மேலும் சில பக்கங்கள்

மரண அறிவித்தல்


திருமதி ஞானசுந்தரி அருளையாபிள்ளை



மாப்பாணவூரி காரைநகரைப் பிறப்பிடமாகவும் மெல்பேன் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஞானசுந்தரி அருளையாபிள்ளை அவர்கள் 19.11.2013 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். 

அன்னார, காலஞ்சென்ற முருகேசு – நேசரட்ணம் தம்பதியினரின் மூன்றாவது புதல்வியும், காலஞ்சென்ற Dr சோமசுந்தரம் அருளையாபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் சச்சிதானந்தா (Dandenong – Melbourne) காலஞ்சென்ற முருகானந்தா (Glen Wawerly – Melbourne), சங்கமித்ரா (Waverly Park – Melbourne)  ஆகியோரின் பாசமிகு தாயாரும் வள்ளிஇ; சிறீராணிஇ பூங்குன்றன் ஆகியோரின் அன்பு மாமியாரும் நிரோசன்இ றம்யாஇ யதுர்சன்இ சாரங்காஇ விசாய் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

ஆன்னாரின் பூதவுடல், வெள்ளிக்கிழமை (22.11.2013) மாலை 4 மணி முதல் 5:15 மணி வரை, Springvale Wilson Chappel மண்டபத்தில் பார்வைக்காகவும் இறுதி மரியாதைக்காகவும் வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து ஈமைக்கிரியைகளும் தகனக்கிரியையும் அதே தினத்தில் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றோம்

மேலதிக தொடர்புகளுக்கு:

        சச்சி        0469 621 482

        மித்ரா        0469 149 417

        சிறீராணி    0402 079 256
               

யூனியன் இரவு 2013 - ஜெயந்தி மோகன்



படங்கள்: எ.ஜெ. ஜெயச்சந்திரா
தெல்லிப்பழையில் அமைந்துள்ள யூனியன் கல்லூரியின் பழைய மாணவர் சங்க அவுஸ்திரேலிய சிட்னிக் கிளையினால் சிட்னி மாநகரத்தில்; யூனியன் இரவு 2013 ஒன்றுகூடலும்ää இராப்போசன விருந்தும் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வு சிட்னியில் அமைந்துள்ள யாழ் கலாச்சார மண்டபத்தில் 16.11.2013 அன்று மாலை 6:30 மணிக்கு இடம் பெற்றது. ஒரு நிமிட மௌனத்துடன் ஆரம்பித்த ஒன்றுகூடலில் முதலில் தேசிய கீதமும்ää பாடசாலைக் கீதமும் பழைய மாணவர்களால் இசைக்கப்பட்டது.


ஒளி காட்டும் வழி

.





ஒளி காட்டும் வழியில் பயணப்பட்டு
ஒளிர்ந்தடங்கக்கூடும் உங்கள் திருநாட்கள்.
விழி காட்டும் ஒளியில் மாத்திரமே
விடியக்கூடும் எங்கள் இருள்நாட்கள்!
வழியறியாமலும் வாழ்வின் போக்கறியாமலும்  
தயங்கியோ முடங்கியோ தவித்துக்கிடப்பதில்லை,
சாலையிலும் வாழ்க்கைப்பாதையிலும்
கரடுமுரடுகளைக் கண்ட எங்கள் கால்கள்,

இடறும் சரளைக்கற்களால் தடுமாறி
இடவலம் புரியாது திசைகளின் தடம்மாறி
முச்சந்திகளில் தத்தளித்து நின்றாலும்….
அச்சச்சோவென்று அனுதாபம் கொண்டெவரும்
ஆதரவுக்கரம் நீட்டி அவமதித்திட வேண்டாம்.
சாலையின் விதிகளை மதித்து நடவுங்கள்,
சங்கடமின்றி சாலை கடப்போம் நாங்கள்.
இதை இறுமாப்பெனாது, தன்னம்பிக்கையென்பீராயின்
இறும்பூதெய்திடுவோம் உங்கள் பெருந்தன்மை கண்டு.

