அவுஸ்திரேலியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கு பிரதிநிதிகளுக்கான தேர்தல் செய்தி தொகுப்பு : கரு
சென்ற வெள்ளிக்கிழமை மே மாதம் 7ம் திகதி தேர்தலுக்குரிய நியமனப்பத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் கடைசி நாள் என்று குறிப்பிடப்பட்டது. நான்கு பிரதிநிதிகள் தேவைப்படும் நியூ சவுத் வேல்ஸ் மானிலத்திற்கு எட்டுப்பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதனால் தேர்தல் மூலம் நால்வர் தெரிவு செய்யப்பட உள்ளார்கள். இப்பிரதிநிதிகளுக்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 22ம் திகதி நடைபெறும் என அறியவருகிறது.
நியூ சவுத் வேல்ஸ் (4 வெற்றிடங்கள்)
நான்கு இடங்களுக்கு போட்டியிடும் எட்டுப்பேர்களின் விபரம்
1. சிவசம்பு பிரபாகரன்
2. சின்னப்பு விக்ரர் ராஜகுலேந்திரன்
3. அருச்சுனன் ஞானேந்திரன்
4. தர்ஷன் குணசிங்கம்
5. பாலசிங்கம் பிரபாகரன்
6. குலசேகரம் சஞ்சயன்
7. சேரன் ஸ்ரீபாலன்
8. இராமலிங்கம் கருணாநிதி
விக்ரோரியா (3 வெற்றிடங்கள்)
மூன்று இடங்களுக்கு மூன்று நியமனப்பத்திரங்கள் மட்டுமே கிடைத்ததால் அவர்கள் மூவரும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்கள். அவர்கள்:
1. ஜனனி பாலசந்திரன்
2. டொமினிக் சவியோ சாந்தியபிள்ளை
3. துரைசிங்கம் சண்முகானந்தகுமார்
குயின்ஸ்சிலாந்து (1 வெற்றிடம்)
ஒரு இடத்திற்கு ஒரு நியமனப்பத்திரம் கிடைத்ததால் இளயதம்பி செல்வநாதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
ACT,தஸ்மேனியா (1 வெற்றிடம்)
ஒரு இடத்திற்கு ஒரு நியமனப்பத்திரம் கிடைத்ததால் அபிராமி விஸ்வநாதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
WA/SA/ NT ( 1 வெற்றிடம் )
ஓரு நியமனப்பத்திரம் தரப்பட்டு அது வாபஸ் பெறப்பட்டது. இந்த ஒரு வெற்றிடத்திற்கு நியமனப்பத்திரங்கள் மே மாதம் வெள்ளிக்கிழமை 14ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது
குட்
ReplyDeleteநியூ சவுத் வேல்சில் தேர்தல் ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும் .அதே ரேடியோ சண்டைதான் இங்கயும் நடக்குமோ? தமிழ்முரசு நடுநிலை வகிக்குமோ அல்லது பக்கசார்போ?
ReplyDeleteI wish four of the eight would withdraw in NSW
ReplyDeleteTired of fighting
The people who cant do any thing together / and those criticise others are the one going to represent us. The worst part is " those four " asking other two to withdraw.
ReplyDeleteWhat a democracy !!!!
They are going to have meetings in differant countries on our money. Ha ! Ha !! Haa!!!