.
கிழக்குச் சூரியன் இருள் கிழித்து
மெல்ல எழுந்து வருகிறான்
வழமைபோலவே வானம் செம்பொன்னாய்
கோடுகாட்டி சிரித்து வரவேற்கிறது
வடக்குத்திசை நோக்கி கதிரெறிந்து
மெல்லப் பார்த்த கதிரவன்
திகைத்து நிற்கின்றான்
பூமியெங்கும் செங்கம்பளம் விரித்து
என் வரவிற்காய் காத்துக் கிடக்கிறதா
மணப்பெண்ணின் மனம்போல
குளப்பமும் திகைப்பும்
ஒன்றாய் ஒட்டிக்கொள்ள
விரைந்து மேலெழுந்து மீண்டும் பார்க்கிறான்
செங்கொடிகள் காற்றில் கையசைக்கின்றன
செஞ்சேலை சுற்றிய கட்டிடங்களும்
செங்கம்பளங்கள் விரித்த புல்தரையுமாய்
வடபுலத்தின் யாழ்நகர் சிவந்து கிடக்கிறது
மேதினக் கூட்டங்களும் ஊர்வலங்களும்
பட்டுக்களால் அலங்கரிக்கப்பட
மாற்றுத்துணிகூட இல்லா மனிதக் கூட்டம்
மருட்சியுற்றுப் பார்த்து நிக்கிறது
வறுமையே தேசியமான நாட்டில்
உழைப்பாளர் உதிரம் குடிப்பவரே
ஊர்வலத்தின் முன்னணியில்
உதிரம் குடிக்கும் அடையாளம்தான்
செங்கொடியாய் மாறியிருக்கிறதா?
புரியாத புதிருக்கு விடைதேடி
கதிரவன் மேற்கே விழுந்து
மறைந்து கொள்கிறான்


அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 200 பேர் பலியானார்கள். அசாம் மாநிலத்தில் துப்ரி என்ற இடத்தில் இருந்து பகிர்கஞ்சன் என்ற இடத்துக்கும் இடையே பிரம்மபுத்ரா ஆற்றில் படகு போக்குவரத்து நடைபெறுகிறது. நேற்று பிற்பகலில் துப்ரியில் இருந்து பகிர்கஞ்சனுக்கு ஒரு படகு புறப்பட்டு சென்றது. இரண்டு அடுக்கு கொண்ட அந்த படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 250 பயணிகள் இருந்தனர்.
_0001.jpg)
றுவர்கள் உரிமைகள் தொடர்பான ஐ.நா. சாசனத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதற்கு மத்தியிலும் சிறுவர்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தும் பிரச்சினை தொடர்ந்தும் இருந்து வருவதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு தனது பிந்திய மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில் கவலை தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவில் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட உலக வர்த்தக மையம் இரட்டைக் கோபுரங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றது. 
இலங்கையில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கையருக்கு 15 வருட சிறைத் தண்டனை விதிக்க வேண்டுமென அமெரிக்க நீதி திணைக்களம் கோரியுள்ளது. விடுதலைப் புலிகளுக்காக பொருட்களை வாங்க முயன்றமையால் ரமணன் மயில்வாகனம் என்ற சந்தேக நபர் பாரிய குற்றத்தினை மேற்கொண்டுள்ளார் என அமெரிக்க வழக்குரைஞர் ஒருவரால் நியூயோர்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை: உலக நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாசனின் மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபத்தின் முதல் புகைப்படம் மற்றும் 30 விநாடிகள் கொண்ட முன்னோட்டக் காட்சி வெளியானது.