மேலும் சில பக்கங்கள்

மெல்பேண் கறுப்பு ஜீலை நினைவேந்தல் நாள் நிகழ்வு


.
உலகத்தின் கவனத்தினை ஈர்த்த 1983 ஜூலை தமிழின அழிப்பை நினைவுகூரும் நினைவேந்தல் நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் விக்ரோரியா மாநிலத்தில் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை 21-07-2012 அன்று 6. 30 மணிக்கு மெல்பேணிலுள்ள சென் யூட்ஸ் மண்டபத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில், அவுஸ்திரேலிய மற்றும் தமிழீழ தேசியக்கொடி ஏற்றல், பொதுச்சுடர் ஏற்றுதல், அகவணக்கத்துடன் நினைவேந்தல் நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.
விடுதலைக்காக போராடிவரும் குர்திஸ் சமூகத்தை சேர்ந்தவர்களும் பங்குகொண்டு, தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்ட இந்நிகழ்வில் 300 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

உயிர்த்தெழுந்த நாட்கள் - ஜெயபாலன்

.
1983ம் ஆண்டு கலவரம் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களின் முன்னம்தான் எனது யப்பானியத் தோழி ஆரி யுடன் தமிழகத்தில் இருந்து கொழும்பு திரும்பியிருந்தேன். கொழும்பில் சி.ஐ.டி தொல்லை இருந்தது. அதிஸ்டவசமாக கலவரத்துக்கு முதன்நாள் முஸ்லிம் கிராமமான மல்வானைக்குப் போயிருந்ததால் உயிர் தப்பியது. 1983ம் ஆண்டுக் கலவரத்தைப் பதிவுபண்ணிய இக் கவிதை வெளிவந்த நாட்களில் பேராசிரியர் பெரியார்தாசன் 100க்கும் அதிகமாக பிரதி பண்ணி தமிழகத்தில் பலருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார். இது அதிகமாக வாசிக்கப் பட்ட எனது கவிதைகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன்.
ஜெயபாலன்
  
உயிர்த்தெழுந்த நாட்கள்
-வ.ஐ.ச.ஜெயபாலன்

அமைதிபோல் தோற்றம் காட்டின எல்லாம்
துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல.
மீண்டும் காற்றில் மண் வாங்கி
மாரி மழைநீர் உண்டு
பறவைகள் சேர்ந்த செடிகொடி வித்துகள்
பூவேலைப்பாட்டுடன் நெய்த
பச்சைக் கம்பளப் பசுமைகள் போர்த்து
துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல
அமைதியாய்த் தோற்றியது கொழும்பு மாநகரம்.
சித்தன் போக்காய் தென்பாரதத்தில்
திரிதலை விடுத்து மீண்ட என்னை
"ஆய்போவன்" என வணங்கி

