய
ஆராய்ச்சியாளர்கள்.
அப்போ
ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மனித எலும்புக் கூடுகளை
தோண்டியெடுத்து
காட்சிச் சாலைக்கு
எடுத்துச் செல்வார்கள்.

இந்தச் சாதனையை ஊடகங்கள்
கவர்ச்சிகரமாக எடுத்தியம்பி
தங்கள் கல்லாவை நிறைக்கும்.



nantri  piraththiyaal.com

1 comment:

  1. விருது வழங்க வேண்டிய சிறந்த ஆவணப்பதிவு.
    முருகபூபதி - மெல்பன்.

    ReplyDelete