மேலும் சில பக்கங்கள்

மாமனிதர் தில்லை ஜெயக்குமார் ஞாபகார்த்த ஒலிக்கூடம்” திறப்பு விழா

.
அவுஸ்திரேலிய தேசத்தில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டு 15 ஆண்டுகளாக செய்மதி ஊடாக அவுஸ்திரேலியா, நியுசிலாந்து முழுவதும் தனது சேவையை ஒலிபரப்பி வரும் 24 மணிநேர இன்பத்தமிழ் ஒலி வானொலியின் 2வது கலைக்கூடம், சிட்னியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செப்டெம்பர் மாதம் 12ம் திகதி உத்தியோகபுர்வமாக திறந்துவைக்கப்பட்டது.





இந்நிகழ்வு 11.58 மணியளவில் தாயக விடுதலை போரில் உயிரிழந்த மாவீரர்களுக்கும், பொதுமக்களுக்கும், புலத்திலும், களத்திலும் வாழ்ந்து மறைந்த மாமனிதர்களுக்கும், நாட்டுப்பற்றாளர்களுக்கும் 2நிமிட நேர அகவணக்க அஞ்சலியுடன் ஆரம்பமாகியது. இக்கலைக்கூடம் தாயகத்திலும், அவுஸ்திரேலியாவிலும் வாழும் தமிழ் மக்களுக்காக தன்னலமற்ற தனித்துவமான சேவை புரிந்து மறைந்த ”மாமனிதர்” தில்லை ஜெயக்குமார் நினைவாக ”மாமனிதர் தில்லை ஜெயக்குமார் ஞாபகார்த்த ஒலிக்கூடம்”, அன்னாருடைய பாரியார் திருமதி யோகா ஜெயக்குமார் அவர்களினால் மதியம் 12 மணியளவில் உத்தியோகபுர்வமாக திறந்து வைக்கப்பட்டது. முதலில் இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்த சிட்னி, மெல்பேர்ண் செயற்பாட்டாளர்கள், வர்த்தக பிரமுகர்களினால் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கலைக்கூடத்தின் முதல் இறுவட்டு திருமதி யோகா அவர்களினால் ஒலிபரப்பப்பட்டு, இன்பத்தமிழ் ஒலி வானொலியின் இயக்குனர் திரு பாலசிங்கம் பிரபாகரனால் முதலாவது ஒலிபரப்பு அறிவித்தலும் செய்யப்பட்டது.

இந்நிகழ்வுக்கு சிட்னி மெல்பேர்ணிலிருந்து தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், செயற்பாட்டளர்களும், இன்பத்தமிழ் வானொலியின் அறிவிப்பாளர்களும், பல அபிமான நேயர்களும் வருகை தந்து சிறப்பித்திருந்தனர். வருகை தந்திருந்த அனைவருக்கும் நிலையக் கலையகம் சுற்றிக் காணபிக்கப்பட்டு இன்பத்தமிழ் ஒலி நிர்வாகத்தினராலும், அறிவிப்பாளர்களினாலும் பல்சுவையான உணவுகளும், சிற்றுண்டிகளும் பரிமாறப்பட்டது. இக்கலைக்கூடமும், அபிமான நேயர்களின் நிதிப்பங்களிப்புடனும், தன்னலமற்ற தொண்டர்களின் கூட்டு முயற்சியினாலும் உருவாக்கம் பெற்றுள்ளது.
அவுஸ்திரேலிய ”இன்பத்தமிழ் ஒலி” வானெலி ஆரம்பித்த நாள் முதல் தமிழுக்கும், தமிழ் தேசியத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் பல இக்கட்டான சுழ்நிலைகளில் தொடர்ந்தும் ஆற்றி வருகின்ற அளப்பரிய பணி காரணமாக பல்லாயிரக்கணக்கான நேயர்களினால் விரும்பிக் கேட்கும் வானெலியாக திகழுவதோடு, புலம்பெயர்ந்து அவுஸ்திரேலிய மண்ணில் வதியும் பல மூத்த பிரஜைகளிற்கு, பெரும் ஆறுதலாகவும், துணையாகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கதாகும்.



 




 

21 comments:

  1. enna koduma sir :))))

    ReplyDelete
  2. Well done Prabaharan

    Keep it up

    ReplyDelete
  3. அவுத்திரேலிய மக்களை நாயே பேயே என்று திட்டுவதற்கு ஒரு கொலை சொறி கலைக்கூடம் ;)

    ReplyDelete
  4. watch your words

    ReplyDelete
  5. டமிழ்முரசின் நடுநிலமைக்கு பாராட்டுக்கள்....தொடர்ந்து டமிழ்முரசும் ,இன்பத்தமிழ் ஒலியும் சிட்னிடமிழருக்கு தங்கள் சேவையை வழங்கட்டும்

    ReplyDelete
  6. டமிழ்முரசு... சிட்னிடமிழர்...????

    ReplyDelete
  7. முரசுவின் நடுநிலமை இதை பிரசுரித்ததில் இருந்து அறிந்து கொண்டேன். ஜெயக்குமாரின் பெயரில் திறந்ததால் அதை அவருக்கு வழங்கும் கௌரவமாக நினைக்கிறேன் ஆனால் இதை வைத்துக்கொண்டு இந்த மனிதன் என்ன செய்வார்? சமூகத்தில் உள்ள எல்லோரையும் திட்டித் தீர்ப்பார். இதற்கு நீங்கள் கொடுத்துள்ள முக்கியத்துவம் சரிதானா?

