மேலும் சில பக்கங்கள்

கற்பனை கலக்காத அற்புதமாம் திருக்குறள்


கற்பனை கலக்காத அற்புதமாம் திருக்குறள்
ஒப்பனை இல்லாமல் ஓங்கிநிற்கும் அழகன்றோ?
அப்பனை ஓலையில் எழுதிவைத்த சாசனத்தை
அழியாமல் காத்தவரை நன்றிசொல்லி போற்றிடுவோம்!

தீந்தமிழின் சுவையெல்லாம் செப்புதற்கு
ஓராயிரம் புலவர் இங்கே தோன்றிடலாம்!
ஈராயிரம் ஆண்டுகள் முன்பாக - தமிழ்
வாழ்ந்ததற்கு அடையாளம் திருக்குறளே!!

உலகமெங்கும் பரவிநிற்கும் நூலிது என்பதை
உணர்ந்தவன் வள்ளுவன் எனலாமா?
உலகவாழ்வின் சூத்திரங்கள் சுருங்கச்சொல்லி
பொருள்நிறைந்த பொக்கிஷத்தைப் படைத்தாரே!

எந்தவொரு நாட்டினர்க்கும் பொதுவாக
எழுதுவது அப்படியொன்றும் எளிதில்லை!
எடுத்தியம்பும் கருத்தெல்லாம் ஏற்கச்செய்யும்
ஏற்றமிகு   குறளுக்கு இங்கே நிகரில்லை!!

அவுஸ்திரேலியாவில் முழுநாள் நிகழ்வாக நடைபெற்ற எழுத்தாளர் விழா



அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியச் சங்கத்தின் 13 ஆவது எழுத்தாளர் விழா கடந்த ஏப்பிரல் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை சிட்னியில் முழுநாள் விழாவாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சிட்னி ஹோம்புஸ் ஆண்கள் உயர்தர பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவின்போது,  மண்டப வாயிலில் வாழைமரங்கள் நடப்பட்டு, மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டு, வண்ணக் கோலங்கள் போடப்பட்டு, குத்துவிளக்கு, நிறைகுடம் வைக்கப்பட்டு தமிழ்ப்பண்பாட்டு மணம் கமழும் அழகிய சூழல் உருவாக்கப்பட்டிருந்தது.
காலை நிகழ்ச்சிகள் பிரபல எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்கள் தலைமையிலும், மாலை நிகழ்ச்சிகள் சங்கத் தலைவர், பாடும்மீன் சட்டத்தரணி சு.ஸ்ரீகந்தராசா அவர்கள் தலைமையிலும் நடைபெற்றன.
காலை 10.00 மணிக்கு விழா ஆரம்பமானது. தமிழ்வாழ்த்து, அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து பிரபல எழுத்தாளர் லெ.முருகபூபதி, கவிஞர், வைத்தியகலாநிதி இளமுருகனார் பாரதி, பிரபல ஓவியர் ஞானம், இலங்கையிலிருந்து வந்திருந்த “ஞானம்” சஞ்சிகை இணையாசிரியர் திருமதி. ஞானசேகரன் ஆகியோர் மங்கலவிளக்கேற்றினர்.
நிகழ்ச்சித்தலைவர் மாத்தளை சோமு அவர்களின் தலைமை உரையைத் தொடர்ந்து, கவிஞரும் வானொலி ஒலிபரப்பாளருமான சௌந்தரி கணேசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த எழுத்தாளர் விழாவிற்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்த கட்டுரைகள் உள்ளடங்கிய விழாமலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. விழாமலரை வானொலி அறிவிப்பாளரும், நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான திருமதி. சோனா பிரின்ஸ் அறிமுகம் செய்து வைத்து, மலரின் உள்ளடக்கங்கள் பற்றி விதந்துரைத்தார்.

மெல்பேணில் சிறப்புற நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வு



அவுஸ்திரேலியா மெல்பேணில் “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – 2013” நினைவு நிகழ்வுகள் கடந்த 21-04-2-13 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடந்தேறின.
மெல்பேணில் அமைந்துள்ள பிறிஸ்டன் நகர மண்டபத்தில் சரியாக 5.10 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் தொடங்கிய இந்நினைவு நிகழ்வு இரவு 7 மணியளவில் நிறைவடைந்தது, அவுஸ்திரேலியக் கொடியை விக்ரோறிய ஈழத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. பரமநாதன் அவர்களும், தமிழீழத் தேசியக்கொடியை திரு. இராஜா இளங்குமரன் அவர்களும் ஏற்றியதைத் தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்களுக்கான ஈகச்சுடரேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. நாட்டுப்பற்றாளரான அன்னை பூபதி, கலாநிதி மகேஸ்வரன் ஆகியோருக்கும் மாமனிதர்களான திரு தில்லை ஜெயக்குமார், பேராசிரியர் எலியேசர் ஆகியோருக்கும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் நண்பர்களும் ஈகச்சுடரேற்றினர். அதைத்தொடர்ந்து மலர்வணக்கத்துடனும் அகவணக்கத்துடனும் நிகழ்வுகள் தொடங்கின. நிகழ்வை திருமதி கீதா தொகுத்து வழங்கினார். நாட்டுப் பற்றாளரினதும் மாமனிதரினதும் நினைவுரையை திரு பரமநாதன் அவர்கள் நிகழ்த்தினார். மாவீரர்களினதும் நாட்டுப்பற்றாளர், மாமனிதர்களினதும் கனவுகளைச் சுமந்து நாம் தொடர்ந்தும் உயிர்ப்போடும் துடிப்போடும் செயற்பட வேண்டிய காலச்சூழ்நிலையைத் தெளிவுபடுத்தி அவரது உரை அமைந்திருந்தது.