அரங்காடல் என் பார்வையில் - கலா ஜீவகுமார்


.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில வருடங்களாக சில ஒன்று கூடல் நிகழ்வுகளை நடாத்தி அதன்மூலம் கிடைக்கும் நிதியினை தம்மை வளப் படுத்திய யாழ் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பும் ஒரு நல்ல சேவையை செய்து வருகிறார்கள். அந்த வழியில் இந்த வருடம் சென்ற ஞாயிற்றுக்கிழமை அரங்காடல் நிகழ்வு  Paramatta River  Side Thiater  ல்  இடம்பெற்றது யாவரும் அறிந்ததே. இவ்வருடம் இந்நிகழ்வு  Dr . Sithamparakumar தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது என்பதில் எந்தவிதமான ஜயமும் இல்லை.
நிகழ்வினது முதல்க்கட்டமாக இடம் பெற்றது செ.பாஸ்கரனின் நெறியாள்கையில் துயரத்தின் சிரிப்பு என்னும் நாடகம் அதிகம் சிரிக்கவைக்கவில்லை ஆனால் சிந்திக்கவைத்தது.மக்களின் மூடநம்பிக்கைகளையும் தனி மனிதர்களின் சுயநலன்களையும் வெளிக்கொணர்ந்திருந்தது. அருமையான ஒரு கருவை அழகாக வெளிக்கொணர்ந்திருந்தார் தயாரிப்பாளர். நடிகர்கள் ஒருவருக்கொருவர் தாம் சளைத்தவரல்ல என தம் நடிப்புத்திறமையை வெளிக்கொணர்ந்திருந்தார்கள். பல அரங்குகளைக்கண்ட மதுரா மகாதேவ் இந்நாடகம்மூலம் பலர் மனதில் இடம் பிடித்துக்கொண்டார். நிட்சயமாக இன்நாடகத்தில் அவரது நடிப்புத்திறமைக்கு ஒரு சபாஸ்போட்டே ஆக வேண்டும். நாடகத்தில் சாமியாராக வந்த ரமேசின் நடை பேசிய விதம் நிஜத்தில் ஏமாற்றும் சாமியாரை பார்த்ததுபோல் இருந்தது. அதிகம் அலட்டிக்கொள்ளாமல் அருமையாக நடித்திருந்தார். வைத்தியராக வந்த ரவிசங்கர் ராசையா ஆங்காங்கே மக்களை சிரிக்கவைத்து நகைச்சுவையாக கதையை நகர்த்திச் சென்றார். பல நகைச்சுவைகளை இந்த இருவரும் நயமாகத்தந்தபோதும் கதையின் கனம் துயரத்தை நோக்கியே பயணித்ததால் மக்களால் மனம்திறந்து சிரிக்கமுடியவில்லை.


ஸ்ருதிலயா சங்கீத அக்கடமியின் ராக சங்கமம் 2012


இணுவையூர் - திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்


ஜூலை மாதம் 14 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சிட்னி சில்வவோட்டர் (Silver Water) எனும் இடத்தில் அமைந்திருந்த பகாய் (Bahai) சென்ரருக்கு மக்கள் அணி அணியாகத் திரண்டு வந்து கொண்டிருந்தனர். மாலை 5.45 ஐக் காட்டியது கடிகாரம். மண்டபத்தினுள்ளே நுழைந்ததும் இடப்புறம் படிக்கட்டுகளுக்கு அருகிலே நவீன சித்திரத்தில் அமைந்த பிள்ளையார் ஓவியம். அதற்கு முன்னே மெழுகுவர்த்தி விளக்கு. பிள்ளையாரின் பின் புறம் அழகிய துணி விரிப்பால் அலங்கரிக்கப்பட்ட மேசை. அதன் மீது வீணை, தபேலா, மிருதங்கம் ஆகிய இசைக் கருவிகள். அவற்றின் அழகை மேம்படுத்த அவற்றுக்கிடையே மெழுகுவர்த்தி விளக்குகள். படிகளில் ஏறி மேலே சென்றதும் பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி சந்தனம் குங்குமம் மலர்களும் இட்டு அற்புதமான உணர்வுகள் பொங்க “ராக சங்கமம்”; இதழைத் தந்து தமிழும் சைவமும் மணக்க மணக்க வரவேற்றனர் ஸ்ருதிலயாவின் வரவேற்புக் குழுவினர்.

ஏக்கம் - ஹிட்டோமரோ ஜப்பானியக் கவிதை - அதீதத்தில்.


.


உயிரோடு அவள் இருந்த பொழுது
கைகோர்த்து வெளியில் செல்வோம்.
வீட்டின் முன் உயர்ந்து வளர்ந்திருந்த
கரையோர மரங்களைப் பார்த்து நிற்போம்.
அவற்றின் கிளைகள்
பின்னிப் பிணைந்திருக்கும்.
அவற்றின் உச்சிகள்
இளவேனிற்கால இலைகளால் அடர்ந்திருக்கும்
எங்கள் அன்பைப் போல.

அன்பும் நம்பிக்கையும் மட்டுமே
போதுமானதாக இருக்கவில்லை
வாழ்க்கைச் சக்கரத்தைப்
பின்னோக்கிச் செலுத்த.
பாலைவனத்துக் கானல் நீராய்
மங்கி மறைந்து போனாள்.
ஒரு காலைப் பொழுதில்
ஒரு பறவையைப் போலப் பறந்து போனாள்
மரணத்தின் பிடிகளுக்குள்.