    ReplyDelete
  8. I don't understand this. As a news paper - should have all the news . If you some one don't like the Inpath Tamil Radio - That's fine

    As a news paper Tamilmurasu given same level for all

    Keep it up Tamil Muraus

    ReplyDelete
  9. Anonymous said...


    As a news paper Tamilmurasu given same level for all //


    ஓமோம் தமிழ்முரசு இந்த வானொலிக்காரனின் கிரிசை கேட்டையும் வெளியே எடுத்து வரவேண்டும், அதுதான் நடு நிலமையான பத்திரிகைக்கு அழகு

    ReplyDelete
  10. ஓமோம் தமிழ்முரசு சிட்னியில் இருக்கும் இரண்டு வானொலிக்காரனின் கிரிசை கேட்டையும் வெளியே எடுத்து வரவேண்டும், அதுதான் நடு நிலமையான பத்திரிகைக்கு அழகு. தனியே இன்பத் தமிழ் ஒலி வானொலிகாறரைப் பற்றி மட்டும் வெளியே எடுத்து வந்தால் மட்டும் போதாது. இந்த உலகில் எல்லோரிடமும் குறைபாடுகள் நிறையவே உள்ளன. பசுத் தோல் போர்த்த புலிகளைப் பார்த்து ஏமாறாதீர்கள். இன்பத் தமிழ் ஒலித் தம்பி கொஞ்சம் வானொலியில் திட்டுவார் அவ்வளவு தான். மற்றம்படி நல்லவர் போல் நடித்து மற்றவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கவில்லை. வெளிப்படையாக ஏமாற்றுவது ரொம்பவும் மேல் இல்லையா.....

    ReplyDelete
  11. பாவம் மேலே கருத்துச் சொன்ன ஐயாவோ அம்மாவோ இன்பத்தமிழ் ஒலிக்காறனிடம் நல்லா பட்டுத் தெளியேல்லைப் போல, வானொலியில் கொஞ்சம் திட்டிவிட்டு பின்பக்கத்தால் செய்யும் திருகுதாளங்கள் கொஞ்ச நஞ்சமா ;)

    ReplyDelete
  12. இன்னுமாடா இந்த ஒலகம் இவனை நம்பீட்டிருக்கு

    ReplyDelete
  13. நன்றாகப் பட்டுத் தெரிந்த படியாத்தான் சொல்லுகிறேன் எல்லோரும் ஒரே குட்டையில ஊறின மட்டைகள் தான். இன்பத் தமிழ் ஒலிக்காறரை விட மற்றவர்கள் ஒன்றும் பெரிதல்ல. நீங்களும் பட்டு தெளிந்தவுடன் இதைத்தான் சொல்லுவீங்கள் அன்பரே.

    மாறன் இங்கு ஒருவரும் ஒருவரையும் நம்பீட்டு இல்லை. அவரவர் சுய புத்தியை பாவித்து மனிதரை இனம் கண்டு கொள்ளவேண்டும். உங்கள் கண்ணுக்கு ஒருவர் நல்லவராகத் தெரியலாம் அதே நபர் செய்யும் காரியங்கள் இன்னொருவர் கண்ணுக்கு தப்பாகத் தெரியலாம்

    ReplyDelete
  14. இந்தக் கொடுமையை எல்லாம் காணவேண்டுமோ எண்டோ என்னவோ அந்த மனுசன் போயிட்டுது ஆனால் அந்தாள் பெயரில் இன்னொரு கொடுமை

    ReplyDelete
  15. கொடுமை...கொடுமை.. இன்பத் தமிழ் ஒலி

    ReplyDelete
  16. At last has been stop stupid comments
    who cares , He is running the station last 16 years

    No one else can do this ....

    ReplyDelete
  17. 16 வருசமா அவுஸ்திரேலியச் சனத்தை ஏமாளி ஆக்கி ஒருத்தன் வானொலி நடத்துறான் எண்டு சொல்ல வாறியளோ. உங்களைப் போல ஏமாளிகளால் தான் இன்னமும் எங்கட இனம் இப்படி இருக்குப் பாருங்கோ

    ReplyDelete
  18. ஊரில் சொந்த உறவுகள் நடுத்தெருவில்,
    ஊரான் பணத்தைச் சேர்த்து இப்படியானவனுக்குக் கொடுப்பது தானா இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவை?

    அவுஸ்திரேலியத் தமிழர்களே விழித்தெழுங்கள்

    ReplyDelete
  19. This is too much...........

    So what about ATBC.....................

    All Same ...............

    ReplyDelete
  20. இதுக்குள்ள மற்ற வானொலிக்காறன் எப்படி வாறான்? அவைக்கும் இப்பிடி ஏதாவது கலையகம் செய்துகுடுக்கப்போறியளோ? என்னவோ  போங்க ஊர்ச்சனம் நடுத்தெருவில் பிச்சையெடுத்தால் நமக்கென்ன ? சேர்த்த காசை இப்படி கலையகங்கள் கட்டி விழா எடுத்து படம் காட்டுவோம் வாருங்கள்

    ReplyDelete