துர்க்கை அம்மன் கோவில் கலாச்சார மண்டபத்தில் சமயச் சொற்பொழிவு





Religious discourse in Tamil by Dr Aru Thirumurugan

சமயச் சொற்பொழிவு

செஞ்சொற்செல்வர்
கலாநிதி ஆறு திருமுருகன்
(தலைவர், துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை)
அவர்கள் வழங்கும்

சக்தி வழிபாடும் சுமங்கலி பூசையும்

03 - 05 - 2013 வெள்ளிக்கிழமை மாலை 7.30 முதல் 9.30 வரை
துர்க்கை அம்மன் கோவில் கலாச்சார மண்டபத்தில்

மேலதிக விபரங்களுக்கு:
ஆலய தொலைபேசி இலக்கங்கள்
02 9746 9724
02 9644 6682

பத்தாவது ஆண்டினைக் கடந்து தெய்வ ஒளி வீசிக்கொண்டிருக்கும் மெல்பேர்ன் South Morang ஸ்ரீ விஷ்ணு துர்க்கா ஆலயம்.


உலகம் பூராவும் இந்து ஆலயங்களின் தோற்றங்களும், அவற்றின் வளர்ச்சியையும் அன்றாடம் இணையத்தளங்கிளின் ஊடாக அறிந்து கொண்டிருக்கின்றோம். புலம் பெயர்நாடான அவுஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு மாகாணங்களிலும் இந்து ஆலயங்களின் தோற்றங்கள் வரவேற்கத்தக்க அளவில் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிள்றோம். இந்து மக்களின் சனத்தொகைக்குயின் தேவைக்கு மேலதிகமாக இந்து ஆலயங்கள் உருவாக்கம் பெறுகின்றது என்பது ஒருசாரார் உடைய கருத்தாகவும் இருப்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.


'வீமன்காமம் சி டி' - கே.எஸ்.சுதாகர்




தர்மலிங்கம் அடிக்கடி 'லெட்டர் பொக்ஷ்' பார்த்து வந்தார். இன்றைக்கு குறைந்தது ஆறேழு தடவைகளாவது தனக்கு கடிதம் வந்திருக்கின்றதா என்று பார்த்துவிட்டார். அவரைப் பார்க்க மருமகள் வாணிக்கு சிரிப்பு வந்தது.

வாழ்வை எழுதுதல் ஸ்கைப்பில் பிள்ளை பராமரிப்பு முருகபூபதி




மனிதர்கள் பிறந்து வளர்ந்து முதுமையடைவதற்குள் அவர்களின் உடலில் உணர்வில் சிந்தனையில் மாற்றங்கள் தோன்றுவது இயல்பு. இந்த 21 ஆம் நூற்றாண்டு கணினியில் புதிய பாய்ச்சல்களை அறிமுகப்படுத்திவிட்டதனால் உலகம் நன்றாகச்சுருங்கிவிட்டது.
தங்கள் வாரிசுகளை புலம்பெயரச்செய்துவிட்டு அவர்களையும் அவர்கள் பெற்றெடுத்த பேரப்பிள்ளைகளையும் ஸ்கைப்பில் பார்த்து உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்.
பேரன் பேத்திகளின் படங்களை மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஒளிப்படமாகவும் இறுவட்டுகளாகவும் அந்த புலம்பெயர்ந்த வாரிசுகள் அனுப்பிய காலம் ஓடிவிட்டது. தற்போது குறிப்பிட்ட  ஒளிப்படங்களும் இறுவட்டுகளும் முகப்புத்தகங்களில் ஏற்றப்படுகிறது.
கணினி வசதியுள்ள முதிய தலைமுறை பார்த்து பரவசமடைகிறது.
சமீபத்தில் இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் சென்றிருந்தேன். நிறைய சம்பவங்களை அனுபவங்களை நினைவில் சுமந்துகொண்டு அவுஸ்திரேலியா திரும்பும் வழியில் இதனை எழுதுகின்றேன்.

