மேலும் சில பக்கங்கள்

அருள்மிகு குன்றத்துக் குமரன் ஆலயம் மகோற்சவத் திருவிழா நிறைவு பெற்றது.

.

                                                          நவரத்தினம் அல்லமதேவன். மெல்பேர்ன்


மெல்பேர்ன் ரொக்பாங் குன்றத்துக் குமரன் ஆலயத்தின் மகாகும்பாபிஷேகம் கடந்த வருடம் நடைபெற்றது. இந்த வருடம் முதலாவது ஆண்டு நிறைவாக மகோற்சவத் திருவிழா நடந்தேறியது. மகோற்சவத்திருவிழா கடந்த மாதம் 16.02.2013 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. விஷேச தினங்களாக திருவிழாக்களாக சப்பறத்திருவிழா இரதோற்சவம் தீர்த்தோற்சவம் பூற்காவளம் திருக்கல்யாணம் என்பனவாகும்.
இந்த ஆலயத்தின் வளர்ச்சி அடியார்களின் அளவிடற்கரிய ஆதரவுடன் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. திருத்தலத்தின் சிறப்புக்கள் பலவற்றைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆலயத்திற்குரிய வளவு நுழைவாயிலில் வழிப்பிள்ளையார் ஆலயம் இருக்கின்றது. அதனுடைய விஷேசம் என்னவென்றால் அமர்ந்திருப்பவர் இரண்டு கைகளை மட்டுமே கொண்டிருக்கும் கற்பகவிநாயகர். இந்தியாவிலே இருந்து விஷேசமாக வரவழைக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தினுள் வீற்றிருக்கும் நவக்கிரகங்கள் ஒன்பது பேரும் தங்களது தேவிமாருடன் அமர்ந்திருக்கின்றனர். சிவபெருமானுடைய இடபவாகனம் எருது பசு மாடு ஆறுமுகப்பெருமானின் மயில் வாகனமான மயில் ஆகியன வளர்க்கப்படுகின்றன. ஆலயத்தின் அருகில் 350 தொடக்கம் 400 பேர் அமர்ந்திருக்கக்கூடிய கலாச்சார மண்டபம் கட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எமது கலாச்சார நிகழ்வுகள் பல நடைபெறவிருக்கின்றன. அருகில் கொரரொயிட் என்ற சிற்றாறு (மழசழசழவை உசநநம) ஓடுகின்றது. காலப்போக்கில் தீர்த்தோற்சவம் அங்கு நடைபெறக்கூடிய வசதிகளைச் செய்து கொண்டிருக்கின்றனர்.

என் அக்கா - சௌந்தரி கணேசன்

.


சிறு குழந்தையின் விரல்களைவிட
என் அக்கா மென்மையானவள்
தேய்ந்து வளரும் நிலவைவிட
என் அக்கா குளிர்மையானவள்
அதிக நேசம் அளவற்ற பாசம்
ஆனாலும் எதிரெதிர்த் துருவம்
நான் வெயிலென்றால் அவள் மழை
நான் முள்ளென்றால் அவள் ரோஐh
நான் ஆற்றலென்றால் அவள் அடக்கம்
நெருப்பிலும் நடக்கும் கால்களெனக்கு
நிழல்தேடி நீளும் சிறகுகள் அவளுக்கு
தானாகக் கிடைத்த வரமும் அவளே
தாயாகத் தலைகோதும் உறவும் அவளே
நாளை என் உலகம் குகையாகலாம்
நாளை என் உலகம் பொந்தாகலாம்
அப்போதும் எனைத்தேடும் உறவும் அவளே
மென்னிதயம் கொண்டவளை
கண்ணில் வைத்து நேசிக்க
சொந்த தேசம் வழிவிடவில்லை
வாழும் தேசம் ஆதரிக்வில்லை – ஆனாலும்
அவளன்புக்கும் எனதுயிருக்கும்
இடைப்பட்ட தூரம் அதிகமேயில்லை