செல்வி பைரவி சிவராஜாவின் வயலின் அரங்கேற்றம் -ரேணுகா தனஸ்கந்தா

.
மெல்பன்   கவின்  கலை   இசைக்கல்லூரியின்  முதலாவது வயலின் அரங்கேற்றம்
இளங்கலைஞர்    செல்வி     பைரவி    சிவராஜாவின்                                         ஆற்றலை      வெளிப்படுத்திய     நிகழ்வு



அவுஸ்திரேலியா      விக்ரோரியா      மாநிலத்தில்     மெல்பனில்     பல  வருடங்களாக      கவின்    கலைக்கல்லூரி     எனும்     இசைப்பள்ளியை  நடத்திவருகிறார்     ஸ்ரீமதி ரமா சிவராஜா.    தமது  ஏழுவயதிலேயே    இசை கற்கத்தொடங்கி      யாழ்ப்பாணம்     பல்கலைக்கழக      நுண்கலைக்கல்லூரியில்      இசைக்கலைமhணியாக      பட்டம்    பெற்ற   ரமா சிவராஜா,    அவுஸ்திரேலியா       மெல்பனுக்கு     புலம்பெயர்ந்தபின்னர்  கவின்கலைக்கல்லூரியை      ஆரம்பித்தார்.
அவரது  புதல்வி  பைரவியின்  வயலின்  இசை அரங்கேற்றம் சமீபத்தில்  மெல்பனில்     George wood Performing Arts Centre     இல்  நடைபெற்றது.
செல்வி     பைரவி,     வயலினுடன்   வாய்ப்பாட்டு,  நடனம்  முதலான கலைத் துறைகளையும்     கற்றவர்.      வீணை,      பியானோ     முதலான இசைக்கருவிகளை       வாசிக்கும்      திறனும்      படைத்தவர்.

திரும்பிப்பார்க்கின்றேன் -- 15 முருகபூபதி

.

கையெழுத்தும்   தலையெழுத்தும்   இருவேறு  துருவங்கள்
துன்பியல்   நாடகத்தில்   தோன்றிய   பாத்திரம்   மு.கனகராசன்



 “உங்களுடைய  கையெழுத்து  அழகாக  இருக்கிறது” என்றேன்.
“தலை எழுத்து  அப்படி  அல்ல” – என்றார் கனகராசன். சொல்லும் போது மந்தகாசமான புன்னகை. பல எழுத்தாளர்களின் தலை எழுத்து  அவர் சொன்னது  போன்று அழகாக அமையவில்லை   என்பது   என்னவோ   உண்மைதான்.
வேறு   எந்தத்  தொழிலும் தெரியாமல் எழுத்தை மட்டுமே நம்பிவாழ்வைத் தொடங்கியவர்களின்  வரிசையில்  இடம் பெற்றவர்  மு.கனகராசன்.
இவர்  பணியாற்றிய   பத்திரிகைகள்  பல. இலக்கியச் சிற்றேடுகள் சிலவற்றுடனும் நெருங்கிய   தொடர்பு  கொண்டிருந்தார். நான் அறிந்த வரையில் மு.க. என  எம்மால்  அழைக்கப்பட்ட  மு. கனகராசன்  சுதந்திரன் - தேசாபிமானி -  புதுயுகம்  முதலான இதழ்களில்   பணிபுரிந்துள்ளார்.  சிற்பி   சரவணபவனின்  கலைச்செல்வி  செல்வராஜாவின்  அஞ்சலி   முதலான இலக்கியச்   சிற்றேடுகளில் வேலை செய்திருக்கிறார். மல்லிகை ஜீவாவுக்கும்  மல்லிகை  தொடர்பாக  அவ்வப்போது  ஆலோசகராக   இயங்கினார்.  மரணப்படுக்கையில்   விழுவதற்கு முன்னர் இறுதியாக  தினகரனில்  வாரமஞ்சரியை  கவனித்துக்  கொண்டிருந்தார்.


நாளைய பிரதமர்? மோடியின் முகமூடியை கிழிக்கும் ஓரு புகைப்படம்....

.

தேர்தல் திருவிழா 2014 துவங்கி விட்டது. மோடியும்,ராகுலும் மாறி திட்டிக்கொள்ளும் செய்திகளை படித்துக்கொண்டிரு ப்பீர்கள்... நாளை பிரதமராக பேசப்படுகிற மோடி 10 ஆண்டுகளுக்கு முன்பு (2002) கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை முன்வைத்து  குஜராத்தில் நடத்திய படுகெலையின் சாட்சியாக ஓரு படம், அவரின் முகமூடியை கிழிக்கிறது...

