எஸ்.கிருஷ்ணமூர்த்தி – அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவில் இயங்கும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகின்றன.
இரண்டு தமிழ்நாவல்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியாவதுடன் தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட சில சிறுகதைகளைக்கொண்ட தொகுப்பு நூலும் வெளியிடப்படவிருக்கின்றன.
அவுஸ்திரேலியாவில் நீண்டகாலமாக வதியும் இலங்கையர்களான டொக்டர் நொயல் நடேசன் மற்றும் லெ.முருகபூபதி ஆகியோரின் புத்தம் புதிய மொழிபெயர்ப்பு படைப்புகளே இந்த வெளியீட்டு நிகழ்வில் அறிமுகமாகின்றன. ஜனவரி 8 ஆம் திகதி கொழும்பில் பணடாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாலை 5 மணிக்கு செயற்குழுக்கூட்ட அறை F இல் வெளியிடப்படும் குறிப்பிட்ட மூன்று நூல்களின் விபரம் வருமாறு:
டொக்டர் நொயல் நடேசனின் உனையே மயல்கொண்டு என்னும் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு
Lost In You . இதனை சென்னையைச்சேர்ந்த கலாநிதி ……வாசுதேவ் மொழிபெயர்த்துள்ளார். இலங்கையின் பிரபல நூல் வெளியீட்டாளர்கள் விஜிதயாப்பா பதிப்பகத்தினர் இதனை பதிப்பித்துள்ளனர்.