அவுஸ்ரேலியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தவர்கள்


.                                                   செ.பாஸ்கரன்

படத்தில் உள்ளவர்களின் அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது

Clean Up Australia Day 2013 நாளான ஞாயிற்றுக்கிழமை     The Hills Holroyd Parramatta Migrant Resource Centre ,  Meet & Greet Tamil Volunteer Group  (சந்திப்போம் வாழ்த்துவோம்  தமிழ் தொண்டர் குழு ) மற்றும்  Settlement Services International ( SSI )ஆகியவை இணைந்து    Ryde பூங்கா   Ryde  இல் 11 மணியிலிருந்து 2 மணிவரை நகரை சுத்தமாக்கும் நிகழ்வை நடாத்தினார்கள். இதில் அண்மையில் ஒஸ்ரேலியாவிற்கு புலம் பெயர்ந்து வந்த இளைஞர்கள் பலர் பங்கேற்று     Clean Up Australia Day 2013 நாளில் தங்கள் பங்களிப்பையும் செலுத்தியிருந்தது பாராட்டும்படியாக இருந்தது. இந்த நிகழ்வில் ரைட் பூங்காவையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் துப்பரவு செய்ததுடன் அதில் பங்குபற்றிய இளைஞர்கள் இந்த நாட்டில் நடந்துகொள்ளவேண்டிய விதம்.இந்த நாட்டின் உதவி அமைப்புகளிடமிருந்து பெறக்கூடிய சலுகைகள் அவர்களுக்கான வாழ்வாதாரங்களைப் பெறக்கூடிய வழிமுறைகள் என்பன பற்றி பலர் விளக்கமாக எடுத்துரைத்தார்கள். நிகழ்வின் இறுதியில் சுவையான மதிய உணவும் குளிர்பானங்களும் பரிமாறப்பட்டதுடன்     தமிழ்தொண்டர் குழுவினர் தாங்கள் சேகரித்த காலணிகள் உடைகள் என்பவற்றை அண்மையில் இங்கு வந்த இளைஞர்களுக்கு வழங்கினார்கள்.


இலங்கைச் செய்திகள்


மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய இரதோற்சவம்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை: அமெரிக்கா

"புலிகளிடமிருந்து கைப்பற்றிய பணம், தங்கம், கப்பல்கள் எங்கே" :போஸ்டர் ஒட்டிய மூவர் கைது

சந்தேக நபர்களை விசாரிக்க படையினர் பாலியல் வன்முறை பிரயோகிப்பு: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

மீண்டும் கிறீஸ் மனிதர்கள்..!

2014 இல் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட மாட்டாது: கெஹலிய

'ஹிஜாப் அணிய வேண்டாம்" : மாத்தறையில் முஸ்லிம் மாணவிகள்

சர்வதேச சமூகத்துக்குள்ள "பதிலளிக்கும் கடப்பாடு
மீது தாக்குதல்"
  
மெல்சிறிபுர நகரில் பதற்றம்



ஈழத்துச் சிறுகதைகள் தடங்களும் விரியும் பாதைகளும்.

.
                                                                                               எம்.கே.முருகானந்தன்

கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகள்.
என்னை இன்று எமது கதைகளின் கதையைத்தான் பேச அழைத்துள்ளார்கள். நான் கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகளின் கதைச் சொல்கிறேன்.
ஊர்கள் சிறியன. பெருநாடுகளின் தள வள ஆளனி வலுக்குகளுடன் ஒப்பிடுகiயில் சிற்றூரிலும் சிறியது எமது நாடு. அதில் இலங்கை பூராவும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தமிழ்பேசும் சமூகங்கள் ஏனைய உலக சமூகங்களுடன் ஒப்பிடுகையில் கணக்கில் கொள்ள முடியாதவை. நுணுக்குக் கண்ணாடிகளால் தேட வேண்டியவை.
இருந்தபோதும் நாற்திசைகளிலிருந்தும் உலகளாவ எமது குரல் ஓங்காரமாக ஒலிக்கிறது. அதுவும் இனிய தமிழில் ஒலிக்கிறது. கதைகளாக, கவிதைகளாக, ஒலிப்பேளைகளாக, ஒளிச்சித்திரங்களாக சிறகடித்து வலம் வருகின்றன. தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு நீண்டகால வாசகன் என்ற முறையில் இது எனக்கு மகிழ்வைத் தருகிறது.

பந்தொன்றை சுவர் மீது விட்டெறிந்தால்.....மணிமேகலா

.