அவள் நினைவாக விட்டுச் சென்ற குழந்தை
அவளைக் கேட்டு அழும் வேளையில்
என்னால் முடிந்ததெல்லாம்
அவனைத் தூக்கத் தெரியாமல் தூக்கி
அணைக்கத் தெரியாமல் அணைப்பது மட்டுமே.
அவனுக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை.

எங்கள் அறையில் எங்கள் தலையணைகள்
அருகருகே கிடக்கின்றன எங்களைப் போல.
அமர்ந்திருக்கிறேன் அவற்றருகே
நாட்கணக்காக இருளை வளரவிட்டபடி
இரவு முழுவதும் விழித்தபடி
பொழுது புலரும்வரை பெருமூச்செறிந்தபடி.
எத்தனை வருந்தினாலும்
மீண்டும் அவளைப் பார்க்க முடியாது.

குறளில் குறும்பு 40 – உறுதிப் பொருள்



.

வானொலிமாமா நா.மகேசன்

ஞானா: அப்பா, கோப்பி குடிச்சு முடிச்சிட்டியள்தானே. இனிச் சொல்லுங்கோ திருக்குறளுக்கு
பாயிரம் எங்கை இருக்கெண்டு.

அப்பா: ஞானா, அம்மாவையுங் கூப்பிடு. பிறகு அவவுக்கு நான் திருப்பிச் சொல்லிக் கொண்டு
இருக்கேலாது.

சுந்தரி: நான் ஒரிடமும் போகேல்லை அப்பா. இஞ்சைதான் நிக்கிறன். போனமுறை
திருக்குறளுக்குப் பாயிரவியல் எண்டு ஒரு இயலே இருக்கு. அதிலை வந்து, முதல்
நாலு அதிகாரங்களும் அடங்கும் எண்டு சொன்னியள்.

அப்பா: சுந்தரி, முதல் நாலு அதிகாரங்களையும் சொல்லும் பாப்பம்.

சுந்தரி: முதலாவது கடவுள் வாழ்த்து, இரண்டாவது வான்சிறப்பு, மூண்டாவது நீத்தார்
பெருமை. நாலாவது அறன்வலியுறுத்தல்.

ஞானா: அப்பா இந்த நாலு அதிகாரங்களும் நூலைப் பற்றிய முழு விரங்களையும் சுருக்கிச்
சொல்லிற பாயிரம் எண்டு சொல்லுறியள். அதாவது இந்தக் காலத்து மொழியிலை
சொன்னால் ஒரு முன்னுரை எண்டு சொல்லுறியள். அப்பிடித்தானே?

அப்பா: ஞானா நான் உதைக் கண்டுபிடிச்சுப் புதிசாய் ஒண்டும் சொல்லேல்லை. பழங்காலத்து
அறிஞர்களே பல இடத்திலை சொல்லியிருக்கினம்.

கருத்தரங்குகள்: எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும்


.
                                                                                                          முருகபூபதி

இலக்கிய உலகில் பிரவேசித்த காலம் முதல் பல இலக்கிய விழாக்கள், மாநாடுகள், கருத்தரங்குகளில் பங்குபற்றிவருகின்றேன். இலங்கையில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் மட்டுமன்றி தென்னிலங்கையில் கம்பஹா மாவட்டத்தில் கொரஸ என்ற சிங்களக்கிராமத்திலும் நடத்திய கருத்தரங்குகளிலும் யாழ். பல்கலைக்கழகத்தின் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிலும் கலந்துகொண்டு நிகழ்வுகளை ரசித்திருக்கின்றேன்.
அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர் நண்பர் மாவை நித்தியானந்தனின் ஊக்கத்தினால் உருவாக்கப்பட்ட மெல்பன் கலை வட்டம் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் நடத்திய முழுநாள் கருத்தரங்கு, இங்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பெற்றோர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்குமிடையிலான தலைமுறை இடைவெளி மற்றும் உறவுகள் சார்ந்த பிரச்சினைகளை விவாதிக்கும் வகையில் அமைந்திருந்தது. அதன்பின்னர் 2001 ஆம் ஆண்டு தொடக்கம் இங்கு நாம் வருடந்தோறும் நடத்திவரும் எழுத்தாளர் விழா கருத்தரங்குகளில் பங்குபற்றி வருகின்றேன்.
இதற்கிடையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நான்கு நாட்கள் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு முழுநாள் கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டிருக்கின்றேன்.

உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ?

.
உலகின் பெரிய வழிபாட்டுத்தம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
**************************
*******


இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!

போன்ஸாய் மரங்கள்







இன்று உலகில் பல சிறுவர்கள் ‘சிறுமுது அறிவர்’ அதாவது Child Prodigy என்று போற்றப்படுகின்றனர். இரண்டு வார்த்தைகளுமே புரியாத புதிராகத் தோன்றும். புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால், “குழந்தை மேதை” என்று சொல்லலாம். இவர்களை, “சிறிய வயதிலேயே பெரியவர்களுக்குண்டான அறிவும் திறமையும் கைவரப்பெற்றோர்” என்று விக்கிபீடியா வரையறுக்கிறது. ”அதிகப் பயிற்சி தேவைப்படும் துறையில் மிகத்தேர்ந்த பெரியவரின் திறமையைத் தன் செயலில் காட்டும் சிறுவர்களே சிறுமுது அறிவர்” என்பது இன்னொரு வரையறை. இதில் சிறுவர்கள் என்பதற்கான அதிகபட்ச வயது எல்லை எதுவென்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.
12 வயதுச் சிறுமி அமெரிக்க அல்லது இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்தாள்; 10 வயதுச் சிறுவன் பி.ஹெச்டி முடித்தான்; 8 வயதிலேயே மைக்ரோஸாஃப்ட் தேர்வுகள் எழுதி பட்டயம் பெற்றார் என்றெல்லாம் செய்திகளில் வருவார்களே இவர்கள்தான் இந்தக் குழந்தை மேதைகள்!
ஆனால், கூர்ந்து கவனித்திருந்தீர்களானால், ஒரு விஷயம் புலப்பட்டிருக்கும். செய்திகளில் பரபரப்பாகப் பேசப்படும் இந்தக் குழந்தை மேதைகளில் அநேகர்களும், பெரியவர்களானதும் இதுபோல பேசப்படும்படியான திறமையான செயல்கள் எதுவும் செய்திருப்பதாக அறியப்பட்டிருக்க மாட்டார்கள். அந்த வயதில், ஒரு சராசரி மனிதருக்குரிய இயல்பான வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதாவது, “Child prodigy”க்கள் எல்லாருமே பிற்காலத்தில் ஜீனியஸ்களாக ஆவதில்லை.
சிறு வயதில், தன் வயதுக்கு மீறிய திறமையுடன் செயல்பட்டதாகச் சொல்லப்படும் இவர்கள், அதே ஆர்வம் மேலும் தொடர்ந்திருந்தால், பெரியவர்களானதும், எவ்வளவு பெரிய புகழ்பெற்ற திறமைசாலிகளாக வந்திருக்க வேண்டும்? புகழ் பெறவில்லையென்றாலும், தன் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாவது கண்டிருக்க வேண்டுமே! சிறு வயதிலேயே சாதனைகள் செய்ய முடிந்த இவர்களால், பெரியவர்களானதும் அதே போல சாதனைகள் புரிவதற்கு என்ன தடை?

பில்லா -2 இருத்தலியல் -சின்னப்பயல்

.

.

































