அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
சிட்னி முருகன் ஆலயத் திருவிழா- தீர்த்தம்
அருள்மிகு சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் மார்ச் மாதம் 9 ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து 22 ம் திகதி வைரவர் பொங்கலுடன் நிறைவுறுகின்றது. பூங்காவனம் 21 ம் திகதி திங்கட் கிழமை இடம்பெற உள்ளது.
மார்ச் மாதம் 20 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தீர்த்தத் திருவிழா மக்கள் வெள்ளம் திரண்டிருக்க கோலாகலமாக இடம் பெற்றது . சுவாமி தீர்த்தமாடும் அந்த அழகிய காட்சியை கீழே காணலாம்.
இந்திய மாணவி கற்பழித்துக் கொலை
.
24 வயது இந்திய மாணவி ஒருவர் கடந்த வாரம் கற்பழித்துக் கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவரது உடல் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்டு சிட்னியில் ஒரு கால்வாய் அருகே வீசப்பட்டிருந்தது. மீடோபேங்க் பூங்கா அருகே கால்வாய் ஒன்றில் சூட்கேஸினுள் ஒரு பெண்ணின் உடல் இருந்ததை மார்ச் 11-ம் தேதி கட்டுமானத் தொழிலாளர்கள்
ATBC ஊடாக அவுஸ்ரேலிய மக்களின் வன்னிக்கான உதவி 2
.
பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் காலணிகள் வழங்கும் விழா
முல்லைத்தீவு மாவட்டம் முல்லைத்தீவு தமிழ் மகா வித்தியாலய மாணவ மாணவிகளுக்கான கொப்பிகள் மற்றும் காலணிகள் வழங்கும் வைபவம் கடந்த வாரம் நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக பாடசாலை அதிபர் திரு திருமுருகனின் முன்னிலையில் இவ் உதவி வழங்கப்பட்டது.இவர்கள் புலம்பெயர் உறவுகளிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினரின் அனுசரணையுடன் புலம்பெயர் உறவுகளிடம் நிதிதிரட்டப்பட்டு அந்தத்தொகையில் மேற்படி கொப்பிகள் மற்றும் காலணிகள் என்பன கொள்வனவு செய்யப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் காலணிகள் வழங்கும் விழா
முல்லைத்தீவு மாவட்டம் முல்லைத்தீவு தமிழ் மகா வித்தியாலய மாணவ மாணவிகளுக்கான கொப்பிகள் மற்றும் காலணிகள் வழங்கும் வைபவம் கடந்த வாரம் நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக பாடசாலை அதிபர் திரு திருமுருகனின் முன்னிலையில் இவ் உதவி வழங்கப்பட்டது.இவர்கள் புலம்பெயர் உறவுகளிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினரின் அனுசரணையுடன் புலம்பெயர் உறவுகளிடம் நிதிதிரட்டப்பட்டு அந்தத்தொகையில் மேற்படி கொப்பிகள் மற்றும் காலணிகள் என்பன கொள்வனவு செய்யப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.
மல்லிகைப் பந்தல் ஏற்பாட்டில் நடைபெற்ற "சரஸ்வதி' விஜயபாஸ்கரன் அஞ்சலிக் கூட்டத்தில் கேட்டவை
.
ஈழத்து நவீன தமிழ் இலக்கியத்தின் வீச்சைத் தமிழிலக்கிய உலகுக்குப் பரம்பல் செய்வதில் அதீத அக்கறை கொண்டிருந்த "சரஸ்வதி' தமிழக இலக்கியச் சிற்றிதழின் சாதனைகளைத் தமிழிலக்கிய அபிமானிகள் இன்றும் பொச்சடித்துப் பேசுகின்றனர்.அதன் ஆசிரியராக இருந்தவர் வ.விஜயபாஸ்கரன்.இந்த இலக்கியப் பெருமகன் 11.02.2011 இல் காலமாகியது குறித்து இலக்கியவாதிகள் பேரதிர்ச்சி அடைந்தனர்.பத்திரிகைகளில் இரங்கல் செய்திகள் வெளிவந்தன.இலக்கியப் பிரக்ஞை கொண்ட அனைவரும் பெரும் இழப்பாகக் கொள்ளக் கூடிய துயரம் இது என "ஞானம்' இலக்கியச் சிற்றிதழ் அதன் 130 ஆவது இதழில் தலையங்கம் வெளியிட்டது.அமரர் வ.விஜயபாஸ்கரனோடு நெருங்கிய தொடர்புவைத்திருந்த "மல்லிகை' ஆசிரியர் டொமினிக் ஜீவா அனுதாபக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.மூத்த பத்திரிகையாளர் சிவா சுப்பிரமணியம் தலைமையில் இக் கூட்டம் கொழும்பு 13, ஸ்ரீகதிரேசன் வீதியிலுள்ள மணிமஹால் மண்டபத்தில், 05.03.2011 ஆந் திகதி நடைபெற்றது.
