.
.
விழி நீரில் கரைகிறது
மனதில் நிறைந்த ஆசைகள்- அது
மௌனத்தில் சாகிறது
சொல்ல எடுத்த வார்த்தைகள்
தொண்டைக் குழியில் அடைகிறது
சோகம் நிறைந்த பார்வையில்
அவள் துயரம் புரிகிறது
பருவம் அடைந்த நாள்முதல்
பலதடைகள் விரிகிறது
அவள் பாடித்திரிந்த நாட்களோ
வெறும் நினைவாய் விரிகிறது
கூடித்திரிந்த உறவுகள்
திசைஎங்கும் சிதைகிறது
தாலிக் கயிற்றின் உறவிலே
சிறைக்கதவும் திறக்கிறது
அன்னை மடியில் கிடந்ததும்
அன்பாய் அவளின் வருடலும்
தந்தை தோளில் சாய்ந்ததும்
அவர்தாங்கி அணைத்த சுகங்களும்
இன்னும் பசுமை நினைவுகள்
இனித்தே நெஞ்சில் இருப்பவை
இன்னும் ஒருமுறை கிடைக்குமா
இறைவா இது மீண்டும் நடக்குமா?
C.Paskaran
[quote]தாலிக் கயிற்றின் உறவிலே
ReplyDeleteசிறைக்கதவும் திறக்கிறது[/quote]
கவிஞரே சிறை கதவு திறந்திருக்கு ...சிறையில் இருந்து வெளியே வருவதற்கா அல்லது உள்ளே செல்வதற்கா?அனேகருக்கு வெளியே வந்து அனுபவிப்பதற்கு என்பதே அடியேனின் கருத்து
ஜயா கிறுக்கரே அவரவர் பார்வைக்கும் அனுபவத்திற்குமாக விட்டுவிடகிறேன். சற்று மேலே அந்தப் பெண்ணின் நிலையைப் பற்றிய பார்வையை அவரின் நிலையில் இருந்து பார்த்தால் எது சிறை எனப் புரிந்து விடும் அதன்பின் உள்ளா வெளியா என்ற ஆய்வே இருக்காது. எத்தனை பெண்'கள் கம்பியில்லாத சிறையில் செக்கிழுக்கின்றார்கள். நாம் சரித்தில் வஉசி செக்கிழுத்ததை பற்றி பேசுவோம் பக்கத்து வீட்டு செந்தா சிறைக் கொடுமையால் சித்தப்பிரமை பிடித்'திருப்பாள் நாம் பார்க்கவே மாட்டோம். அதுதான் நாம் தமிழர்.
ReplyDeleteவருகைக்கு நன்றி கிறுக்கன்.
நீண்ட நாட்களாக கறுப்பியை காணவில்லை என்ன Holiday போய்விட்டாரா?
கறுப்பியின் வணக்கங்கள்
ReplyDeleteநீங்களாவது பெண்களின் மனதை புரிந்து கொண்டு கவி சொல்வதையிட்டு சந்தோசம்.
எத்ததனை ஆயிரம் பெண்கள் ம(ர )ண வாழ்க்கை என்ற பெயரில் ஆயுள் கைதியாக
வாழ்ந்து கொன்டிருக்கிறார்கள். கிறுக்கன் போன்ற ஆண்கள் அவை சந்தோஷமாக
இருக்கினம் என்று நினைச்சுக் கொண்டிருப்பினம் .
பாஸ்கரன் உங்கள் கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது. மற்றவர்களின்
சிந்தனையைத் தூண்டுவதே உங்கள் கவிதையின் சிறப்பம்சம் என்றால் அது மிகையாகாது.
ஒரு பெண்கவிஞர்மாரும் ஆண்களின் சிறைகளை பற்றி எழுத மாட்டினம்,ஆனால் ஆண்கவிஞர்மார் பெண்களின் சிறைகளை பற்றி எழுதுவினம்....
ReplyDeleteமேலும் எல்லா பெண்களும் கலியாணம் முடிச்சுபோட்டு சிறை வாசம் தான் வாழுகிறார்கள் என எடுக்க ஏலாது,சிலருக்கு சிறையாக அமைந்துவிடுகிறது.புலத்தில் அந்த சிறையில் இருந்து வெளிவரக்கூடிய வசதிகள் இருக்கு அதை பாவித்து பலர் வெளியே வந்துள்ளார்கள்..
நாம் தமிழர்கள் என குறைபட்டுள்ளீர்கள் பாஸ்கரன் ஜயா அவர்களே...எல்லாதமிழனும்..கிறுக்கனைமாதிரி கிருக்குத்தனமாக சிந்திக்கமாட்டான்...நல்ல தமிழனும் உண்டு
"விழி நீரில் கரைகிறது
ReplyDeleteமனதில் நிறைந்த ஆசைகள்- அது
மௌனத்தில் சாகிறது
சொல்ல எடுத்த வார்த்தைகள்
தொண்டைக் குழியில் அடைகிறது"
நல்ல ஆழமான கருத்தை அடக்கியுள்ள வசனம். வழமைபோல் உங்கள் கவிதையில் பல விடயங்கள் மறைந்து கிடக்கிறது.தொடருங்கள் கவிஞரே.
(Quote) ஒரு பெண்கவிஞர்மாரும் ஆண்களின் சிறைகளை பற்றி எழுத மாட்டினம்,ஆனால் ஆண்கவிஞர்மார் பெண்களின் சிறைகளை பற்றி எழுதுவினம்....
கிறுக்கன் (மன்னிக்கவும்) கிறுக்கர் சொன்னது போல் ஏன் பெண் கவிஞர்கள் ஆண்களின் சிறைகளைப்பற்றி எழுதுவதில்லை?
விடை: பல்லை உடைத்து கையில் கொடுத்துப்போட்டு அதுக்குப்பிறகுதான் சிறைக்குள்ள இருப்பினம் .இது நான் நினைத்தது ... ஈ ,,ஈ,,,,ஈ