அடக்க நினைக்கும் கூட்டத்திலிருந்து தப்பித்து அகதியாக ஒதுங்கும்  ஒரு மனிதனின் கதை. "அங்கிருக்கப்பவேநீ ஒழுங்கா இருந்ததில்லஇப்பவும் அப்டியே தான் இருக்கியாடா"ன்னுஅக்கா கேட்கிறார்.தவறி விழுந்த  துப்பாக்கியைத் தடவி எடுத்து  அஜித் தன் பேண்ட் பாக்கெட்டில் வைக்கும்போது. 
சீண்டப்படுதல்,ஒதுக்கிவைத்தல்மிருகம் போல நடத்தப்படுதல்,முழுக்க அங்கீகாரம் கிடைக்கவிடாது  தள்ளிவைத்திருத்தல்தாம் நினைத்த அமைதி வாழ்க்கையைஎல்லோரும் போல வாழ நினைப்பவனை வாழ விடாது தடுத்தல்இதெல்லாம் தொடர்ந்தும் நடந்தால் ஒருவன் என்னதான் செய்வான் இதற்கும் மேலாக சொந்த நாட்டிலேயே அகதி போல நடத்தப்படுதல் என்பன அவனின் அடையாளங்கள்"அடங்க மறு அத்து மீறு"என்றே களம் இறங்கியிருக்கிறார் தல’ அஜித். 
இதுபோல பல படங்கள் ஆங்கிலத்தில் வந்திருந்தாலும் எனக்கு உடனே ஞாபகத்திற்கு வருவது First Blood தான்சொந்த நாட்டின் ராணுவ வீரனை யார் எதிரி என்றே தெரியாத வியட்நாம் காட்டில் கொண்டுபோய் விட்டு அவனின் அமைதி வாழ்க்கையைச் சீரழித்து அதில் அவனுக்கு வரும் முறையான கோபத்தை மிகுந்த வன்முறையோடு  வெறியாட்டமாகஆடியிருப்பதைக்காட்டிய படம் அது.ஒரு புழுவைத் தொடர்ந்தும் சீண்டினால் அது தன் கோபத்தைக் காட்டத்தான் செய்யும்இவனாலும்பொறுத்துக்கொள்ளத்தான் முடியவில்லை. அவனுடைய எண்ணமெல்லாம் தான் ஒரு கேங்க்ஸ்டராக மாற வேண்டும் என்று முடிவெடுத்து செய்யவில்லை. தான் உயிருடன் இருக்கவும் தன்னையும் ஒரு சக மனிதன் என்று நினைக்கவும் வேண்டுமென்ற வெறி கொண்டவனின் இலக்கில்லாமல்பயணிக்கும் வாழ்க்கை வரலாறு இது. 
Prequal , Sequal என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லைஇதை ஒரு தனிப்படமாகவே பார்க்கலாம்என்ன அவரின் டேவிட் பில்லா என்ற பெயர் மட்டும் ஒத்துப்போவதால் அப்படிச் சொல்லிக்கொள்ளலாம்ஏதிலியாக வந்தவர்கள் , எவ்வளவுதான் தகுதியுள்ளவராயிருப்பினும் , படிப்பிலும், அனுபவத்திலும் உயர்ந்தவராயிருப்பினும் வாழ்க்கை நாமெல்லாம் வாழ்வது போன்று அவர்களுக்குக் கிடைப்பதில்லைதான். 
மீன்களை அனுப்பிவைக்கும் சம்பவத்தில் அவர்களை மாட்டவைப்பதில்இருந்து தொடங்குகிறது வலை. அருமையாகச் சிக்கிக்கொள்கிறார் அஜித்.ஒவ்வொரு தடவை சிக்கியபோதிலும்  தனக்கிருக்கும் இயல்பான கோபத்தினாலும்திருப்பியடிக்கும்  திறமை இருப்பதாலும் லாவகமாத் தப்பிக்கிறார். " என் வாழ்க்கைல ஒவ்வொரு நிமிஷமும்ஏன் ஒவ்வொரு நொடியும் நானாச்செதுக்கினதுடான்னு அடிபட்ட புலி போலச் சீறுகிறார்.எத்தன பேருக்கு அப்படி ஒரு வாழ்க்கை அமையும் ? , நாமெல்லாம் வாழ்க்கைல பயணிக்கறதில்லஅடித்துத்தான் செல்லப்படுகிறோம்அடித்துச் செல்லப்படும் வாழ்க்கையையும் நம்மளால செதுக்க முடிந்தால்?,,,ஹ்ம்ம்...அதுதான் இந்த டேவிட் பில்லாவின் வாழ்க்கை.