விஜயபாஸ்கரனுக்கு இரு நிமிடச் சபையின் மௌனாஞ்சலியோடு கூட்டம் ஆரம்பமானது.
உலகச் செய்திகள்
.
*இடர்பாடுகளுக்கிடையில் உடல்களை தேடும் பணியில் ஜப்பான் தீவிரம்
*ஆசிய நிறுவன உற்பத்தியில் பாதிப்பு
*ஜப்பான் அணு உலையில் மேலும் வெடிப்பு
*மனித உடலைப் பாதிக்கும் அளவு கதிர்வீச்சு
*இடர்பாடுகளுக்கிடையில் உடல்களை தேடும் பணியில் ஜப்பான் தீவிரம்
ஆயிரக்கணக்கானோரை பலியெடுத்தும் பல இலட்சக்கணக்கானோரை நிர்க்கதியாக்கியும் பேரழிவை ஏற்படுத்தியுள்ள பாரிய பூகம்பம் மற்றும் கடல்கோளால் மோசமான, மனிதாபிமான,அணு,பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் ஆசியாவின் செல்வந்த நாடுகளில் ஒன்றான ஜப்பான் திங்கட்கிழமை சின்னாபின்னமாகியிருக்கும் கரையோர நகரங்களில் சடலங்களைத் தோண்டியெடுக்கும் பணியை மீட்புப்பணியாளர்களின் உதவியுடன் தீவிரப்படுத்தியிருக்கிறது.
கும்பிடப் போன தெய்வம் (சிறுகதை) - கானா பிரபா
.
"என்னப்பா இன்னும் ரெடி ஆகேல்லையோ? ஏழுமணிப்பூசை தொடங்கப்போகுது. இப்பவே வெளிக்கிட்டால் தான் கார் பார்க் பண்ண இடம் கிடைக்கும் கெதியா வெளிக்கிடுமன்" நாகநாதனின் அலாரக் குரல் அது.
"என்னப்பா இன்னும் ரெடி ஆகேல்லையோ? ஏழுமணிப்பூசை தொடங்கப்போகுது. இப்பவே வெளிக்கிட்டால் தான் கார் பார்க் பண்ண இடம் கிடைக்கும் கெதியா வெளிக்கிடுமன்" நாகநாதனின் அலாரக் குரல் அது.
"இந்த மனுசன் ஒழுங்கா ஒரு சீரியல் பார்க்க விடாது, பழஞ்சீலை கிழிஞ்சது மாதிரி இனிக் கோயிலுக்கு வெளிக்கிடும் வரை புறுபுறுத்துக் கொண்டு வரப்போகுது" வீடியோக்கடையில் இருந்து எடுத்து வந்த திருமதி செல்வம் சன் டிவி சீரியலில் செல்வத்தின் நடிப்பை உச்சுக் கொட்டிக்கொண்டிருந்த நாகநாதன் பெஞ்சாதி சுந்தரி தன் தவ நிஷ்டை கலைந்த கோபத்தில் முணுமுணுத்தவாறே ஹோல் பக்கம் வந்தாள்.
மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா
.