கட்டுரையை வாசிப்பதற்கு முன் கீழேயுள்ள புகைப்படத்தை சற்றே உற்று கவனியுங்கள்.. இந்த தேசம் இவரை மறந்திருக்காது.. இவரது பெயர் குத்புதீன் அன்சாரி..
2002 ஆண்டு மார்ச் 1 ம் தேதியன்று குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.. அன்றைக்கு அன்சாரிக்கு வயது 28.. சம்பவங்கள் நடந்து பத்தாண்டுகளுக்கும் மேலாகிறது.. ஆனால் அவற்றை நினைத்துப் பார்த்தால் இன்றும் மெலிதாக உடல் நடுங்குகிறது அன்சாரிக்கு... அனைத்தையும் மறக்கவே நினைக்கிறேன்.. ஆனால் வரலாறு திரும்பி விடுமோ என்ற அச்சம் மட்டும் விலக மறுக்கிறது என பழைய நினைவுகளை அசைபோடும் அன்சாரி மேலும் பேசுகிறார்...


மெல்பேண், குன்றத்துக்குமரன் ஆலயத்தில்,சூர சம்மாரம்.

.
 மெல்பேண், குன்றத்துக்குமரன் ஆலயத்தில், கடந்த 8.11.2013 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற சூர சம்மார அலங்கார உற்சவத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு, சூர சம்மார நிகழ்ச்சியைக் கண்டு களித்து, குன்றத்துக்குமரப்பெருமானின் அருள்பெற்றனர். மிகவும் அழகாக நடைபெற்ற சூரசம்மார நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சில பெரியவர்கள், " ஊரில் செய்யுறத்தைவிட நால்லாச் செய்யுறாங்கள்" என்று புகழ்ந்து பேசிக்கொண்டார்கள். அப்போது எடுக்கப்பட்ட படங்களில் சிலவற்றை இங்கு காணலாம். ( தகவல் - சு.ஸ்ரீகந்தராசா)




இலங்கைச் செய்திகள்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மாவிட்டபுரத்தில் உண்ணாவிரதப்போராட்டம்

12/11/2013      வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி இன்று காலை 8 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வலிவடக்கில் இரானுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள தமிழ் மக்களின் காணிகள் மற்றும் வீடுகள் கடந்த 23 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ளது.
இந்த காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதப்போரட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
 

பறவைகளை கற்சிலைகளாக மாற்றிடும் அதிபயங்கர ஏரி

.


பல்வேறு மர்மங்களைக் கொண்ட இந்த பூமியில் தற்போது நீர் அருந்தும் பறவைகளை கற்சிலைகளாக மாற்றிடும் அதியபங்கர ஏரி குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

புராண காலங்களில் மந்திரவாதிகளும் மாயாஜால வித்தகர்களும் தங்களை எதிப்பவர்களையெல்லாம் கற்சிலைகளாக மாற்றி மகிழ்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.இந்த கற்சிலைகளுக்கு உயிர்கொடுத்திட அன்றைய கதாநாயகர்கள் ஏழு கடல்,ஏழு மலை தாண்டிச் சென்று கடைசியாக சூட்சுமத்தை கண்டுபிடித்து கற்சிலைகளை அகலிகளாக மீண்டும் உயிர்பெற்று தருவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.இந்நிலையில் உலகிலுள்ள மக்களுக்கு உயிரூட்டம் கொடுத்திடும் பல்வேறு ஏரிகள் குறித்து நாம் கேள்விப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டிலுள்ள ஏரியொன்று தன்னில் நீரருந்தும் பறவைகளையெல்லாம் கற்சிலைகளாக மாற்றியிருக்கும் அதிபயங்கர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தான்சானியா நாட்டின் வடபகுதியில் கென்யா நாட்டின் எல்லையை ஒட்டிய நாட்ரன் எனும் ஏரிதான் தன்னில் நீரருந்தும் பறவைகளையெல்லாம் கற்சிலைகளாக மாற்றி வருகிறது.இதனை கண்டுபிடித்து வெளிஉலகிற்கு கொண்டுவந்தவர் ஆப்பிரிக்காவின் தலைசிறந்த வைல்ட்லைப் புகைப்பட 

உலக செய்திகள்

.
மலாலாவின் புத்தகத்திற்கு தடை

பிலிப்­பைன்ஸை தாக்­கிய ஹையான் சூறா­வளி: 10,000 பேர் பலி

லைபர்மேன் மீண்டும் பதவியேற்பு: இஸ்ரேல்- பலஸ்தீன் பேச்சுவார்த்தை கேள்விக்குறி

ஹக்­கானி போராளிக் குழுவின் சிரேஷ்ட தலைவர் பாகிஸ்­தானில் சுட்­டுக்­கொலை

கெமரூன் - மன்மோகன் சிங் சந்திப்பு

மலாலாவின் புத்தகத்திற்கு தடை

11/11/2013 பாகிஸ்தானில் உள்ள தனியார் பாடசாலைகள் சில மலாலா யூசாப்சாயின் புத்தகத்துக்கு தடைவிதித்துள்ள சம்பவமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கான கல்வி மற்றும் உரிமை போன்றவற்றுக்கு குரல்கொடுத்தமையால் மலாமா யூசாப்சாய் தலிபான்களால் கடந்த வருடம் சுடப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பிரித்தானியாவுக்குச் சென்ற அவர் அங்கே தஞ்சமடைந்தார்.

