நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்
சென்றமாதம் தமிழர்களாகிய நாம் வழமைக்கு மாறான ஒரு இசை நிகழ்ச்சியை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஐங்கரன் கந்தராஐhவால் நடாத்தப்பட்ட தபேலா நிகழ்ச்சியே அது.
வழமையாக தமிழரது என கர்நாடக இசையையும் மெல்லிசையையும் கேட்டு பழகிய காதுகளுக்கு இந்த கச்சேரி ஒரு புதிய உணர்வை ஊட்டியது. ஆமாம் அன்று நாம் கேட்டது முற்று முழுக்க வட இந்திய இசையான ஹிந்துஸ்தானி இசையே.
எப்படி இருக்குமோ என கேள்விக்குறியுடன் போனவர்களை இசை என்னும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள். அன்றைய கலைஞர்கள் Kuring-Gai Campusல் அமைந்த Greenhalgh Theatre நிறைந்த ஐனதிரள் கச்சேரியின் நாயகனான ஐங்கரன் கந்தராஜாவின் தனி தபேலா நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது. அவருக்கு துணையாக Sandeep Mishra சாரங்கி என்ற நரம்பு வாத்தியத்தை இசைத்தார். இவை எல்லாம் எம்மவருக்கு புதிதுதான்.
இதை உணர்ந்த ஐங்கரன் பார்வையாளருக்காக வாத்தியம் பற்றிய சிறு விளக்கத்தை தந்து எம்மை உசுப்பிவிட்டார். நிமிர்ந்து ஆசனத்தில் அமர்ந்தோம். கச்சேரி சூடு பிடிக்கத் தொடங்கியது. மக்கள் இயற்கையாக இசையிலே லயித்து போயினர். ஐங்கரனோ தான் தனியாக தபேலாவில் வாசிப்பவற்றை மக்கள் இரசிக்கவேண்டும் என்பதற்காக சிறு சம்பவங்களை விளக்கினார். குறிப்பாக மான் ஓடுவது மேலும் காலையிலே தாயார் எழுப்பும்போது புரண்டு படுத்து முனகும் பையன் என தனது வாசிப்பை உருவகப்படுத்தினார். இசையில் இணையாதவரையும் இணையவைக்கமுடியும் யாவரையும் என் இசையால் கவருவேன் என்பது போன்று இருந்தது இந்த வாசிப்பு.
ஐங்கரனுக்கு இணையாக Sarangi வாசித்த கலைஞர் Sandeep Mishra மிக பிரபலமான கலைஞர் Bhimsen Jushi மற்றும் Ustart Vilayat Khan போன்றவருக்கு வாசிப்பர். இவர் ஐங்கரனுடன் இணைந்ததே ஐங்கரனுக்கு மட்டும் பெருமையல்ல தமிழ் சமூகமே இதையிட்டு பெருமைப்படலாம்.
சந்தேகம் இல்லாமல் இசை ரசிகர்களும் விற்பன்னர்களும் Dr ஐங்கரன் கந்தராஜா ஒரு சிறந்த கலைஞராக உருவாகி இருப்பதை பாராட்டினார்கள். ஐங்கரன் சிட்னியிலே Ram Chandra Suman டம் கற்க தொடங்கியவர். தனது ஆர்வத்தில் கலையை மேலும் விருத்தி செய்யும் ஆர்வத்தில் Mumbai சென்று Yogesh Sumsi டம் கற்றார். Yogesh Sumsi இசையுலகில் கோலோச்சும் Zahir Hussain ன் தந்தையான Allah Rakka யின் சிஸ்யராவார். நமது ஐங்கரனும் Zahir Hussain டமும் தபேலா கற்றுள்ளார். சிறந்த உயர்ந்த பாரம்பரியத்தின் வாரிசுதான் ஐங்கரன்.
கலை உலகிலே யாரது சிஸ்யன் யார் என்பதே முக்கியம். குருவின் பரிபூர்ண ஆசியும் அன்பும் அபிமானமும் ஐங்கரனுக்கு உண்டு. ஐங்கரனின் முழுநீள கச்சேரியை கண்டு இரசிப்பதற்கு குருவான Yogesh Sumsi யே மும்பையில் இருந்து வருகை தந்திருந்தார். ஆரம்பகால குருவான Ram Chandra Suman ம் Yogesh Sumsi யும் ஐங்கரனை மனதார வாழ்த்தினார்கள்.