ராஜாஜி எழுதிய ராமாயணம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
அதில் தசரதனின் புத்திர சோகம் பற்றிய பகுதி ஒன்று வருகிறது.ராமனைப் பிரிந்த சோகம் அது. அது எல்லோருக்கும் தெரிந்த கதை ஒன்று தான். ஆனால், அதற்குள் மறைந்து கிடக்கிறது செழுமை மிக்க தத்துவ முத்தொன்று.

தசரதன் சக்கரவர்த்தி எனப்புகழப்பட்டவன். தர்மங்கள், யாகவேள்விகள்  பல செய்தவன். தர்மத்தின் வழியில் அயோத்தியை வழிநடத்தியவன். நல்ல புத்திரர்களையும் நிறைவான வாழ்வையும் வாழ்ந்தவன்.அவனுக்கு ஏன் இந்த புத்திர சோகம் ? தர்ம சங்கடம்? என்ற கேள்வி எழுவது நியாயம் தானே?

அதற்கான பதிலை ராஜாஜி இப்படிச் சொல்லிச் செல்கிறார்.

”.........கர்ம பலனை மாற்ற முடியாது. நான் செய்த பாவத்தின் விளைவை இபோது அனுபவிக்கிறேன்.அற்ப சந்தோஷங்களுக்காக பெருந்தீமை விளைவிக்கக் கூடிய காரியத்தை அறியாமையினால் மக்கள் விளைவித்து விடுகிறார்கள். பிறகு பயனை அனுபவிக்கும் போது வருந்துகிறார்கள்.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் குறியைப் பார்க்காமல் ஓசையைக் கேட்டு  அம்பு எய்யும் திறமை பெற்றிருந்தேன். இந்தச் சமர்த்தியத்தின் அற்ப சந்தோஷத்திற்காக, ஒரு காலத்தில் நான் பெரும் பாவத்தைச் செய்ய நேர்ந்தது.

நடுவழியில் இன்ப அதிர்ச்சி -லெ.முருகபூபதி


.
1983 ஆம் ஆண்டு இலங்கைத்தமிழர்களுக்கு வேதனையும் சோதனையும் இழப்பும் விரக்தியும் நிரம்பிய காலம். இன்றும் அந்த ஆண்டின் அமளியும் அவலமும் நினைவுகூறப்படுகிறது.ஆண்டுதோறும் வெலிக்கடை தாக்குதல் சம்பவமும் படுகொலைகளும் தமிழ் ஊடகங்களில் படங்களுடன் ஜூலை மாதங்களில் நிச்சயம் வெளியாகிவிடும்.

அக்காலப்பகுதியில் பதவியிலிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலிருந்த யூ.என்.பி. அரசின் ஆசீர்வாதத்துடன் அனைத்து பேரவலங்களும் தொடர்ந்தபோதிலும், சிங்களமக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் கவனத்தை திசைதிருப்பபுவதற்காக குறிப்பிட்ட இனக்கலவரத்தை தூண்டியவர்கள் இடதுசாரிகளே…என்று பச்சைப்பொய் பேசியவர்தான் அந்த தார்மீகத்(?)தலைவர். இந்திராகாந்தியினால் நரி என்று வர்ணிக்கப்பட்ட மனிதர்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, நவசமசமாஜக்கட்சி ஆகியனவற்றை தடைசெய்யும் உத்தரவையும் பிறப்பித்தார். மக்கள் விடுதலை முன்னணியினர் தலைமறைவானமையால் அந்த இயக்கத்தின் மீதான தடை நீடித்தது. இதர இரண்டு கட்சிகளின் தலைவர்கள் புலனாய்வுப்பிரிவினரின் தீவிர விசாரணைகளையடுத்து அந்தக்கட்சிகள் மீதான தடை தளர்த்தப்பட்டது.

வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறம்பு 56 - “மூதேவி சீதேவி”



ஞானா:        அப்பா….அப்பா….செல்வத்தை சீதேவி எண்டும், வறுமையை மூதேவி எண்டும் ஏன்                சொல்லிறவை அப்பா?