அவனுக்கு பயம்ங்கற ஒண்ணு  இருக்கறதேயில்லதளைகள் இல்லாதஒருவனுக்கு பயம் இருக்கணும்ங்கற அவசியம் இருப்பதில்லை.எதிர்ப்போர்  யாராக இருப்பினும் தம்  வழியை மறைப்பவராயின் அவர்களைப் போட்டுத்தள்ளி விட்டு முன்னேறுகிறான் பில்லா.வகை தொகையில்லாதபடி கொலைகள்தம்மிடம் இருக்கும் அத்தனை ஆயுதங்களையும் அத்தனை சுளுவாக உபயோகிக்கிறான் பில்லா. "மார்க்கெட் சாவுக்குத்தான். ஆயுதங்களுக்கு இல்லசாவுங்கற ஒண்ணு இருக்கிற வரை ஆயுதங்கள் தொடர்ந்து கொண்டேதானிருக்கும்னு நமக்குப்புரிய வைக்கிறான்பில்லாஅத்தனையும் உண்மை.
The Devils புதினத்துல ‘பீட்டர் வெற்கோவென்ஸ்கி’ என்னும் பாத்திரத்தின் மூலம், தம் கருத்துக்களைத் தஸ்தாயெவ்ஸ்கி வெளிப்படுத்துகின்றார் ... "நாம் முழுமனதுடன் அழித்தலுக்கு நம்மை ஆட்படுத்திக்கொள்ள வேண்டும்.  இத்தகைய அழித்தலானது தொடர்ந்து நடைபெற வேண்டும்.  இப்போது இருக்கக் கூடிய நடைமுறைகள் எதுவுமே எஞ்சியிருக்கவில்லை என்னும் நிலை வரும் வரை, அந்த அழித்தல் பணியினை நாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்க வேண்டும்.  இந்தப் போரிலே புரட்சியாளர்கள் விஷம், கத்தி, கயிறு போன்றவைகளையும் பயன்படுத்தலாம்." இதேதான் பில்லாவும் செய்கிறான்.
"நீ நினைச்சத சாதிச்சிட்ட"ன்னு (யோக் ஜேப்பிரஞ்சித் சொல்லும்போது , "இல்ல,இதுதான் ஆரம்பம்"னு சொல்லுவான் அகதியான எனினும் அனாதையில்லாத பில்லா.பவளத்துறையிலிருந்து தொடங்கும் அவன் பயணம் ,வைரக்கற்கள் கொண்டு சேர்ப்பதிலிருந்து , பௌடர் வரை சென்று , படிப்படியாக ஆயுதம் கொள்முதல் மற்றும் கலாஷ்னிக்கோவ் கடத்தல் வரை பயணிக்கிறான் பில்லாமுடிவுறா சளைக்காத பயணம் அதுஒருபோதும் உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நினைக்காத பில்லா.
அஜித் அதிகம் மெனக்கெடாமல்அலட்டிக்கொள்ளாமல் ஒரு கேங்க்ஸ்டருக்கான முகப்பாங்குடன்கொஞ்சம் அதைத்த ,எப்போதும்முந்தினநாள் அடித்த பியரின் மப்பில் இருக்கும் முகத்துடனேயேகாணப்படுகிறார் படம் முழுக்க. எந்தப் பெண்ணிடமும் ஒட்டுதலோ இல்லை உறவோ வைத்துக்கொள்ளாமல்அவள் அக்கா மகளான ("பார்வதி")முறைப்பெண்ணிடம் கூட ஒட்டிக்கொள்ளாமல் தன் போக்கில் பயணிக்கும்எதற்கும் இடம் கொடாத பாங்குடனேயே இருக்கிறார் பில்லாசில இடங்களில் மட்டுமே கோட்அணிந்து வருகிறார்மற்ற காட்சிகளில் சாதாரண Angry Young Man ஆகத்தான் காட்சியளிக்கிறார் தல.
இராமேஸ்வரக்கரையில்  வந்திறங்கியதிலிருந்து அங்கிருக்கும்  சக மனிதர்களிடம் பேசும்போதும்படம் முழுக்கவும் ஈழத்துப் பாணியில்ஒரு சொல் கூடப் பேசாமல் சாதாரண தமிழ்நாட்டுத் தமிழுடனேயே உலா வருகிறார் அஜித்.அவரின் சக தோழரும் அங்கனமே.அது மட்டும் இடிக்கிறது.மேலும் எல்லோரும் அவரிடம் அடி வாங்குவதற்கெனவே ஜனித்தவர் போலக்காணப்படுவதும்போலீஸ்காரர்கள் கூடகொஞ்சம் ரொம்பவே இடிக்கிறது.