சர்வதேசப் போட்டிகளிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின்

.


இந்திய
அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது 200 ஆவது   டெஸ்ட் போட்டியுடன் சர்வதேசப் போட்டிகளிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார்.

மேற்கிந்தியாவுடன் தனது கடைசி டெஸ்டில் விளையாடிய சச்சின் முதல் இனிங்ஸில் 74 ஓட்டங்கள் விளாசினார். இந்திய அணி 2 வது டெஸ்டில்  இனிங்ஸ் மற்றும் 126 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் மற்றும் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி இனிங்ஸால் வெற்றி பெற்றது. வெற்றியை கொண்டாடிய சச்சின் மைதானத்தில் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். ரசிகர்கள், இந்திய அணி மற்றும் மேற்கிந்திய அணி வீரர்கள் சச்சினுக்கு எழுந்து நின்று பிரியாவிடை கொடுத்தனர். அப்போது சச்சின் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

துபாய் : முத்தமிழ் மழை நிகழ்வும் கவிஞர் காவிரிமைந்தன் பிறந்த நாள் விழாவும்

.

07.11.2013 அன்று அஜ்மான் சிவ ஸ்டார் பவனில் இரவு 9.00 மணியளவில் முத்தமிழ் மழை நிகழ்வும் கவிஞர் காவிரிமைந்தன் பிறந்த நாள் (10.11.) விழாவும் இனிதே நடை பெற்றன. 

செல்வி ஆனிஷாவின் தமிழ்த் தாய் வாழ்த்தோடு விழா தொடங்கியது.

விழாவிற்கு ஈ.டி.ஏ நிறுவனத்தின் மூத்த செயல் இயக்குனர்      திரு அன்வர் பாஷா அவர்கள் தலைமை தாங்கினார். தனக்கே உரித்தான பாணியில் தமிழ் அருவிபோல் சொற்களைக் குவித்து சொல்லோட்டம் நடத்தினார்.  கவிஞர் காவிரிமைந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அளவான வார்த்தைகளால் அலங்காரம் செய்து விழாவைத் தொகுத்தளித்தார் திண்டுக்கல் ஜமால் அவர்கள். திரு.  ஏ என். சொக்கலிங்கம்,    திரு.  எஸ். எம். பாரூக் அவர்களும் வாழ்த்துரை வழங்கி  திருமதி நர்கீஸ் பானுஅவர்கள்காவிரிமைந்தன் பிறந்த நாள் வாழ்த்துக் கவிதைவாசித்தார்.

செட்டியார் தாலாட்டு

.
தமிழ் நாட்டு செட்டிகுலம், பரம்பரையாக வாணிபத் தொழில் செய்து வளர்ச்சியுற்றது. சிலப்பதிகார காலத்தில் அரசரோடு சமமாக வாழ்ந்த பெருங்குடி வணிகர்களைப்பற்றி இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். பிற்காலத்திலும், வெளி நாட்டோடு வாணிகத் தொடர்புகொண்ட வணிகர்கள் அவர்கள் குலத்தினரே. அக்குலத்தில் பிறந்த குழந்தையைத் தாலாட்டும் பொழுது அரண்மனையில் பிறந்த குழந்தைக்குச் சமமாக உயர்த்திப் பாடுகிறார்கள்.


பாடல் 1

ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே!
கண்ணே நீ கண்ணுறங்கு!
கண்மணியே நீ உறங்கு!
பச்சை இலுப்பை வெட்டி,
பவளக்கால் தொட்டிலிட்டு,
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீ உறங்கு!
நானாட்ட நீ தூங்கு!
நாகமரம் தேரோட!
தேரு திரும்பி வர!
தேவ ரெல்லாம் கை யெடுக்க!
வண்டி திரும்பி வர!
வந்த பொண்கள் பந்தாட!
வாழப் பழ மேனி!
வைகாசி மாங்கனியே!
கொய்யாப் பழ மேனி! - நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே!
வாசலிலே வன்னிமரம்!
வம்மிசமாம் செட்டி கொலம்!
செட்டி கொலம் பெத்தெடுத்த!
சீராளா நீ தூங்கு!
சித்திரப் பூ தொட்டிலிலே!
சீராளா நீ தூங்கு!
கொறத்தி கொறமாட!
கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல!
வேதஞ் சொல்லி வெளியே வர!
வெயிலேறி போகுதையா!
மாசி பொறக்கு மடா!
மாமன் குடி யீடேற!
தையி பொறக்குமடா - உங்க
தகப்பன் குடி யீடேற!
ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ கண்ணுறங்கு!