இடைவேளையின்பின் கச்சேரி எதிர்பாராத ஒரு திருப்பத்தை தந்தது. திருமதி கலா றாம்னாத்தின் வயலின் இசைக்கு ஒத்திசையாக தபேலா வாசித்தார் ஐங்கரன். இங்கு ஐங்கரன் தான் ஒரு சிறந்த கலைஞன் என்பதை நிரூபித்தார். எப்போதுமே ஒத்திசையாக தாளவாத்தியத்தை வாசிக்கும்போது இசையை உணர்ந்து, இசையின் அழகு குறைந்துவிடாது அதை மேலும் மெருகூட்டுவதாக அமையவேண்டும் பக்கவாத்தியம். தனது பங்கை நன்றாகவே உணர்ந்து வாசித்தமை அவரது இசை ஞானத்தையும் ஈடுபாட்டையும் எமக்கு உணர்த்தியது.
வயலின் மேற்கத்திய வாத்தியமாக இருந்தபோதும் கர்நாடாக இசை கலைஞர்கள் மனித குரலுடன் இணைந்து வாசிக்கக்கூடிய அருமையான வாத்தியம் என்பதை உணர்ந்து வயலினை 200 வருடங்களுக்கு மேலாக நமதாக்கி கொண்டனர். ஆனால் இன்றோ மேற்கத்தியவரும் வியக்கும் வண்ணம் கர்நாடக கலைஞர்கள் வயலினை வாசித்து வருகின்றார்கள். புரவலாக கர்நாடக சங்கீத கச்சேரியில் ஒத்திசையாக வாசிக்கப்பட்டபோதும் அதில் தேர்ந்த வித்தகர் வயலினை தனிவாத்திய கச்சேரியாக வாசித்து புகழ்பெற்று வருகிறார்கள். வு T N Krishnan, T N Rajam குன்னைக்குடி வைத்தியநாதன் போன்றோர் பிரபலமானவர்கள். இவர்கள் வரிசையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட இளம் கலைஞரே கலா றாம்நாத். இவர் தனது வாசிப்பால் யாவரையும் கவர்ந்தார். கச்சேரியின் ஆரம்பத்திலேயே கர்நாடக சங்கீதத்திற்கும் ஹிந்துஸ்தானி இசைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தி கச்சேரியை ஆரம்பித்தார். ஹிந்துஸ்தானி இசைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தி கச்சேரியை ஆரம்பித்தார். ஹிந்துஸ்தானி இசைக்கு வயலின் புதிய வாத்தியமே. இசையிலே இணைந்த விதூசகி இசை பிரவாகமாக இரசிகர்களை வர்சித்தார். ஐங்கரன் ஸ்ரீபன் கந்தராஜா
சளைக்காமல் அதற்கு ஈடு செய்தார்.
மொத்தத்திலே ஒரு அருமையான கச்சேரியை கேட்ட திருப்தியுடன் வீடு திரும்பினோம்.
வசீகர தோற்றமுடைய ஐங்கரன் இன்றைய இளைஞருக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஐங்கரன் டாக்டர் மட்டுமல்ல சிறந்த கலைஞனும்கூட. சளைக்காத உழைப்பும் தீராத தாகமும் இருக்குமானால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஐங்கரன் ஒரு எடுத்துக்காட்டு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
It is a good concert.
ReplyDeleteSara
Well written.
ReplyDeleteKala
Iynkaran should continue his tabla. I was in the concert. It is really good.
ReplyDeleteRealy I enjoied the Tabela.This is good for our tamil community.
ReplyDeleteRagavan
I know Iynkaran from his schooldays. He is a very talented and humble person. He always love music and have a good future.
ReplyDeleteIynkaran is an all rounder. His partner will be a lucky girl…!!!
ReplyDeleteஇது ஒரு தப்லா அரங்கேற்ற நிகழ்ச்சி. அது குறித்து ஒரு வரியும் சொல்லவில்லை விமரிசகர்.
ReplyDelete//இது ஒரு தப்லா அரங்கேற்ற நிகழ்ச்சி. அது குறித்து ஒரு வரியும் சொல்லவில்லை விமரிசகர்.//
ReplyDeleteIn the invitation they have mentioned that it is a concert not அரங்கேற்ற நிகழ்ச்சி. As far as I know Iynkaran had an அரங்கேற்றம் in Mumbai and played many concert with leading musicians. அரங்கேற்றம் means first stage performance.