ஒரு வில்லன் பபாசி , "து தின் பேதின் தேரா லிமிட் க்ராஸ் கர் ரஹாஹை பில்லா" (நீ நாளுக்கு நாள் உன் எல்லை தாண்டிப்போற பில்லா என்றுஹிந்தியில் வசனம் பேசுகிறார் திப்பு சுல்தான் தாடியுடன். வில்லனுக்கான மிடுக்கு என்ற ஏதுமின்றி. இன்னொரு வில்லன் சின்னதாக French Cutவைத்துக்கொண்டு எப்போதும் ரஷ்யனில் பேசுகிறார், Sorry Chakri Sir, இந்தப் படத்தின் வில்லன்கள் என்னைக் கவரவேயில்லை 
படத்தில்  வரும் பெண்கள் ஜேம்ஸ்பாண்டு படத்தில் வரும் வில்லிகள் போலவும் கதாநாயகிகள் போலவும் ஒல்லியாக தமது ஸீரோ சைஸ் உடலைக் காட்டுவதற்கெனவே வந்தது போல இருப்பது பெரிய குறை.பில்லா லாவது கொஞ்சம் நம்மூர் பெண் போல குண்டாக நமீதா நடித்திருந்தார். இதில் மருந்துக்குக்கூட அப்படி ஒருவரும் இல்லை.மதுரப்பொண்ணு பாடலில் வரும் "மீனாக்ஷி தீக்ஷித்கூட ரஷ்யன் டான்ஸர் போலவே இருப்பது வருத்தமேஅதிலும் அவர் கதம்பத்தை தலையிலணிந்துகொண்டு பாடுவது பார்க்கச் சகிக்கவேயில்லை.
"ஆசையில்ல அண்ணாச்சி ,பசி" , இது பஞ்ச் டயலாக் மாதிரி தோணவேயில்லஅடிமனதில் இருக்கிற விஷயமாத்தான் இருக்கு.இது போல பல விஷயங்கள் பேசறார் அஜித் குரலின் மூலம் இரா.முருகன். ரசிக்கவும் சிந்திக்கவும் அவ்வப்போது தைக்கவும் செய்கிறது வசனம்.
வகைதொகையற்ற கொலைகள் மற்றும் வன்முறைகளால்அளவுக்கதிகமாக தணிக்கையில் வெட்டுகள் வாங்கியது திரைக்கதை பல இடங்களில் நொண்டியடிப்பதுபல காட்சிகளைப் பள்ளிக்கூடப் பிள்ளைகள்கூட யூகிக்கும் வகையில் அமைந்திருப்பது போன்றவைகளால் படம் பல இடங்களில் தாவித் தாவிச்சென்று பார்க்கும் நமக்கு ஆயாசம் வருவது தவிர்க்க இயலவில்லை.
சண்டைக்காட்சிகள்  பற்றிப் பேசவேண்டுமெனில் அந்த சர்ச் காட்சியை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லலாம்பார்வதி ஓமனக்குட்டனைக் காப்பாற்றமுயற்சிக்கும் காட்சியில் தல பட்டையக்கிளப்புகிறார். இதே காட்சியை வைத்தே திரைப்படம் தொடங்குகிறது.வெறும் கைகளால் தொடங்கி பிறகு சிறு கத்தியை வைத்து அனைவரையும் குத்திச்சாய்ப்பதுகுறிப்பாக கடைசியில் அந்த முகத்தில் வெள்ளைத் தழும்புகளுள்ளவரை நெஞ்சில் குத்திச் சாய்ப்பதுநினைத்தே பார்க்காத இடம், Hats Off தலபின்னர் அந்தக் "கார்னிவல்நடக்கும் சமயத்திலான சண்டைக்காட்சிவெகு இயல்பான காட்சியமைப்புடன் கவர்கிறது. மற்ற சண்டைக்காட்சிகளில் Latest Machine Guns வைத்துக்கொண்டு சண்டையிடுவது Hollywood படங்களில் ஏற்கனவே பார்த்துச் சலித்தவை.