இன்னிசை மாலை 2013




கடந்த 30 வருடங்களாக தாயகத்தில் அல்லற்படும் உறவுகளுக்காக உதவும் அவுஸ்திரேலிய திராவிட கலாச்சார கழகத்தின் மெல்பேண் மெல்லிசைக் குழுவின் இசை நிகழ்ச்சி, மீண்டும்

இலங்கைச் செய்திகள்

இவ்வாண்டு இறுதிக்குள் கொழும்பில் சர்வதேச நடுத்தீர்ப்பு மையம்-வியட்நாமில் அமைச்சர் ஹக்கீம்

பர்மாவில் முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக இலங்கை குரல் கொடுக்க வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் கொலைக் குற்றவாளிகள் இருவர் விடுதலை

வடக்கு மாகாணசபை தேர்தலில் ஐ.தே.க. போட்டியிடும்: யாழில். ரணில்

மீனவர்கள் எந்த வகையான பதிவுகள் இன்றி மீன் பிடிக்கலாம்: மாதகல் கடற்படைத் தளபதி

செங்கலடி இரட்டைக்கொலை: பெற்றோரை பழிதீர்க்க மகளும் காதலனும் வகுத்த திட்டம்



=====================================================================

இவ்வாண்டு இறுதிக்குள் கொழும்பில் சர்வதேச நடுத்தீர்ப்பு மையம்-வியட்நாமில் அமைச்சர் ஹக்கீம்




23/04/2013 அணிசேரா கொள்கையின் அடிப்படையில் இலங்கைக்கும், வியாட்நாமுக்கும் இடையில் நல்லுறவு நிலவுவதாகவும் சமூக, பொருளாதார அபிவிருத்தி, வறுமை ஒழிப்புச் செயற்திட்டங்கள், சட்டத்துறை சீர்திருத்தங்கள் போன்ற துறைகளில் இரு நாடுகளும் சிறப்பாக ஒத்துழைத்து வருவதாகவும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அங்கு இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முத்தமிழ் வி ழா - 04 May 2013




தமிழ் இலக்கிய கலைமன்றம் வழங்கும்

முத்தமிழ் வி ழா 2013

04 - 05 - 2013 சனிக்கிழமை

துர்க்கை அம்மன் கோயில் கட்டட நிதிக்காக தமிழ் இலக்கிய கலைமன்றம் வழங்கும் முத்தமிழ் விழா வருகின்ற மே மாதம் 4ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு  சிட்னி துர்க்கை அம்மன் கோவில் கலாச்சார மண்டபத்தில் நடைபெறுகின்றது.


இந்நிகழ்ச்சியில்

- திருமதி குகராஜாவின் மாணவர்கள் வழங்கும் 
வயலின் இசை

- திருமதி புஸ்பா ரமணாவின் மாணவர்கள் வழங்கும் 
இன்னிசை

- ABHINAYAA LAYAA School of Dance proudly presents 
திருமதி Miranaline Jeyamohan இன் மாணவர்கள் வழங்கும் 
Narthana Malai

அனைவரும் வருகை தந்து துர்க்கை அம்மன் கோயில் கட்டட நிதிக்காக நடாத்தப்படும் இந்த முத்தமிழ் விழாவிற்கு ஆதரவு தருவீர்கள்hக.
மேலதிக தொடர்புகளிற்கு 02 9644 6682 அல்லது 02 9746 9724 

உலகச் செய்திகள்

துப்பாக்கி ஏந்தும் பிஞ்சுகள்: அதிர்ச்சியளிக்கும் படங்கள

முஷாரப்பிற்கு இரண்டு அறைகளில் மட்டுமே நடமாட அனுமதி!

கோவை தீ விபத்தில் 4 பேர் பலி: தாஜ் மஹால் அருகே வெடிப்பில் 2 பேர் பலி

பங்களாதேஷ் கட்டிட விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

 

 

===================================================================

துப்பாக்கி ஏந்தும் பிஞ்சுகள்: அதிர்ச்சியளிக்கும் படங்கள்!


23/04/2013 அல் கொய்தா இயக்கத்தினர் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கும் படங்கள் சில வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப் படங்கள் அல் கொய்தாவுக்குச் சொந்தமான, பலரால் அறியப்படாத இணையத்தளமொன்றில் வெளியாகியுள்ளது.
http://www.virakesari.lk/image_article/article-2313023-196E5722000005DC-764_634x435.jpg

வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு – 60 “காலைக் கழுவுங்கள்”



ஞானா:  
      அப்பா…. திருவள்ளுவர் கோயிலுக்குப் போகேக்கை கால்களைக் கழுவிப் போட்டுத்தான்            உள்ளே போக வேணும்; எண்டு குறளிலை சொல்லியிருக்கிறாரே?. உங்களுக்குத் தொரியுமே?