அப்பா:        இது தெரியாதே ஞானா. செல்வமும் வறுமையும் மனிதவாழ்க்கையிலை மாறிமாறி வரும்.            செல்வம் வந்து சேர்ந்த காலத்திலை மகிழ்ச்சியாய,; சுகசீவியமாய், வாழ்க்கை கழியும்.            வறுமை வந்தால் மனக்கிலேசமும், துன்பமும் உண்டாகும். இந்த இரண்டு சூழ்நிலையையும்        கற்பனையாய் சீதேவி, மூதேவி எண்டு இரண்டு பெண்களாய் வர்ணனை செய்திருக்கினம்.

ஞானா:     உந்தக் கற்பனைக்கும் பெண்தான் கிடைச்சாள். இல்லையா அப்பா?

அப்பா:        பிள்ளை ஞானா, உதொண்டும் பெண்களைக் கொச்சைப் படுத்த ஏற்பட்ட மரபல்ல எண்டுதான்        நான் நினைக்கிறன். நீ கேள்விப்பட இல்லையே “ஆவதும் பெண்ணாலே அழிவதும்                பொண்ணாலே” எண்ட பழமொழியை.

ஞானா:   
    கேள்விப்பட்டிருக்கிறன் அப்பா. அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு?

உலகச் செய்திகள்

எகிப்தில் பலூன் விபத்து: 18 பேர் பலி

சிறுவர் காப்பக கெடுபிடிகளால் நோர்வேயை விட்டு வெளியேறிவரும் வெளிநாட்டு வதிவிடவாளர்கள்

எகிப்தில் பலூன் விபத்து: 18 பேர் பலி

26/02/2013  எகிப்தின் லக்ஸர் நகரில் வெப்பக்காற்று நிரம்பிய பலூன்  நடுவானில் தீப்பற்றி, வெடித்துச் சிதறியதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தரையில் இருந்து சுமார் 1000 அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பலூன் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் காற்றுப்பை பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

எங்கள் துயரம் சிங்களவர்களுக்குத் தெரியாததா?‏ -தீபச்செல்வன்

.
நானும் எனது நண்பன் லியோவும் அண்மையில் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றோம். முள்ளிவாய்க்கால் ஊடகா பேருந்தில் பயணித்திருந்தபொழுதும் அன்றுதான் முள்ளிவாய்க்கால் தெருவில் நடந்தோம். கிளிநொச்சியிலிருந்து பேருந்தில் பயணம் செய்து புதுமாத்தளனில் இறங்கி அங்கு இராணுவம் கைப்பற்றியிருந்த விடுதலைப்புலிகளின் போர்த்தளவாடங்களைப் பார்த்தோம். சிங்களவர்கள் வந்து பார்த்துவிட்டு ஆச்சரியமடையும் அந்தப் போர்த்தளவாடக் கண்காட்சி பெரும் சுற்றுலாத்தளமாகிவிட்டது. அங்கு விடுதலைப்புலிகள் பயன்படுத்திய விதவிதமான ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் போர் படகுகளையும் போர் விமானங்களையும் செய்யும் தொழில்நுட்பங்களைப் பரீட்சித்துப் பார்த்த தளவாடங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. புலிகள் இந்த ஆயுதங்களை எல்லாம் செய்தார்கள் என்றும் அந்த ஆயுதங்களை ஏந்திய புலிகளை அழித்தோம் என்றும் தங்கள் இராணுவத்தின் வீரத்தைக் கொண்டாடும் சிங்கள மக்கள், எதற்காக புலிப் பிள்ளைகள் இதனையெல்லாம் செய்தார்கள் என்று யோசிப்பார்களா?
கிளிநொச்சி நகரத்தில் வீழ்த்தப்பட்ட தண்ணீர்தாங்கி இப்பொழுது சிங்கள இராணுவத்தின் வெற்றிச் சின்னமாகிவிட்டது. அந்த இடத்தில் மூன்றாம் ஈழப்போரின் பொழுது இருந்த தண்ணீர்தாங்கியும் அழிந்துபோனது. பின்னர் சமாதான காலத்தில் தற்போது விழுதப்பட்ட தண்ணீர் புனரமைப்பு பணி நடந்த பொழுது ஒருநாள் வேலைக்குச் சென்றிருக்கிறேன். நான்காம் ஈழயுத்தத்தில் அந்த தண்ணீர்தாங்கியைப் புலிகள் வீழ்த்திவிட்டு கிளிநொச்சியை விட்டுப் பின்வாங்கினார்கள். ஒருமுறை கிளிநொச்சிக்கு வந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே புலிகளால் வீழ்த்தப்பட்டதால் அந்த தண்ணீர்தாங்கியை வெற்றிச் சின்னமாகப் பாதுகாக்கும்படி தனது படைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். வீழ்த்தப்பட்ட தண்ணீர்தாங்கியைப் பற்றிய படைகளின் வீர வசனங்களுடன் புனித வேலியையும் சிங்கள இராணுவம் அமைத்தது.

