.
பேர்த் நகரிலிருந்து மெல்போர்ன் நகருக்கு 234 பயணிகளுடன் பயணித்த விமானமொன்று சனிக்கிழமை மாலை இயந்திரக் கோளாறு காரணமாக அவசரகால நிலைமையின் கீழ் பேர்த் நகரில் மீளவும் தரையிறக்கப்பட்டது.
இந்த “போயிங் 767' விமானமானது தரையிலிருந்து 7000 அடி உயரத்தில் பயணித்தபோது விமானத்தின் இயந்திரமொன்றில் கோளாறு ஏற்பட்டது.
இதனையடுத்து தரையிறக்கப்பட்ட விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டு பிறிதொரு விமானத்தில் மெல்போர்ன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவுஸ்ரேலியாக்காரனின்ட பிளேனில ஏறக்கூடாது வடிவாக மெய்டெயின் பண்ணமாட்டாங்கள்.... எங்கன்ட சிறிலங்கா எயர்லைன்சை நம்பி ஏறலாம் அவங்கள் நல்லாய் மெய்டெயின் பண்ணுவாங்கள் .....தமிழனின் உரிமைகளை தவிர
ReplyDelete