26. ஆன்மிகச் சிங்கங்கள்
26. ஆன்மிகச் சிங்கங்கள்
நீங்கள் இரும்புத் தசைகளும், உருக்கு நரம்புகளும் கொண்டவர்களாய்த் திகழ வேண்டும். உங்களின் ஒழுக்க உறுதியே தேவையான நம்பிக்கையினை பற்றுறுதியை – உங்களிடம் உருவாக்கும் அது எதிரிகளை எல்லாம் வெற்றி கொள்ளும். வாழ்க்கை என்ற பயிருக்குத் தைரியம் எனப்படும் எஞ்சாமையும், உறுதியான நம்பிக்கையுந்தான் மிகச் சிறந்த எருவாகும்;: மிகச்சிறந்த பூச்சிக்கொல்லி மருந்துங்கூட! ஆன்மீகக் களத்தில் ‘அரிமா’வாக (சிங்கங்களாக) திகழுங்கள்! வெற்றியின் மேல் முழுநம்பிக்கை வைத்துப் புலன்களாகிய காடுகளில் அஞ்சாது நடமாடுங்கள்! நீங்கள் நாயகர்களாக வேண்டும்: சுன்னஙகளாக வேண்டாம்! அதாவது ‘ஹீரொ’ ஆகவேண்டாம்: மானவன் என்பவன் மாதவன் ஆவான்: அதாவது மனிதன் என்பவன் கடவுள் ஆவான். அவன் அழிவுறாத, என்றும் உள்ள ஆன்மா ஆவான்!
அண்ணே றைற் புகழ் கே.எஸ்.பாலச்சந்திரனின் நாவலுக்கு பரிசு
.
தமிழகத்தில் உள்ள அமுதன் அடிகள் இலக்கிய விருது தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் கே.எஸ்.பாலச்சந்திரனுக்குக் கிடைத்துள்ளது. கடந்த 2009 ம் ஆண்டுக்கான விருதை இவருடைய கரையைத் தேடும் கட்டுமரங்கள் என்னும் நாவல் பெற்றுள்ளது. இது குறித்து பிரபல வானொலி, மேடை அறிவிப்பாளர் எஸ்.கே. ராஜன் அலைகளுக்கு அனுப்பியுள்ள விபரங்கள்.
கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய நாவல் –
கரையைத்தேடும் கட்டுமரங்கள்- தமிழகத்தில் சிறந்த இலக்கியப்பரிசு பெற்றது
கரையைத்தேடும் கட்டுமரங்கள்- தமிழகத்தில் சிறந்த இலக்கியப்பரிசு பெற்றது
சீனாவில் 700 வருடங்கள் பழமையான மம்மி
. | |
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் டயிசொவு என்ற நகரில் வீதிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களே இதனை முதலில் கண்டுள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்பெண் மம்மியானது 1368- 1644 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் வாழ்ந்த சீனாவின் மிங் அரச வம்சத்துப் பெண் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். |
தமிழ் சினிமா
பவானி
சினேகாவின் ஆக்ஷன் படம். விஜயசாந்தியின் வைஜெயந்தி ஐ.பி.எஸ். சிறிய மாற்றத்துடன் ரீமேக் ஆகியுள்ளது. உள்ளூர் அரசியல் தாதா கோட்டா சீனிவாசராவ். இவர் அமைச்சர் ஜி.ஆர்.வக்கீல் ராஜ்கபூர், இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம் ஆகியோரை கைக்குள் போட்டு, கடத்தல், இளம் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தல் என அராஜகம் செய்தார். அவ்வூருக்கு நேர்மையான போலீஸ் அதிகாரி சினேகா மாற்றலாகி வருகிறார். கோட்டாவின் சமூக விரோத செயலை எதிர்க்கிறார். அவரது ஆட்களையும் கைது செய்கிறார். இதனால் இருவருக்கும் மோதல் முற்றுகிறது. சினேகாவை தீர்த்து கட்ட ஆட்களை ஏவுகிறார். மாணவர் போராட்டத்தில் தனித்து சிக்கிய சினேகாவை அடித்து நொறுக்குகின்றனர். ஆஸ்பத்திரியில் பிழைத்து கொள்கிறார்.
இலங்கைச் செய்திகள்
.
தமிழ் மக்களிடமிருந்து மீண்டும் தெளிவான பதில்
யாழ்தேவி ரயில் சேவை ஓமந்தை வரை தொடரும்
கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரை நடைபெற்று வருகின்ற யாழ்தேவி ரயில் சேவைகள் 26ஆம் திகதி முதல் ஓமந்தை வரை நீடிக்கப்பட உள்ளது.
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட ஓமந்தை ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டு எதிர்வரும் 26ம் திகதி வைபவ ரீதியாக திறக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.