பில்லா 1-  ஒப்பிட்டுப்பார்க்கையில்  யுவனின் பங்களிப்பு பின்னணி இசையில் குறைந்தே காணப்படுகிறது. பில்லா 1-ல் முழுக்க Jazz மற்றும்அவ்வப்போது Rock இசையுமாக 80- களில் வந்த இசை போல வெள்ளம்போலபாய்ந்து வந்ததுஇங்கு   Hip Hop மற்றும் Arabian Style. பல இடங்களில் தெளிவாகத் தெரிகிறது. அந்த டிமிட்ரியின் கோட்டையைத் தகர்த்து விட்டு அஜித் வெளியேறும்போது பின்னணியில் முழுக்க தீ பற்றி எரிவதற்கான பின்னணி இன்னும் மனதில் ரீங்கரித்துக்கொண்டு இருக்கிறது.தீம் ம்யூஸிக்கை பயன்படுத்தியிருக்கிறார். இருப்பினும் பில்லா-ஆல்பமில்இடம்பெறாத அரேபியன் பெல்லி டான்ஸ்-க்கான பாடலில் பின்னியிருக்கிறார்யுவன்ஊது குழல்களும் டபுள் பாஸுமாக பின்னணி இசை நம்மை சீட்டின் விளிம்பிற்குக் கொண்டு செல்கிறதுபார்வதி ஓமனக்குட்டன்அறிமுகக்காட்சியில் "இதயம்பாடலுக்கான Bit ஐ பியானோவின் அழுத்தமான கட்டைகளால் வாசித்திருப்பது நம்மைக்கொள்ளை கொள்ள் வைக்கிறது.கடைசி வரை அந்தப் பாடலை படத்தில் தேடித் தேடிப் பார்த்து அலுத்தேபோனேன்ஹும்..அந்தப்பாடல் படத்தில் இடம்பெறவேயில்லை.
மற்ற அத்தனை பாடல்களும் அதனதன் தேவையான  இடத்தில் கனகச்சிதமாகப்  பொருந்திப்போகிறதுபில்லா 1 –ன் Theme Musicஐ அளவோடு இசைத்திருப்பது படத்தை முன்னையதிலிருந்து வேறுபடுத்திக் காட்டப் பயன்பட்டிருக்கிறது . "ஏதோ ஒரு மயக்கம்பாடல் காட்சியமைப்பு சுற்றும்Focus Lights- களுடன் அப்படியே "விளையாடு மங்காத்தா "பாடலின் காட்சிகளை நினைவுபடுத்துகிறது. "எனக்குள்ளே மிருகம்பாடல் படமாக்கிய விதம்,அந்தப்பாடலுக்கு யுவன் கொடுத்திருந்த முக்கியத்துவத்தைக் காப்பாற்றுவது போல இருப்பது மிகவும் வலுசேர்க்கிறது. படத்தின் கடைசியில் தலக்காக அவர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு பாடும் கேங்ஸ்ட்டர் பாடல் அசத்தல்.
தர்க்கரீதியாக நம்ப இயலாத நிகழ்வுகள் தொடரும்  வகைதொகையில்லாத கொலைகள்  மற்றும் வன்முறைசீராகப் பயணிக்காத திரைக்கதைபல மொழிகள் சர்வசாதாரணமாக படம் முழுக்கஅதுவும் பார்க்கும் தமிழ் மட்டும் கூறும் நல்லுலகத்திற்குப் புரியுமா என்று கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்காமல் பேசப்படுதல்சப் டைட்டில் பார்த்தே பல விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டியிருப்பது போன்ற விஷயங்கள் எல்லாம் படத்தில்வெட்டவெளிச்சமான குறைகள்.
"தல" அஜித்துக்கு இது இன்னொரு படம், யுவனுக்குத் தன்னுடைய சில புதிய இசை முயற்சிகளை செய்து பார்க்க முடிந்த ஒரு படம். ரசிகர்களுக்கு Hollywood Range-ல் தமிழில் பார்க்க முடிந்த ஒரு படம்,ஒளிப்பதிவாளருக்கு சரியான தீனி கொடுத்த படம் என்றெல்லாம் கூறிக்கொண்டு நம்மை சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.
chinnappayal@gmail.com


நன்றி uyirmmai.com/