ஆழ்வார் திவ்விய பிரபந்தம் - பகுதி 4 - மதி

.

பாணர்கள் வாழ்ந்த ஊர் உறையூர். பாணர்கள் சிறந்த பாடகர்கள். ஆனால் துரதிஷ்டவசமாக சாதிப் பாகுபாட்டில் குறைந்தவர்கள். ஸ்ரீரங்கத்தில் கோவிலுக்கு அண்மையில் வாழ்ந்தவர் திருப்பாணாழ்வார். கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் பெருமாளையே, கோபுரத்துக்கு அப்பால் காவேரிக்கரையில் மறுபக்கமாக நின்று தன்னையே மறந்து பாடித்துதிப்பார். கோவிலிலுள்ள பெருமாளின் உருவத்தையே பார்க்க மறுக்கப்பட்டவர். ஒரு நாள் பெருமாளை நினைந்து தன்னையே மறந்து காவேரி யாற்றங்கரையில் படுத்திருந்தார். கோவிலில் பூசை செய்பவர் பெருமாளின் அபிடேகத்து காவேரிக்கு நீரெடுக்க வந்தார். ஆனால் இந்தப் பாணரோ வழியில் கிடந்தார். கூப்பிட்டுப் பார்த்தும் அசையவில்லை. தீண்டத்தக்காதவர்களை விலக்குவது எப்படி? ஒரு கல்லை யெடுத்து எறிந்தார். பாணரின் நெற்றியில் பட்டு இரத்தம் வழியத்தொடங்கியது. பாணர் சுயநினைவுக்கு வந்தார். அபிடேகத்துக்கு நீரெடுப்பதற்கு தான் குறுக்கே கிடந்தமையால் பெரிதும் வருந்திய அவர் “என்னை ஏன் படைத்தாய் இறiவா? நான் உன் பூசைக்கே இடைஞ்சலானேன். இனி இருந்து பயனென்ன என எண்ணி தன் வாழ்வை முடிக்க எண்ணினார். லோக சாரங்க முனி எனும் அந்தணர் இறைவன் திருவுருக்கு அபிடேகம் செய்வதற்கு திரு உருவச்சிலையை அலங்கரித்திருந்த பூக்களை மாலைகளைத் தலைப்பாகத்திலிருந்து அகற்றத் தொடங்கிய பொழுது மேல் நெற்றியிலிருந்து  இரத்தம் கசிவதைக் கண்டு பதறிப் போனார்.
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்த சமயம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருவிழா. பெருமாள் திருவீதியுலாவரும் வேளை ஆங்கிலேயஅதிகாரி சட்டம் அமைதியை நிலைநாட்ட அங்கு வந்திருந்தார். சுவாமிக்கு இருமருங்கும் இருவர் கவரி வீசிக் கொண்டிருந்தனர். உடனே அவ்வதிகாரி கவரி வீசுவதை நிற்பாட்டு. ஒரு சிலைக்கு இது தேவையா? உடனே வேறு வழியின்றி நிற்பாட்டினார்கள். உடனே பெருமாளின் உடலில் வியர்வை அரும்பி துளிகளாக விழத் தொடங்கின. ஆங்கிலேய அதிகாரி உடனே ‘என்னை மன்னியுங்கள்’ என்று விழுந்து வணங்கினார்.