அதன்படி கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரை நடைபெற்று வருகின்ற ரயில்சேவை அன்று முதல் ஓமந்தை வரைக்கும் நீடிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களிடமிருந்து மீண்டும் தெளிவான பதில்
யாழ்தேவி ரயில் சேவை ஓமந்தை வரை தொடரும்
கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரை நடைபெற்று வருகின்ற யாழ்தேவி ரயில் சேவைகள் 26ஆம் திகதி முதல் ஓமந்தை வரை நீடிக்கப்பட உள்ளது.
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட ஓமந்தை ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டு எதிர்வரும் 26ம் திகதி வைபவ ரீதியாக திறக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.
அதன்படி கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரை நடைபெற்று வருகின்ற ரயில்சேவை அன்று முதல் ஓமந்தை வரைக்கும் நீடிக்கப்படுகின்றது.
நாடாளும் வண்ணமயில்...,-
.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்பதை நாம் அறிவோம். இப்படத்தில் ‘அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்!’ என்ற பாடலை அருமையாக எழுதிய கவிஞரையே, படத்திற்குத் தேவையான மீதி இரண்டு பாடல்களையும் எழுதுமாறு, படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பி.ஆர். பந்துலு வேண்டிக் கொண்டார். அவற்றுள் ஒன்றுக்கான காட்சியைப் பந்துலு விவரித்தார். ‘கதாநாயகி ஜெயலலிதாவோ சிறுவயதுப் பெண்; முதன்முதலாக மிகப்பெரும் புகழ்பெற்ற நடிகர் எம்.ஜி.ஆரோடு நடிக்கிறார். அதுவும் நெருக்கமான காதல் காட்சியில் நடிக்கிறார். அக்காட்சியே படப்பிடிப்பில் முதலாவதாக எடுக்கப்படவுள்ளது. எனவே பாடலும் அதற்கேற்ப அமைய வேண்டும்!’ என்றார்.
அழிவின் விளிம்பில் மொழிகள்
.
உலகில் தொன்மையான மொழிகளான கிரேக்கம்,இலத்தீன்,ஹீப்ரு,
சமஸ்கிருத மொழிகள் காலத்துக்கும் பல வரலாற்றுப் போக்குகளுக்கும் ஈடுகொடுக்க இயலாமல் போய்விட்டன.கன்னித்தமிழ் மட்டும் எவ்விதப் பாதிப்புக்கும் உட்படாமல் தழைத்து நிற்கிறது என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விடயம்.மானுடத்தை மற்ற ஜீவராசிகளிடம் இருந்து வேறுபடுத்துவதே சிரிப்பாலும் பேச்சாலும்தான் என்பார்கள்.மனிதன் குகைகளில் வாழ்ந்தபோது வெறும் சப்தங்கள்மூலம் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.காலப்போக்கில் சப்தங்கள் மொழியாக வளர்ச்சியடைந்தன.மொழி என்பது கலாசாரத்தை வெளிப்படுத்துகிற முக்கிய அடையாளமாகக் கருதப்படுவதால்தான் மொழியின் தனித்தன்மையைப் பாதுகாக்கப் போராட்டங்கள் நடைபெறுவதை நாம் காண்கிறோம்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
பாகிஸ்தான் ஸிம்பாப்வேயை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைவு
கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 39.4 ஓவர்களில் 151 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டது.
கண்டி பல்லேகல மைதானத்தில் பாகிஸ்தான்- ஸிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி காலிறுதிக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது.

ஸிம்பாப்வே அணியின் டைலர் 4 ஓட்டங்களுக்கும் சக்காபுவா ஓட்டம் எதுவும் பெறாமலும், தைபு 19 ஓட்டங்களையும் சிபண்டா 5 ஓட்டங்களையும் லம்ப் 16 ஓட்டங்களையும் உடயோ 18 ஓட்டங்களையும் அணித் தலைவர் சிகம்புரா ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
சிம்பாப்வே அணியில் எர்வின் மாத்திரம் 82 பந்துகளை எதிர்கொண்டு 5 பெளண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களைப் பெற்று அரைச் சதத்தைக் கடந்தார். அவர் மட்டுமே அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த ஓரளவுக்கு அடித்தளமிட்டார்.