அப்பா:     
   திருவள்ளுவர் கோயிலைப் பற்றியே சொல்லேல்லை. பிறகு எப்பிடிக் கால்கழுவிறதைப் பற்றிச்        சொல்லுவார் ஞானா? 
        
ஞானா:        இஞ்சை அம்மா வாறா. ஆவவைக் கேட்பம். ……அம்மா திருவள்ளுவர் கோயிலுக்குள்ளை         போக முந்திக் கால் கழுவிப்போட்டுத்தான் போக வேணும் எண்டு சொல்லியிருக்கிறாரே?.            நீங்கள் பாத்திருக்கிறியளே?

சுந்தரி:        திருக்குறளிலை நான் பாக்கேல்லை. ஆனால் கோயில்களிலை பாத்திருக்கிறன்; ஆக்கள்            கால் கழுவிப்போட்டுத்தான் கேயிலுக்குள்ளை போறதை. அதுக்கு இப்ப என்ன ஞானா?

அப்பா:        அது வந்து சுந்தரி….உந்தக் கால்கழுவிற சங்கதி திருக்குறளிலை இருக்கு எண்டு இவள்            பிள்ளை ஞானா சொல்லிறாள்.

ஞானா:        இருக்கெண்டு நான் சொல்லேல்லை அப்பா. இருக்கோ எண்டு கேக்கிறன் அப்பா.

தமிழ் சினிமா



சேட்டை

கைமாறிப் போகும் கடத்தல் வைரமும் அதைக் கண்டு பிடிக்க நடக்கும் சுவாரசியம் தான் சேட்டையின் கதை.
இதை கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் முகச் சுழிப்பு, கொஞ்சம் சேட்டை கலந்த கலவையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் கண்ணன்.
இந்தியில் வெளியாகி ஒரு சாராரின் வரவேற்பை மட்டுமே பெற்ற டெல்லி பெல்லி படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். மும்பையில் வெளியாகும் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் நிருபராகப் பணியாற்றுபவர் ஆர்யா.
அவருடன் கார்ட்டூனிஸ்டாக வேலை பார்க்கிறார் பிரேம்ஜி. பின்னர் நடுப்பக்கம் நக்கி என்ற கிசுகிசு எழுத்தாளராக வருகிறார் சந்தானம்.
ஆர்யாவின் பணக்காரக் காதலி ஹன்சிகா, ஏர் ஹோஸ்டஸ் ஆக பணிபுரிகின்றார். ஒன்சைட் காதலி அஞ்சலி. ஆங்கிலப் பத்திரிகை நிருபர். ஒரு நாள் ஹன்சிகா ஒரு பார்சலை ஆர்யாவிடம் கொடுத்து, அதை தன் தோழியிடம் கொடுக்கச் சொல்கிறார்.
ஆர்யா அதை சந்தானத்திடம் கொடுக்கிறார். போகும் வழியில் இலியானா சிக்கன் என்ற பாஸ்ட் புட் அயிட்டத்தை ஏக மசாலாவோடு சேர்த்துத் தின்றதால் சந்தானம் பாத்ரூமே கதியென கிடக்கிறார்.
மருத்துவமனையில் அவரது மோஷன் சாம்பிள் கேட்கிறார்கள். ஒரு பெரிய டப்பாவில் அதை அடைத்து லேபில் தரச்சொல்லி பிரேம்ஜியிடம் தருகிறார். கூடவே அந்த பார்சலையும் கொடுத்து அனுப்புகிறார். பார்சல் மாறிப் போகிறது.
ஹன்சிகா கொடுத்த பார்சலில் ரூ 2 கோடிக்கு கடத்தல் வைரங்கள் இருப்பது தெரியாமல், அதை லேபிலும், சந்தானத்தின் பார்சலை கடத்தல் கும்பல் தலைவன் நாசரின் அடியாளிடமும் பிரேம்ஜி சேர்த்துவிட, இந்த வைரங்கள் கடைசியில் யார் கைக்குப் போகின்றன என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
படத்தில் நாசர்தான் வில்லன். கிட்டத்தட்ட தமாஷ் வில்லன். பஞ்சு சுப்பு, அலி, மனோபாலா, சாயாஜி ஷிண்டே, சுஜா வருணி ஆகியோரும் வந்து போகின்றனர்.
வசனம், இசை, ஒளிப்பதிவு ஜான் மகேந்திரன் வசனம் எழுதியிருக்கிறார். இந்தக் காலத்துக்கேற்ப சின்னச் சின்ன உரையாடல்கள். கொமெடிப் பகுதிக்கு மட்டும் சந்தானமே எழுதியுள்ளார். தமனின் இசை, பாடல்கள் இரண்டுமே சுமார்தான். ஒளிப்பதிவு பிஜி முத்தையா.