இந்திய ரா வும் கமலின் ர்ரா நாடகமும்


இந்திய ரா வும் கமலின் ர்ரா நாடகமும்





இந்திய விடுதலைக்குப் பின் நேருவின் காலத்தில் சீனா இந்திய எல்லையைத் தாக்கிய போது இந்தியா அந்தப் போரை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை.
இந்தியாவின் அந்த இக்கட்டான நிலைதான் இந்திய உளவுத்துறை அமைவதற்கான ஓர் உடனடி அவசியத்தை ஏற்படுத்தியது எனலாம்.
(Research & Analysis Wing (RAW)) ரா என்ற இந்திய உளவுத்துறை ஆரம்பிக்கும்போது 250 பேருடன் அமெரிக்க டாலர் 400,000 மூலதனத்துடன்
ஆரம்பிக்கப்பட்டது. இன்று 8 முதல் 10 ஆயிரம் பேர் ராவில் இருப்பதாக
சொல்கிறார்கள். ரா வின் வேலைகளுக்காக ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகை
அமெரிக்க டாலர் 145 மில்லியன்.

ரா அதிகாரிகள் முழுமையாக பயிற்சி பெற்றது இஸ்ரேலிடம்.

ஆஸியை சுழலில் மிரட்டிய இந்திய அணி முதல் டெஸ்டில் அபார வெற்றி


26/02/2013

 இந்திய -அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.