வட்டார வழக்கு: கொறத்தி - குறசாதிப் பெண்; கொறவர் - வேதம் பாடுவோர்.

சேகரித்தவர்: S. சடையப்பன்

தமிழ் சினிமா


'ஆரம்பம்" அனுபவத்தை பகிர்கிறார் நடிகை அக்ஷரா


உலகெங்கும் வசூல் சாதனை புரிந்து வரும் 'ஆரம்பம்" படத்தில் மத்திய மந்திரி மகளாக நடித்து அஜித் குமாரின் கண்ணாடியை கழற்ற சொல்லும் காட்சியில் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானவர் அக்ஷரா.
இவர் ஆரம்பம் படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.
நான் அஜித் சாருடைய தீவிர ரசிகை. அவருடன் நடிக்க வேண்டும் என்று மிக ஆவலாய் காத்து கொண்டு இருந்தவள். என் நல்ல நேரம் அந்த தருணம் என் திரை உலக பயணத்தில் ஆரம்பத்திலே அமைந்தது.
அஜித் சாருடைய ரசிகர்கள் பலம் திரை அரங்கில் அந்த காட்சியை பார்க்கும் போது தான் தெரிந்தது. பயமாக இருந்தது என்றால் மிகை ஆகாது.
அந்த காட்சியில் நடிக்கும் போதே அஜித் சார்தான் என்னை தைரியமூட்டினார் என்றும் இப்போது எனக்கு இந்த அளவுக்கு நல்ல பெயர் கிடைத்திருப்பதற்கு அவரே காரணம் எனவும் கூறியுள்ளார்.
மேலும் நான் ஒரு பரத கலைஞர். சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் உண்டு. நாடோடிகள் இந்தி பதிப்பான 'Rang Race'  படத்தில் நடித்து உள்ளேன். எனக்கு பிடித்த நடிகர் பிரட்லி கூப்பர்.
பிடித்த நடிகை கரீனா கபூர், அவருடைய மெல்லிய இடை வாகும் அவர் தன்னை கட்டுக் கோப்பாக வைத்து இருக்கும் அழகையும் நான் என்றுமே ரசிப்பவள்.
விளையாட்டுத் துறையில் எனக்கு மிகவும் ஈடுபாடு உண்டு. நான் தேசிய அளவில் கை பந்து போட்டியில் கலந்து கொண்டவள்.
விளையாட்டு துறையில் உள்ளதனாலோ என்னவோ எனக்கு மன உறுதியும் திடமும் அதிகம். அந்த உறுதியோடு தமிழ் திரை உலகில் ஒரு நிரந்தரமான முக்கிய இடத்தை பிடிப்பேன் என்கிறார் அக்ஷரா. நன்றி வீரகேசரி 


.

மலாலாவின் புத்தகத்திற்கு தடை

பிலிப்­பைன்ஸை தாக்­கிய ஹையான் சூறா­வளி: 10,000 பேர் பலி

லைபர்மேன் மீண்டும் பதவியேற்பு: இஸ்ரேல்- பலஸ்தீன் பேச்சுவார்த்தை கேள்விக்குறி

ஹக்­கானி போராளிக் குழுவின் சிரேஷ்ட தலைவர் பாகிஸ்­தானில் சுட்­டுக்­கொலை

கெமரூன் - மன்மோகன் சிங் சந்திப்பு

மலாலாவின் புத்தகத்திற்கு தடை

11/11/2013 பாகிஸ்தானில் உள்ள தனியார் பாடசாலைகள் சில மலாலா யூசாப்சாயின் புத்தகத்துக்கு தடைவிதித்துள்ள சம்பவமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கான கல்வி மற்றும் உரிமை போன்றவற்றுக்கு குரல்கொடுத்தமையால் மலாமா யூசாப்சாய் தலிபான்களால் கடந்த வருடம் சுடப்பட்டார்.