தமிழ் சினிமா

MailPrint
டேவிட்
கோவா கடற்கரையில் வாழும் டேவிட் எனும் மீனவர் விக்ரமின் காதல் கலாட்‌டாக்களும் மும்பையில் கிறிஸ்தவ பாதிரியார் நாசரின் மகனாக கிடாரிஸ்ட்டாக டேவிட் ‌எனும் ஜீவா பண்ணும் சேட்டைகளும், படும்வேதனைகளும் தான் "டேவிட்".
நுனி நாக்கு ஆங்கிலம், காரில் வந்து இறங்குகிற வசதி. நட்சத்திர பார் ஒன்றில் உட்கார வைத்து 'நாட்' சொல்லுகிற அளவுக்கு பைசா பலம். இவை மூன்றுக்கும் தகுதி இருந்தால் போதும்.
முழுக்கதையையும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று நம்புகிற ஹீரோக்களுக்கு 'செய்வியா... செய்வியா...' என்று சட்டையை பிடித்து 'செய்வினை' வைக்கிறார்கள் இவர்கள்.
அஜீத்திற்கு ஒரு சக்ரி டோலட்டி என்றால், ஜீவா-விக்ரம் இருவருக்கும் ஒரு பிஜாய் நம்பியார்.
ஜீவாவுக்கும் விக்ரமுக்கும் ஒரே பெயர், டேவிட். இவர் கதை ஒரு பக்கம் ஒடுகிறது. அவர் கதை இன்னொரு பக்கம் ஓடுகிறது.
இரண்டு பேரையும் கிளைமாக்சில் சேர்ந்து உட்கார வைத்து ஒரு டயலாக்கை பேச விட்டால் அது எப்படி அய்யா புதுமையாகும்? இதுபோன்ற புதுமைகள் படம் முழுக்க விரவிக் கிடப்பதால் டேவிட், டேய் 'விட்' என்றும் அழைக்கப்படலாம்.
1999-ம் ஆண்டு மும்பையில் கித்தாரிஸ்டாக இருக்கும் ஜீவா, தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது வெளிநாடு டூர் சென்று தனது திறமையை நிரூபிக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் சுற்றி வருகிறார்.
அவருடைய அன்பான அப்பாவாக நாசர். அவரது முழு நேர தொழில் ஏசுவின் நாமத்தை ஜபிப்பது. அப்படியே ஊரார்க்கும் போதித்து தன் மதத்தின் மீது நம்பிக்கையை விதைப்பது.
இவர் மற்றவர்களை மதம் மாற்றுகிறார் என்று குற்றம் சாட்டுகிற ஒரு இந்துத்வா கும்பல், இவரை போட்டு பேய் மிதி மிதிக்க, உதைத்தவர்களையும், உதைக்க ஏவியவர்களையும் தேடிப்போய்...., -மிதிக்கிறாரா ஜீவா? ம்க்கூம்... மிதிபட்டு அழுகிறார்.
>இன்னொரு பக்கம் விக்ரம். குவார்ட்டர் கோவிந்தன், பிராந்தி பீர்பால், விஸ்கி விஷ்ணுவாகி சதா நேரமும் குடியிலேயே மிதக்கிறார்.
நடு நடுவே போதை தெளியும்போதெல்லாம் அடுத்தவனுக்கு நிச்சயிக்கப்பட்ட ஒருத்தியை கல்யாணம் கட்டிக் கொள்ள ரூட் போடுகிறார்.
விக்ரமின் வரலாற்றில் இப்படி ஒரு சொதப்பல் படம் வந்ததேயில்லை என்கிற அளவுக்கு மண்டை காய்ந்து போகிறது நமக்கு.
படம் தொடங்கி சிறிது நேரம் வரைக்கும், என் அக்கா அவன் கூட ஓடிட்டா. உன் பொண்டாட்டி யார் கூட ஓடுவா? தங்கச்சி ஓடிட்டாளா என்று வியத்தகு வசனங்கள் பேசி பெண்ணியத்தை பேய் இனமாக்கி ஊனப்படுத்துகிறார்கள்.
போதும் போதாமல் ஊனமுற்றவர்களையும் ஏகத்திற்கும் கிண்டலடிக்கிறார்கள்.
இஷா ஷெர்வானிதான் விக்ரமுக்கு ஜோடியாக போகிறார் என்று நம்ப வைக்கிறார் டைரக்டர்.
அட யாருக்காவது கட்டி வச்சு படத்தை முடிங்கப்பா என்று அந்த நம்பிக்கையையும் பொறுமையிழக்க வைக்கிறது இழுவை. நல்லவேளை. கோடையின் இதமாக இருக்கிறது இஷாவின் அழகு.
இப்படத்தில் தபுவும் இருக்கிறார். கடைசியில் தபுவை விக்ரம் கட்டிக் கொள்வதற்கு என்ன அர்த்தமோ? அவரது புருஷன் என்றொரு அட்டக்கத்தில், பிள்ளையை தூக்கிக் கொண்டு 'என்னமோ நடந்துட்டு போகட்டும்' என்ற முன்னாலே நடையை கட்டுகிறார்.
படத்தின் மிக அருமையான திருப்பம் இது. லாராதத்தாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அழகான அவரை ஒரு ஆன்ட்டியாக பார்க்க மனம் இடம் கொடுக்கவில்லை.
ஏழெட்டு பேர் சேர்ந்து இசையமைத்திருக்கிறார்கள். அனிருத் இசையில் ஒரு பாடல் மட்டும் மனசை என்னவோ செய்கிறது.
இயக்குனர் பிஜாய் நம்பியார், இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காத்திருந்தது.
ஆனால், அதை நிறைவேற்ற சற்று தடுமாறியிருக்கிறார். இரண்டு வெவ்வேறான காலகட்டங்களில் பயணிக்கும் இரண்டு கதாபாத்திரங்களையும் கிளைமாக்ஸில் இணைத்து கதைக்கு ஒரு ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார்.
அந்த இடத்தில் மட்டும் இயக்குனர் பளிச்சிடுகிறார். மற்றபடி, திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார்.
ஜீவாவின் கதாபாத்திரம் மும்பையில் வாழ்வதாக இருந்தாலும், அக்காவம், தம்பியும் சேர்ந்து சிகரெட் பிடிக்கும் காட்சிகளை இயக்குனர் தவிர்த்து இருக்கலாம்.
படத்தோட பெரிய பலம் ரத்னவேலு, வினோத் ஆகியோரின் ஒளிப்பதிவுதான். இருவரும் இப்படத்திற்காக ரொம்பவும் உழைத்திருக்கிறார்கள்.
கோவாவின் அழகை, வேறொரு கோணத்தில் வித்தியாசமாக படம்பிடித்து காட்டியிருப்பது ரொம்பவும் அழகு.
நடிகர்: விக்ரம், ஜீவா
நடிகை : தபு, லாரா தத்தா
இயக்குனர் : பிஜாய் நம்பியார்
இசை : அனிருத், பிரசாந்த் பிள்ளை, ரெமோ பெர்னான்டஸ், மாடர்ன் மாபியா
ஓளிப்பதிவு : ரத்னவேலு, வினோத்